1. சார்.உங்களுக்கு 40 வயசு இருக்குமா?
எங்கப்பாவுக்கே அந்த வயசு தான்.இப்போ தான் மேரேஜ் பண்ற வயசு எனக்கு எட்டிப்பாக்குது
==================
2 மேடம்.வெக்கேசன் மோடு ல இருக்கீங்க.ஓக்கே .எப்போ சைலண்ட் மோடுக்கு மாறுவீங்கன்னு கமல் ரசிகர் கேட்கச்சொன்னார்
===================
3 கூப்பிடு தூரத்தில் உன் முகம்! உன் உதட்டை சாப்பிடும் அருகில் என் இதழ்!
================
4,இந்தக்காலத்துபொண்ணுங்க தான் என்ன சாப்பிடறம் என்பதைக்கூட நேரடியா சொல்லாம அதை போட்டோ பிடிச்சு FB ல போட்டு இது என்ன? யூகி ம்பாங்க
====================
5,இந்த பொண்டாட்டிங்க அடிக்கடி அவங்கம்மா வீட்டுக்குப்போகும் தொழில் ரகசியம் என்னன்னா சமைக்கத்தேவயில்ல அங்கே போய்ட்டா
===================
6,என் தோல்விகளை ஜீரணிக்க வைக்கும் சீரகம் நீ! என் வெற்றிகளை ரசிக்க வைக்கும் வசீகரம் நீ!
====================
7,வாரம் ஒரு நாள் ஓய்வு என்பது நம்மைப்புதுப்பித்துக்கொள்ள மட்டும் இல்லை.நம் குடும்பத்துடன் நான் சந்தோசமாக அளவளாவ!
===================
8 வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை கண்டு பயப்படுபவன் பிரம்மச்சாரி.காதல் வயப்படுபவன் சம்சாரி
===================
9. அயர்ன் பண்ண ரொம்ப சுலபமானது ஜீன்ஸ் பேன்ட்.ரொம்ப கஷ்டமானது காட்டன் சேலை # குடும்பஸ்தனின் டைரியிலிருந்து
===================
10 திவ்யதர்ஷினியை விட த்ரிஷாவுக்கு புருவம் அடர்த்தி .கூந்தல் நீளம் # இன்று ஒரு உருப்படி யான தகவல்
=====================
11,எதுக்கும் டென்சன் ஆகாம சாந்தமா இருந்தா கூல் பர்சன்ஸ். குளிர் காலத்தில் கூட கம்மங்கூழ் ,ராகிக்கூழ் குடிச்சா அவங்க கூழ் பர்சன்ஸ்
====================
12,டிரஸ்சிங் சென்ஸ் ,காஸ்ட்யூம் பார்த்துத்தான் லவ் வருதுன்னா அப்படிப்பட்ட லவ் தேவையா என்ன? -
=================
13,லவ் லெட்டர்ல கூட யுவர்ஸ் சின்சியர்லி னு சைன் பண்றவங்க தான் பசங்க் # சின்சியர் லவ்
====================
14,ஜெ பிரதமர் ஆகும் ஆசையில் பிஜேபி கூட்டணியை தவிர்த்தால் அது ஜெ வுக்கே நட்டம்
===================
15,ஜாடை மாடையா திட்டுவதில் விற்பன்னர்கள் சம்சாரங்கள்.நேரடியாக திட்டுவதில் டேமேஜர்கள்
====================
16. தூரத்தில் நின்று பார்க்கையில் நிலா நீ!,அருகில் வந்தால் இளநீ!
=====================
17, வாய்(ப்பு) உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்
=====================
18, அமலாபால் கணவர் பேரு கோபால் ஆக இருந்தா மேரேஜுக்குப்பின் அவர் கையெழுத்து = அமலாபால் கோபால்
===================
19 பொண்டாட்டி எது சொன்னாலும் ஆ(மா)ம் சாமி போடும் ஆத்மி க்கு எதிர்காலம் ,நிகழ்காலம் பிரகாசமா இருக்கும் # ஆம் ஆத்மி
====================
20 நித்தி செல் ரிங் டோன் - ஆனந்தம் வந்ததடி ஆனந்தி ! உன்னாலே! என் காதல் கண்மணி! என் கானம் கேட்கையிலே
========================
0 comments:
Post a Comment