Friday, January 31, 2014

B.A.PASS - சினிமா விமர்சனம் ( hindi ) 18 +

 

இந்த  கில்மாப்படப்போர்வைல வந்திருக்கும் அவார்டு  வாங்குன படம் உலகப்படமாம். அதெல்லாம்  தமிழனுக்கு  முக்கியம் இல்லை. தமிழனைப்பொறுத்தவரை  ரெண்டே வெரைட்டி தான் . சீன் உள்ள படம் , சீன் இல்லாத  படம் . சரி நாம விமர்சனத்துக்குள்ளே  போலாம் ( என்னமோ  குடிசைக்குள்ளே நலங்கு வைக்கப்போலாம்னு சொல்ற மாதிரி  ஒரு பில்டப் )

ஹீரோவோட அம்மா, அப்பா ஒரு கார் விபத்துல  இறந்துடறதால அவர் டெல்லில  தன் அத்தை  வீட்டில் தங்கறார். அவருடைய  2 தங்கைகளும் ஹாஸ்டலில் தங்கிடறாங்க .அத்தை வீட்டில் எடுபுடி மாதிரி எல்லா வேலையும் செஞ்சுட்டு  ஹீரோ பி ஏ  படிக்கறார். ( அங்கே அந்த அத்தைக்கும் ஹீரோவுக்கும் கனெக்சன் ஆகும்னு ஒரு  ஜோசியர் சொல்றார் , அது தப்பு )


 ஒரு நாள்  அத்தை  வீட்டுக்கு  லேடீஸ்  மீட்டிங்க் நடக்குது  அதுல சரிகா-னு ஒரு ஆண்ட்டியை சந்திக்கறார். அந்த ஆண்ட்டி யார் தெரியுமா? ( சொன்னாத்தானே  தெரியும் ? ) மாமா  வேலை செய்யும் ஆஃபீஸ் ல உயர் அதிகாரியோட மனைவி . இனி அவங்க ஏதாவது வேலை சொன்னா லும் செய்யனும். ( மாமாவுக்கெல்லாம் மாமா )




 ஒரு நாள் ஏதோ ஆப்பிள் தருவாங்க போய் வாங்கிட்டு வான்னு இந்த ஆண்ட்டி சொல்ல  ஹீரோ அந்த ஆண்ட்டி வீட்டுக்குப்போறார். ( சி செண்ட்டர் ரசிகன் ஒருத்தன் எந்திரிச்சு ஆப்பிள் வாங்க பழமுதிர்ச்சோலை போனா போதுமே எதுக்கு ஆண்ட்டி வீட்டுக்குப்போகனும்னு கேட்ட்கறார்.அய்யோ ராமா _) இப்போதான்  தியேட்டர்ல இதுவரை  ஏனோ தானோன்னு உக்காந்துட்டிருந்த  தமிழன்  நிமிர்ந்து  உக்கார்றான் 


 மேலே  சொன்ன 4 பேரா வில்  தமிழன் , சி சென்ட்டர் ரசிகன் இதெல்லாம் யார்னு  யாரும்  குழப்பம் அடைய வேணாம், எல்லாம் நான் தான் . ஹி ஹி , 


18  வயசுப்பையனை  40 வயசு ஆண்ட்டி  கச முச  பண்ணிடறா . இது மாதிரி  6 டைம் நடக்குது ( 6 தடவையும்  எண்ணிட்டே  இருந்தேன் ) 


 அதுக்குப்பின் அந்த பத்தினி   ஒரு பாக்கெட் டைரி தர்ர்றா. அதுல பல  பெரிய மனுஷிக போன் நெம்பர்  இருக்கு 


 ஹீரோவோட வேலை என்னான்னா அந்த  வீட்டுக்கெல்லாம்  போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுப்போய் அவங்களை சந்தோசப்படுத்திட்டு வரனும். அதுக்கு பணமும் தெருவாங்க . ஓசி ல கரும்பும் சாப்பிட்டு அதுக்கு குடக்கூலியும் வாங்கிக்கலாம். 


 இ[ப்படி கஷ்டப்பட்டு சாரி  ரொம்ப இஷ்டப்பட்டு ஹீரோ நிறைய பணம் சேர்த்துடறார். சேர்த்து வெச்ச பணத்தை தன் குரு ஆண்ட்டி  கிட்டே  குடுத்து வைக்கறார்



 ஒரு நாள் குரு ஆண்ட்டி  கூட ஹீரோ பிசியா  இருக்கும்போது மாமா வந்துடறார். குட்டு வெளிப்பட்டுடுச்சு 


 கேப்டன் கூட்டணி   வேணும்கறதுக்காக எப்படி அழகிரியை  வெளீல போன்னு தமிழ்  இனத்தலைவர் டிராமா செஞ்சாரோ அதே மாதிரி ஆண்ட்டி ஹீரோ வை துரத்தி  விட்டுடுது 

 இனிமே இந்த  ஏரியா பக்கமே வராதே அப்டிங்குது 


இப்போதான்  ஹீரோ வுக்கு  இன்னொரு இக்கட்டு வருது . அதாவது ஹாஸ்டல்ல தங்கிப்படிச்ச தங்கைகள் 2 பேருக்கும் ஆபத்து , அவங்க இவனைத்தேடி வர்றேன்கறாங்க . ஹாஸ்டல் வார்டன்  தப்பானவராம் ( தப்பான படத்துல  எல்லா கேரக்டரும் தப்பா தான்  இருக்கும் , விக்ரமன் படம்னா எல்லாரும்  யோக்கியமா  இருப்பாங்க .) 

 ஹீரோ அந்த  குரு ஆண்ட்டி கிட்டே இருந்து அந்தப்பணத்தை வாங்கினாரா? இல்லையா? என்பதுதான்  மிச்ச மீதிக்கதை


ஹீரோவா சாதப் கமல் அப்டினு ஒரு பையன்  சுமாரா நடிச்சிருக்கார். ( நாம என்னைக்கு ஆம்பளைங்களைப்பாராட்டி  இருக்கோம் ? )  அவருக்கு அதிக வேலை இல்லை 


ஹீரோயின் கம் வில்லியா  அதாவது ரேகா ஆண்ட்டியா ஷில்பா சுக்லா அப்டினு ஒரு ஆண்ட்டி நடிச்சிருக்கு . மேடம்க்கு முகமும் பயங்கர முத்தல் . மத்தபடி சொல்லிக்கற அளவோ . ஜொள்ளிக்கற அளவோ ஒண்ணும் இல்லை 


 கண்ணுக்கு குளிர்ச்சியா க ண்ணுக்கு  எட்டின தூரம் வரை  ஒரு யூத்  ஃபிகர்  கூடக்காணோம் . கதைப்படி எல்லாரும் ஆண்ட்டியா வர்றதால எதும்  தேறலை 



இயக்குநர் பாராட்டுப்பெறும்  இடங்கள்



1.  இது ஒரு கில்மாப்படம்னு  சொல்லாம  விருதுக்குரிய உலகப்படம்னு  ஊரை ஏமாத்தி நிஜமாலுமே   ஃபிலிம்  ஃபேர் அவார்டு வாங்குனது 


2  போஸ்டர்  டிசைன் பிரமாதமா  சீன்  இருப்பது போலவே அடிச்சது . தமிழ் , தெலுங்கு  . மலையாளம் என  மானா வாரியா   டப் பண்ணி  ரிலீஸ் செஞ்சது 



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. நாட்ல  1008 பேங்க்  இருக்கு , என்ன இதுக்கோசரம்  ஹீரோ எல்லாப்பணத்தையும் ஆண்ட்டி  கிட்டே  கொடுத்து வைக்கனும் ? 


2   உன்னை மாதிரி பல பசங்க  கூட எனக்கு கனெக்சன் இருக்குன்னு  ஒரு குண்டைத்தூக்கிப்போடுது ஆண்ட்டி க்ளைமாக்ஸ் ல . ஆனா நாம பார்க்கும்போதெல்லாம்  டெண்ட் கொட்டாய் ல தினசரி 4 காட்சிகள்  ஓடற மாதிரி எப்போ பாரு  கில்மா தான் பண்ணிட்டு  இருக்காங்க . அது போக  இன்னும் பல பசங்கன்னா ஆண்ட்டிக்கு இதுதான் ஃபுல் டைம் ஜாப்பா ? 


3 க்ளைமாக்ஸ் ல  ஆண்ட்டி   அந்த ஹீரோ  கிட்டே வாசல்ல  ஊர் ஜனம்  எல்லாம் கூடிடுச்சு  என்னை லைட்டா வயித்துல  குத்து கத்தியால அப்டிங்குது . அது என்ன  டீக்கடையா? லை ட்  டீ , ஸ்ட்ராங்க்  டீ சொல்ல ? 


4   ஹீரோவுக்கு  ஜோடியா   ஒரு இள வயசுப்பொண்ணை காலேஜ் க்ளாஸ் மேட்டா   போட்டிருந்தா    ஐ மீன்  ஹீரோயினா  போட்டிருந்தா  என்ன குறைஞ்சு  போய் இருக்கும்  ? மூலக்கதையை அச்சு அசல் அப்படியே காப்பி அடிக்கனும்னு  ரூல்ஸ்  இருக்கா ? கொஞ்சம்  மேல்  மாடியை  யூஸ்  செஞ்சாதான் என்ன ? 


 நச் வசனங்கள்


1. செஸ் ல காஸ்பரோவ் அதிர்ஷ்டக்காரர்.ஆனா கேம் நுணுக்கங்கள் கார்ப்போவ்க்குத்தான் தெரியும்



2  எதுக்கு  என் பேக்கை  செக் பண்றீங்க ? நான் என்ன திருடனா? 


 இந்த  ஊர்ல  எல்லாருமே திருடங்க தான் 


3 அட , நிறைய வேலை செய்யறே  போல , எப்போ எங்க   வீட்டுக்கு வர்ஃப்றே? 



4 நம்ம சொசைட்டில  கல்யாணம்கற ரிலேசன் தவிர  ஃப்ரீயா  எது கிடைச்சாலும் எனக்கு  அது  பிடிக்கும் 


5 வாரத்துக்கு  5 நாள் மட்டும்  போய்ட்டு வர  இது ஒண்னும் கவர்மெண்ட்  ஜாப் இல்லை 


 6  பையன் பி ஹெச் டி பண்றான் . பகல் ல கெமிஸ்ட்ரி , நைட் ல பயாலஜி 


7  எல்லாத்துக்கும்  நேரம்  காலம் வரனும் , கால தேவனுக்கு யாரை  எப்போ எங்கே வைக்கனும்னு  தெரியும் 


 8  என் மேல ஏதாவது  கோபமா ? ]\


 நீ  என்ன என்  புருசனா ? தேவை இல்லாததுக்கு  எல்லாம்  கோபப்பட 

9 மத்தியானத்துல  தூங்குனா  மதி கெட்டுப்போகுமாம் 


10  நான்  பொணத்தை நம்பி வாழ்றவன் டெய்லி  ஒரு பொணம் வந்தாதான்  எனக்கு ஒரு வேளை சாப்பாடு . 

 

 சி பி கமெண்ட்  -  படத்துல  நீங்க  எதிர்பார்க்கும்  காட்சிகள்  எதுவும்  இல்லை . போய் ஏமாந்துடாதீங்க  . வேஸ்ட் . இன்னொரு  விஷயம்  சும்மா சும்மா ஃபோன் பண்ணி   படத்துல  சீன்  இருக்கா?ன்னு கேட்காதீங்க எல்லாருக்கும் ஒரே  பதில்  தான் . இந்த அவார்டு படத்தை   ஈரோடு சீனிவாசா வில் பார்த்தேன்


  ரேட்டிங்க் = 2.25 / 5

டிஸ்கி -  ரம்மி - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2014/01/blog-post_3501.html