Sunday, March 09, 2014

நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்

 
ஹீரோ நேர்மையான ,நாணயமான ஒரு சராசரி ஆள்.வேலை எதும் இல்லை.படிச்ச பட்டதாரி.அவர் எவ்ளவ் தூரத்துக்கு அப்பாவின்னா வீட்ல பார்த்த பொண்ணு கிட்டேக்கூட ரொமான்ட்டிக்காப்பேசாம நாட்டில் நடக்கும் அநியாயம் பற்றி பொங்கற அளவு அக்மார்க் யோக்கியன். 

அந்நியன் படத்தில் வர்ற மாதிரி டிராபிக்போலீஸ் கூட ஏற்பட்ட ஒரு தகராறு ல கோர்ட் வரை போக வேண்டியது ஆகிடுது.எல்லா பேப்பர்சும் சரியா வெச்சிருந்தும் அவரை FINE கட்டச்சொல்றாங்கஜட்ஜ்க்கே லஞ்சம் தரச்சொல்றாங்க.நம்மாளு அசரலையே?

டெல்லி X CM. அர் கேஜ் மாதிரி கோர்ட் ல பொங்கி பட்டாஸைக்கிளப்பறார். இதனால பாதிக்கப்பட்டஅரசு அதிகாரிகள் அவரை நாயடி பேயடி அடிச்சு ரோட்டோரமாப்போட்றாங்க.அதுக்கும் நம்மாள் அசரலை.ஊழல் அதிகாரிகளை மாட்டிவிட ஒரு திட்டம் போடறார்

தெஹல்கா மாதிரி அவர் பிளான் பண்ணி வீடியோ ஆதாரத்தோட 147 பேரை மாட்டி விடறாரு.லைவ் டெலிகாஸ்ட் ல இது டிவி ல ஓடி மக்கள் ஆதரவுஅலையுடன்ஹீரோ பின்னிப்பெடல் எடுக்கறார்.இடைவேளை.இதுவரை காட்சிக்கு காட்சி வசனத்துக்காகவே கை தட்டல் வாங்கிவந்த திரைக்கதை இப்போ தடுமாறுது

 

ஆனானப்பட்ட ஷங்கரே முதல்வன் திரைக்கதைல பின் பாதில தடுமாறும்பொது சமுத்திரக்கனி எம்மாத்திரம் ? எப்படி கதையைக்கொண்டு போகனு யோசிச்சு மசாலா சேர்த்து  டூயல் ரோல் கொண்டாந்து  அட்டகாசமான திரைக்கதையை சாதாக்கதை ஆக்கி ஒரு வழியா முடிக்கறார். படத்தில்  முதல்  ஹீரோ வசனகர்த்தா சமுத்திரக்க்கனிதான் . ஆரவாரமான வரவேற்பு . படத்தில் சாட்டையடி வசனங்கள் முதல் பாதியில்  64 . பின் பாதியில் 12 .அவரது ஆதங்கங்கள் , கோபங்கள் எல்லாம் அனுபவிச்சு எழுதியவை . ஒண்ணு கூட சினிவுக்காக எழு துனது  இல்லை. அவரது சமூக  சாடல் , கோபம் அதை வெளிப்படுத்திய விதம் அனைத்துக்கும் ஒரு ராயல் சல்யூட் . இந்த ஆண்டின் சிறந்த வசனகர்த்தா  இவர் தான்

ஹீரோவா ஜெயம் ரவி . இது இவரது கேரியரில்  மிக முக்கியமான படம் . சந்தோஷ் சுப்ரமணியத்துல செண்ட்டிமெண்ட்டா மனசை அள்ளினவர் இதுல அந்நியன் டைப்ல  கோபம் உள்ள இளைஞனா கலக்கி இருக்கார் . இடை வேளை வரை இவர் ராஜ்ஜியம்  தான் . பின் பாதியில்  வரும் இன்னொரு ரவி சொதப்பல் கேரக்டரைசேஷன். ம் ம் .மசாலாப்படம் தெலுங்கு டப்பிங்க் படம் பார்த்தது போல். படத்தில் இவர் முன் பாதியில் அணிந்து வரும் உடைகள் ஒரு மார்க்ட்டிங் எக்சிக்யூட்டிவ் போல் அபாரம்

ஹீரோயின் அமலா பால் . சூடு ஆறிய பால் மேல் படர்ந்திருக்கும் ஆடை நிறம் போல , வெங்காய சருகின் மென்மை போல  அசாதாரண சோக முகம் . துறுதுறுப்பில் செயற்கைத்தன்மை . காதல் வசப்படும் காட்சியில் யதார்த்தம் இல்லை .  டூயட் காட்சியில் தமிழன் எதிர்பார்க்கும் கிளாமர் இல்லை. என்னமோ போடா மாதவா 

சூரி இதில்  மொக்கையைக்குறைத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகி அப்ளாஸ் அள்ளறார் . குட்

நீயா நானா கோபினாத்

கோபிநாத் சைக்கிள் கேப்பில் கெடா வெட்றார். அசால்ட்டான நடிப்பு, கேரக்டர் அப்படி .

சரத் குமார் கெஸ்ட்  ரோல்  . குட் 1 . படத்தில் காமெடி வில்லனாக வரும் கு ஞான சம்பந்தம் பின்னிப்பெடல் எடுக்கிறார். இவரது டைமிங்க் சென்ஸ் பிரமாதமாகப்பேசப்படும் 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பர பர என செல்லும்  முன் பாதி திரைக்கதை ஒரு முழுப்படம் பார்த்த திருப்தி தருவது.அந்நியன் , ரமணா ,  சிட்டிசன் என பல படங்களை நினைவு படுத்தினாலும் இது ஒரு முக்கியமான படம் தான் 

2. வசனகர்த்தா வின் அட்டகாசமான வசனங்கள் கலக்கல் . ஆடியன்ஸ் கை தட்டலில் பாதி வசனங்கள் புரியவே இல்லை. 

3 ஹீரோயினை அளவாகப்பயன் படுத்தியது . காமெடி டிராக் எதுவும் வைத்து மொக்கை போடாதது 


இயக்குநரிடம்  சில  கேள்விகள்  

1. ஹீரோவை  ஓப்பனிங்க்கில் அப்படி அடித்துப்போட்டு குற்றுயிரும் குலை உயிருமாக இருப்பவர் அடுத்த காட்சியிலேயே நெத்தில ஒரே ஒரு பத்து மட்டும் போட்டுட்டு சாதாவா இருப்பது. குருதிப்புனல் க்ளைமாக்ஸ் கமல் மாதிரி  இருப்பவர் அடுத்த சீனிலேயே மகாநதி கமல் ஆனது எப்படி ?

2 சரத் குமார் -ன் பாத்திரப்படைப்பு  குழப்பமானது . அவர்  ஹீரோவுக்கு  ஓப்பனிங்கிலிருந்தே உதவுவது போல் காட்சி அமைத்திருந்தால் அப்ளாஸ்  அள்ளி இருக்கும் 
3  பின் பாதியில்  வில்லன்கள் போடும் திட்டங்கள் எல்லாம் மகா சொதப்பல்கள்.அவரது  முகச்சாயலில் ஒருவரைக்கொண்டு வந்து கோர்ட்டில் நிறுத்தி குழப்பலாம் என்பது எல்லாம் எம் ஜி ஆர் கால ஐடியா . மரபணு சோதனை எல்லாம் இருக்கே?

4 இன்னொரு ஜெயம் ரவி  க்லைமாக்சில் திடீர் என பல்டி அடிப்பது மகா செயற்கை . அவர் வில்லன்களிடம் கத்திக்குத்து வாங்குவது நாடகத்தனம் 

5  ஆந்திரா ரவி வந்த பின் அவருடனான காம்பினேஷன் காட்சியில்  இந்த தமிழ்  ரவி திரையில் அவரைப்பார்த்த்

  பார்த்த்து பிரமித்துக்கொண்டே இருப்பது  வசூல் ராஜா எம் பி பிஎஸ்  படத்தில் சினேகா கமலைப்பார்த்து பிரமிப்பது போல் கதையை பாதிக்கிறது 


a

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்

        5 போலீசை ,கோர்ட்டை ,சட்டத்தை டார் டார் ஆக்க்கிழிக்கும் சமுத்திரக்கனியின் சாட்டை அடி வசனங்கள்.#,நி நில்

மனம் கவர்ந்த வசனங்கள்

  • நம்ம நாட்ல உண்மையை உண்மை னு நிரூபிக்க  20 வருசம் ஆகும்
  •  
  •  
  • மனம் குரங்கு மாதிரி.ஈசியா மாறிடும்.ஆனா நான் மாறமாட்டேன் 
  •  
  •  
  • பெண்ணை விட ஆணை பலமாகப்படைச்சதே அவளை அவன் பாதுகாப்பா பாத்துக்கத்தான்.பலவந்தப்படுத்த இல்ல 
  •  
  •  
  • இலங்கைல கொத்து கொத்தா செத்தாங்க.இங்கே நாம ஐபிஎல் மேட்ச் பாத்துட்டு இருந்தோம்.அங்கே நடந்தது இங்கே நடக்க எத்தனை நாள் ஆகும்
  •  
  •  
  • எல்லாரும் கோபத்தை உள்ளுக்குள்ளே வெச்சுக்கிட்டிருக்காங்க.வெளில காட்டனும்
  •  
  •  
  • பரபரரப்பான நியூசை இன்னொரு பர பரப்பால கவர் பண்ணுவாங்க.நம்மை மட்டும் எப்பவுமே ஷாக்கிங்காவே வெச்சிருப்பாங்க
  •  
  •  
  • ஆட்சில இருக்கறவனுக்கு அப்போதைக்கு அவன் தப்பிக்கனும்.அதுக்காக எது வேணாலும் செய்வான்
  •  
  •  
  • எதுக்காக நேர்மையா இருக்கனும்?.எல்லாரும் தப்பாதான் இருக்காங்க.அப்போ நாம ரொம்ப தப்பா இருக்கனு
  •  
  •  
  • ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் நேர்மையான ,கோபமான ஒரு நல்லவன் இருப்பான்.தன் நாணயம் மதிக்கப்படலைனு ஆதங்கம் இருக்கும்
  •  
  •  
  • இந்த நாட்டை ஆள்வது அரசியல்வாதிங்க இல்லை.அரசு அதிகாரிகள் தான்
  •  
  •  
  • ஆபத்து வரும்போது மட்டும் தான்.விலங்குகள் பயப்படும்.மனுசன் மட்டும் தான் எதுக்கெடுத்தாலும் பயப்படறான்
  •  
  •  
  • போலிக்கு மட்டும் தான் இந்த நாட்ல போலி இன்னும் வர்லை
  •  
  •  
  • நீ இந்த சமூகத்துக்கு தகுதி இல்லாதவன். ஏன் ?  நல்லவனுக்கு இங்கே வேலை இல்லை
  •  
  •  
  • உன்னை மாதிரி வாழ்றது ரொம்ப கஷ்டம்.அட்லீஸ்ட் உன் கூடவாவது வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்
  •  
  •  
  • இந்தக்காலத்துப்பொண்ணுங்களுக்கு நல்லவன் தேவை இல்லை.வல்லவன் தான் வேணும்
  •  
  •  
  •  
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்: 42
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று
ரேட்டிங் : 2.75 / 5
சி பி கமெண்ட் - நிமிர்ந்து நில் = நச் வசனம் முன் பாதி திரைக்கதை அருமை.பின் பாதி சொதப்பல் மாமூல் மசாலா.அனைவரும் பார்க்கவேண்டிய நல்ல  படம்.

சென்னிமலை அண்ணமார் -ல் நேத்து நைட் செகண்ட் ஷோ பார்த்தேன்

0 comments: