பாலுமகேந்திராவின், ''வண்ண வண்ண பூக்கள்'' படத்தால்
அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மவுனிகா. அதனைத்தொடர்ந்து பல்வேறு
படங்களில் நடித்துள்ளார். அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு
பிடித்தமான நடிகையாக மாறினார் மவுனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம்
என்று டி.வி. சீரியல் எடுத்தபோது மவுனிகாவே அதில் பிரதான நாயகியாக
நடித்தார். மேலும் மவுனிகாவின் குடும்ப நண்பராகவும் பாலுமகேந்திரா இருந்து
வந்தார் என்றும், இதனால் பாலுமகேந்திராவின் குடும்பத்தில் பிரச்னை
ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை மவுனிகா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட இயக்குநர் பாலா, அங்கு ஒரு பெரும் பிரச்னையே செய்துவிட்டார். மவுனிகாவை உள்ளே விடக்கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார். இதனால் பாலுமகேந்திராவின் இல்லத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாலுமகேந்திராவின் சீடர்களில் பாலா மிகவும் முக்கியமானவர். கிட்டத்தட்ட அவரின் வளர்ப்பு மகன் என்று கூட சொல்லலாம், தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவருடன் தான் பகிர்ந்து கொள்வார். இந்தநிலையில், மவுனிகா வரக்கூடாது என்று பாலா எதற்கு தடுத்தார் என தெரியவில்லை.

thanx - dinamalar
இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் இன்று காலை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு
வயது 74.
' மூன்றாம் பிறை’, 'அழியாத கோலங்கள்', 'வீடு', 'சந்தியா ராகம்',
'மறுபடியும்', ’சதி லீலாவதி’ என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத
படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட.
தனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்களின்
படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மகேந்திரன் இயக்கிய 'முள்ளும்
மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா தான்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் 'தலைமுறைகள்' வெளியானது. இயக்குநர் சசிகுமார்
தயாரித்திருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று காலை பாலு மகேந்திராவிற்கு திடீர் உடல்நலக் குறைவு
ஏற்பட்டது. இதனால் சென்னை விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும்
மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானார்.
சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த படம் என ஐந்து முறை தேசிய விருது
வென்றவர் பாலு மகேந்திரா. தேசிய விருது மட்டுமன்றி கேரளா மற்றும் கர்நாடக
மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றிருக்கிறார். இயக்குநர் பாலா, ராம்,
வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக
பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலு மகேந்திரா மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
thanx - the hindu
0 comments:
Post a Comment