ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில்
வந்த அபாரமான க்ரைம் த்ரில்லர் மூவியான ஈரம் படத்தை அடுத்து எடுக்கப்பட்ட
வல்லினம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? பார்ப்போம் .
ஹீரோ
ஒரு பேஸ்கட் ப்ளேயர். திருச்சி ல காலேஜ் க்ரவுண்ட் ல விளையாடும்போது சக
நண்பன்க்கு எதிர்பாராத விதமா இறப்பு நிகழுது. ( எல்லா இறப்புகளும்
பெரும்பாலும் யாரும் எதிர்பாராததே!) .அதனால மனதளவில் பாதிக்கப்படும் ஹீரோ
ஒரு மாற்றம் தேடி சென்னை வருகிறார். அங்கே உள்ள காலேஜ் ல சேர்ந்து
படிக்கிறார் .
அங்கே
ஹீரோயினை சந்திக்கிறார். அதே காலேஜ் தான். ஜஸ்ட் ஃபிரண்ட்ஷிப் தான் .
அப்புறம் காலேஜ் ல பேஸ்கட் பால் டீம் ஃபார்ம் ஆகுது. இண்ட்டர் காலேஜ்
காம்ப்பட்டிஷன் ல ஹீரோ டீமும் ஆடுது.
அதுல ஹீரோ டீம் ஜெயிக்குதா? இல்லையா? என்பது தான் கதை .
முன்
பாதி யில் சும்மா காலேஜ் , காதல் , கலாய்ப்புகள் அப்டினு அசால்ட்டா போகுது
திரைக்கதை . அதுக்குப்பின் இயக்குநர் அது வரை எடுத்ததைப்போட்டுப்பார்த்து
விழிச்சுக்கிட்டார் போல. சீட்டாட்டத்தில் விட்டதைப்பிடிக்கும் ஆவேசத்தில்
ஆடுவார்களே அது போல் பின் பாதி திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கிறார்.
ஆனாலும்......
எதிர்பாராத
விதமா ஒரு கல்யாணத்துக்குப்போய் அங்கே பிரமாதமான விருந்துசாப்பாடு
சாப்ட்டா நமக்கு எப்படி இருக்கும்? அது மாதிரி ஈரம் படம் இருந்தது . அதே
கல்யாணப்பொண்ணுக்கு கட்டுச்சோறு விருந்து எனும்போது நம் மனம் இன்னும்
அதிகமா எதிர்பார்த்துப்போகும்போது 9 வகையான வெரைட்டி ரைஸ் எதும் போடாம
ஒரே ஒரு லெமன் ரைஸ் போட்டா எப்படி ஏமாற்றம் ஆகும் ? அது மாதிரி ஆகிடுது.
ஹீரோவா
தேவயானியின் தம்பி நகுல் .ஆள் நடிப்பில் நல்ல முன்னேற்றம், பேஸ்கட் பால்
நிஜமாகவே படத்துக்காக கற்றாராம். சபாஷ் . அவர் பாடி லேங்குவேஜில் நல்ல
முன்னேற்றம். ஆனால் இதுவரை 10 படம் கூட பண்ணாமல் அவர் விஜய் , விஷால்
ரேஞ்சுக்கு வில்லனிடம் மோதும்போது கொடுக்கும் பில்டப்கள் ஓவர் .
ஜெகன் காமெடி பண்றதா நினைச்சுட்டு கொஞ்சம் மொக்கை போடறார்.
ஹீரோயின்
புது முக நாயகி மிருதுளா. ரொம்ப அகலமான முகம். தமிழர்களுக்கு அவ்வளவு
சீக்கிரம் பிடிச்சுடாது . அவர் முகம் நம்ம மைண்ட் ல செட் ஆவதற்குள் அவர்
லூஸ் தனமாய் சேஷ்டைகள் செய்வது எரிச்சல் . ஒரே ஒரு பாடல் காட்சியில்
கடலில் 5 நிமிஷம் குளிச்சுட்டே இருப்பது ஆஹா! கொடுத்த சம்பளம் இதுக்கே
சரியாகப்போச்சு போல .
பின்
பாதி திரைக்கதையில் நல்ல கவனிப்பு இருந்தாலும் ஒவ்வொரு சீனும்
முடியும் போதும் இதுதான் அடுத்த சீன், இப்படித்தான் காட்சிகள் நகரும் என
சுலபமாக யூகிக்க முடிவது பெரிய பலகீனம் .
பாடல் காட்சிகள் நல்லா எடுத்திருக்காங்க .
கெஸ்ட்
ரோலில் ஈரம் ஆதி வர்றார். அதுல் குல்கர்னியை வேஸ்ட் பண்ணிட்டாங்க .
ஹீரோயின் அப்பா வுடனான உரையாடலில் நல்ல அழுத்தம், அந்தக்காட்சியை இன்னும்
மனதில் பதிய வைக்கும்படி எடுத்திருக்கலாம்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. பேஸ்கட்
பால் பிளேயர் என்பதை ஹீரோ சென்னையில் யாரிடமும் சொல்லாமல் இடைவேளை
டைமில் வில்லனுடன் மோதும்போது ஷூட் போட்டு காட்சியால் உணர்த்துவது
2 கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் தில்லுமுல்லுகள் , அது பற்றிய வசனங்கள் கச்சிதம்
3 ஹீரோயின் தன் அப்பாவிடம் தன் காதலனுக்காக வாதிடும் காட்சியும் கடைசியில் அம்மா இல்லைனு இப்போதான் ஃபீல் பண்றேன் என்பதும் டச்சிங்க் .
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. பின் பாதியில் சொல்ல வேண்டிய சம்பவங்கள் அத்தனை இருந்தும் ஏன் முன் பாதியில் அவ்வளவு அநியாய அசிரத்தை ?
2 ஹீரோ - ஹீரோயின் காதல் மனதைத்தொடவில்லை
3 .காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் ஹீரோயினுக்கு எப்பவும் கிளாமர் டிரஸ் கூடாது .
4 க்ளைமாக்ஸ் பரபரப்பை ஏற்படுத்தத்தவறி விட்டது
மனம் கவர்ந்த வசனங்கள்
1. நீ என்ன படிக்கறே?
பி சி ஏ
எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே?
நாம தான் அதுவும் படிக்கறோம்
2 என்னடா இவன் சுறு சுறுப்பே இல்லாம ஸ்லோமோசன் ல வர்றான் ?
3 நாலு அடி இருந்தா நாலடியார் . நாலே நாலு முடி இருந்தா நான் முடியார்
4 என்னை உனக்குப்பிடிக்காதுன்னு நினைச்சேன் \\
உன் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கு
5 சமைச்ச உடனே சாப்பிட்டா அது உப்புமா , அடுத்த நாள் வெச்சிருந்து சாப்பிட்ட அது ரொம்பத்தப்பும்மா
6 பேஸ்கட் பால் பிளேயரா இருந்துக்கிட்டு சச்சின் தான் பிடிக்கும்கறியே?
எந்த கேம் , எந்த பிளேயர்ங்கறது முக்கியம் இல்லை
7 அவன் கேப்டனா இருக்கறது உனக்கு ஓக்கே தானே?
யார் கேப்டன் என்பது முக்கியம் இல்லை , யார் பெஸ்ட்டா ஆடப்போறாங்க என்பது தான் முக்கியம்
8 இனிமே இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணாதீங்க. மீறி செஞ்சா , ம் அதான் செய்யாதீங்கனு சொல்லிட்டனே ?
9 காதலிக்க எதுவும் முக்கியம் இல்லை , அன்பா அக்கறையா ஒரு விசாரிப்பு , ஒரு எஸ் எம் எஸ் போதும்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்
1. வல்லினம் த்ரில்லர் மூவின்னாங்க
46 கள்ளக்காதல் ஜோடியும் 12 தெய்வீகக்காதலர்களும் அபிராமி கவுன்ட்டர்ல # படம் சுமாரா இருந்தாலும் டைம் பாஸ் ஆகிடும் போலயே
==================
2 பேஸ்கட் பால் பிளேயர்ஸ் பத்தின படம் போல.தமிழன் ஏத்துக்குவானா? # வல்லினம்
=====================
3 இசை ,பின்னணி இசை = தமன் னு போடறாங்க # அப்போ இத்தனை நாளா இத்தனை பேரு தனித்தனியா வா செஞ்சாங்க?
======================
4 இது பொண்ணுங்களுக்கான படம் போல.ஹீரோ குளிக்கற சீன் ,ஸ்லோமோசன் ல பேஸ்கட் பால் த்ரோ பண்றதெல்லாம் காட்றாங்க # வல்லினம்
====================
5 காதலா காதலா பிரபுதேவா - கமல் டான்ஸ் ஸ்டெப் இந்தப்படத்தைப்பாத்து முன் கூட்டியே சுட்டுட்டாங்க போல # வல்லினம்
====================
6 நாயகி மிருதுளா.பூசணிப்பூ மாதிரி அகல முகம்.ரசிச்சுட்டு இருக்கும்போதே லைலா ,ஜெனிலியா மாதிரி லூஸ் தனம் பண்ணுது.முடியல
=================
7 வல்லினம் - இடைவேளை.பெரிதாக கவரவில்லை.ஈரம் படத்தில் வந்த சுவராஸ்யங்களில் 25% கூட இல்லை.
====================
8 ஹீரோயின் லோ கட் பனியன் ,மிடி யோட குனிஞ்சு பரிமாறிக்கிட்டே ",எல்லாரும்
வெட்கப்படாம சாப்பிடுங்க"ங்குது.இது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?
==================
9 பிரசாந்த்தோட அட்டர் பிளாப் படமான கல்லூரி வாசல் கதையை உல்டா பண்ணிட்டாங்க போலயே?
==============
10 ஹீரோயின் கடல் ல குளிச்சு முடிச்ட்டு கரை ஏறி மண் ல புரண்டு விளையாடுதே.அம்மா அப்பா திட்ட மாட்டாங்களா?
=================
11 என்னதான் ஹீரோயின் அல்வாத்துண்டு உதட்டழகியா இருந்தாலும் ஹீரோ அவரைக்கடல்ல புரட்டிப்போட்டு கடிச்சு வைக்கறாரே? கசக்காதா?
======================
12 இடை வேளை அப்போ வெளில போகாத காதல் ஜோடிங்க இப்போ போய்ட்டு போய்ட்டு வருதுங்க.அடேய்.என்னடா நடக்குது இங்கே? ;-)))
==================
13 டைரக்டருக்கு மனசுக்குள்ளே செல்வராகவன் னு நினப்பு.ஹீரோ காலேஜ் டாய்லட் ல
நெம்பர் 1 போகும்போது பின்னால வந்து 143 சொல்லுது.அய்யோ ராமா
=================
14 ஹீரோ ஹீரோயின் கிட்டே காதலை முதன் முதலா வெளிப்படுத்தும் கவிதை தருணம்.உடை
எவ்ளவ் முக்கியம்?,ஹீரோயின் துக்ளியூண்டு சிம்மீஸ் போட்டிருக்கு
====================
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்- 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே
ரேட்டிங் = 2.5 / 5
சி பி கமெண்ட் -ஈரத்தில்
கால் வைத்தால் பின் அடுத்த அடி கவனமா வைக்கலைன்னா சறுக்கும். அறிவழகன்
க்கு வல்லினம் ஒரு சறுக்கல் படம். ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்.
ஈரோட்டில் ஒரு வாரம் தான் ஒடும் . நானா கண்டு பிடிக்கலை. மார்ச் 7
நிமிர்ந்து நில் வருதாம்.இந்தபப்டத்தை டி வி ல சீக்கிரம் போட்டுடுவாங்க ,
அப்போ பார்த்துக்கலாம்
வல்லினம் - சுமாரான முன் பாதி , விறுவிறுப்பான பின் பாதி -யூகிக்க முடியும் காட்சிகள்
a
டிஸ்கி -
02/blog-post_7004.html
a
டிஸ்கி -
1 comments:
sir, andha ponnu 555 la nadicha ponnu illa... adhu peru mirthika...idhu peru mirthula...
Post a Comment