Friday, March 28, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (28 3 .2014 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

இனம் 
.தமிழர்களுக்கு எதிராக இனம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சந்தோஷ் சிவனின் இனம் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இயக்கி இருக்கும் படம் இனம். இப்படத்தில் சரிதா, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. நாளை(மார்ச் 28ம் தேதி) இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இனம் படத்தின் ப்ரீமியர் ஷோ சென்னையில் நடந்தது. திரையுலகைச் சேர்ந்த வி.ஐ.பி.க்களுக்காக திரையிடப்பட்ட அந்த ப்ரிமியர் ஷோவில் இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்ட தமிழ்இன உணர்வாளர்கள் சிலரும் படத்தைப் பார்த்திருக்கின்றனர். இனம் படம் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கு எதிரானதாக எடுக்கப்பட்டிருப்பதாக அப்போது படம் பார்த்த பலர் கூறியிருந்தனர்.

இந்நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கொளத்தூர் மணி, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார். அதில் இனம் படம் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அப்படத்தை வெளியிடக்கூடாது என்றும், இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், படத்தை மீறி திரையிட்டால் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தனது புகாரில் கூறியிருக்கிறார்.

இதனிடையே இப்பிரச்னை தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உணர்வு எங்களுக்கும் இருக்கிறது, தமிழ்ர்களுக்கு எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறதோ, அங்கெல்லாம் முதலில் குரல் கொடுப்பது இயக்குநர் சங்கம் தான். கர்நாடக தண்ணீர் பிரச்னை தொடர்பாக நெய்வேலி வரை போராட்டம் செய்தோம். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக ராமேஸ்வரம் சென்று போராட்டாம் செய்தோம். இந்தப்படத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் எதுவும் கிடையாது. தமிழ் இனத்திற்கான படம் தான் இனம். சென்சார் போர்டு வரிவிலக்கு செய்தபோதும் ஒருபடத்தை தடை செய்கிறார்கள் என்றால் அவர்கள் படத்தை பார்க்க வாய்ப்பில்லை. இந்தப்படத்தை எடுத்தது, தயாரித்தது சங்க உறுப்பினர்கள், இவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. இதுமாதிரி தடை கொடுத்தார்கள் என்றால் படைப்பாளியின் சுதந்திரம் பறிக்கப்படும். படங்களுக்கு தடை விதிப்பது விஸ்வரூபம் மாதிரி தொடர் கதையாகிவிடக்கூடாது. இந்தப்படம் உலகம் முழுவதும் போய் சேருகின்ற படம். அதனால் இப்படத்தை தடை செய்யாமல், படத்தை ரிலீஸ் செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்பு, கொளத்தூர் மணியின் போலீஸ் புகார் போன்ற காரணங்களால் இனம் படம் நாளை வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
need for speed
கார் பந்தயம், கொலை, சிறை, பழி வாங்குதல் என, படம் துவங்கியதில்இருந்து, முடியும் வரை, இருக்கையை விட்டு, எழ முடியாத அளவுக்கு, பரபரப்பும், திகிலும் நிறைந்த காட்சிகளின் சங்கமமாக, இந்த படத்தை உருவாக்கியுள்ளார், இயக்குனர், ஸ்காட் வாக். சட்ட விரோத கார் பந்தயத்தில் ஈடுபடும் ஹீரோவின் நண்பன், எதிரிகளால் கொலை செய்யப்படுகிறான். இந்த பழி, ஹீரோ மீது விழுகிறது. சிறையில் இருந்து விடுதலையாகும் ஹீரோ, நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க புறப்படுகிறான். இது தான், படத்தின் கதை. ஆரோன் பால், டாமினிக் கூப்பர் போன்ற அதிரடி நடிகர்கள் நடித்துள்ளதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


நெடுஞ்சாலை - சில்லுன்னு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய “நெடுஞ்சாலை” படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷிவதாநடித்திருக்கிறார்.இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தை பார்த்த உதயநிதிஸ்டாலின்  இயக்குனரை வெகுவாக பாராட்டியதுடன் படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

நான் பழனியை சேர்ந்தவன். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றேன். அங்கு பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவிற்குள் நுழைந்தேன். எனது முதல் படம் ‘ரெட்டை சுழி’. தொடர்ந்து ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் நடித்தேன். இப்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணனின் ‘நெடுஞ்சாலை’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். 

என்னுடன் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த சிவதா நடிக்கிறார். படத்தில் தம்பி ராமையா, சலீம், பாலிவுட் நடிகர்கள் பிரஷாந்த், நாராயணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

‘நெடுஞ்சாலை’ படம் ரோட்டோரத்தில் வியாபாரம் செய்யும் நாயகனுக்கும், ரோட்டோரத்தில் தாபா கடை நடத்தி வரும் நாயகிக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் படமாகும். 

1960,1980, 2014 வருடங்களை வெவ்வேறு காலதொடர்புகளுடன் பிரதிபலிக்கும். ரூ.7 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வருகிற 28–ந் தேதி இந்தியா முழுவதும் ரிலிசாகிறது. இந்த படம் அனைத்து தரப்பினரும் சென்று பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் வெளியீட்டின்போது பொதுமக்களிடையே சாலை விபத்தை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம், விபத்து விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்வோம் என்றார். 

தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதுப்புது கதாநாயகர்கள் வருகிறார்கள். படத்திற்கு கதாநாயகர்கள் முக்கியமா? கதை முக்கியமா? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கதை தான் படத்தின் கதாநாயகன் என்று பதிலளித்தார்.



thanx - dinamalar,malaimalar

0 comments: