வெய்யில் பட ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் சினிமா தியேட்டர்ல தன் வாழ்க்கையைத்தேடுபவர் தான். அந்த சாயல் வராம இருக்க தாவணிக்கனவுகள் பின் பாதி சாயலை மிக்ஸ் பண்ணி எம் சசிகுமார் பிராண்ட் நட்பு , காதல் தியாகம் சேர்த்தா பிரம்மன் கதை ரெடி .
ஹீரோ பழைய சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து ஓட்டிட்டு இருக்கார் . தியேட்டர்ல கூட்டமே வர மாட்டேங்குது . புதுப்படம் தர மாட்டேங்கறாங்க, பழைய படத்துக்கு மக்கள் வர மாட்டேங்கறாங்க. 5 லட்சம் ரூபா கடன் ஆகிடுச்சு.சின்ன வயசுல சினிமாக்கனவோட இருந்த சக நண்பன் இப்போ சினிமா ல புகழ் பெற்ற இயக்குநர்.அவரை சந்திச்சா உதவி கிடைக்கும்னு சென்னை கிளம்பறார்.
சென்னைல எதிர்பாராத விதமா ஹீரோவுக்கு இயக்குநர் ஆகும் வாய்ப்பே கிடைச்சுடுது .அவரோட கதையை நண்பனுக்காக விட்டுத்தர்றார். காதலியையும் விட்டுத்தர தயார் ஆகறார். கடைசி வரை தான் யார்?னு நண்பன் கிட்டே சொல்லவே இல்லை.
உண்மை தெரிஞ்ச நண்பன் என்ன முடிவெடுக்கறான் என்பதே கதை.
இதுவரை கிராமீய மணம் கமழும் படங்களிலேயே நடிச்சு வந்த எம் சசிகுமார் முதன் முறையா தைரியமா நகர கதைக்கு மாறி இருக்கார் . பெருசா மாற்றம் தெரியல . தங்கச்சி செண்ட்டிமெண்ட் , அம்மா , அப்பா விடம் பாசம் காட்டுவது அக்மார்க் எம் ஜி ஆர் ஃபார்முலாக்கள் வழக்கம் போல் உண்டு . நண்பன் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் அள்ளுது ( இன்னும் எத்தனை நாளுக்கு இதை வெச்சே ஓட்டுவாரோ /? )
டூயட் காட்சிகளில் ராஜூ சுந்தரத்தின் தயவில் யதார்த்தமான , கண்ணை உறுத்தாட நடன அசைவுகள் . முதன் முறையா ஃபாரீன் லொக்கேசன் ல ஆட்டம் .
ஹீரோயின் புதுமுகம் லாவண்யா த்ரிவேதி . இவர் 2006ல் மிஸ் உத்தர்காந்த் ஆக தேர்வானவர் . மாடலிங்க் துறையில் கொடி கட்டிப்பறந்தவர் , சிக் ஷாம்புவின் மாடல் . 2012 ல் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனவர் .
அகத்தியன் -ன் காதல் தேவதையில் அறிமுகம் ஆன இஷா கோபிகர் முக அழகு சாயல் , தமனா வின் முக பாவனைகள் இரண்டையும் கலந்து கட்டி அடித்த நீள் வட்ட நிலா முகம் . பிரமாதமாக நடிக்கா விட்டாலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பட்சி சொல்லுது ( இந்த பட்சிக்கு வேலையே இருக்காதா? எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்குமா? )
இவருக்கு கண்களும் , உதடுகளும் சின்னதாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் நளினங்கள் தான்.
படத்துக்கு பலம் சேர்க்கும் சந்தானம் படத்தின் கதையோடு ஒன்றிய காமெடி செய்கிறார். மொத்தப்படத்திலும் 24 ஜோக்ஸ் தான் சொல்றார் என்றாலும் அப்ளாஸ் அள்ளறார் .
சூரி பின் பாதி கதையில் தான் வர்றார் . வழக்கம் போல் ஓவராக மொக்கை போடாமல் சுமாராக மொக்கை போடுகிறார் .
எம் சசிகுமார்-ன் நண்பராக வருபவர் ஒரு கல்லூரியின் கதை ஆர்யா மாதிரி பாடி லேங்குவேஜில் அடக்கி வாசிக்கிறார் .
படத்தில் வசனம் செம ஷார்ப் . பின் பாதி திரைக்கதையில் தான் தடுமாறி விட்டார்கள் . செயற்கையான சம்பவங்கள் , வலிந்து திணிக்கப்பட்ட நண்பன் செண்ட்டிமெண்ட் , காதலியை விட்டுத்தரும் ஒட்டாத தியாகம் எடுபடவில்லை
ஆனாலும் சந்தானம் காமெடிக்காகவும் , எம் சசிகுமாருக்காகவும் ஒரு முறை பார்க்கலாம் .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1.வ்ழக்கமான சசிகுமார் படங்களில் தவறாமல் இடம் பிடிக்கும் வன்முறை சுத்தமாக இல்லை . குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைக்கதை
2 சோப்புக்குமிழி போல் வாழ்க்கை என்பதை பூடகமாக சொல்லும் ஓப்பனிங்க் ஷாட் , இயக்குநர் பெயரை டைட்டில் கார்டில் போடும்போதும் சோப்புக்குமிழிகளை வான் நோக்கிபறப்பதை உயர்வுக்கு குறியீடாக காட்டுவது சபாஷ் காட்சிகள்
3 ஒரே ஒரு பாடல் காட்சிக்கு வந்தாலும் பத்மப்ரியாவின் குத்தாட்டம் செம கிக்
4 சினிமா தியேட்டரின் அவலத்தை சீரியசாக சொல்லாமல் காமெடியாகச்சொல்லி மனதில் பதிய வைத்த பாங்கு , குழப்பம் இல்லாத திரைக்கதை , உறுத்தாத இசை
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. வீட்டுக்குத் தெரியாமல் காதலிக்கும் பொண்ணு அண்ணன் நடத்தும் சினிமா தியேட்டரிலேயே கட் அடிச்சுட்டு வந்து படம் பார்க்குமா? அந்தளவு வேய்க்கானம் ( விவரம் ) இல்லாமயா இந்தக்காலப்பொண்ணுங்க இருக்காங்க ?
2 காதலிக்கும் ஹீரோவின் தங்கை நிச்சயிக்கப்பட்ட மாப்ளை வீட்டில் வாங்கி அனுப்பிய நெக்லசைப்பார்த்ததும் மனம் மாறுவது , காதலனை மறப்பது பெண்களை அவமானப்படுத்துவதாக இருக்கிறது
3 முன் பின் தெரியாத ஆள் கதை சொன்னதும் டக்னு அவன் கைல 5 லட்ச ரூபா செக் அட்வான்சா யார் தருவாங்க ? அவன் பாட்டுக்கு ஓடிட்டா? இந்தக்காலத்துல மொத்தக்கதைக்கே 2 லட்சம் தான் தர்றாங்க ( புது முக இயக்குநர்க்கு ) அதே படத்தில் ஸ்டோரி ரைட்டருக்கெல்லாம் வேல்யூவே இல்லை என ஒரு வசனம் வேற வருது
4 ஓப்பனிங்க் ஷாட்டில் வரும் சேசிங்க் காட்சி ஜாக்கிசான் -ன் ப்ராஜக்ட் ஏ , ஆர் பாண்டியராஜன் -ன் நெத்தி அடி யில் பார்த்த காட்சிகளே !
5 ஹீரோவைப்பார்க்க ஹீரோயின் நகரத்துக்கு வருவதும் அவரை சந்திக்க முடியாமல் திரும்புவதும் படு செயற்கை . செல் ஃபோன், ஃபோன் எல்லாம் எதுக்கு இருக்கு ?
6 நண்பனுக்காக எதைத்தியாகம் செய்தாலும் ஏத்துக்கலாம், காதலியையே தியாகம் செய்யத்துணியும் ஹீரோவின் நட்பு செண்ட்டிமெண்ட் காதலை கொச்சைப்படுத்துவதாய் இருக்கு
7 ஹீரோ - ஹீரோயின் காதல் அழுத்தமாக காட்டப்படாததால் க்ளைமாக்ஸில் அவர்கள் சேருவார்களா? சேரமாட்டார்களா? என்ற பதைப்பு எல்லாம் வரவே இல்லை
நச் வசனங்கள்
1. சந்தானம் - என்னடா இது?
லவ் லெட்டர்.
அவனவன் ட்விட்டர் ல லவ் பண்றாங்க.நீ இப்போ போய் லெட்டர்? போடாங் # பிரம்மன்
2 சந்தானம்
- எனக்கு சேர்க்கை சரி இல்லை.பீரோடு சேர்ந்து ஒயினும் நாறும்னு சொல்ற மாதிரி
3 சந்தானம் - பொதுவா தியேட்டர் காரங்க போஸ்டர் ஒட்டறது 1,ஓட்றது 1 ,இது எல்லா பக்கமும் நடப்பது தானே?
4 சந்தானம் - கிரிக்கெட்னா பால் போடறதும் ,தியேட்டர்னா கால் போடறதும் சகஜம் தானே?
5 நீங்க ஆசைப்பட்ட விஷயத்தை நிஜமா நீங்க நேசிச்சா அது நிச்சயம் உங்களுக்கு ஒரு நாள் கிடைச்சே தீரும் #,பிரம்மன்
6 தெரிஞ்சவங்க யார் கிட்டேயாவது கடன் கேட்கலாமா? தெரியாதவன் கிட்டே கேட்டாக்கூட ஏதாவது கிடைக்கும்.நம்மைப்பத்தி தெரிஞ்சவன்் கிட்டே ம்ஹூம்
7 பொதுவா ஒருத்தர்ட்ட 1 இருந்தா 1 இருக்காது.ஆனா இப்டி 1 மே இருக்காதுனு எப்டி தெரியும் # பிரம்மன்
8 டீச்சர்.காதலுக்கு வயசு இல்லைனு ஜெயகாந்தன் சொல்லி இருக்காரு.நீங்க ஓக்கே ன்னா எனக்கும் ஓக்கே # சந்தானம்
9 பார்க்க முடியாத இடத்துல நண்பன் இருக்கான்னு பெருமையா இருக்கு
10 முன்னே பின்னே தெரியாதவனையே நான் நண்பனாப்பார்க்கறவன் #,சசிகுமார் பஞ்ச்
11 சந்தானம் - ஏம்மா அவன் என்ன ஆர்டிஓ வா? ஏன் இப்டி அவனை சுத்தி 8 போடறே?
12 அடிபட்டாதான் வாழ்க்கைல எதையும் கத்துக்க முடியும் # இயக்குநர் சாக்ரடீஸ்
13 யாருக்கும் பயன்படாத குப்பை கூட ஒருத்தருக்கு பயன்படுது.நம்ம வாழ்க்கையும் அப்டித்தான்.யாருக்காவது பயன்படனும் # பிரம்மன்
14 ஒவ்வொருத்தருக்கும் தான் காதலிக்கும் பெண் தான் தேவதை .என் காதலி என் மனசுல இருக்கா
15 நண்பன் கேட்டா கட்டை விரலையே தருவேன்.சினிமா எடுக்க் வெச்சிருந்த கதையைத்தரமாட்டேனா? # எம் சசி யின் அப்ளாஸ் டயலாக்
16 ஸ்டோரி ரைட்டருக்குனு தனி மார்க்கெட் இங்கே இல்லை # பிரம்மன்
17 காதலா? லட்சியமா? னு வந்தப்ப லட்சியம் தான் முக்கியம்னு காதலைத்தூக்கி எறிஞ்சே.ஆனா காதலியை நண்பனுக்காக விட்டுத்தர்றதா? ச்சே! # பிரம்மன்
18 உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா எதையுமே வெளில காட்டிக்கிட்டதில்லை # பிரம்மன்
19 என்னை ஜெயிக்க வெச்சு நீ தோத்துட்டியேடா? நண்பன ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாதிரி
20 நீ எதையும் வியாபரமா பார்க்கறே , நான் வாழ்க்கையாப்பார்க்கறேன்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்
1. புதுமுகம் லாவண்யா த்ரிபாதி தமனாவில் பாதி.தமிழன் தமனாவையே நொட்டை சொன்னவனாச்சே? ஏத்துக்கறது கஷ்டம் தான்
2 பிரம்மன் @ இடைவேளை.பிரமிக்க வைக்கவில்லை.ஆனாலும் மொக்கை இல்லை.சந்தானம் ஓரளவு காப்பாத்தறார்
3 டூயட் சீனில் விஜய் மாதிரி ரொமான்டிக்கா முகத்தை வெச்சுக்காம விஷால் மாதிரி விரைப்பா சசி ;-)(
4 பின் பாதியில் தாவணிக்கனவுகள் சாயல் தெரியுதே # பிரம்மன்.
சி பி கமெண்ட் பிரம்மன் - நேர்த்தியான முன் பாதி , சந்தானம் காமெடி,செயற்கையான,நம்ப முடியாத பின் பாதி,
நச் வசனம்,
ஆனந்தவிகடன் எதிர்பார்ப்பு மார்க் =42 ,
குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே
ரேட்டிங்க் 2.75/5
ஏ செண்ட்டர் ,ல் சுமாராகவும் , பி செண்ட்டர், சி செண்ட்டர் களில் இன்னும் சுமாராகவும் தான் ஓடும்
ஈரோடு ராயலில் படம் பார்த்தேன் , ஓப்பனிங்க் பெரிய அளவில் இல்லை. முதல் ஷோவே 1200 சீட்ட்க்கு 560 பேர் தான் இருந்தாங்க
0 comments:
Post a Comment