Thursday, March 06, 2014

எம்பெருமான் முருகப்பெருமானை இந்த விஷயத்துலயாவது முந்தலாம்னு தான்

1. ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் னு போர்டு வெச்சேன்.ஜெயில் ல போட்டுட்டாங்க.



பின்னே செருப்புக்கடை ல ஒரு செருப்பு எடுத்தா 1 FREE னா?



====================



2, மிஸ் ! நீங்க ஒரு ஆசிரியை.எல்லோரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க



🙏" யோவ்.சாமியார் தான் ஆசீர்வாதம் பண்ணுவாங்க


===================

3, ஜட்ஜ் - எதுக்காக 3 வது கல்யாணம் பண்ணீங்க??



பவன் கல்யாண் - எம்பெருமான் முருகப்பெருமானை இந்த விஷயத்துலயாவது முந்தலாம்னு தான்



=====================



4,  மேடம்.கிரைன்டர் ல மாவு ஆட்டுவது மாதிரி போட்டோவை ஏன் டி பி யா வெச்சிருக்கீங்க?



 நைஸ் டி பி ன்னு எல்லாரும் சொல்லட்டும்னு தான்



==================



5, மேரேஜ்க்குப்பின் ஆண்கள் ஏன் பக்குவப்பட்டுடறாங்க?


பொண்டாட்டி டெய்லி தாளிச்சுட்டே இருப்பதால் தான்



========================


6, நடிகை - யுவர் ஆனர்.என் முகத்துல ஆசிட் ஊத்திடுவேன் னு புருசன் மிரட்னாரு.



 ஜட்ஜ் = குழப்பமா இருக்கு.ஆசிட் ஊத்திட்டாரா? இனிமேத்தானா?



==================


7,டாக்டர். நான் திரும்ப 2001 க்கு போகனும்.முடியுமா?



 ம்.200 ஐ கட் பண்ணிட்டா முடியும்



==================



8, 2013 ஐ நினைவுகொள்ளும் வகையில் இன்று பாலோ செய்யும் அனைவரையும் பாலோபேக் செய்வேன்.



மேடம் அப்போ வீட்டுக்கே போக முடியாதே?



====================



9 மேடம்.நீங்க என்ன ஆயில் யூஸ் பண்றீங்க ?



ஆபாயில் தான். சாப்பிடும்போது தானே கேட்டீங்க.ஏன்னா தலைக்கு எண்ணெய் தடவி மாமாங்கம் ஆச்சு



=================



10 மிஸ்! டெய்லி ஒரு ஹேண்டில் மாத்தறீங்களே ஏன் ?



 நீங்க அடிக்கடி ஆளை மாத்தறீங்களே அது மாதிரி தான்



==================


11டியர்.பியூட்டி பார்லர் போய் ஹேர் கட் பண்ணிட்டு வந்திருக்கேன்.எப்டி இருக்கு?



எவ்ளவ் பில் தீட்டினானோனு திக் திக் னு இருக்கு



====================


12,டியர்.ஸ்வீட்டா ஏதாவது சொல்லேன்.



 கோதுமை அல்வா ,ரசகுல்லா ,மைசூர்பாக்



======================



13, மிஸ்! 2 மணி நேரமா எந்த சத்தமும் போடாம புக் படிச்ட்டு இருக்கீங்களே.நீங்க இலக்கிய ஆர்வலரா?,



ச்சே ச்சே .சமையல் ரெசிபி புக் ங்க




======================



14, லேடி - சமூக சேவை செய்வது தான் என் லட்சியம்.



மேடம்.வீட்ல புருசன் தனியா லெமன் சேவை செஞ்சிட்டிருக்கார்.முதல்ல வீட்டைக்கவனிங்க.நாட்டை அப்புறமா



===================



15,டியர்.24 மணி நேரமும் உன் முகத்தைப்பார்த்துட்டே இருக்கனும்னு தோணுது.ஆனா தயவு செஞ்சு வாயை மட்டும் 1 நிமிசம் கூட திறந்துடாதே




===================



16டாக்டர்.நான் டெய்லி 30 நிமிசம் எக்சசைஸ் பண்ணியும் குண்டாதான் இருக்கேன்.ஏன் ?



 3 வேளை சாப்பிட 90 நிமிசம் ஆகுதே?



=================



17 மேடம்.ஜிம் ல எக்சசைஸ் பண்ணும்போது முகத்தைத்தவிர எல்லா இடமும் வேர்த்திருக்கே உங்களுக்கு எப்டி ?



 அவ்ளவ் மேக்கப்பைத்தாண்டி வர முடியுமா?




====================


18,  மிஸ்! டி பி ல 2 கண்களை மட்டும் க்ளோசப் ல போட்டிருக்கீங்ளே.ஏன் ?



32 பல்லையும் கோல்கேட் ல போட இடம் பத்தலை.



========================


19.டியர்.நான் ஒண்ணும் காங்கிரஸ் கட்சி கிடையாது



. இதை ஏன் என் கிட்டே சொல்றீங்க?


கை யை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கனும்னியே!



==================



20மிஸ்! நான் இன்னும் 10 நாள் மதுரைல தான் இருப்பேன்.நீங்க எப்போ வருவீங்க?



11 நாள் கழிச்சு


====================

0 comments: