Tuesday, January 14, 2014

கலவரம் - சினிமா விமர்சனம்


ஒரு அரசியல் தலைவர் கம் தாதா வை அவர் பண்ற அக்கிரமத்துக்காக  போலீஸ் கைது செய்யுது.அவரை அரசாங்கம் விடுவிக்கனும்கறதுக்காக அவர் ஆணைப்படியே அவரோட அடியாளுங்க கலவரம் பண்றாங்க.வேணும்னே தூண்டிவிடப்பட்ட அந்த கலவரத்துல பல உயிர்ச்சேதம் நடக்குது. அதில் உயிர் இழந்த மாணவிகள் 4 பேரு.அந்த 4 பேரோட தோழர்கள் 4 பேரும் அவங்க சாவுக்குக்காரணமானவங்களைப்பழி வாங்கக்கிளம்பறாங்க.அந்த  4 மாணவிகள் ல ஒரு மாணவியோட அப்பா ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர். அவர் தானா முன் வந்து அந்த கேசை டீல் பண்ண ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி அந்த 4 மாணவர்களை யூஸ் பண்ணி வில்லன்களை போட்டுத்தள்ளறாரு.இதுதான் கதை . 


3 வருடங்களுக்கு முன் வெளி வந்த கலவரகாரு எனும் கன்னடப்படத்தின் டப்பிங்க் படம்  தான் இது.சத்யராஜ் நடிச்சிருக்கறதால டைமிங்கா இப்போ  ரிலீஸ் பண்ணி இருக்காங்க .


 போலீஸ் ஆஃபீசர் கம் விசாரணை அதிகாரியா சத்யராஜ் கலக்கறார். படம் போட்ட முதல் 55  நிமிடங்கள் போனதே தெரியல. செம ஸ்பீடு .மம்முட்டி நடிச்ச  சி பி ஐ டைரி குறிப்பு மாதிரி காட்சிகள் பர பரனு நகருது . 

கேப்டன் நடிச்ச உளவுத்துறை , அருண் விஜய் நடிச்ச ஜனனம் படங்களை டைரக்ட் செய்த ரமேஷ் செல்வன் தான் இயக்குநர். இவர் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்  என்பதால் அதற்கான  பில்டப் எல்லாம் நல்லாவே  தெரியுது. காட்சிகள் கட்டிங்க் , எடிட்டிங்க்  எல்லாம்  குட் . இடைவேளைக்குப்பின்  வரும்  ஃபிளாஸ்பேக் காட்சிகள்  கொஞ்சம்  சோர்வைத்தந்தாலும்   மொத்தப்படமே 132  நிமிடங்கள் தான் என்பதால்  படம்  ஓக்கே  தான் . 


சத்யராஜ்க்கு  ஜோடி  இல்லை என்பது பெரிய ஆறுதல் . ஜோடி  இருந்தா  டூயட், செண்ட்டிமெண்ட் என இழுவைகள்  இருக்கும், அதே போல் காமெடி  டிராக்  என்ற பெயரில்  யாரும்  மொக்கை எல்லாம் போட வில்லை . 


கோவையில் நடந்த பஸ்  எரிப்பு சம்பவம் , மதுரையில் நடந்த  தினகரன்  ஆஃபீஸ் கலாட்டா எல்லாம் கண் முன் விரியுது. இது ஆல்ரெடி  பாலாஜி சக்திவேல் கல்லூரி எனும் படத்தில் செஞ்சிருந்தாலும்  இது வேறு மாதிரி  திரைகக்தை 


 அந்த 4 மாணவ மாணவிகள் எல்லாம்  யாரும்  தெரிந்த  முகமே  இல்லை , ஒரே ஒரு முகம் டி வி  புகழ்  சுஜிபாலா .


இயக்குநர்  ராஜ் கபூர்  ஒரு கேரக்டரில் வர்றார். வில்லனின் நடிப்பு கன கச்சிதம் . 

இயக்குநரிடம்  சில கேள்விகள்



1. மயில் சாமி மூலம்  பத்திரிக்கை எடிட்டர் மாதிரி மிமிக்ரி செய்து பேசும்போது அவங்க அப்படியே நம்பி  ஒரு ஃபேக்  நியூசை அதுவும் ஒரு கொலை செய்தி பற்றிப்போடுவது நம்பவே முடியலை. எந்த  ஃபோன்  நெம்பர்ல இருந்து வருது அப்டினு பார்க்க மாட்டாங்களா? எடிட்டர் தான் பேசினார் என்பதை கன்ஃபர்ம் செய்ய மாட்டாங்களா? 


2. ஜெயிலில் இருந்து  தப்பிக்கும் காட்சியில் 4 பேரும்  பேண்ட் சர்ட்டில் ஆர்டினரியா  இருக்காங்க.கைதி டிரஸ் என்னாச்சு ? 


3  செல்  ஃபோன் டவர் கிடைக்காததால்  ரூமை விட்டு  வில்லன் வெளியே வருவான், அப்போ  ஷூட் பண்ணு -னு சத்யராஜ் சொல்றார். வில்லனின்  ஃபோட்டோவைக்காட்ட மாட்டாரா? என்ன அடையாளம் ? வில்லனுக்குப்பதில் அவனின் அடியாள்  ரூமை விட்டு வெளீயே  ஃபோனுடன் 
வந்ததும்  தவறுதலாக அவனை சுட்டதும்  வில்லன் வெளீயே வர்றான். அப்போ   சுட்டிருக்கலாமே? ஏன் ஓடறாங்க ? 


4. வில்லனின்  டிரைவர் வேணும்னே  ரூட் மாறி காரை ஏர்போர்ட் போகும் திசைக்கு எதிர்  திசையில் வண்டியைத்திருப்பும்போது  வில்லன் ஏன் தன் செல் ஃபோனில்  இருந்து மெசேஜ் அனுப்பி   தன் அடியாட்கள் வரும் காரில் இருப்பவர்களுக்கு இன்ஃபார்ம் செய்யக்கூடாது ? 


5. ஒரு  சீன் ல வில்லனை  4 பேரும்  நீண்ட வாள்  கொண்டு  துரத்திட்டு ஓடறாங்க. எதுக்கு வெட்டி வேலை. சத்யராஜ்கொடுத்த கன் இருக்கே ? எடுத்து போட்டுத்தள்ளலாமே? 


6.  மாணவர்களில்  ஒரு ஆள் அடி பட்டு  சீரியசா படுத்திருக்கார். அப்போப்போய்  டெலி கால் மூலம் இண்ட்டர்வியூ செய்வது எதுக்கு. அவ்ளவ் முக்கியமான கலெக்டர் உத்யோகமா அது ? 


7. வில்லன்   திதி  கொடுக்கும் காட்சியில்  அய்யர் “ பிண்டத்தைக்கொண்டு போய்  கடல் ல கரைக்கும்படி சொல்லும்போது கையில் அந்த மாவு உருண்டையை எடுத்துட்டுப்போறார். பொதுவா ஒரு பிளேட் ல போட்டு எடுத்துட்டுப்போய் அந்த பிளேட்டை கழுவிட்டு வருவாங்க . பிண்டத்தை கடலில் கரைப்பாங்க .


8 கலவரக்காட்சியில்   மாணவியின் மேல் வில்லன் பெட்ரோல் ஊத்தும்போது அவ ;பாட்டுக்கு  ஓட வேண்டியதுதானே? அவன் என்ன கையைப்பிடிச்சுட்டா இருக்கான்? சுத்தி ஆளுங்க யாரும்  இல்லை. வேணாம் , வேணாம் அப்டினு சொல்லிட்டு ஏன் அங்கேயே  நிக்குது ? 

9 லேண்ட் லைன் பப்ளிக் பூத் ல இருந்து  ஃபோன் பண்ணி  வில்லனை மிரட்டும் மாணவர்கள்  ஏன் அதே  ஏரியாவில்  இருக்காங்க ? ட்ரேஸ் அவுட் பண்ணி கண்டு பிடிப்பாங்கனு  தெரியாதா? 


10   கொலை செஞ்சது காலேஜ் ஸ்டூடண்ட் என்றதும்  வில்லன் என்னது?22 வயசுப்பையனா>? என்கிறார். 12 வது படிக்கும் பையனுக்கு 12 + 5 = 17  வயசு , காலேஜ் 3 வருசம்  என்றால்  17 + 3  = 20 வயசு தானே ஆகுது ? 

Kalavaram Movie Audio Launch

நச் வசனங்கள் 


1.  எல்லாப்போர்லயும் கடைசில நல்லதுதான் நடந்திருக்கு 



2. என் பத்திரிக்கை முதல் இடத்துக்கு வரனும்னா  நீ மேலிடத்தில் இருக்கனும் , ஐ மீன் சாகனும் 



3. ஆட்சியே  முடிஞ்சாலும் அவங்க ஆரம்பிச்சு வெச்ச விசாரணைக்கமிசன் விசாரணை முடியாது 


4. ஏய் மிஸ்டர்  ஸ்டாப்  தட் என்கொயரி 


 சாரி சார், எல்லா ஒர்க்கையும் முடிச்சுட்டேன்

  என்னய்யா ? ஸ்கூல் பசங்க இம்போசிசன் முடிச்ச மாதிரி ரொம்ப ஈசியா  முடிச்சுட்டேன்னு சொல்றே? 



5.  விசாரனைக்கமிஷன்   ஏன் அமைக்கறோம்? அதுல கமிஷன்  இருப்பதால்  தான் 


6.  ஒவ்வொரு  பொறுக்கியையும் , ரவுடியையும் போட்டுத்தள்ளறது  என்னை மாதிரி  ஒரு போலீஸ் ஆஃபீசரால தான் , என்கவுண்ட்டர்  மூலம் 



7.  வில்லன் - நான் சென்னைக்கு வரும்போது   பிச்சைக்காரனா இருந்தேன் , என்ன பார்க்கறே ?  இப்பவும் அப்படித்தான் இருக்கனா? 


8  யார் நம்மாளைப்போட்டாங்கனு தெரியலை 

 டேய் , கொலை பண்றவன் , குத்தம் பண்றவன் பண்ணிட்டு  விசிட்டிங்க் கார்டு  கொடுத்துட்டா  செய்வான் ? 


9  அவருக்கு வேட்டி கட்டவே  தெரியாது . அப்டியே 4 மாசத்துக்கு  ஒரு தடவை கட்டினாலும் அது அவிழ்ந்து விழுந்துடும் 


அடேங்கப்பா ,  4 மாசத்துக்கு  ஒரு  டைம்  வேட்டி அவிழ்ந்ததுக்கே  4 குழந்தைகள்னா........



சி பி கமெண்ட்  -   படம்   பரபரப்பா  ஓடுது . முன் பாதி ஓக்கே , பின் பாதி  சுமார் தான்.  லேடீசும் பார்க்கலாம் .சத்யராஜை  ரசிப்பவர்கள் பார்க்கலாம். 



 ரேட்டிங்க்  =  2.5 / 5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

குமுதம் ரேங்க் - OK


திருப்பூர்  ஜோதி யில் படம் பார்த்தேன் 




Kalavaram Movie Stills (7)

0 comments: