1. நிமிர்ந்து நில் - என் கேரியரில் முக்கிய படம் நிமிர்ந்து நில் - சமுத்திரகனி
சமுத்திரக்கனி இயக்கும் படம், "நிமிர்ந்து நில்! ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில், அமலா பால், மேக்னாராஜ் இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த படம் பற்றி, சமுத்திரக்கனி கூறியதாவது: வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், இந்த படம் உருவாகிறது. இதில், 25 மற்றும் 48 வயது என, இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். வேறு மாநிலத்தை சேர்ந்த, வெவ்வேறு மொழி பேசக்கூடிய, ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும்... என்னென்ன நிகழும் என்பதைத் தான், புதிய கோணத்தில் சொல்லப் போகிறேன். "இந்த படத்துக்காக, மூன்று படத்துக்கான கடின உழைப்பை தரப் போகிறேன். காரணம், இது என் கேரியரில் மிக முக்கிய படம்.
ஈரோடு ராயல், அன்னபூரணி யில் ரிலீஸ்
2.வீரன் முத்து ராக்கு"- மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்று 1940களில் திருநெல்வேலி பகுதியில் வாழ்ந்த வில்லேஜ் தாதா வீரன் முத்து. அவனது கதையை இப்போது "வீரன் முத்து ராக்கு" என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கிறார்கள். வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமான கதிர், வீரன் முத்துவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி லியாஸ்ரீ. கோபால கிருஷ்ணன் இசையையும், பாஸ்கர் ஒளிப்பதிவையும் கவனித்துக் கொள்கிறார்கள்.
படத்தை இயக்கும் ராஜசேகரன் கூறியதாவது: வீரன் முத்து கதை தென் மாவட்டங்களில் செவி வழி பாடல்களாகத்தான் உள்ளது. அதனை திரைக்கதையாக மாற்றி இருக்கிறோம். அவன் சிலம்பாட்ட வீரன். அதனால் ஹீரோ கதிர் சிலம்பு கற்று நடித்து வருகிறார். அவனுக்கும் ராக்கு என்ற பெண்ணுக்கும் இடையே உள்ள காதலையும் சொல்வதால் படத்துக்கு "வீரன் முத்து ராக்கு" என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார்.
ஈரோடு சீனிவாசா , அண்ணா வில் ரிலீஸ்
3. என்றென்றும் - இந்தப்படம் பத்தி கூகுள்-ல் கிடைக்கலை
4. காதலை உணர்ந்தேன் - இந்தப்படம் பத்தி கூகுள்-ல் கிடைக்கலை
5 ACTION KIDS - ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக வந்தவர் டோங்க்லீ நடிக்கும் படம். ஏதோ குழந்தைங்க படம் போல ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
6
300: Rise of an Empire (2014)
After its victory over Leonidas' 300, the Persian Army under the command of Xerxes marches towards the major Greek city-states. The Democratic city of Athens, first on the path of Xerxes' army, bases its strength on its fleet, led by admiral Themistocles. Themistocles is forced to an unwilling alliance with the traditional rival of Athens, oligarchic Sparta whose might lies with its superior infantry troops. But Xerxes still reigns supreme in numbers over sea and land
ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்
7 எதிர்வீச்சு -மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் ஷாகுல் மற்றும் எஸ்.ராஷிக் இணைந்து தயாரிக்கும் படம் 'எதிர்வீச்சு'. இதில் நாயகனாக இர்பான், நாயகியாக ரஸ்னா நடிக்கின்றனர். சின்னி ஜெயந்த், நளினி, சிங்கமுத்து, வையாபுரி, ராஷிக், உதயா, ரதி, நிர்மலா, சினிமாஞ்சாரோ, துஷாரா, விநிஷா சலீம், நஸீரா இப்ராகிம் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கே.குணா இயக்குகிறார்.
இன்டர்நேஷனல் கேம்புட்பால் என்ற இண்டோர் புட்பால்’ விளையாட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. உலகம் முழுவதும் இந்த விளையாட்டு தற்போது பரவி வருகிறது. இதில் இர்பான் மலேசிய கால்பந்து விளையாட்டு வீரராக வருகிறார்.
பொழுது போக்கு மற்றும் விளையாட்டு அம்சங்களுடன் உருவாகும் இப்படம் மக்களுக்கு பிடிக்கும் என்றார் தயாரிப்பாளர் எஸ்.ராஷிக்.
ஒளிப்பதிவு: பிர்லாபோஸ், இசை: ராஜாமணி, எடிட்டிங்: ஜேம்ஸ், ரமேஷ்லால்.
thanx - malaimalar, dinamalar, all cine web sites
0 comments:
Post a Comment