தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க, மாநிலத் தலைமைத் தேர்தல்
அதிகாரி பிரவீண்குமாருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் 10 அம்ச யோசனைகளை
வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக தேவையான புதிய சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்கும்படி
தேர்தல் ஆணையத்தின் வழியாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வலியுறுத்தி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், தமிழகத் தலைமைத் தேர்தல்
அதிகாரி பிரவீண்குமார் ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள 10 யோசனைகள் வருமாறு:
1) தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓட்டுக்கு பணம் தர
மாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதை கட்டாயமாக்க
வேண்டும். அதுமட்டுமின்றி, மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்
மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வு விளம்பர படங்களில்
தோன்றி, "எங்கள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் &
வேறு ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது குறித்து தேர்தல்
ஆணையத்திடமோ அல்லது தேர்தல் அதிகாரிகளிடமோ புகார் அளிக்க வேண்டும்" என
அறிவுரை வழங்க வேண்டும். இந்த விழிப்புணர்வுப் படங்கள் மாநிலத்தின்
அனைத்துப் பகுதிகளிலும் திரையிடப்பட வேண்டும்.
2) மக்களவைத் தேர்தல்கள் இப்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில்
போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சித்
தலைவர்கள் கூட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்
கூட்ட வேண்டும். இந்த தேர்தலில் பணப் பயங்கரவாதம் எந்தளவுக்கு
தலைவிரித்தாடியது என்பதை விளக்கி, இனி எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம்
தரக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களுக்கு
முன்பாகவும் இதேபோன்ற கூட்டத்தைக் கூட்டி , ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டோம்’
என்ற வாக்குறுதியை பெற வேண்டும்.
3) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பில் பணம்
தரப்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு அந்தக் கட்சியின்
வேட்பாளர் தான் பொறுப்பு என்று அறிவித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் எந்த
தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
4) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
5) ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்கு
பதிவாகியிருந்தால், அந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை அத்தொகுதியின்
வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.
6) இதனால், ஜனநாயக நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக
தேர்தல் தொடர்பான வழக்குகள் வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு மாதத்திற்குள்
விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். இதற்காக தேர்தல் கால சிறப்பு
நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் ஆராயலாம்.
7) ஒரு தேர்தலில் ஏதேனும் ஓர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதி
செய்யப்பட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர் விசாரணையின்றி தகுதி நீக்கம்
செய்யப்பட்டு, அவருக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்க
வேண்டும்.
8) வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதை கையும் களவுமாக
பிடித்துக் கொடுப்பதுடன், குற்றச்சாற்றுகளை விசாரிக்க துணை நிற்பவர்களுக்கு
ஒரு லட்சரூபாய் பரிசாக வழங்க வேண்டும்.
9) அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு வாகனங்களையும்,
பேருந்துகளையும் அனுப்பும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரிகளை உடனடியாக பணி
இடைநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி
தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
10) தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் காவல்துறை உள்ளிட்ட
தேர்தல் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின்
கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர்
தேர்தல் ஆணையத்தால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும்,
ஆட்சியாளர்களைத் தான் தாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும், எந்த ஒரு
அதிகாரியும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல்
ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றி
தேர்தல் காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம்
செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்; அவ்வாறு பணி இடை
நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தம்மை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவரை
மீண்டும் பணியில் சேர்க்கக் கூடாது.
சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக நான்
முன்வைத்துள்ள மேற்கண்ட யோசனைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி
கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி - த இந்து
- Vasudevan Venugopal from Chennaiடாக்டர் தமிழ்க் குடி தாங்கி மருத்துவர் ஐயா அவர்களே, நல்ல யோசனைகள். ஆனால், (1) வாக்குறுதிகள் கவைக்கு உதவாது. நீங்களே உங்கள் வாக்குறுதிகளைப பலதரம் காற்றில் பறக்க விட்டிருக்கிறீர்கள். (2) பணம் பட்டுவாடா செய்யப் படுவதைத் தேர்தல் அதிகாரியால் தெரிந்துகொள்ளவே முடியாது எனும்போது அது எந்த அளவுக்கு தலைவிரித்து ஆடியது என்பதை எப்படி விளக்குவது? (7) கட்சி வேட்பாளர்களுக்குப் பணம் கொடுத்ததை உறுதி செய்வது எப்படி? (8) பணம் வாங்குபவர்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் இன்றுள்ள நிலையில் அந்த இடத்தில் வாழ முடியுமா? யார் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது? மற்றும் இந்த திட்டம் வேண்டாதவர்களைப் பழி வாங்கத் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? குவார்டர் ஆகவும் பிரியாணியாகவும், மற்ற வகைகளிலும் கொடுக்கப்படும் கையூட்டுகளைத் தடுப்பது எப்படி? "நீ MLA ஆயி சம்பாரிக்கப்போற . "இப்ப எனக்குக் காசி குடு ஒனக்கு வோட்டு போடறன்" என்று கேட்கும் வாக்காளப் பெருமக்களில் பெரும்பாலோருக்கு என்ன பதில்?about a month ago · (0) · (0) · reply (0)
- nsathasivan from Chennaiதேர்தல் ஒரு கேலிகூத்தாகி விட்டது . மிஞ்சி மிஞ்சி போனால் தேர்தல் கமிஷன் ஒரு கண்டனத்துடன் தனது பணியை முடித்து கொள்கிறது . தவறான வழிகளில் சேர்த்த பணத்தை இவ்வாறு அரசியல் கட்சிகள் ஏழை மக்களின் வோட்டுக்கு விலை பேசுகிறது .தமிழ்நாட்டில் இந்த தடவை கடைசி மூன்று நாட்களில் பணநாயகம் விளையாடியதை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை .about a month ago · (0) · (0) · reply (0)
- sasibalan from Tuticorinதேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்போருக்கு,தூக்கு தண்டனை அளிக்க சட்டத்தில் வகை செய்தால் தேர்தலில் பணப்பட்டுவாடாவை அறவே ஒழித்து விட முடியும்.நமது ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்கும். நல்லரசாகவும்,வல்லரசாகவும் நாடும் உருப்பெறும். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து தூக்கு கயிற்றில் தொங்க எந்த அரசியல்வாதிதான் விரும்புவர்?about a month ago · (0) · (0) · reply (0)
- Sundaramமருத்துவர் ஐயா நல்ல கருத்துகளை அவ்வபொழுது தெரிவிக்கிறார். இவர் இனி ஜாதி அரசியலை விட்டுவிட்டு, தமிழ், தமிழ்நாடு நலன் குறித்து கவலைப்பட வேண்டும். வன்னியர் நலன் காக்க பலர் இந்த சமுகத்தில் உள்ளனர். நீங்கள் வன்னியர் உள்பட அனிவருக்கும் தலைவர் என்ற மனபோக்கில் இனி சிந்தித்து செயல் படவும் -சுந்தரம்about a month ago · (3) · (0) · reply (0)
- Nallasivamதேர்தலில் ஜாதிய பலத்தை குறைக்க வழி உண்டா? வழி1 : ஜாதிய வெறி கொண்ட கட்சிகளை (பா.ம.க.)முதலில் தடை செய்ய வேண்டும்.about a month ago · (2) · (0) · reply (0)
- Subramanyamபெரும்பாலும் வரவேற்கத்தக்க யோசனைகள். ஒன்றிரண்டில் சில மாற்றங்கள் தேவைப்படலாம். ஆனால், தேர்தல் ஆணையம் இவற்றைப் பரிசீலனை செய்து, தேவைப்பட்டால் தகுந்த மாற்றங்களுடன் அமுல் படுத்த வேண்டும். 2016 சட்ட சபைத் தேர்தலில் இவற்றை எதிர்பார்க்கலாம் என்று நம்புவோமாக.about a month ago · (5) · (0) · reply (0)
- Natarajan Mohan Business Man at Driving from Riyadhமம்தா தேர்தலானயத்தைமிரட்டி பின்னர் பணிந்தது டாக்டர் அய்யாவுக்கு தெரியாதுபோளுள்ளதுabout a month ago · (0) · (0) · reply (0)
- Suresh Ram at Sukha Jeevanam from Kalpakkamமக்கள் நலன் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசியல் வாதிகளில் ஒருவர் ..... ஆபாசம் சினிமா இல்லாமல் TV நடத்தி வருபவர்.about a month ago · (5) · (2) · reply (0)
- thangaduraiஅய்யாயாயா..... இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பாராளுமன்ற தேர்தல் முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த யோசனை உள்ள நீங்கள் தேர்தலுக்கு முன்பு அல்லவா இதை கூறியிருக்க வேண்டும். ஒருவேளை தர்மபுரியில் தங்களது கட்சி பணம் விநியோகம் செய்ய முடியாமல் போனதோ? என்றே தோன்றுகிறது. அதுசரி இப்பொழுதெல்லாம் சினிமா நடிகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டேன்கிறீர்களே ஏன்... தங்களுக்கு தேவையான பணம் அவர்களிடம் இருந்து கறந்துவிட்டீர்களா?about a month ago · (0) · (0) · reply (0)
- Asrar Ahmed from New Delhiதர்மபுரில் உங்கள் அன்பு(மகன்)மணி பணம் கொடுக்கவில்லை என்று அவர் தலையில் சத்தயம் செய்வீர்களா ?about a month ago · (3) · (1) · reply (0)Rahul Nireb Up Voted
- Chellappan Krishnagopal at Freelance Consultant from New Delhiஅய்யா அவர்களே, இந்த நாட்டிலே வாக்களிப்பதை கட்டாயமான கடமையாக மாற்றி , அதை மீறுபவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் அனுமதி மறுப்பு, சமையல் எரிவாயு சலுகை மறுப்பு,கல்விக்கு சலுகை போன்றவற்றை பிரித்தாலே அனைவுரும் ஓட்டளிக்க வருவார்கள். பணம் கொடுக்கவேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதை செய்யுங்களேன் கட்டாய சட்டம் இயற்றி.about a month ago · (0) · (0) · reply (0)
- Er.Babu/Qatar from Dohaஅதுபோல ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் நிற்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் - அப்பதானே மாமன் மணிக்கு - கிருஸ்னகிரி , மகனுக்கு - தருமபுரி , அக்கா மகன் அருள்க்கு - சேலம் , தங்கை மகனுக்கு புதுச்சேரி தொகுதி ஒதிக்கி விட்டு தொண்டர்களுக்கு உங்களை போன்ற தலைமை ஏமாற்றுவதை தடுக்க தேர்தல் வரைமுறை கொண்டு வரவேண்டும். அப்பா தெரியும் உங்க நாடக அரசியல் மக்களுக்கு .about a month ago · (0) · (0) · reply (0)
- subramanianநல்ல கருத்துகள்தான்.ஆனால் அவரே பின்பற்றுவாரானு தெரியலை.கட்சி ஆரம்பிக்கும்போதும் இப்போதும் இவர் சாதீய உணர்வுகளை தூண்டுவதையே வேலையாய் இருக்கார்.அவர் வீட்டில் யாரும் அவர் கட்சியில் அங்கம் வகித்தால் முச்சந்தியில் வைத்து அடிக்கலாம் என்று ராமதாஸ் கூறினார்.இப்பொழுது அன்புமணிக்காக தெருத்தெருவாய் அலைகிறார்.இவரை யார் அடிப்பது?அரசு வேறு ஆனாலும் இவர் தனியாக ஒரு பட்ஜெட் போட்டு அரசாட்சி செய்வது போல கற்பனையில் வாழும் காகம் இவரை எல்லாம் நினைத்து வாழ்ந்தால் சொத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்.பாவம் மருத்துவர்.about a month ago · (1) · (0) · reply (0)
- Rahul Nireb at vetti job from Coimbatoreவெறும் ஜாதியை வைத்து அரசியல் செய்யும் இவருக்கு யோசனை கூற என்ன அருகதை இருக்கு???about a month ago · (6) · (5) · reply (0)
- umabaluஅன்புமணி சுகாதார துறை மந்திரி ஆனா பின்னர் மருந்து கம்பனிகளுக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கும் கொடுத்த அனுமதியின் பிரதிஉபகரமாக பெற்ற அன்பளிப்பு தொகை சுமார் 1500 கோடி ரூபா மற்றும் மக்கள் டிவி பணத்தயும் நல்ல நாட்டு குடிமகனாக திருப்பி கொடுத்துவிட்டால் 100சதம் அக்மார்க் சான்று பெற்று கனாகண்ட 2016 தமிழக ஆட்சி பற்றி நிச்சயம் எதிர்பார்க்கலாம் செய்வாரா மருத்துவர்about a month ago · (1) · (0) · reply (0)
- Natarajan Mohan Business Man at Driving from Riyadhஇத்துடன் விட்டுப்போ ன இதையும் சேர்த்துக்கொள்ளலாம் ஒருகட்சிசார்ந்த வேட்பாளர் பணம்கொடுத்தது நிரூபிக்கபட்டால் அந்தக்கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்யலாம் என்றும்about a month ago · (0) · (0) · reply (0)
- Er.Babu/Qatar from Dohaதேர்தலுக்கு முன்னால் கட்சி மாறமாட்டேன் ,கூட்டணி வைக்க மாட்டேன் ,சூர்யன் வடக்கு ,தெற்கு ,கெழக்கு போனாலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி அரசியல் கட்சி பதிவு செய்து பின்னர் மக்களை முட்டாள் ஆக்கும் உங்களை போன்ற கட்சி நடதுபவர்களுக்க்ம் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் தேர்தல் ஆணையம் .about a month ago · (1) · (0) · reply (0)
- Er.Babu/Qatar from Dohaதோல்வி பயம் ! தலித் மக்களின் வீடுகளை கொளுத்தி விட்டு விட்டு பணத்திற்காக அவர்களே கொளுதிகொளுகேரர்கள் என்ற உங்க வாக்கு மூலத்தின்படி பார்க்கும் பொழுது - பணம் ,பதவி வேண்டும் என்பதற்க்க அப்பாவி வேட்பாளர்கள் மேல பலியை போட்டுவிட்டு -உங்களை போன்ற கட்சி தலைமைகள் தப்பித்து அரசியல் பிழைப்பு நடத்த நினைப்பது வெட்க கேடானது - தண்டனை பணம் கொடுபவர்களுக்கு மற்றும் ஓட்டுக்கா வாங்குபவர்களுக்கும் தான் கொடுக்கப்பட வேண்டுமே தவிர வேட்பாளருக்கு அல்ல !!about a month ago · (2) · (0) · reply (0)Rahul Nireb Up Voted
- annamalai from Vellore1. சட்டசபைக்கும் மற்றும் லோக் சபாவிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அரசுக்கு தேர்தல் செலவு குறையும். 2. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் மாநிலங்களில் உள்ள அரசுகளை கலைத்து ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும். 3. பொது கூட்டங்கள். வேன், ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்யகூடாது ஆனால் அந்தந்த மாநில அரசு தொலைகாட்சிகளில் தினம் (20 days ) ஒரு தொகுதிக்கு 1 மணி வீதம் 15 மணி நேரம் (7 to 10) கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம். 4. கூட்டணி அமைக்க கூடாது. தனித்துதான் எந்த கட்சியும் போட்டியிட வேண்டும் . 5. அரசே பிரசார நோட்டீஸ் அச்சடித்து தரவேண்டும். அதை கட்சிகள் வாக்களர்களுக்கு post ல் அனுப்பவேண்டும். மக்களை நேரில் சந்திக்க கூடாது. (பணம் தருவது அப்போதுதான் தடுக்கப்படும்) 6. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே ஒரு பொது கூட்டத்தை அரசே நடத்தவேண்டும் அதில் அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்று பேசவேண்டும். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். 7. . திரையரங்குகளில் slide போட்டு கான்வாஸ் செய்யலாம். 9. ஒவ்வொரு கட்சி கிளை செயலாளருக்கும் ஒரு போலிஸ் என்று போட்டு அவர் போகும் இடம் கூடவே சென்றால்தான் பண பட்டுவாடாவை தடுக்கமுடியும்.about a month ago · (1) · (0) · reply (0)
- RK RAJAGOPALAN from Bangaloreராமதாஸ் அவர்களே வாக்குறிதி மட்டும் தந்தால் போதுமா? அதன்படினடக்கவெண்டாமா?: அவார்கள் சொல்வது போகட ஊருக்கு வழி தேடுகிற மாதிரி இருக்கிறது. இன்னும் நிறைய சொல்லலாம்.about a month ago · (0) · (0) · reply (0)
- SHAN from Karaikalஅய்யா ராமதாஸ் இன்னும் ஒரு யோசனை 11 ஆவதாக சொல்லலாம்'தேர்தலின் போது பணம் அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும்'அப்போதுதான் பணபுழக்கம் இருக்காதுஒரு குறிப்பு: .ஜாதி வைத்து வோட்டு கேட்பதை தவிர்த்தாலே பணம் தறுவதும் ஓரளவு குறையும்about a month ago · (8) · (4) · reply (1)
- baskaran Karan from Chennai12. நீங்கள் பேசாமல் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்about a month ago · (0) · (0) · reply (0)
- Ravi from New Delhiஇவருடைய கட்சி தேர்தலில் மண்ணை கவ்வப் போகிறது என்பதை முன்கூடியே தெரிந்து வைத்திருக்கிறார் போலும்!
0 comments:
Post a Comment