தினமலர் விமர்சனம்
பேன்டஸியான ஒரு காதல் படம் எடுக்க வேண்டுமென்று களம் இறங்கி, அதையே கொஞ்சம் ஓவர் டோஸாக கொடுத்திருக்கிறார்கள் 'ஒரு மோதல் ஒரு காதல்' படக்குழுவினர் என்றால் மிகையல்ல!
கதைப்படி, அப்பா, அம்மா, அண்ணன் என எல்லோரும் பிரபல டாக்டராக இருக்கிற ஒரு வீட்டில், இரண்டாவதாக பிறந்த இளைஞனுக்கு அவர்தாங்க புதுமுக ஹீரோ விவேக் ராஜ கோபாலுக்கு சினிமா இயக்குநராக ஆசை! ''டாக்டர் வீட்டிலிருந்து டைரக்டரா? கூடாது கூடாது...'' என இவருக்கு வீட்டில் யாரும் தடை போடவில்லை என்றாலும், காதல், கத்திரிக்காய், நட்பு, பப்பு... என்று அடிக்கடி ஏழரையைகூட்டுவதால் மொத்த குடும்பத்திற்கும் இவர் மீது சற்றே கோபம்!
முதல் காதலில் தோற்றாலும், நம்மூர் ஹீரோக்களுக்கு மறுகாதல் வரும்தானே?! அப்படியே வருகிறது ஹீரோ விவேக் ராஜ கோபாலுக்கும், இந்தமுறை அவரது காதல் நம்மூரில் அல்ல, பெங்களூரில், அதுவும் சினிமா எடுக்க கற்றுத்தரும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ட்யூட்டராக போகும் நம்ம ஹீரோ, அங்கே படிக்க வரும் மேகா பரமன் மீது காதல் கொள்கிறார். டில்லி போகிறார், மேகா வீட்டில் பர்மிஷன் வாங்குகிறார், ஊர் திரும்புகிறார், ஹீரோ வீட்டில் பர்மிஷன் கேட்கிறார், கிடைத்ததா...? கல்யாணம் நடந்ததா.? இல்லையா... என்பது மீதிக்கதை!
அண்ணன் பாலாஜி மோகன், அண்ணி அம்முவின் பிரியாணி லெக் பீஸ் மீதான பிரிய ரகசியம் கடைசி வரை பரிமாறப்படாதது வருத்தம்! விவேக்ராஜ கோபால் நிறைய நடித்திருக்கிறார். மேகா பரமன் ஓ.கே., பிரமிட் நடராஜன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன், அம்மு, நாயகரின் நண்பர்கள் எல்லோரும் பளிச், பளிச்!
யுகாவின் பளிச் ஒளிப்பதிவு, கே.ஆர்.கவினின்(இவர் பாடலாசிரியர் பிறைசூடனின் வாரிசு என்பதை ஒரு சில பாடல்களில் நிரூபித்திருக்கிறார்) இனிய இசை, டி.ஜி.கீர்த்தி குமாரின் எழுத்து - இயக்கம் எல்லாம் ஏதோ விளம்பரபடம் பார்த்த திருப்தியை தருவது, ''ஒரு மோதல் ஒரு காதல்'' படத்தின் பலமா., பலவீனமா.?! தெரியவில்லை!!
மொத்தத்தில், ''ஒரு மோதல் ஒரு காதல் - காதலுடன் வாழ்தல் - காதல் வாழ்தல்'' என்றிருக்கிறது!!
- நடிகர் : ஆர்.விவேக்
- நடிகை : மேகா பர்மன்
- இயக்குனர் :கீர்த்தி குமார்
thanx - dinamalar
0 comments:
Post a Comment