மாயமான மலேசிய விமானம் மூலம் இந்திய நகரை தாக்க திட்டமா?- நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் திடுக்கிடும் தகவல்
அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதியது போன்று மலேசிய விமானத்தைக் கடத்தி ஏதாவது ஒரு இந்திய நகரம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு கடந்த 8-ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாய் மறைந்தது. அந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் ரேடாரில் இருந்து மறைந்த பிறகு 7 மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த விமானம் பறந்திருப்பது செயற்கைக்கோளில் பதிவாகியுள்ளது.
எனினும் விமானம் எங்கு பறந்தது என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அநேகமாக அந்தமான் கடல் பகுதி அல்லது கஜகஸ்தான் எல்லையில் விமானம் பறந்திருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போயிங் விமானத்தை நன்கு கையாளத் தெரிந்தவர்களே விமானத்தை திட்டமிட்டு கடத்தியிருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
அமெரிக்க அதிகாரி அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை துணைச் செயலாளராகப் பணியாற்றிய ஸ்டோரப் தபோத் என்பவர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“மலேசிய விமானம் பறந்த திசை, அதன் எரிபொருள் கொள்ளளவு, அதிக தொலைவுக்குப் பறக்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது சில விஷயங்கள் நெருடுகின்றன. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தது போன்று இந்தியாவின் ஏதாவது ஒரு நகரம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விமானிகளின் வீடுகளில் சோதனை
கடந்த 9 நாட்களாக விமானத்தை தேடியும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானி ஜகாரி அகமது ஷா (53) மற்றும் துணை விமானி பாரிக் அப்துல் ஹமீது (27) ஆகியோரின் வீடுகளில் மலேசிய போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். விமானி ஜகாரி அகமது ஷாவின் வீட்டில் விமானத்தின் மாதிரி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த கருவி களை பறிமுதல் செய்த போலீஸார் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் விமானி மற்றும் துணை விமானி யின் அரசியல் தொடர்புகள், மதரீதியான செயல் பாடுகள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் சிறப்புப் பேட்டி
மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டாடக் செரி ஹிஸ்காமுதின் டன் ஹூசைன் கோலாலம்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விமானத்தில் 8 மணி நேரம் பறப்பதற்கான எரிபொருள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது. கூடுதல் எரிபொருள் இல்லை. தீப்பிடிக்கும் பொருள்களும் விமானத்தில் இல்லை.
விமானம் கடத்தப்பட்டதா, தீவிரவாதிகளின் கைவரிசையா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பிணைத்தொகை கோரி இதுவரை எந்த அமைப்பும் தொடர்பு கொள்ளவில்லை. விமானத்தில் இருந்த சீன பயணிகள் மற்றும் இந்திய பயணிகள் குறித்து இருநாடுகளும் முழு விவரங்களை அளித்துள்ளன. இதர நாடுகளிடம் இருந்து தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம்.
இப்போது கடல் பகுதி மட்டுமின்றி 11 நாடுகளின் நிலப்பரப்புகளிலும் தேடுதல் பணியை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.
இந்திய வான் எல்லைக்குள் அந்நிய விமானங்கள் ஊடுருவ முடியாது:
இந்திய வான் எல்லைக்குள் அந்நிய விமானங்கள் அத்துமீறி நுழைய முடியாது என்று விமானப் படை மூத்த அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மலேசிய விமானத்தைக் கடத்தி ஏதாவது ஒரு இந்திய நகரம் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு வாய்ப்பு இல்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப் படை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
அமெரிக்காவில் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு விமானம் பறந்தபோது உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மலேசிய விமானத்தைப் பொறுத்தவரை இந்திய எல்லைக்குள் நுழைய வாய்ப்பில்லை.
நாட்டின் வடகிழக்கு, மேற்கு பிராந்திய வான் பகுதிகள் 24 மணி நேரமும் சக்திவாய்ந்த ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. ஏதாவது ஒரு விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் எங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் அந்த விமானத்தை சுட்டுவீழ்த்திவிடுவோம். இவ்வாறு தெரிவித்தனர்.
விமானப்படை முன்னாள் தளபதி ஏர்சீப் மார்ஷல் பி.வி.நாயக் கூறியபோது, இந்திய எல்லைக்குள் அந்நிய விமானங்கள் நுழைய முடியாது என்று தெரிவித்தார்.
மேற்கு பிராந்திய விமானப் படை கமாண்டர் ஏ.கே. சிங் கூறியபோது, மலேசிய விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வளவு உயரத்தில் இருந்து கட்டிடங்கள் மீது மோத முடியாது. இந்திய எல்லைக்குள் வேறு எந்த விமானமும் ஊடுருவ முடியாது. ஒருவேளை ரேடார் கண்காணிப்பு குறைவாக உள்ள பூடான், நேபாளம், திபெத் வழியாக அந்த விமானம் பறந்து சென்றிருக்கலாம் என்று தெரிவித்தார்.
மற்றொரு மூத்த அதிகாரி கூறியபோது, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ரேடார்களின் கண்களில் இருந்து எந்த விமானமும் தப்பிக்க முடியும். ஆனால் இந்திய ராணுவ ரேடார்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. இந்திய விமானப்படை சார்பில் நாடு முழுவதும் ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளன. போயிங் 700 ரக விமானம் மிகப் பெரியது. அந்த விமானம் ராணுவ ரேடாரில் இருந்து தப்பியிருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
- GB from Jersey City"ஒருவேளை ரேடார் கண்காணிப்பு குறைவாக உள்ள பூடான், நேபாளம், திபெத் வழியாக அந்த விமானம் பறந்து சென்றிருக்கலாம் " என்ன இது லூசு தனமா இருக்கு ? இந்திய வான் எல்லைக்குள் நுழையாமல் எப்படி பூட்டான் / நேபால் / திபெத் வான் எல்லைக்குள் செல்ல முடியும் ? இந்திய வரைபடம் பார்ர்கவும் ...
- siva from Trichyஇது எதோ இஸ்ரேல காரன் வேலை போல் உள்ளது .எவனையோ போட்டு தள்ள இந்த மலேசியா விமானதியே துகிடனுங்கsuvanappiriyan Up VotedSubramanyam Down Voted
- முன்னெல்லாம் இராணுவதித்திலிருந்து வீரமாக ஒரு அறிக்கை வந்தால் நம்பிக்கையும் நம்பகத் தன்மையும் இருக்கும் .....இப்போது நிலைமை அப்படி இல்லை. ராடாராவது போதுமான அளவில் இருக்கிறதோ இல்லையோ ....சோனியாவுக்கே வெளிச்சம்.....raajaa Down Voted
- suvanappiriyan from Riyadhஇந்த செய்தியை அமெரிக்கா கசிய விடுவதால் விமானத்தை கடத்தியதில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஏதும் பங்குள்ளதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இரட்டை கோபுர தாக்குதலே அமெரிக்க இஸ்ரேலிய உளவுத் துறையின் கூட்டு சதி என்று அமெரிக்கர்கள் பலர் ஆதாரங்களுடன் புத்தகங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராடாரில் அகப்படாமல் விமானத்தை கொண்ட செல்லும் திறன் அnரிக்கர்களுக்கு மட்டுமே உள்ளது. மலேசிய, இநதிய அரசுகளை தங்கள் வழிக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயங்சியாகவும் இருக்கலாம்.
- sivalingam from New Delhiஇதை நான் ஆமோதிக்கிறேன். உலக நாடுகளின் சட்டம்பிள்ளையாக அமெரிக்கா நடந்துகொள்வது அனைவரும் அறிந்ததே.
- english films la varra mathri vetru graga vaasigal kadathittu poirupaanga pola...!!! ena kodumaya iruku.. ivlo technology develop aagi ulla intha kaalathula ipdi oru sampavam uh ..!!! asingama iruku. 239 per ena aanangane therla. paavam avanga family la ullavanga ovvoru nimisamum evlo vedhana pattitirupaanga.. cha,,, nallatho kaattatho. ena nadanthathu ngrathu seekerama ulagathuku theriya varanumnu kadavula vendikuvom.
- இது கண்டிப்பாக இஸ்ராயில் உடைய வேலை தான் , இப்படி தான் 26/11 அமெரிக்க வில் இரட்டை கோபுர நாடகத்தை அமெரிக்க வும் இஸ்ராயில் கூட்டு சேர்ந்து செய்து முடித்தார்கள் . தற்பொழுது மலேசியா வின் விமானத்தையும் கடத்தி மாபெரும் ஒரு நாடகத்தை நடத்த நினைகிறார்கள். வெளிச்சத்தை மூட முடியாது , கண்டிப்பாக ஒரு நாள் வெளியாகும்.raaja Up Voted
- Ramakrishna from Chennaiஇது புரளியா ..அல்லது ...உண்மையா என தெரிய வில்லை.. தேவை அற்றா புரளியை கிளப்ப கூடாது என்பது தான் எனது வேந்துதல்..
மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை: ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு
2. மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என சிடிபிடிஓ கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
வியன்னாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது சிடிபிடிஓ அமைப்பு, அணுஆயுத சோதனைகள் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.
ஐ.நா. சபையின் ஆதரவோடு இயங்கும் இந்த அமைப்பு, மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. இத்தகவலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்திதொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சிடிபிடிஓ அமைப்பு, சரவ்தேச கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விமான விபத்துக்களை 3 அல்லது 4 வழிகளில் உறுதிப்படுத்துகிறது. இந்த அமைப்பின் கண்காணிப்பு உபகரணங்கள் அணுஆயுத சோதனையை கண்டறிவதோடு, பெரிய அளவிளான விமான விபத்துகளையும் கண்டறிகிறது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பு உயர்தர சென்சார்களை நிறுவியுள்ளது. அணுஆயுதச் சோதனையோ, விமான விபத்தோ, பூகம்போ ஏற்பட்டால் உடனே அதன் தாக்கத்தை சென்சார்கள் பதிவு செய்கின்றன" என்றார்.
மேலும், இந்த மையம் பதிவு செய்துள்ள புள்ளி விபரங்கள் அடிப்படையில் விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
காணாமல் போன விமானம்: மலேசியா, அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு
மலேசிய விமானம் காணாமல் போன விவகாரத்தில், அமெரிக்காவும் மலேசியாவும் போதுமான விவரங்களைக் கொடுக்காமல் காலத்தை வீணடித்து வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
காணாமல் போன மலேசிய விமானத்தில் 227 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் 154 பேர் சீனர்கள். இதனால், விமானம் காணாமல் போன விவகாரத்தில் சீன மக்களின் நெருக்குதலை சீன அரசு சந்தித்து வருகிறது.
விமானம் காணாமல் போனது தொடர்பாக முறையான தகவல் கிடைக்காததால், தேடும் பணியில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்துள்ள சீனா இவ்விவகாரத்தில் மலேசியா மற்றும் அமெரிக்காவைக் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்குவா செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிப்படையான தகவல்களை அளிக்காமல் மலேசியாவும், அமெரிக்காவும் காலத்தை வீணடித்து வருகின்றன. விரிவான விவரங்களை அளிக்காமல் இருப்பதும், விவரங்கள் கிடைப்பதில் தாமதமாவதும் வேதனை அளிக்கக்கூடிய விஷயங்களாகும். ஒருவாரத்துக்கும் அதிகமாகிவிட்ட நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரின் வேதனை அதிகமாகியுள்ளது.
உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ மான தகவல் கிடைக்காமல் இருப்பது அல்லது தாமதமாகக் கிடைப்பது விமானத்தைத் தேடு வதற்கு மேற்கொள்ளும் பெரு முயற்சியை வீணடிப்பதாகும். ஏராளமான வதந்திகள் பரவி விட்டன. அவை, காணாமல் போனவர்களின் குடும்பத்தை மேலும் பதற்றமடையச் செய்கின்றன. இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளை வைத்துக் கொண்டு, தகவல் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படுவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.
சர்வதேச தேடுதல் வேட்டைக்கு பொறுப்பேற்றுள்ள நாடு என்ற முறையில், மலேசியாவுக்கு தப்பித் துக் கொள்ள முடியாத பொறுப்பு உள்ளது. விமானத்தை வடிவமைத்த போயிங், என்ஜினை வடிவமைத்த ரோல்ஸ்ராய்ஸ், புலனாய்வுத் துறையில் கெட்டிக்காரத்தனமான அமெரிக்கா உள்ளிட்டவை சிறந்த பணியாற்ற வேண்டும்.
காலம் கடந்து கொண்டிருக்கின்ற இச்சூழலில், மாயமான விமானம் குறித்து தகவல் கிடைக்காமல் இருப்பது பெரும்புதிரான ஒன்று. மலேசியத் தரப்பிலும், தகவல் பகிர்வில் அமெரிக்கா தரப்பிலும் இன்னும் வெளிப்படையான ஒத்துழைப்புத் தேவை என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் ஜின் காங் கூறுகையில், “மலேசியா முழுமையான மற்றும் சரியான தகவல்களைத் தர வேண்டும். சீன தொழில்நுட்ப நிபுணர்கள் விசாரணையில் உதவுவதற்காக மலேசியா சென்றுள்ளனர்” என்றார்.
மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக், “விமானத்திலிருந்து தகவல் சமிக்ஞைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டபின், வெவ்வேறு பாதைகளில் விமானம் 7 மணி நேரம் பறந்திருக்கிறது” என சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மலேசிய பிரதமரின் இக்கருத்துக்குப் பின்னரே, மேற்கண்டவாறு சீனா தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
நாங்கள் ஒளித்து வைக்கவில்லை: பாகிஸ்தான்
காணாமல் போன மலேசிய விமானத்தை நாங்கள் ஒளித்து வைக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு 239 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்ற விமானம் காணாமல் போனது. இந்த விமானம் பாகிஸ்தானில் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் விமானப் போக்குவரத்து சிறப்பு அதிகாரி சுஜாத் அசீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானில் இருந்து வெகு தொலைவில் விமானம் மாயமாகியுள்ளது. எங்கள் ரேடார்களில் இந்த விமானம் காணப்படவில்லை. எனவே இதை பாகிஸ்தான் ஒளித்துவைக்க வாய்ப்பே இல்லை" என்றார்.
- venkatraman from Chennaiஇந்த தினபலன், வாரபலன் போன்ற கப்சா ஜோசீயர்களை கேக்கலாம் தப்பா சொன்னா அவர்களை எல்லாம் இதே மாதிரி வேறுரு விமானத்தில் ஏற்றி அனுப்பி விடலாம்Regunathan Regunathan Up Voted
- saravanan from New Delhiஇந்த விஷயம் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஒரு பெரிய சவால். சுவடே தெரியாமல் காணாமல் போய்விட்டது என்பதை நம்ப முடியவில்லை. 7 மணி நேரம் பறந்துள்ளது என்றால் அது எந்தப்பக்கம் பறந்துள்ளது என கணிக்க முடியாதா? மலேசியா அரசின் விசாரணை வெளிப்படையாகவோ அல்லது திறமயாகவோ இருந்ததாக கூற முடியாது. விமானம் ஒரு வேலை வானிலே இழுத்துசெல்லபட்டிருக்குமோ. விமானத்தில் இருப்பவர் ஒருவர் மொபைல் போன் கூடவா செயல்படவில்லை. உண்மையில் கடத்தப்பட்டிருந்தால் இந்த நேரம் தெரிய வந்திருக்கும். விமானம் கடலில் விழுந்துருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.
- Peer Shahulhameed at Supreme Renewable Energy Ltd,pennadam.DEWA in Dubai.விஜயகாந்துயை அனுப்புகோ .Mubarak Mubarak Down Voted
- Loganathan from Chennaiபின் லாடனை வைத்து கொண்டே தங்கள் நாட்டில் பின் லேடன் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது
- N.Sithu Muruganandam from Chennaiநிச்சயமாக இந்த விமானம் பாகிஸ்தானில்தான் எங்கோ உள்ளது. அவர்கள் பொய்யர்கள் என்பது உலகம் பூராவும் தெரியும். ஒசாமாவை ஒளித்து வைத்துக்கொண்டு வருடக்கணக்காக நாடகமாடியதை யாரும் மறந்துவிட முடியாது.
- Nagarajan from Mumbaiவிமானம் எங்கே????? தண்ணிரில் முழ்கி விட்டதா இல்லை அதை ஹைஜாக் செய்திருந்தால் என்ன பண்ண முடியும் என்று சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று?
தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் மலேசிய விமானம் பறந்ததா?- இங்கிலாந்து நாளிதழ் பரபரப்பு தகவல்
மாயமான மலேசிய விமானம் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு பாகிஸ்தானில் நுழைந்திருக்கக்கூடும் என்று இங்கிலாந்து நாளிதழ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
கோலாம்பூரில் இருந்து மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு 239 பேருடன் பெய்ஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமானது.
கடைசியாக அன்று காலை 8.11 மணி அளவில் இங்கிலாந்து நிறுவனத்தின் இன்மார்சாட் செயற் கைக்கோளில் அந்த விமானத் தின் சிக்னல் பதிவாகியுள்ளது. அதன் படி தாய்லாந்து முதல் கஜகஸ் தான் எல்லை வரையோ அல்லது இந்தோனேஷியா முதல் தென் இந்திய பெருங்கடல் வரையோ விமானம் பறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் விமானத்தை தேடும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் செயற்கைக் கோள் தகவலை ஆதாரமாக வைத்து லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபெண்டன்ட்’ நாளிதழ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
தரையில் இருந்தே சிக்னல்
இன்மார்சாட் செயற்கைக் கோளில் விமானத்தின் சிக்னல் பதிவானபோது அந்த விமானம் வானில் பறந்திருக்க வாய்ப் பில்லை. தரையில்தான் இருந் திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடகிழக்கு பாகிஸ்தானில் விமானம் தரையிறங்கி இருக்கக் கூடும். ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளும் வடகிழக்கு பாகிஸ்தான் பகுதிகளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளில் விமானம் தரையிறக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது. மிகப் பெரிய விமானமான அதனை தரையிறக்க குறைந்தபட்சம் 5 ஆயிரம் அடி ஓடுபாதை தேவை என்று ‘தி இன்டிபெண்டன்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
தாழ்வாகப் பறந்த விமானம்
இதனிடையே மலேசிய புலனாய்வு வட்டாரங்கள் கூறியதாவது:
மாயமான விமானம் கிட்டத் தட்ட 3 நாடுகளின் ராணுவ ரேடார்களில் இருந்து தப்பி பறந்துள்ளது. முதலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த அந்த விமானம் ரேடாரில் இருந்து தப்ப 5 ஆயிரம் அடி உயரத்தில் மிகவும் தாழ்வாகப் பறந்துள்ளது.
ரேடார் கண்காணிப்பு குறைந்த மலைப் பிரதேசங்கள் வழியாகவும் விமானம் பறந்துள்ளது. விமானத் தின் இயக்கம், விமானப் பாதைகள் குறித்து நன்கறிந்த நபர்களால் மட்டுமே இவ்வாறு விமானத்தைச் செலுத்த முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிமுலேட்டரில் விரல் ரேகை
மாயமான விமானத்தை இயக்கிய விமானி ஜகாரி அகமது ஷாவின் கோலாலம்பூர் வீட்டில் இருந்து விமானப் பயிற்சிக்கான சிமுலேட்டரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த சிமுலேட்டரை பொருத்திய நபர் யார் என்பது குறித்து அறிய அதில் பதிவாகியுள்ள விரல் ரேகைகளை தடயவியல் நிபுணர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் துணை விமானி பாரிக் அப்துல் ஹமீது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நதிரா ரம்லி என்ற பெண் விமானியை அவர் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிபுணர்கள் வருகை
மலேசியாவுக்கு உதவுவதற்காக இன்மார்சாட் செயற்கைக்கோள் நிபுணர்கள் கோலாலம்பூருக்கு வந்துள்ளனர். அவர்கள் தவிர அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் உதவியையும் மலேசியா கோரியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிகாரிகளும் கோலாலம்பூரில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மலேசிய பாதுகாப்பு, போக்குவரத்துத் துறை அமைச்சர் டாடக் செரி ஹிஸ்காமுதின் டன் ஹூசைன் திங்கள்கிழமை மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு துணை விமானி பாரிக் அப்துல் ஹமீது கட்டுப்பாட்டு அறை அதிகாரியோடு பேசியுள்ளார். அவர் கடைசியாக “ஆல் ரைட், குட் நைட்” என்று கூறியுள்ளார். அதன் பின்னர் தகவல் தொடர்பு சாதனங்கள் அணைக்கப்பட்டுவிட்டன.விமானிகளில் யாராவது ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
thanx - the hindu
0 comments:
Post a Comment