ஹீரோ
ஒரு புகழ் பெற்ற வக்கீல் . இந்தியாவிலேயே மிக இளவயதில் ஜட்ஜ் ஆகப்பணி
புரிய பிரமோஷன் கிடைச்சவர் . அவருக்கு ஒரே ஒரு மனைவி , ஒரு மகன், மகள் ,
குடும்பத்தோட சந்தோஷமா இருக்கும்போது அவருக்கு ஒரு அநாமத்து ஃபோன் கால்
வருது . மிரட்டல் தான் . என்ன ஏதுன்னு தகவல் சொல்லாம அவன் பாட்டுக்கு
மிரட்டிட்டு இருக்கான்
போலீஸ் ஆஃபீசர் கம் நண்பர் உதவியோட அந்த ஃபோன் காலை ட்ரேஸ் அவுட்
பண்ண பிரம்மப்பிரயத்தனம் பண்ணி ஆளை நெருங்கும்போது விபத்துல அந்த ஆள்
இறந்துடறான் . இடைவேளை
இப்போ எப்படி கேஸ் மூவ் பண்ண ?
அந்த ஆளைப்பத்தி விசாரிச்சா ஆல்ரெடி வக்கீலா இருந்தப்ப நடந்த ஒரு
கொலை கம் ரேப் அட்டெம்ப்ட் கேஸ் கேஸ் ல சம்பந்தப்பட்ட 8 பேர் ல அந்த ஆள்
ஒருத்தன் .
கொலை செய்யப்பட்ட பொண்ணோட டெட் பாடி கிடைக்கல. ஆனா அந்த கேஸ் ல சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு மேட்டர் தான் மிரட்டலுக்குக்காரணம் .
கேஸ் சூடு பிடிக்குது , ஜட்ஜ் ஆக வேண்டியவர் டிடெக்டிவ் ஆகி அந்த கேசை விசாரிக்கறார் .
அந்த பொண்ணைக்கொலை செஞ்சது யார் ? டெட் பாடி என் ந ஆச்சு ? என்பதெல்லாம் சஸ்பென்ஸ்
மம்முட்டி அருமையான டிரஸ் கோடு , அடக்கி வாசிக்கும் அண்டர்ப்ளே ஆக்டிங்க் ,
நோ பஞ்ச் டயலாக்ஸ் , வயதில் முதிர்ச்சி தோற்றத்தில் தெரியாத அழகிய
ஒப்பனை , டூயட் எல்லாம் பாடி கஷ்டப்படுத்தாத திரைக்கதையை விட்டு விலகாத
நடிப்பு என பிரமாதப்படுத்துகிறார் .
போலீஸ் ஆஃபீசராக வருபவர் , கொலை செய்யப்பட்ட பெண்ணாக வருபவர் , அவர் கணவர் மூவரும் கச்சிதமான நடிப்பு .
படத்தின் முதல் பாதி பர பர என 60 நிமிடங்கள் பறந்தாலும் பொசுக் என இருக்கு . ஒண்ணுமே இல்லாம ஒப்பேத்திட்ட மாதிரி இருக்கு
பின் பாதி திரைக்கதையில் ரொம்பவே தடுமாறி இருக்கிறார் இயக்குநர் . பி சி செண்ட்டர் ரசிகர்களூக்குப்புரிவது சிரமமே .
மயக்கம் என்ன படத்தில் செலவ்ராகவன் எடுத்துக்கொடுத்த பை போலார் டிஸ் ஆர்டர் வியாதி படத்துக்கு ரொம்பவே உதவி இருக்கிறது
ஒளீப்பதிவு , எடிட்டிங்க் , வசனம் எல்லாம் கனகச்சிதம் , பின்னணி இசை இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்
சைலன்ஸ் - மமுட்டியின் கம்பீர நடிப்பு + , பின் பாதி திரைக்கதை தெளிவு இல்லை -சுமாரான க்ரைம் த்ரில்லர் - ரேட்டிங்க் = 2.75 / 5
நச் வசனங்கள்
1. நீ உன் வேலையை சரியாச்செஞ்சா உனக்கு வேலை சரியா ஒத்துழைக்கும்
2
டாக்டர் , இத்தனை ரிப்போர்ட்ஸ் எடுத்தும் , ஸ்கேனிங்க் எல்லாம்
பார்ஹ்த்டும் என் உடம்புக்கு எதுவும் இல்லைன்னு கேட்கும்போது ரொம்ப
ஏமாற்றமா இருக்கு
3 ஹைடு & சீக் அதாவது கண்ணாமூச்சி சேசிங்க் கேம் இப்போ ஆடப்போறேன் , கொலையாளி தானா வந்து மாட்டுவான் பாருங்க
சொப்னாவின் சொதப்பல்ஸ்
1.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் டெட் பாடி கிடைக்கலை . கோர்ட்ல ஹீரோ
அதைக்கண்டு பிடிக்க ஒரு டெக்னிக் சொல்றார். இப்போ அந்தப்பொண்ணு உயிரோட
வரும் பாருங்க என்கிறார் . உடனே கோர்ட்டில் உள்ள அனைவரும்
வாச்லைப்பார்க்கறாங்க , கொலையாளி மட்டும் வாசலைப்பார்க்கலை . இதை வெச்சு
அவன் தான் கொலையாளி என கண்டு பிடிக்கறாங்க எவ்வளவு குழந்தைத்தனமான
காட்சி இது ? ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழி கொலையாளிக்குத்தெரியாதா?
எல்லாரும் வாசலைப்பார்க்கும்போது அவனும் பார்க்க மாட்ட்டானா? அல்லது தான்
கொன்ற லேடி எப்படி இப்போ வர முடியும் என்ற ஆர்வத்திலாவது வாசலைப்பார்க்க
மாட்டானா?
2 முதன் முதல்ல ஹீரோவுக்கு ஒரு ஆள் ஃபோன்
பண்ணும்போது அந்த ஃபோன் நெம்பரை ஹீரோ குறிச்சு வெச்சு அந்த நெம்பரை
ட்ரேஸ் அவுட் பண்ண முயற்சியே எடுக்கலை .அதுக்குப்பின் வரும் காலில் போலீஸ்
தான் ட்ரேஸ் அவுட் பண்ணுது . ஒரு கிரிமினல் லாயர்க்கு அது கூடத்தெரியாதா?
3 ஹீரோவோட பையன் ஸ்கூல் வேன்ல போறான் , ஆனா அன்னைக்கு
ஸ்கூல் லீவ் . வில்லன் பஸ்ல அவனை அடைச்சு வைக்கறான். ஹீரோ போய்
காப்பாத்தும்போது பையனை மட்டும் கூட்டிட்டு வர்றார் . ஸ்கூல் பேக் எங்கே?
கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க்
4 ஹீரோவின் மனைவி செல்லும் கார் ரிப்பேர் . ஹீரோவுக்கு
ஃபோன் செஞ்சதும் அவர் அங்கே வர்றார் . சரி மெக்கேனிக் வந்து
எடுத்துட்டுப்போகட்டும்னு 2 பேரும் அம்போன்னு காரை அப்டியே விட்டுட்டு
போயிடறாங்க கலைஞர் காங்கிரஸை கை விட்ட மாதிரி , அட்லீஸ்ட் மெக்கானிக் வர்ற
வரை வெயிட் பண்ண மாட்டாங்களா?
5 முக்கியக்குற்றவாளி சிக்கிட்டான் , அவனை ஒரு போலீஸ்
படையே துரத்துது . 20 நிமிஷம் நடக்கும் இந்த சேசிங்க் சீனில்
மருந்துக்குக்கூட அவனை யாரும் சுடவோ தாக்கவோ முயற்சிக்கலை ,
முழங்காலுக்குக்கீழே சுடலாமே ?
6 வில்லன் அந்த லேடியைக்கொலை செய்வதை காட்டினாலும் அதுக்கான
காரண காரியங்களை , சந்தர்ப்பத்தை விஷுவலா காட்டி இருக்கனும் அது ரொம்ப
முக்கியம்
7 பை போலார் டிஸ் ஆர்டர் நோய் இந்தக்கதைக்குத்தேவையே இல்லை . அது இல்லாமயே சஸ் பென்ஸா கொண்டு போய் இருக்கலாம்
தியேட்டர் மேட்டர் - திருவனந்த புரத்தின் நெம்பர் ஒன்
தியேட்டரான ஸ்ரீ பத்மாலயாவில் படம் பார்த்தேன் . சூப்பர் தியேட்டர் . ஏசி
டிடிஎஸ் , டிக்கெட் 80 ரூபா . ஆல் ஃபேமிலி ஆடியன்ஸ் , ஹவு்ஸ்ஃபுல் . ஆனா
படம் மீடியமா தான் ஓடும்
0 comments:
Post a Comment