Saturday, March 22, 2014

கேரள நாட்டிளம் பெண்களுடனே - சினிமா விமர்சனம்

கேரள நாட்டிளம் பெண்களுடனே

தினமலர் விமர்சனம்

"பூ, "களவாணி படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் தான் ""கேரள நாட்டிளம் பெண்களுடனே!

எஸ்.எஸ்.குமரன், இவரது இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த ""தேனீர் விடுதி திரைப்படத்தை கருத்தில் கொள்ளாமல், இத்திரைப்படத்தை காண சென்றோமென்றால், "கேரள நாட்டிளம் பெண்களுடனேயும் குளிர்ச்சியான கேரளாவிலும், சில மணித்துளிகள் வாழ்ந்து திரும்பிய குதூகலத்தை உணரலாம்!



கதைப்படி, கேரளாவில் சில வருடங்கள் வாழ்ந்த ஞான சம்பந்தத்திற்கு, திருமணம் செய்து கொண்டால் கேரளத்து இளம் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை, நிராசை ஆகிறது. அதனால் தன் மகன் அபி சரவணனை, சின்ன வயது முதல் நீ ஒரு கேரள பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உசுப்பேற்றி கேரள கலாச்சாரம், உணவு முறைகளை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார்.


இதற்கு அபி சரவணனின் அம்மா ரேணுகா கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன் சொந்தத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை தேடிப்பிடிக்கிறார். போலீஸ் என்றதும் அலறும் அபி சரவணன், நைசாக எஸ்கேப் ஆகி, பெங்களூர் வேலைக்கு செல்வதாக சொல்லி அப்பாவின் ஐடியாபடி கேரளா சென்று, காதலிக்க நண்பர் காளி உதவியுடன் பெண் தேடுகிறார்.


மீடியாவில் வேலை பார்க்கும் காயத்ரி சிக்குகிறார். இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். இன்னொரு பக்கம் ஒரு இஸ்லாமிய பெண்ணும் அபி சரவணனை ஒரு தலையாக காதலிக்கிறார். இந்நிலையில் காயத்ரியின் அப்பா, அபியுடனானா-காயத்ரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்றுமொருபக்கம் பெண் போலீசும் அபியை அடைய துடிக்கிறார்.


 அபி, யாருக்கு கிடைத்தார்.?! ஞானசம்பந்தம் சபதம் நிறைவேறியதா..?! காயத்ரி மெய்யாலுமே கேரள நாட்டிளம் பெண் தானா...?! என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு அழகிய கேரள பின்னணியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது ""கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மீதிக்கதை!



அபி சரவணன், அறிமுகம் என்பதையும் தாண்டி நம்பிக்கைக்குரியவராக தெரிகிறார். காயத்ரி, பெண் போஸ் மீன்கொடி, இஸ்லாமிய பெண் மூவரில் காயத்ரிக்கே நடிக்க நிறைய "ஸ்கோப் இருக்கிறது. அதை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஞானசம்பந்தம், ரேணுகா இருவரின் ஜோடி பொருத்தம் "சூப்பர்ப், ஓரே வீட்டுக்குள் அவர்களது கலாச்சார வேறுபாடு தான் செம காமெடி. நாயகரின் நண்பராக வரும் காமெடி காளியும் கவருகிறார்.




எஸ்.எஸ்.குமரனின் எழுத்து, இசை, இயக்கம் எல்லாவற்றுக்கு மகுடம் சேர்த்திருக்கிறது, வைரமுத்துவின் வரிகளும், யுவாவின் ஒளிப்பதிவும்!

மொத்தத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும், ""கேரள நாட்டிளம் பெண்களுடனே - நம்மூர் ஆண்களுக்கு கலர்புல் கதகளி!


thanx - dinamalar


a



diski - குக்கூ - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2014/03/blog-post_8524.html

0 comments: