ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை
வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன்.
கோயமுத்தூர் நரசீபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது அமைதி,
நல்லாட்சி, மத ஒருமைப்பாடு இயக்கம் (foundation for good governance) என்ற
அமைப்பை நடத்தி நாட்டில் விவசாயிகள் பிரச்சினை, அவர்களுக்கான
விழிப்புணர்வு, மனித ஒற்றுமை, சமூக, மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு
விஷயங்களில் நடக்கும் இயக்கங்களில் பங்கெடுத்து வருகிறார்.
டெல்லியில் இருந்த அவரிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசிகளின் தூக்கு
தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும், அது குறித்து
தமிழக சட்டப்பேரவையில் விவாதித்து கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று
முதல்வர் அறிவித்திருந்தது குறித்தும் `தி இந்து'வுக்காக தொலைபேசி வாயிலாக
அவர் அளித்த பேட்டி:
ராஜீவ் கொலையில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன?
அந்த வழக்கில் என் கடமை எப்போதோ முடிந்துவிட்டது. ஒரு மர்மமான மரணம் ராஜீவ்
மரணம். யார் கொலை செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அப்போது
எதற்காக அதை செய்தார்கள் என்றுகூட யாராலும் யூகிக்க முடியவில்லை. ஐ.பி.
எனப்படும் இந்திய நுண்ணறிவு புலனாய்வுத் துறைக்குக்கூட தெரியவில்லை. இந்த
கொலை வழக்கு பெரும்பாலும் ஜான் கென்னடி கொலை வழக்குபோல்தான் துப்புகூட
கிடைக்காமல் கண்டுபிடிக்க முடியாமல் போகப்போகிறது என்று புலனாய்வுத்துறை
உட்பட பலரும் கருதினர்.
அந்த சூழ்நிலையில்தான் அந்த வழக்கில் துப்பு துலக்க முடியுமா? என்று என்னை
அழைத்துக் கேட்டனர். நானும் ஒப்புக்கொண்டு சென்னை வந்தேன்.
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் இரவு பகல் பாராமல் சரியான தூக்கமில்லாமல்,
விடுமுறை என்று ஒன்றில்லாமல் கிட்டத்தட்ட ஓராண்டாக பல்வேறு விசாரணைகள்
நிகழ்த்தி, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து
வழக்குப் போட்டேன். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தோம். அனைவரும்
குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தது.குற்றவாளிகள் அப்பீல் போனார்கள். உச்ச
நீதிமன்ற மூத்த நீதிபதிகளே என் விசாரணையையும், ஆதாரங்களையும் ஒப்புக்கொண்டு
3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தூக்கு தண்டனையும் அளித்தனர்.
பின்னர் அதில் நளினி என்பவரின் தூக்கு தண்டனை கருணை அடிப்படையில் ஆயுள்
தண்டனையாகக் குறைத்தனர். மீதி 3 பேருக்கு கருணை மனு 11 ஆண்டுகள் நிலுவையில்
இருந்த நிலையில், இவர்கள் இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருப்பது மனித
உரிமைக்கு மீறிய செயல் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்கள்
தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை துப்பே இல்லாத ஒரு வழக்கில் துப்பு துலக்கி ஏராளமான
ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததோடு என்
கடமை முடிந்துவிட்டது.
ராஜீவ் காந்தி உங்களுடைய நெருக்கமான நண்பர். அவர் இப்போது இருந்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்று கருதுகிறீர்கள்?
நிச்சயமாக நன்றாக சிறப்பாக இருந்திருக்கும். நாட்டின் மதிப்பையும்,
தரத்தையும் உலக அரங்கில் மிக பன்மடங்கு உயர்த்தியிருப்பார். மக்களின்
அன்பையும், மதிப்பையும் பெற்ற தலைவரான அவர் நல்ல உள்ளம் கொண்டவர். மக்கள்
அவரை நேசித்ததைவிட மக்களை அவர் நேசித்தார் என்றுதான் சொல்லுவேன். அவர்
ஆட்சியில் சில சின்ன தவறுகள் நடந்திருக்கலாம். மீண்டும் அவர் ஆட்சிக்கு
வந்திருந்தால் அந்த சிறுதவறுகளைகூட கலைந்து தவறுகளுக்கே இடம் கொடாத ஆட்சி
செய்திருப்பார். இந்த மாதிரி நிலையற்ற, திறனற்ற அரசாங்கமாக அது நிச்சயமாக
இருந்திருக்காது.
3 பேருக்கான தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டதை தமிழக
சட்டப்பேரவையிலேயே விவாதப் பொருளாக்கி அவர்கள் 3 பேரையும் சில நாட்களில்
விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாரே முதல்வர் ஜெயலலிதா?
எந்த விஷயத்தையும் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் விவாதிக்கலாம். முடிவு எடுக்கலாம். அதில் கருத்து சொல்ல என்ன இருக்கு?
readers views
- sivaif you did the job properly these sort of confusion might have been avoided. Instead capturing the real culprit you capture a passer by who might have sneezed during that event and concluded he is the culprit. Investigation should be based on actual fact not assumption since he sneezed in this case he purchase battery.2 days ago · (4) · (0) · reply (1)
- jaimanikandan from ChennaiThen why did he go to sri lanka several times illegally dont try to fool the common man . even if you are not an indian atleast be a human2 days ago · (0) · (0) · reply (0)
- samy kumara from Parisஐயோ… ஐயோ… ஐயோ… பாக்கப் பாக்கக் கண்களால் சகிக்க முடியவில்லை. கேட்கக் கேட்கக் காதுகளால் முடியவில்லை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே என்று பாடுவதற்கு நானொன்றும் பாரதியார் இல்லை. நான் ஒரு சாமானியன் ஐயா… ஆனால், பொய்யையும் புரட்டையும் எத்தனை நாளைக்குத்தான் பார்த்துக் கொண்டிருக்கலாம்? இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் நெஞ்சுக்குத்தோ மாரடைப்போ வந்தே தீரும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூன்று பேரின் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு நிராகரிக்கப்பட்ட பிறகு ஆளாளுக்கு ஒவ்வொருவரும் அடிக்கிற கூத்தும் போடுகிற நாடகங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.2 days ago · (1) · (1) · reply (0)
- raanaஅவருடைய ஆட்சியில் சிறிய தவறுகள் ?.........சீக்கியர்கள் கொல்லப்பட்டதா ?போபார்ஸ் ஊழலா ?போபால் விஷவாயு தாக்குதலின் பொது ஆண்டெர்சனை தந்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பியதா ?எது சார் ?நீங்கல்லாம் நல்ல வருவீங்க ........!2 days ago · (20) · (0) · reply (1)
- R.Subramanian from Kumarபோபோர்ஸ் உழலில் ராஜீவ் காந்திக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்த வழக்கை விசாரித்த ஸ்வீடன் நாட்டு அதிரிகாரி சொல்லியிருக்கிறார் ஆனால் இந்தியாவில் ராஜீவ் காந்தியை சம்பந்தபடுத்தி செய்திகளை போட்ட பத்திரிகைகள் இதை பற்றி பெரிதாக போடவில்லை... ராஜீவ் காந்திக்கு இரண்டு அநிதிகள் இழைக்கபட்டு இருக்கிறது ஒன்று போபோர்ஸ் இன்னொற்று விடுதலை புலிகளால் ராஜீவ் காந்திக்கு நடத்தப்பட்ட கொடுரம்.2 days ago · (10) · (13) · reply (0)
- Adhavan Adhavan from Jamnagarதுப்பு துலக்கிய கார்த்திகேயன், ராஜீவ் காந்தியை ஏன் கொன்றார்கள் என்ற தகவலையும் சொல்லி இருக்க வேண்டும். மீனவ மக்களின் படுகொலைக்கு என்ன தீர்ப்பு? அவர்களும் இந்த நாட்டின் பிரிதி தானே? ராஜீவ் காந்திக்கு ஒரு தீர்ப்பு, ஏழைக்கு ஒரு தீர்ப்பா?2 days ago · (3) · (0) · reply (1)Adhavan Adhavan Up Voted Adhavan Adhavan's comment
- R.Subramanian from Kumarஅதுவும் நீதிமன்ற விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள், போய் ராஜீவ் வழக்கை படித்து பாருங்கள்... விடுதலை புலி தலைவரின் விருப்பத்திற்கு இணங்க நடத்த கொடூர தாக்குதல் இது... இந்திரா காந்தியின் உதவியால் வளர்ந்த இயக்கமான விடுதலை புலிகள் இயக்கம், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அவரின் மகனையே கொலை செய்ய தயங்கவில்லை, நன்றி கொன்ற பாவிகள் விடுதலை புலிகள்2 days ago · (3) · (2) · reply (1)Vaidhyanathan Sankar Up Voted R.Subramanian 's comment
- Sivasankaran from MorrisvilleLal Bahadur Sasthri யை யார் எதற்க்காக கொன்றார்கள்? அதன் பின்னர் யார் /எந்த குடும்பம் அதனால் பயனடைந்தது? பதிலை தேடுங்கள் பின்னர் யார் பாவிகள் என்பதை முடிவு செய்யலாம்.2 days ago · (2) · (1) · reply (0)GowriS Up Voted Sivasankaran 's commentR.Subramanian Down Voted Sivasankaran 's comment
- Sivasankaran from Morrisvilleகொஞ்சநாள் கழித்தாவது உங்கள் மனசாட்சியை பேசவிடுங்கள். உங்களுடன் பணியாற்றிய தியாகராஜன் மனசாட்சி இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளது. நமது மரணபடுக்கையில் நம்மை உண்மையில் கொல்வது இந்த மனசாட்சிதான் பெரியவரே, யோசியுங்கள்.2 days ago · (3) · (0) · reply (0)
- Sivasankaran from Morrisvilleகொஞ்சநாள் கழித்தாவது உங்கள் மனசாட்சியை பேசவிடுங்கள். உங்களுடன் பணியாற்றிய தியாகராஜன் மனசாட்சி இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளது. நமது மரணபடுக்கையில் நம்மை உண்மையில் கொல்வது இந்த மனசாட்சிதான் பெரியவரே, யோசியுங்கள்.2 days ago · (1) · (1) · reply (0)
- Kriti Janarthanan from Bangaloreதுப்பே துலக்க முடியாத விஷயத்தில் இவர் மட்டும் எப்படி உண்மைகளை கண்டறிந்தார்? அப்படி உண்மை என்றல் நெஞ்சை நிமிர்த்தி அவர்கள் குற்றவாளிகள் ; தண்டனை நியாயமானது ஏன் சொல்ல முடியவில்லை? உண்மை என்றால் மாநில அரசிடம் மாட்டி கொள்வார் இல்லை என்றால் மத்திய அரசிடம் மாட்டி கொள்வார். இப்படியே ஒவ்வொருவரும் மழுப்புங்கள்...அரசியல் சக்கர வியூகத்தில் வெளி வர முடியாமல் இன்னும் எத்தனை பேர் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்....2 days ago · (1) · (1) · reply (0)
- D.Anandaraj from Mumbaiபோபர்ஸ் மூலம் நாட்டின் மதிப்பையும், தரத்தையும் உலக அரங்கில் மிக பன்மடங்கு உயர்த்தி விட்டார் என்பது உண்மை. ஒரு பிரதமரே இன்னொரு பிரதமருடன் பேரம் பேசியது தான் புகழ். இருவருமே மர்மமாக கொலை பட்டனர். இந்துவின் அனைத்து புலனாய்வுகளும் வீண். இவர்களின் ஊழலை மறைக்க பயங்கரவாதம் பயன் பட்டது. கொடுமை. .2 days ago · (2) · (2) · reply (0)Mohan Ramachandran Up Voted D.Anandaraj 's comment
- அ.மயில்சாமி மயில்சாமி தமிழாசிரியர் at தமிழ்நாடு �from Kolkataநேரிய சிந்தனை...சிறந்த நோக்கு...சொல்லில் கண்ணியம்...இவரே சிறந்த அதிகாரி......!2 days ago · (4) · (2) · reply (0)D.Anandaraj Down Voted அ.மயில்சாமி மயில்சாமி's comment
- வேந்தன்,புதுக்கோட்டை. from New Delhiஅது சரி... அப்பாவிகளை மாட்டி விட்டு வழக்கை ஊத்தி மூடிவிட்டார்கள்!!!(காண்க:காவல் அதிகாரி தியாகராசனின் வாக்குமூலம்).2 days ago · (1) · (6) · reply (0)Sivasankaran Up Voted வேந்தன்,புதுக்கோட்டை. 's comment
- CS SUBBURAJசுப்புராஜ், உத்தரகாசி ராஜீவ் தவிர மேலும் இறந்தவர்களுக்கு ஜெயா என்ன பதில் சொல்ல போகின்றார். ஏன் நளினி மனுவை ஜெயா நிராகரித்தார். ஜெயாவின் நாடகத்தை மக்கள் நம்பகூடாது2 days ago · (0) · (0) · reply (0)
- முகம்மது jinnah --'இவர் தற்போது அமைதி, நல்லாட்சி, மத ஒருமைப்பாடு இயக்கம் (foundation for good governance) என்ற அமைப்பை நடத்தி நாட்டில் விவசாயிகள் பிரச்சினை, அவர்களுக்கான விழிப்புணர்வு, மனித ஒற்றுமை, சமூக, மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நடக்கும் இயக்கங்களில் பங்கெடுத்து வருகிறார். ' உயர்ந்த நோக்கம் . 'யார் கொலை செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அப்போது எதற்காக அதை செய்தார்கள் என்றுகூட யாராலும் யூகிக்க முடியவில்லை. ஐ.பி. எனப்படும் இந்திய நுண்ணறிவு புலனாய்வுத் துறைக்குக்கூட தெரியவில்லை. இந்த கொலை வழக்கு பெரும்பாலும் ஜான் கென்னடி கொலை வழக்குபோல்தான் துப்புகூட கிடைக்காமல் கண்டுபிடிக்க முடியாமல் போகப்போகிறது என்று 'புலனாய்வுத்துறை உட்பட பலரும் கருதினர்.' ஒரு நாளைக்கு 20 மணி நேரம் இரவு பகல் பாராமல் சரியான தூக்கமில்லாமல்..', தமிழ்நாட்டில் நிகழ்ந்த கொடுமையை கண்டுபிடிக்க தமிழரிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்தமைக்கு முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் திறம்பட செய்தமைக்கு வாழ்த்துவாம்2 days ago · (1) · (2) · reply (0)
- Nirai Mathi at My Familyfrom Tirupurஅதுதான் உங்கள் கீழே பணியாற்றிய ஒரு அதிகாரி அவர்களது வாக்குமூலங்கள் மிரட்டி (under duress ) வாங்கப் பட்டன என்று சொல்கிறாரே. பிறகு எப்படி உங்கள் கடமை முடிந்ததென்று மார் தட்டிக்கொள்கிறீர்கள்? இதத்தான் எங்க ஊர் SI வெள்ளத்துரை கூடச் செய்வாரே இதற்கு CBI டைரெக்டர் வேணுமா என்ன?2 days ago · (1) · (1) · reply (0)Sivasankaran Up Voted Nirai Mathi's commentR.Subramanian Down Voted Nirai Mathi's comment
- Shahul Hameed at GRANITESவெறும் ஒட்டு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகள் இந்த நாட்டில் இருக்கும் வரை உண்மை பரண் மேல் தூங்கி கொண்டுதான் இருக்க வேண்டும்.2 days ago · (0) · (0) · reply (0)
- Vaidhyanathan Sankar at Department Of Agrl.Engg.,Government of Tamilnadufrom Bangaloreஇம்மாதிரியான அலுவலர்களின் திறமை, உழைப்பு மற்றும் சிந்திய வியர்வை யாவும் அரசியல்வாதிகளின் முன் விழலூகு இறைத்த நீர்.a day ago · (0) · (0) · reply (0)
- GowriS from Mumbaiஒரு முள் காட்டில் ஏன் பிரச்சாரக்க் கூட்டம் நடத்த அன்றைய தமிழ் நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர்...? இந்த இடத்தில பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி பாதுகாப்பு பற்றி உருதிப்படுதினார்களா..? மாநாட்டுத் திடலுக்கு அன்றைய காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைவர்கள் ஏன் வரவில்லை...? விசாரணை அதிகாரிக்கு எந்தெந்த அராசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்தார்களோ, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா...? ராஜீவ் அவையில் இருந்த சுப்பிரமணி சாமியே, ராஜீவ் மரணம் குறித்து சோனியா குடும்பத்திற்கு முன் கூட்டியே தெரியும் எனக் கூறியிருக்கிறார்...! நேரு காலத்திலேயே முறைகேடுகள் ஆரம்பிக்கப்பட்டு, இந்திரா காலத்தில் அவரது மூத்த மகனுடன் சேர்ந்து மேன்மேலும் வளர்க்கப்பட்டு, ராஜீவ் காலத்தில் பின்பற்றப்பட்டு, சோனியா காலத்தில் இந்திய வரலாற்றில் விண்ணை முட்டும் அளவுக்கு கொண்டுச் செள்ளப்பட்டுகொண்டிருக்கிறது...!!! கார்த்திகேயன் சொல்வது போல், தேசம் ஒன்றும் சீரிய முறையில் நிச்சயம் இருந்திருக்க முடியாது; தேச நலன் சார்ந்த வளர்ச்சியை கொடுக்கும் அரசாங்கத்தை காங்கிரஸ் என்ற அரசியல் கட்சியினால் கொடுப்பது கனவு மற்றும் கற்பனை மட்டுமே...a day ago · (1) · (0) · reply (0)
- KKRISHNASWAMYராஜிவை கொன்றவனின் மகள் லண்டனில் படிக்கிறார் மருத்துவம்,சதரன் பெண்ணுக்கு கிடைக்குமா IN THA VAAIPPU.VISAVUKKU ALAIYUM MAKKAL MATHIYIL IVAR RAJA VALKAI VALAVTHU EAPPADI.KIANAVANAI LONDANIL SANTHIKKA VISAVUKKU ALAYUM MAKKAL MATHIYIL MURUGANUM NALINIYUM VIDUTHALAIKKU PIN LONDAON POKJIRARKALALM?a day ago · (0) · (0) · reply (0)
- Thirunthungadaதிரு கார்த்தி அவர்களே உங்கள் துறை திரு.தியாகராஜன் அவர்கள் தன்னுடைய தப்பினை ஒப்புக்கொண்டுவிட்டார் நீர் எப்போது???
thanx - the tamilhindu
0 comments:
Post a Comment