1. பொதுவா ஆண்கள் தனக்குப்பிடிச்ச பொண்ணுக்கு அன்பனா இருக்க ஆசைப்படுவாங்க.அவளுக்குப்பிடிக்காம போச்சுன்னா அஞரின்பன் ஆவாங்க(Sadist =அஞரின்பன்)
====================
2 சம்பந்தப்பட்ட பெண்ணே ரசிக்கும்படி கிண்டல் செய்தல் , அருகில் இருக்கும் தன்னைச்சேர்ந்த ஆண்கள் ரசிப்பதற்காக செய்தல் என கலாய்த்தல் இரு வகை
=====================
3 பெண் எழுத்தாளர்களின் நாவலில் வரும் ஆண் வர்ணிப்புகள் அவர்கள் கற்பனையில் ரசிக்கும் ஆதர்ச நாயகர்கள் பற்றியதாக இருக்கும், கணவனாக இருக்காது
======================
4 ஒரு புத்திசாலியின் பெண் கலாய்ப்புகள் மறைமுகமாக அவளைப்புகழ்வதாகவோ , சிலாகிப்பதாகவோ இருக்கும்\
=====================
5 பொண்ணுங்க “ வெரி நைஸ்”-னு உங்க படைப்புக்கு கமெண்ட் சொன்னா “ அரைச்ச மாவையே அரைக்காதடா”ன்னு அர்த்தமாகவும் இருக்கலாம்
======================
6 பயங்கரமான பங்க்சுவாலிட்டி, ரெகுலாரிட்டி பார்ப்பவன் தன் முதல் இரவில் கூட நைட் 9 மணிக்கே தூங்கிடுவானாம்
====================
7 இனி கேப்டன் ஸ்டெடியே இல்லைனாக்கூட “ மோடி ஸ்டெடியான ஆட்சி தருவார்”னு பிரச்சாரம் பண்ணுவார்
==========================
8 நெருக்கமான காதல் காட்சிகள் வரும்போது சேனல் மாற்றுவதன் காரணம் தனிமையில் இருக்கும்போது பார்க்க வேண்டியவை என்பதால் கூட இருக்கலாம்
========================
9 ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ ( தயவு செஞ்சு என்னை நம்பு ) எனும் வாக்கியமே காதலின் முதல் நம்பிக்கை இல்லாத்தீர்மானம்.சொல்லி வருவதில்லை நம்பிக்கை
======================
10 இன்கம்டாக்ஸ் என்றாலே காத தூரம் ஓடும் தமிழச்சிதான் நெயில் பாலீஷ் போடும்போது கூட ”வரி” டிசைன்ல நக அழகைக்கூட்டும்
========================
11 ராத்திரி 11 மணி வரை டி வி சீரியல் பார்த்துட்டு ஆஃபீஸ் டைம் ல மதியம் ஆனா தூக்கத்தைக்கட்டுப்படுத்தவே முடியலையே என அங்கலாய்ப்பாள் தமிழச்சி
=================================
12 ஆஃபீசில் பெண்கள் தூங்கி வழிகிறார்கள். ஆண்கள் தூங்காமல்........
==============================
13 சும்மா கேட்கனுமேன்னு ஏதாவது ஒரு கேள்வியைக்கேட்டு மெனக்கெட்டு பதில் வந்ததும் அடடே, இதுக்கு நீங்க பதில் சொல்ல மாட்டீங்கனு நினைச்சேன்பான் தமிழன்
======================
14 நீ லேசாகப்புன்னகைத்தால் அது தூறல், வாய் விட்டுச்சிரித்தால் கொட்டும் மழை, வெட்கத்தில் கன்னம் சிவந்தால் வானவில்
=======================
15 பார்த்தவுடன் மனதைக்கிறுகிறுக்க வைப்பவளும் கிறுக்கியே!
========================
16 பழகப்பழக பாலும் புளிக்கும்னா அப்போ புளியம்பழம் இனிக்குமா?
=====================
17 அன்பே! நீ ஒரு கன்னி மேரி.! வில் யூ மேரி மீ?
=====================
18 அபரிதமான வளர்ச்சி யில் என்னை பிரமிக்க வைத்தவர்கள் 1 குஜராத் மக்கள் 2 மோடி 3 நமீதா
==================
19 திருவிழாக்களில் நாதஸ்வரக்கச்சேரி நடந்தா காத தூரம் ஓடும் அதே தமிழன் தான் 1000,வது நாள் நாதஸ்வரம் சீரியல் பார்க்க டி வி முன் தவம் கிடக்கான்
================
20 நிஜத்தை தேடிட்டிருக்கேன்னு ஒரு பொண்ணு சொன்னா காதலன் பேரு நிஜாம் ஆகக்கூட இருக்கும்.செல்லமா நிஜம்
=====================
0 comments:
Post a Comment