Monday, March 03, 2014

மாப்ளை பேரு பீர் முகமது.பொண்ணு பேரு ரம் யா

1. மாப்ளை பேரு பீர் முகமது.பொண்ணு பேரு ரம் யா .எப்டி ஜோடிப்பொருத்தம் ?


அபா ரம்



==============================

குழந்தை பொறந்தா என்ன பேரு வப்பாங்களோ.."
பையன் பொறந்தா  ஜின் னா முக மது , பொண்ணு பிறந்தா  மது ரம்


=========================


2 அழகு நிலையம் செல்லும் பெண்கள் பெரும்பாலும் புருவத்தை ட்ரிம் பன்றாங்க.ஷேப் மாத்தறாங்க.இயற்கை அன்னை கோவிச்சுக்காதா?

 அவங்க சொந்த அம்மாவே கண்டுக்கறதில்லை , இயற்கை அன்னை கோபிச்சாத்தான் என்ன? 


===============================



3  ஏன் அறிவாளி பெண்களை ஆண்களுக்கு பிடிக்க மாட்டிங்குது..?



ஏன்னா ஆண்கள் மூளையை பெருசா எதிர்பார்ப்பதில்லை.அவன் ஒரு தியாகி



==========================



4  டாக்டர்.அழும்போது கண்ணாடி பார்த்துட்டே அழுதா எதும் ஆகாதே?



 உங்களுக்கு எதும் ஆகாது.கண்ணாடிக்கு கேரண்டி தர முடியாது


===========================


5  டாக்டர்.என் தலைல ஏகப்பட்ட பேன் ,பொடுகு குடி ஏறிடுச்சு.என்ன செய்ய?



 அடேங்கப்பா.ஒரு ஜீப்பே வேணும் போல.சீப்பு பத்தாது


===========================


6   டாக்டர்.மருதாணியை முகத்துல பூசிக்கிட்டா சிவப்பாகுமா ?



அது ரொம்ப லேட் ஆகும்.மிளகாய்ப்பொடி பூசிக்கிட்டா அப்பவே செக்கச்சிவப்பி ;-)


=========================



7  டாக்டர்.சாப்ட்ட உடனே மீண்டும் பசி எடுத்தா என்ன அர்த்தம்?



நீங்க மாசமா இருக்கீங்கனு அர்த்தம் மேடம்


=======================



8   மார்கழி மாசம் வரப்போகுது.வாசல் ல கோலம் போடுவியா?



ம்.நீங்க வரைஞ்சு கொடுத்தா அப்டியே வாசல்ல கொண்டிபோய் வெச்டுவேன்


===========================



9   இவ்ளவ் வேகமா பைக் ல போனா நம்ம காதலுக்கு பிரேக்கப் குடுத்துடுவேன் .பைக்கை நிறுத்துங்க.



 சாரி .பிரேக் டவுன்


===========================


10  டியர்.மேரேஜ்க்கு முன் "எதுக்கும"் சம்மதிக்க மாட்டேன்.



ஓ.மேரேஜ்க்குப்பின் ?


 உங்க குடும்பத்துல யாரையும் மதிக்க மாட்டேன்


============================

11   டாக்டர்.டெய்லி தேன் குடிச்சா உடம்பு இளைக்குமா?



உலகத்துல எல்லாரும் இப்டி செஞ்சா தேனீக்கள் பிழைக்குமா?


=========================



12   Dr. தலைமுடி fullலா நரைக்கிறதுக்கு ஏதாவது method இருக்கா?



டெய்லி சுண்ணாம்புதடவிக்குங்க.சுண்ணாம்புசத்தும் சேரும்.ஸ்டைலிஷாவும் இருக்கும்

========================






13   தமிழ் மிஸ் தன்யா = பசுமரத்தாணி - பிரித்தெழுது .



லொள் மாணவன் = அது ரொம்ப ஆழமா பதிஞ்சிருக்கும் மேடம்.பிடுங்கவோ பிரிக்கவோ முடியாது


=========================



14  நீங்க  எழுதுன 155 நாவலையும் நான் படிச்சிருக்கேன்.


அடடா டைம் வேஸ்ட் பண்ணீட்டீங்களே.5 படிச்சா போதும்.எல்லாம் ஒரே கதைதான்



======================

0 comments: