Friday, February 21, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (21 2 .2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.பிரம்மன் -  படத்தில் சசிக்குமார் நண்பராக சுதீப்!
ராஜமௌலி இயக்கிய, ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றவர் சுதீப். 


கன்னட நடிகரான இவர் தற்போது புதிதாக நேரடித் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கமல்ஹாசன் உதவியானர் சாக்ரடீஸ் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்துக்கு பிரம்மன் என பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


கே.மஞ்சு தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் 17 நாட்கள் நடைபெற்றது. படத்தில் முக்கிய வேடத்தில் சுதீப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தனர். இதனை படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் கே. மஞ்சுவிடம் கூறியிருக்கிறார். மஞ்சுவும் சுதீப்பும் நண்பர்கள் என்பதால் கதையை கேட்ட சுதீப் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். 


‘நான் ஈ படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் தமிழில் நடிக்க மறுத்து வந்தவர், இக்கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதித்திருப்பது கதையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இப்படத்தில் சசிக்குமார் நண்பராக சுதீப் நடிப்பதால் ரொம்பவே உற்சாகமாக இருக்கிறாராம். சென்னையில் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படத்துக்கு பிரம்மன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். சந்தானம் அவருடன் முதல் முறையாக இணைகிறார். தயாரிப்பாளராக லட்சுமி மஞ்சு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்றாலும், அவர் பல்வேறு வெற்றிப் படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். தெலுங்கில் லட்சுமி மஞ்சு தயாரித்துள்ள குண்டெல்லோ கோடாரி என்ற படம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 



ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள இப்படம் தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற பெயரில் விரைவில் வரவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த வெற்றி களிப்போடு தமிழில் நேரடிப் படம் பண்ணுகிறார் லட்சுமி. பிரம்மன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தினை கமல்ஹாஸன், மெளலி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாக்ரடீஸ் இயக்குகிறார். 


ஈரோடு ராயல், ஆனூர், அன்னபூரணி யில்  ரிலீஸ்

பிரம்மன் - சினிமா விமர்சனம்- http://www.adrasaka.com/2014/02/blog-post_3664.html


2 ஆஹா கல்யாணம்  பிரபல இந்திப்பட நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் 'ஆஹா கல்யாணம்'. 


இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தரண் இசையில், கார்கியின் வரிகளில் படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளன. திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தும் இருவருக்கு இடையில் வரும் காதலை கலகலப்பாக சொல்லும் படம்.


படத்தின் இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, தனது முதல் பட அனுபவத்தைப் பற்றி கூறுகையில், " இந்த படத்தின் மேல் எனக்கு உள்ள காதல் இது என்னுடைய முதல் படம் என்பதால் மட்டுமல்ல. படத்தின் தரமும், இந்தியாவின் மிக சிறந்த காதல் படமான ‘ பேண்ட் பஜா பராட்‘ படத்தை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றி வழங்கி உள்ளேன் என்ற பெருமையும் தான்.



படத்தின் முதல் பிரதியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சக்தியாக நாணியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி திரையில் இவர்களில் இளமை குறும்பு கொப்பளித்து கொண்டே இருக்கும். எந்த ஒரு காதல் கதையின் வெற்றிக்கும் இளமையான நல்ல நாயக, நாயகி, இனிமையான இசை, கண்ணை கவரும் காட்சி அமைப்பு, மற்றும் இளமையான பாடல் வரிகள் அடிப்படை உத்திரவாதம். இந்த அனைத்து அம்சங்களும் அமைய பெற்ற இந்த படத்தை இயக்குவது எனது அதிர்ஷ்டமே. எங்களது ஒட்டு மொத்த குழுவுக்கும் சராசரி வயது 26க்கு மேல் இருக்காது.



அதனால் மட்டுமே எங்களால் இந்த காதலர் மாதத்தில் காதலர்களை மட்டுமல்ல எல்லோரையும் கவரும் படம் வழங்க முடிகிறது. இதற்ககு எல்லாம் மேல், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு படம் வாய்பளித்த ‘ யாஷ் ராஜ் films ‘ நிறுவனத்தினர், படத்தை பார்த்து பாராட்டியதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் வரம். புதிய இயக்குனரான நான் வெற்றி பெற்றால் பல்வேறு புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் பெருகும் என்பதால் என் பொறுப்புணர்ச்சியும் அதிகமாகிறது என்றார்.



ஈரோடு தேவி அபிராமியில் மட்டும் ரிலீஸ் 



3 வெண்மேகம் - இரட்டை சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் இயக்கிய ‘வெண்மேகம்’ திரைப்படம் வருகிற 21–ந் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது. வெண்மேகம் படம் குறித்து இயக்குனர்கள் ராம் – லட்சுமணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெண்மேகம் படம் குடும்பபாங்கான, காமெடி மற்றும் திரில்லர் ஆக்ஷன் நிறைந்த சினிமா ஆகும். இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் மைனா பட விதார்த் கதாநாயகனாகவும், பிரபல மாடல் அழகி இஷாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பள்ளி மாணவியான ஜெயஸ்ரீ சிவதாஸ், முன்னணி காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் தாய் – மகளுக்கு இடையேயான உறவை ஆழமாக வெளிப்படுத்தி உள்ளோம்.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மிகபிரமாண்டமாக வெளிவந்துள்ளன. படத்தில் கோவை தனபால் எழுதியுள்ள பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. படத்தின் முடிவில் படத்திற்கு வெண்மேகம் என ஏன் பெயர் வைத்துள்ளோம் என்பதை ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள்.


ஈரோடு சங்கீதா  வில் ரிலீஸ் 




4   நிலா காய்கிறது -இந்தப்படத்தைப்பத்தி  பூர்வீகம் எதும்  தெரியல . உத்தேசமா , பார்க்கும்போதும் ஸ்டில்ஸ் ஹீரோயின் தேகத்தைப்பார்க்கும் போதும் இது சீன் இல்லாத  சீன் பட கேட்டகிரி என அப்ராக்சிமேட்டா அவதானிக்கிறேன் . ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை  ( பகுத்தறிவுக்குப்பேர் போன ஊர்யா . சீன் இருந்தாதான்  ரிலீஸ் ஆகும் )


5 POMBEII - எரியும் எரிமலையின் பின்னணியில் ஒரு காதலை சொல்லும் படமாக ஹாலிவுட்டில் உருவாகி உள்ளது பாம்பய். கிட் ஹரிங்டன், கேரி அன்னீ நடித்துள்ள இந்தப் படத்தை பால் டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன் டைரக்ட் செய்துள்ளார்.  பிப்ரவரி 21ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.  3டி தொழில்நுட்பத்திலும் ரிலீசாகிறது.


ஈரோடு வி எஸ் பி யில்  ரிலிஸ்


2 comments:

Unknown said...

maranthen manniththen eppanga release aaaakum ..............?????:::)))))))

விஸ்வநாத் said...

HIGHWAY ??