கோடம்பாக்கம் ஆகட்டும் பாலிவுட் , கோலிவுட் ஆகட்டும் கவர்மெண்ட் ஜாப்பை
விட ஹீரோக்களுக்கு கவுரமான உத்தியோகம் தாதா கிட்டே அடியாளா வேலை
கிடைப்பது . மணிரத்னம் இயக்கிய தளபதி , நாயகன் படங்கள் எத்தனை
படங்களுக்கு முன்னோடின்னு கணக்கு எடுத்தா ஏகப்பட்ட படங்கள் வரும் ,
பத்தோட 11 அத்தோட இதுவும் ஒண்ணு தான் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த
கமர்ஷியல் ஹிட் ஆகி விமர்சகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்த
ஆர் ராஜ் குமார் . அப்டின்னா ரோமியோ ராஜ்குமார். ஆல்ரெடி பிரபுதேவா
மிஸ்டர் ரோமியோ எனும் படத்தில் நடிச்சிருக்கார் வேற .
ஹீரோ ஒரு தாதா கிட்டே அடியாளா வேலை செய்யறார் . அவருக்கு எதிரி தாதாவோட
தங்கை பொண்ணுதான் ஹீரோயின் அதுல வளர்ப்பு மகள்னு ஒரு சால்ஜாப் வேற .
ஹீரோவுக்கு ஹீரோயினை கண்டதும் காதல் . பின்னாலயே சுத்தறார். ஆனா
ஹீரோயின் கண்டுக்கலை . எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற பழமொழிப்படி
ஹீரோயின் ஹீரோ லவ்வுக்கு ஓக்கே சொல்றார் ( ஏன்னா ஹீரோயின் சம்பளம் 40
லட்சம் ஆச்சே. )2 பேரும் லவ்வறாங்க .
இப்போதான் பெரிய ட்விஸ்ட் . ஆத்துல ஸ்னானம் செய்யும்போது இன்னொரு தாதா
ஹீரோயின் ஸ்னானம் பண்றதை பாத்துடறார். பயப்படாதீங்க , டிரஸ் முழுசா
போட்டுட்டே குளிக்கும்போதுதான் .
யார்னு விசாரிச்சா எதிரி தாதா தான் ஹீரோயினோட மாமா, . உடனே
சமாதானத்துக்கு ஆள் அனுப்பி சம்பந்தம் பேசிடறார்.
இப்போ தான் தெரியுது தன் கிட்டே வேலை செய்யும் ஹீரோ தான் தான் ஆசை
வெச்ச பச்சைக்கிளிக்கு முத்துச்சரம்னு . 2 பேருக்கும் கடுமையான போட்டி .
யார் ஜெயிச்சாங்க என்பது ஊருக்கே தெரியும், இருந்தாலும் தியேட்டர்ல
போய் பார்த்துகுங்க
ஹீரோவா சாகித் கபூர் , அசால்ட்டா செஞ்சிருக்கார் . இவர் அங்க சேஷ்டைகள் ,
முக சுளிப்புகள் எல்லாமே பிரபுதேவா செய்வது போலவே இருக்கு. டான்ஸ்
காட்சிகளில் கலக்கிடறார். ஃபைட் காட்சிகளீலும் பின்னிபெடல் எடுக்கறார்
.கமர்ஷியல் சினிமாவுக்கான எல்லா ஐட்டங்களும் படத்துல இருந்தாலும்
கொஞ்சமாவது நவீனமா சிந்திச்சு திரைக்கதைல மெருகு ஏத்தி இருக்கலாம்
ஹீரோயின் சோனாக்ஷி சின்னா .கொழுக் மொழுக் கன்ன அழகி .இவர் ஹீரோவுக்கு
முத்தம் கொடுக்கும்போது அவர் உதடுகள் அழுத்தத்தை அளவெடுத்தா பூகம்பம்
ஏற்படும்போது பூமிக்கு ஏற்பட்ட அழுத்தம் தோத்துடும் அம்பூட்டு அழுத்தம்
. 2 பேருக்கும் சம்பளம் வாங்கிட்டே ரொமான்ஸ் பண்ற வேலை தான் . ஆஹா!
அருமை .
Sonu Sood தான் மெயின் வில்லன் . பிரகாஷ் ராஜ் கில்லி ல என்ன என்ன
செஞ்சாரோ அதை எல்லாம் இவரும் செய்யறாரு . ஹீரோயினைக்கவர இவர் டான்ஸ்
பிராக்டீசில் ஈடுபடுவது காமெடி .ஆனால் இவ்வளவு மந்தியாக ஒரு வில்லன்
இருப்பது கமர்சியல் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்
ஆஷிஸ் வித்யார்த்தி தான் ஹீரோயினுக்கு மாமா . படம் பூரா இவர் மாமா வேலையை
நல்ல பார்க்கறார். பல தமிழ்ப்படங்களில் பிரமாதமான நடிப்பை வழங்கிய
இவருக்கு இது ஒரு சறுக்கல் படம்
இசை சொல்லிக்கொள்ளும்படி இருக்கு . ஹீரோ ஹீரோயின் சந்திக்கும்
காட்சிகளீல் எல்லாம் வரும் தீம் மியூசிக் கலக்கல்
வசனங்களில் டபுள் மீனிங்க், ஆபாசம் அதிகம் . போக்கிரி மாதிரி படங்களை
இயக்கிய் , ஃபேமிலி ஆடியஸ் உள்ள பிரபுதேவா கொஞ்சம் டீசண்ட்டாக காட்சிகள்
அமைப்பது நல்லது
தென் காசிப்பட்டணம் ல் மாட்டின் தோலைப்போர்த்தி செய்யும் விவேக் காமெடி
சீனை பிஜிஎம் முடன் சுட்டுட்டார் பிரபுதேவா.அண்ணாமலை கடவுளே கடவுளே
ஸீனையும் சுட்டாச் . ஹீரோ - ஹீரோயின் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம்
ஹீரோ உதட்டைக்குவித்துக்கொண்டு முத்தத்துக்கு ஏங்குவது செம காமெடி .
ஸ்டண்ட் காட்சிகளில் பிரம்மாண்டம் தெரிகிறது . ஆனால் க்ளைமாக்ஸ்
காட்சியில் நெஞ்சில் , வயிற்றில் , முதுகில் என 3 இடங்களீல் ஆழமாக
கத்திக்குஹ்ட்து பட்ட ஹீரொ ஃபைட் போட்டு ஜெயிப்பது எல்லாம் அதை எல்லாம்
தூக்கி சாப்பிட்ட காமெடி
அடிக்கடி ஹீரோ பேசும் “சைலண்ட் ஹோ ஜா.நஹி தோ வயலன்ட் ஹோ ஜாவூங்கா -ஆர்
ராஜ்குமார் பஞ்ச் அரதப்பழசு , ஆல்ரெடி விஜய் பேசுனதுதான் தமிழில் நீ
சைலண்ட்டா இரு , இல்லை நான் வயலண்ட் ஆகிடுவேன்
நச் டயலாக்ஸ்
1. நான் சாக முடியாது , சாகவும் கூடாது
2. ஹீரோ - சின்னதா இருக்கறது கூட பெரிய பெரிய வேலைகளைச்செய்யும்
வாட் யூ மீன்
நான் இந்தக்கொசுவை ச்சொன்னேங்க
3 நான் மட்டும் அவனை கரெக்ட் டைம்க்கு கொல்லாம இருந்திருந்தா அவன்
உன்னைக்கொன்னிருப்பான்
நான் தான் ஆல்ரெடி செத்துட்டனே , என்னைக்கொலையா கொன்னுட்டா அவ
4 சார், நீங்களும் பணம் கொடுஹ்ட்திருக்கீங்க, அவரும் பணம்
கொடுத்திருக்கீங்க. நான் நாய் மாதிரி 2 சைடும் வாலை ஆட்ட வேண்டிய சூழல்
5 ஹலோ, சார் நான் முன்னாவைப்பார்க்கனும்.
இப்போதான் அவனை அடிச்சுட்டு இருக்கேன், அரை மணிநேரம் கழிச்சு வந்தா
ஹாஸ்பிடல்ல பார்க்கலாம்
6 ஹீரோயின் - நான் யார்னு உனக்குத்தெரியுமா?
ஹீரோ - நான் ஆம்பளை , நீ பொம்பளை ( ஆஹா! என்ன ஒரு அபாரமான கண்டு பிடிப்பு ? )
7 காசுகாக எது வேணாலும் செய்யறவன் தான் , ஆனா காசு கொடுத்து என் காதலை
விலைக்கு வாங்க நினைச்சா அது முடியாது
8 ப்யார் , மார் இந்த 2க்கும் இடைல ஓடுது என் வாழ்க்கை ( ப்யார் =
காதல் , மார் = அடி , வெட்டு , கொலை )
சி பி கமெண்ட் - பிரபு தேவா வின் R RAJKUMAR = ஹீரோ ,வில்லன் இருவரும்
ஹீரோயினைக்காதலிக்கும் முக் கேன க்காதல் கதை. சுமாரா இருக்கு , ரொம்ப
மோசம் இல்லை
ரேட்டிங் = 2 / 5
டைம் பாஸ் படம்
தியேட்டர் மேட்டர் = திருவனந்தபுரம் அஸ்வதி ல படம் பார்த்தேன் . 4 வது
மாடி . நோ லிஃப்ட் . தியேட்டர் பொட்டிக்கடை மாதிரி ரொம்பச்சின்னது .
பால்கனில 100 சீட் , கீழே 150 சீட் தான் . பாதி தியேட்டர் நிரம்பி
இருந்தது. கேண்ட்டீன் குட் .சீப்பா தான் இருக்கு செண்ட்ரல் ரயில்
நிலையம் அருகே இருக்கு . இந்த ஊரில் உள்ள ஒரே 4 தியேட்டர் காம்ப்ளெக்ஸ்
இதுதான்
1 comments:
your blog suddenly not getting updated on feeds, please check
Post a Comment