Sunday, February 23, 2014

2014-லோக்சபா தேர்தல் -ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பு - BJP =236 ,காங்கிரஸ் கூட்டணி 92

தே.ஜ.,கூட்டணிக்கு 236 இடங்கள் கிடைக்கும்:கருத்து கணிப்பு




டில்லி:2014-லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 236 இடங்கள் கிடைக்கும்.இதில் பா.ஜ.,வுக்கு மட்டும் 217 இடங்கள் கிடைத்து தனிப்பெருங்கட்சியாக இருக்கும். என ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி 92 சீட்கள்: காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கு 92 சீட்கள் கிடைக்கும். இவற்றில் காங்கிரஸ் 73 இடங்களை பிடிக்கும். ஆம் ஆத்மி 10 இடங்களை பிடிக்கும். 



பிரதமர் பதவிக்கு யார் வேண்டும்:பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 57 சதவீதம் பேர் ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுலுக்கு ஆதரவாக 18 சதவீதம் பேர் ஆதரவாகவும் கெஜ்ரிவாலுக்க ஆதரவாக 3 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.இது தவிர திரணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,19 இடங்களிலும் பிஜூ ஜனதா தளம் 16 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.



தே.ஜ., கூட்டணி, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லை. அதனால்தான் கூட்டணி பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி 88 சீட்களை பெற முயற்சி செய்து வருகிறது. இப்பகுதிகளில் வடக்கில் ஐ.மு.கூட்டணிக்கு 23ம் மேற்கில் 22 என கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் வடக்கில் மொத்தம் உள்ள 151 சீட்களில் 40 வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.மேற்கில் உள்ள 116 சீட்களில் 6 இடங்களை பிடிக்க முற்படும் என கருத்து கணிப்பு கூறுகிறது.



தெற்கு பிராந்தியத்தில் 21 சீட்கள் இக்கூட்டணிக்கு கிடைக்கலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளும் ஆந்திராவில் டி.ஆர்.எஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) இடது சாரிகள் 15 சீட்களை பெற்று விடும்.தென்னகத்தை பொறுத்த மட்டில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகிறது. மொத்தம் உள்ள 134 ல் ஐ.மு.,23 இடங்களையும் தே.ஜ.,21 இடங்களை பெறலாம் என்கிறது கருத்து கணிப்பு.


thanx - dinamalar 

readers views 



1. நான் அப்பவும் சொன்னேன் ,,,இப்பவும் சொல்கிறேன் .நாங்கள் கிராமத்தில் வாழ்கிறோம் ..நாங்கள் கிராமத்தில் வாழுபவர்கள் ...சின்ன ,சின்ன கிராமங்கள் வந்து பாருங்கள் .எல்லா கிராமத்திலும் கட்சி வித்தியாசம் பார்க்காமல் ,பெரியோர் முதல் சிறியோர் வரை மோடி படம்,பேனர் வைத்துள்ளார்கள் ..எங்கள் ஊரில் 3 admk விசுவாசிகள் .அந்த 3 பேர் விட்டு கதவிலும் மோடி படம் ஒட்டியுள்ளார்கள்... நாங்கள் எங்கள் வியாபாரத்திற்க்காக ஒரு நாளைக்கு 20 கிராமத்திற்கு போய் வருகிறோம் ...எங்களுக்கு தெரியும்..மோடி அலை என்றால் என்ன என்று ...முன்னாடி மாதிரி கட்சி சண்டை,....கட்சி கொடி சண்டை ,....அவன் அந்த கட்சி என்று சண்டை வரும்,,இப்போது அந்த மாதிரி சண்டை போட ஆளும் கிடையாது ....மற்ற கட்சீ தொண்டர்களுக்கு வயதும் ஆகி விட்டது ,,முன்னாடி மாதிரி கட்சி மிது வேகம் கிடையாது ,. இப்போது அவர்கள் பிள்ளைகள் மோடியை ஆதரிப்பதனால் எல்லா பெரியவர்களும் ,மோடியை ஆதரிக்க தொடங்கி விட்டனர் ,கிராமங்களில் மோடி ,மோடி என்ற ஒலியோசை கேக்க ஆரம்பித்து உள்ளது ... மோடி வரவேற்கும் இளைஞர்களே அதிகம் ...எல்லா கிராமங்களிலும் .இளைஞர்களே ஆளுக்கு 100 ரூபாய் போட்டு த்தான் பேனர் வைத்துள்ளனர் ,,எங்கள் ஊரில் பேனரில் மோடி படம் மேலே ..கிழே 25 பையன்கள் போட்டோ ..கிராமங்கள் எல்லாம் மற்ற கட்சிகளின் கையை விட்டு போகிறது கண்ணுக்கு தெரிகிறது ,,திருச்சிக்கு மோடி வந்த போது ,எங்கள் ஊரை சுற்றி உள்ள இளைஞர்கள ,கை காசை போட்டு திருச்சி கூட்டதிற்கு போய் இருக்கிறார்கள் .,,அந்த வேகம் எந்த கட்சிக்கும் இப்போது இல்லை ..இன்னும் இரண்டு மாவட்டங்களில் மோடி பேச உள்ளார் ..அதன் பிறகு அதன் ஒலி இன்னும் அதிகமாகும் . ......அப்போது திராவிட கட்சிகளின் அலறல் சத்தங்கள் அதிகமாகும் ....கிராமங்களில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது ..இது உண்மை..




2 vadivelu72 இடங்களை பிடித்தாலும், காங்கிரஸ் எல்லா சந்தர்பவாத மற்றும் சுயநல மிக்க பரம்பரை கொள்ளையர்களை சேர்த்துக்கொண்டு நிச்சயம் ஆட்சி அமைக்கும்.அவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பது ஒன்றே குறிக்கோள்.பெரிய ஊழல்களை பரம்பரை கொள்ளையர்கள் கட்சிகள் துணிச்சலோடு செய்யும்.காங்கிரசும் எதுவுமே நடக்காததுபோல் கண்டும் காணாமலும் இருக்கும்.இந்த நாட்டின் தலைவிதி அது.... 




3 என்னது கெஜ்ரிவாலுக்கு மூன்று சதவீத ஆதரவு தானா ? அதாவது தினமலரில் ராம்(ஆம் ஆத்மி) , கார்த்தி(அதிமுக) , மரியா(திமுக) என்ற மூன்று பேரும் ஆதரவு தெரிவிப்பதை போல .....மூணு சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தால் கூட ஓட்டை தான் விரும்பும் கட்சிக்கு தான் போட போகிறார்கள் . எனவே ஒரு சதவீத ஆதரவு என்பதே சரி....பா.ஜ.க பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி எனும் கர்ஜிக்கும் சிங்கம் பிரதமர் ஆவார்...மன்மொஹன் சிங் என்ற பொம்மை கரடி சீட்டை காலி செய்து போகும்....அதற்கு பிறகு பாகிஸ்தான் சீனா எல்லாம் எல்லையில் வாலாட்ட பயப்படும்...பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கம்முனு பொத்திகிட்டு போவார்கள்...மொத்தத்தில் இந்தியா நன்றாக இருக்கும்...அமெரிக்கா வழிய வந்து சிவப்பு கம்பளம் விரித்து இந்திய பிரதமரை அழைப்பார்கள். 



4 S. ரெகுநாதன் தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணி குழப்பங்கள் வடநாட்டு கருத்து கணிப்பு நிறுவனங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் கட்சிகள் நவக்ரகதை விட மோசமாக உள்ளது...அதிமோக்+கம்யூனிஸ்ட்கள் தவிர உருப்படியாக எந்த அணிகளும் தென்படாத நிலையில் திமுக, காங், தேமுதிக தனிதனி அணியாக போட்டியிட்டு, BJP+மதிமுக+பாமக கூட்டணி வந்தால் ஓட்டு சதவிகித படி அதிமுக அணியே 30-35 இடங்கள் பெற்று முன்னிலை வகிக்கும்..ஒருவேளை திமுக+காங்+தேமுதிக மூன்றும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் கருத்து கணிப்பில் சொன்ன படி அதிமுக அணிக்கு 20-25 இடங்கள் கிடைக்கலாம்..அப்படி அமைய முதல்வர் அம்மா விடமாட்டார்..

0 comments: