Tuesday, February 18, 2014

D-Day - சினிமா விமர்சனம் ( ஹிந்தி)

தாவுத் இப்ராஹிம் மாதிரி ஒரு டான் பாகிஸ்தான் ல இருந்துக்கிட்டு இந்தியா மேல தீவிரவாதத்தை ஏவி விடறான். அவனைப்பிடிக்க இந்தியாவின் ரா பிரிவு ஆஃபீசர்கள்  4 பேர் இந்தியாவில்  இருந்து பாகிஸ்தான் வர்றாங்க .சாதா தாதா , லோக்கல் ரவுடியை ஒரு இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் பண்ணப்போனாலே எம் எல் ஏ கிட்டே இருந்து ஃபோன் வரும் . இண்ட்டர்நேசனல் கிரிமினல் கைது செய்யப்படும் சூழல் அமைஞ்சா அவன் கிட்டே இருந்து  என்னென்ன எதிர்ப்புகள் எந்தெந்த ரூபத்தில் வரும் ? அந்த 4 பேருக்கும் எப்படி நெருக்கடி கொடுப்பான்? இதை எல்லாம் பிரமாதமா திரைக்கதை மூலம் சொல்வது தான் டி டே படத்தின்  சாராம்சம்


படத்தில்  முதல் நாயகன் திரைக்கதை ஆசிரியர் தான் . மிகப்பிரமாதமா காட்சிகளை நகர்த்திட்டுப்போறார். அடுத்து எடிட்டிங்க் . பக்கா கட்டிங்க் அண்ட்  பிரசண்ட்டேஷன் . ஒளிப்பதிவு பிரமாதம் . வசனங்கள் நறுக் சுருக் . இந்தியாவின் இணை இல்லாக்கலைஞன் கமல் ஹாசனின் குருதிப்புனல் , விஸ்வரூபம் பாணியில் அமைந்த இந்திய சினிமாவின்  முக்கியமான படம் இது . கடந்த 10 வருடங்களில்  இது போல் டெக்னிக்கலாக, பக்காவாக ஒரு படம் வரவில்லை


தீவிரவாதிகள் எப்படி உருவாக்கப்படறாங்க ? அவர்களை எப்படி மூளைச்சலவை செஞ்சு  ரெடி பண்றாங்க என்பதை விளக்கமா சொல்லி இருக்காங்க . கதைப்போக்கே  ஒரு தீவிரவாதி கதை சொல்வது போலத்தான் அமைக்கப்பட்டிருக்கு 




தில் சே ( உயிரே)  படத்தில் மனீஷா கொய்ராலா மூலம் தீவிரவாதியின் கடைசி உயிர்வாழ் நாள் மன நிலையை துல்லியமா மணிரத்னம் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் அதில்  காதல் கதை முன்னிலைப்படுத்தப்பட்டதால் தீவிரவாதத்தின் தீவிரம் மட்டுப்பட்டே இருந்தது . ஆனால் இந்தப்படத்தில் தீவிரவாதியின் மூலமே கதை சொல்லப்படுவதால் பார்வையாளனின் மனம் அவன் சார்பாகவே எண்ணிப்பார்க்கும் விதத்தில்  இருக்கு


படத்தின் போஸ்டர்  டிசைன்கள் , விளம்பரங்கள்  வியாபார உத்தியாக இது ஒரு மாதிரியான படம் போல் காட்சி  கொடுத்தாலும் இது ஒரு நல்ல  படம். 


ஸ்ருதி ஹாசன்   விலை மாது கேரக்டரில்  கவுரவத்தோற்றத்தில் (!!) வருகிறார்.இதில் ஒரு நகை முரண்  -யாராவது ஒரு விஐபி படத்தில் அகவுரவமான கேரக்டரில் நடித்தாலும்  சில காட்சிகள் மட்டுமே வந்து போனால் அது கவுரவத்தோற்றம் ஆகிவிடும் . 


அவரது  முக்கியமான கஸ்டமர்  உனக்கு என்ன வேண்டும் என கேட்க தன் முகத்தை சிதைத்தவனைப்பழி வாங்கனும் என்பதை தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்  குரலில் மட்டும் வெறுப்பை நனைத்து சொல்வது  இந்திய சினிமாவுக்குப்புதுசு 




க்ளைமாக்சில்  மாட்டிக்கொண்ட தாதா கண்களில் எந்த உயிர் பயமும் இல்லாமல்  நீங்க என் மேல கை வைக்க  முடியாது என தெனாவெட்டாகப்பேசும் காட்சி கிளாசிக் 

தீவிரவாதியின்  மனைவி  போலீசால் ஏர்போர்ட்டில் வளைக்கப்படுவது , பின் விசாரணையில்  மெல்ல மெல்ல அவரை இறுக்க  அதிகாரிகள் கேள்விக்கணைகள் தொடுப்பது , தீவிரவாதியின்  குழந்தை  ஃபோனில் பேசுவது , எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் குழந்தைப்பாசம் இருக்கும் என்பதைகாட்சியால் விளக்கும் இடம் என பிரமாதமான காட்சிகள் படம் நெடுக . 

இந்தப்படம் பாகிஸ்தான் , இந்தியா இரு நாடுகளும் தடை செய்ய வாய்ப்பு உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது  இயக்குநரின் துணிச்சல் . இரு அரசுகளையும் மானாவாரியா விளாசி , விமர்சித்து பூடகமான வசனங்கள் ஆங்காங்கே  இருக்கு 


 படம்  முழுக்க பாகிஸ்தான் - கராச்சியில்  படமாக்கப்பட்டிருக்கு . நாம் பார்க்காத லொக்கேஷன்கள் 


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1.  தன் கணவர்  ஒரு தீவிரவாதி என்பதை ஒரு மனைவி கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பவே  முடியலை . ஏன்னா பொண்டாட்டிக்குத்தெரியாம வெளில  ஒரு டீக்குடிச்சுட்டு வந்தாக்கூட டக்னு கண்டு பிடிச்சு கேள்வி கேட்பவங்க அவங்க. கணவர்  ஏகப்பட்ட பணம் திடீர்னு சம்பாதிக்கறார், எப்படி வந்தது ? என கேட்க மாட்டாரா? 



2  தன் மனைவி , குழந்தையை ஏர் போர்ட்டில் வழி அனுப்பி விட்டு அவர்  போன பின்பு  விமானம்  கிளம்பலை என்பதும் நம்ப முடியலை . இவ்வளவு சிக்கலான  ஒரு சூழலில்  விமானம்  கிளம்பிய பின் தானே அவர் அங்கிருந்து  கிளம்பனும் ?

3  தீவிரவாதிகள்  எப்பவும்  பரட்டைத்தலையோட , தாடியோட தான் இருக்கனும்னு ஏதாவது   ரூல்ஸ் இருக்கா? அவன் நீட்டா , டீசண்ட்டா இருக்க மாட்டானா? இப்டி இருந்தா  ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சிடலாமே? 


4 அது ஏன் எல்லா தீவிரவாதப்படங்களிலும் தீவிரவாதிகள் என்றாலே  முஸ்லீம்கள் தான் 100% என காட்சிகள் வைக்கனும் ? சர்ச்சையைத்தவிர்ப்பதற்காகவாவது   10 தீவிரவாதிகளைகாட்டும்போது அதில் 2  இந்து , 2  கிறிஸ்டியனைக்காட்டலாமே?  ஏன்னா இப்படி காட்டும்போது   குழந்தைகள் மனதில்   முஸ்லீம்கள் என்றாலே  ஒரு பயம்  படிந்து  விடும் . இது எதிர்கால சந்ததிக்கு நல்லதில்லை 




பிரமாதமான நச் வசனங்கள் ஒரு சாம்ம்பிள் 






1. இந்தியா வின் பெரிய மைனசே தப்பானவங்களுக்கு வாய்ப்புக்குடுப்பதே # டி டே

==========================


2 விசுவாசமா ,? வியாபாரமா? முடிவு உன் கைல. இனி விசுவாசத்துக்கு இடமே இல்லை #,டிடே


===========================


3   நம்ம எதிரி பாம் போடறவங்க கிடையாது.பாம் ரெடி பண்ணிக்குடுக்கறவங்க தான் #,டி டே


==================


4 நீங்க அவங்களுக்கு எதிரி மட்டும் தான்.நான் துரோகியும் கூட.என் சாவு எப்டி இருக்குமோ?#டிடே


=================


5  அழகான வைப்பாட்டி வைக்காதவன் ஆம்பளையே கிடையாது.நான் ஆம்பளை #,டி டே


========================


படத்தின்  முக்கிய கேரக்டர்களை Irrfan Khan, Rishi Kapoor, Arjun Rampal, Huma Qureshi, Shruti Haasan  பண்ணி  இருக்காங்க


சி பி கமெண்ட் - ஸ்ருதி ஹாசன் -ன் D-DAY ( HINDI) -பிரமாதமான மேக்கிங். எடிட்டிங்.ஷார்ப் வசனம்-ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கானது, ஆரண்ய காண்டம் மாதிரி  உலகப்படத்துக்கு இணையான படம் . சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படம்



ரேட்டிங் = 3 / 5



a








0 comments: