Wednesday, January 08, 2014

ஜில்லா - திரைக்கதையின் மூலக்கதை வெளியானது. விஜய் அதிர்ச்சி

konjam padinga Ida :):)

Writer:

(dialogue and story)

Stars:


Jeeva ...
Machi reddy
Sundeep Kishan ...
Chinna
Vennela Kishore ...
Goli
Sai Kumar ...
Loki
Pavithra Lokesh ...
Mother
Ruby Parihar ...
Heroine
Jaya Prakash Reddy ...
Bangaru Naidu
Reshmi ...
Nadia
Parihar Ruby ...
Heroine
Sharvanand ...
Hero
Surekha Vani ...
Sister

மோகன்லாலின் வளர்ப்பு மகனான விஜய்!

Vijay becomes Mohanlals Foster Son
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலூன்றி 85வது படமாக ஜில்லாவை தயாரித்திருக்கிறார் ஆர்.பி.செளத்ரி. எந்தவொரு படத்தையும் அத்தனை சுலபத்தில் ஓ.கே பண்ண மாட்டார். அவரிடம் கதை சொல்லச்சென்றாலே டைரக்டர்களை பிழிந்து எடுத்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு பவர்புல்லான தயாரிப்பாளர் செளத்ரி.

அப்படிப்பட்டவர் மோகன்லால்-விஜய்யை இணைத்து தயாரித்திருக்கும் படத்திற்காக எத்தனை மெனக்கெட்டிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதோடு இந்த படத்தில் நடித்துள்ள விஜய், தலைவா தோல்விக்குப்பிறகு நடிக்கும் படம் என்பதால் கதை விசயத்தில் அதிக கவனம் செலுத்தினார். அதேபோல், மோகன்லால் ஒரு படத்தில் கமிட்டாகிறார் என்றால், அந்த கதையில் வலுவில்லாமல் என்ட்ரி கொடுக்கவே மாட்டார். ஆக, பல ஜாம்பவான்களில் ஆளுமையோடு நேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ஜில்லா.

சூப்பர் குட் பிலிம்சின் பூவே உனக்காக படத்தில் நடித்த விஜய்க்கு ஜில்லா 6-வது படமாகும். மதுரை மண்வாசனையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கிறார் விஜய். இப்படம் செளத்ரி இதுவரை தயாரித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. மேலும், பொங்கலுக்கு வெளியாகும் ஜில்லாவை 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருப்பவர்கள், கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம்.

இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் மோகன்லால், ஜில்லாவில் நடித்ததற்காக சம்பளமே பெற்றுக்கொள்ளாமல் கேரளா உரிமையை வாங்கியிருக்கிறார். மேலும் இதுவரை தனது படங்களுக்கு இல்லாத அளவுக்கு பெரிய பப்ளிசிட்டி செய்து படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் கேரளாவில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், ஜில்லா இன்னும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கிறாராம் மோகன்லால்.
 
 
 
\thanx = dinamalar 
 
 
 
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. படத்தின் 20 விநாடி டிரைய்லர் கடந்த 1ந் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ஏற்கனவே இமானின் இசையில் வெளிவந்த பாடல்கள் ஹிட்டாகி விட்டது. இப்போது டீசரும் ஹிட்டாகியிருக்கிறது. ஆனாலும் 10ந் தேதி படம் வெளிவருமா? என்ற கேள்விக்குறி தொக்கி நிற்கிறது. விஜய்-அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று சொல்லி விஜய் படத்தை ஒருவாரம் கழித்து ரிலீஸ் ஒரு மறைமுக முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜில்லாவில், மோகன்லால் நடித்திருப்பதால் அப்படி தடுத்தால் வேறுவிதமான பிரச்னைகள் வருமா என்கிற கோணத்திலும் தடுக்க நினைப்பவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அனைத்தையும் தாண்டி ஜில்லா வெற்றி உலா வரும் என்று நம்புவோம்.
 
 
 

மூன்று கட்டுகளுடன் ஜில்லாவுக்கு யு சான்றிதழ்

Jilla got U certificate
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 3 இடத்தில் படத்துக்கு கட் கொடுத்தனர். அந்த கட்டை ஏற்றுக் கொண்டால் யு தவருவதாகவும் இல்லாவிட்டால் யு/ஏ தருவதாகவும் சொன்னார்கள்.

தயாரிப்பாளரும், இயக்குனரும் கட்டுக்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து படத்துக்கு யு சான்றிதழை வழங்கினர். படம் ஜாலியா இருந்ததாகவும், இது ஒரு மாஸ் எண்டர்டயிண்மெண்ட் என்றும் படம் பார்த்த தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்தனர். மூன்று கட்டில் இரண்டு ஆக்ஷன் காட்சியில் வரும் வன்முறையும், ஒரு கட் மதுரை பக்கம் சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை என்றும் கூறுகிறார்கள்.

யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் வரிவிலக்கு கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். நாளை (ஜனவரி 3)வரிவிலக்கு குழுவினர் படத்தை பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் சுமார் 600 தியேட்டர்களிலும் கேரளாவில் 300 தியேட்டர்களிலும் வெளியிட இருக்கிறார்கள்.


Making lot of gossips to Jilla says : Producer R.B.Chowdary
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வருகிற ஜனவரி 10ந் தேதி ரிலீசாகிறது. ஜில்லா படத்தின் பாடல்கள் இன்னும் தயாராகவில்லை, டப்பிங் முடியவில்லை. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அளித்துள்ள விளக்கம்.

ஜில்லா பற்றி வேண்டும் என்றே வதந்தி பரப்புகிறார்கள். படத்தின் அத்தனை பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. பாடல்களும் ரெடியாகிவிட்டது. அதை புரூப் பண்ணத்தான் விஜய் தன் தயாரிப்பாளர்களுக்கு உதவி தொகை வழங்கிய விழாவிலேயே பாடல்களை வெளியிட்டு விட்டோம்.

எங்கள் நிறுவனத்திலிருந்து வரும் மிகப் பெரிய படம் இது. எங்கள் நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டில் வரும் படம் அதனால் பிரமாண்டமாக இதனை ரிலீஸ் பண்ணுகிறோம். தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிறோம். கேரளாவில் வழக்கமாக மோகன்லால் படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களை விட இரண்டு மடங்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது. வெளிநாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. 25ந் தேதி டிரைய்லர் ரிலீசாகிறது. ஜனவரி 10ந் தேதி ஜில்லா கண்டிப்பாக ரிலீசாகிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.

0 comments: