Saturday, March 08, 2014

மிஸ்! இந்த லெட்டரை தனியா இருக்கும்போது படிங்க.

1.என் பேருக்குப்பின்னால குட்டி சேர்த்து செல்லமா கூப்பிட்டா எனக்குப்பிடிக்கும்.


சாரி மிஸ்! மை டியர் குட்டிச்சாத்தான் னு வேணா கூப்பிடறேன்



===================



2. டியர்.இன்னக்கு அடை செய்யவா? வடை செய்ய வா?



அடை செய்வியோ வடை செய்வியோ பரிமாறும்போதே என்ன ஐட்டம்னு சொல்லிடு


====================


3.கேரட் ,தக்காளி ,முள்ளங்கி நான் சாப்பிடறதே இல்லை டாக்டர்.



 ஏன் ?



நீங்க தானே பச்சைக்காய்கறி சாப்ட்டாத்தான் உடம்புக்கு நல்லதுன்னீங்க?


=======================



4. டியர்.கொண்டை ல ரோஜாப்பூ வெச்சிருக்கேன்.எப்டி இருக்கு?



 ரோஜாப்பூ சூப்பரா இருக்கு ;-))


=====================


5.புது வருசத்துல இருந்தாவது நான் ஆக்டிவா வேலை செய்யனும்.



டியர்.அது ரொம்ப சிரமம்.ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்கிக்க.அதுதான் ஈசி


======================


6/அத்தான்.பட்டன் காளான் டேஸ்ட்டாத்தானே இருக்கு.ஏன் வேணாம்கறீங்க?




பொதுவாவே எனக்கு பட்டன் தடையாத்தான் இருக்கும்.ஐ டோன்ட் லைக் இட் ;-)



=======================


7.பஸ்ஸில் ஃபிகரு - ஏய் மிஸ்டர், மனசுக்குள்ளே விஜய்னு நினைப்பா? ஒதுங்கி ஒதுங்கிப்போனாலும் மேல மேல வந்து இடிக்கறே?




=====================



8. டெய்லி காலைல 5 மணிக்கு என் மனைவி என்னை எழுப்பி விட்ருவா.


 எழுப்பி விட்டுட்டு?


 தூங்கிடுவா.எல்லா வேலையும் செஞ்சபின் நான் எழுப்பிடுவேன்



===========================


9,இன்னைக்கு எங்க வீட்ல பலகாரம் செஞ்சிருக்கேன்.




மிஸ்! எதுக்கு பல காரம் செஞ்சீங்க ? ஒரு ஸ்வீட் ஒரு காரம் னு செஞ்சிருக்கலாமே?



====================



10,அத்தான்.19 வருசமா நான் கட்டி வைச்சு காப்பாத்துன கற்பு எல்லாம் கொட்டித்தர்றேன் இப்போ.



 ஏம்மா அது என்ன பொமரேனியன் நாய்க்குட்டியா?


=====================



11.மாப்ளை அமெரிக்கவாசின்னீங்க? இங்கனதான் சுத்திட்டு இருக்காரு?



நீங்க ஒரு பேப்பர் ல அமெரிக்கா னு எழுதிக்காட்னா சரியா வாசிச்சிடுவாரு


=====================



12.மேனேஜர் எனக்கு முதல் வணக்கம் வைக்காம ரிசப்ஷனிஸ்ட்க்கு குட் மார் னிங் சொல்றியே?



 சார்.நீங்க கடுப்பா இருந்தீங்க.அவங்க எடுப்பா இருந்தாங்க



=======================


13.சார்.லீவ் வேணும்.



சாரி.லீவ் வேணும்னா 24 மணி நேரத்துக்கு முன்னாடி சொல்லனும்.



மாட்னீங்களா? எனக்கு நாளைக்குத்தான் லீவ் வேணும், யாரு கிட்டே?



===========


14.சார்.உங்க படம் எதிர்பார்த்த அளவு இல்ல.



 நல்ல வேளை .ஹாலிவுட் மூவி ல பாத்த மாதிரி இல்லாம போச்சு.



==================


15.மிலிட்ரிமேனை மேரேஜ் பண்ணிக்கிட்டியே எப்டிப்போச்சு முதல் இரவு ?



விடிய விடிய மீசையை ( மட்டும்) தடவிட்டு இருந்தார்டி



====================


16.ஆபீஸ்க்கு அரை மணி நேரம் முன்னாடியே வந்துட்டீங்களே?,வெரிகுட்.



சார்.ஆபீஸ் டியூட்டி டைம் ல பொண்ணுங்க கிட்டே பேசக்கூடாதுன்னீங்களே?அதான்



========================



17.மிஸ்! இந்த லெட்டரை தனியா இருக்கும்போது படிங்க.



சாரி.நான் எப்பவும் என்னோட( ஏதாவது ஒரு) லவ்வர் கூடத்தான் இருப்பேன்



====================



18,மிஸ் !,ஹேப்பி நியூ இயர்.



 ம் .வாழ்த்தெல்லாம் வெறும் வாய் வார்த்தையோட இருந்தா போதும்.கையை விடுங்க.வலிக்குது




======================



19,இந்த போட்டோவை 5 வயசா இருந்தப்ப எடுத்தது



.அடடா.இப்பவாவது திருப்பிக்கொண்டு போய் வெச்டுங்க




=======================


20 டாக்டர்.நியூ இயர்ல இருந்து நான் தண்ணி அடிக்க மாட்டேன்.



வெரிகுட்.நானும் தான்.சியர்ஸ் ;-))



=============================



0 comments: