பெண் வேவுபார்ப்பு விவகாரம்: 'மோடி மீது சிபிஐ விசாரணை தேவை'
இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஐ.ஏ.எஸ்.
அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம்
தாக்கல் செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன்
குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப்புப் படைத்
தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 150 பக்க
அறிக்கையையும் அவர் இணைத்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டில் பெங்களூரைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத்
தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக
கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.
குஜராத் மேலிட உத்தரவின்பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த
இணையதளங்கள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், குஜராத் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி
பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரணமாகவே தன் மீது பழிவாங்கும்
நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளார்.
கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முதல்வர்
நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன்
காரணமாகவே என் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த ஐ.பி.எஸ்.
அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு
தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து
வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில்
பிரதீப் சர்மா கோரியுள்ளார்.
இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியி ருப்பது:
2004-ம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் மோடி
பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங்களூர் பெண் பொறியாளரை முதல்வருக்கு
நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம்
ஏற்பட்டது.
தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக
அவரது தந்தை அறிக்கை வெளியிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே
அவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
- ருள் George at Practicing as an Advocate at District Court, Nagercoil
அருண் ஜெட்லியின் விவகாரத்தில் ஊளையிட்ட அவர்கள் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் எந்தவிதமான விசாரணைக்கும் அமித்ஷாவையும் நரேந்திரமோடியையும் உட்படுத்தாமல் நரேந்திரமோடியும் அவரது கட்சியும் அந்த பெண்ணின் தந்தையின் கடிதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.about 19 hours ago · Up Vote (1) · Down Vote (0) · reply (0) -
hidayathullah
இதுவெல்லாம் மோடிக்கு கை வந்த கலை. ஸ்ரீகுமார் உளவுத் துறை கூடுதல் தலைவராக பணியாற்றியவர் அவரது பேட்டி மலையாள மனோரமாவில் வேல்வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து சில. குஜராத் படுகொலைகள் நிகழ்ந்து ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அது ஒரு வகுப்பு கலவரம் அல்ல. அரசாங்கத்தின், காவல் துறையின், அரசு இயந்திரத்தின் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்ட குரூரமான அழித்தொழிப்பு என்பதற்கு எண்ணற்ற நேரடி சாட்சியங்கள் முன்வைக்கபட்டுவிட்டன.இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர்களின் நேரடி வாக்குமூலங்களை தெஹல்கா இதழ் உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்தபோது அது நீதியின்பால், அரசியல் அமைப்பின்பால் கொண்ட கொண்ட நம்பிக்கைகளைச் சிதைத்தது. ஆயினும் நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றார். இன்று இந்தியாவை வளரச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு தலைவராக அவர் சித்தரிக்கப்படுகிறார்.ஒரு நாள் அவர் இந்தியாவின் பிரதமராகவும் வரக்கூடும். குஜராத் வன்முறையின்போது மோடியின் அரசின் இனவாத பாசின நடவடிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் முக்கிய பங்குவகித்தவர் அப்போது அங்கு உளவுத் துறை கூடுதல் தலைவராக பணியாற்றியவர் கேரளாவைச் சேர்ந்த ஸி.ஙி.ஸ்ரீகுமார். மோடியும் அவரது அரசு எந்திரமும் நரவேட்டைக்கு உறுதுணையாக இருந்ததுடன் எவ்வாறு அதை முன்னின்று நடத்தினார்கள் என்பதை அவர் மனத்துணிவுடன் அம்பலப்படுத்தினார்.அவை அரசாங்கத்தின் பாத்திரம் குறித்த அதிகார பூர்வமான, தீர்மானமான நிரூபணங்கள். ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் மோடியின் அரசுக்கு எதிராக அவர் நேருக்கு நேர் நின்று போராடினார். குஜராத் வன்முறையின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக்கொண்டுவருவதந்தில் பெரும் பங்கு வகித்தார். . குஜராத்தில் காந்திநகரில் ஸ்ரீகுமாருடன் நிகழ்த்திய நேர்காணலிருந்து திரு.கே.மோகன்லால் தொகுத்த சித்திரம் இது. இன்னும் கேட்க முடிகிறவர்களை, இன்னும் பார்க்க முடிகிறவர்களை கலங்கச் செய்யும் சித்திரம். மலையாள மனோரமா 2008 ஆம் ஆண்டு ஓணம் சிறப்பிதழில் வெளிவந்து பலத்த அதிவுகளை ஏற்படுத்திய பேட்டிக் கட்டுரையின் தமிழாக்கம் இது. அவர் விளக்கிக் கூறினார். 27ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு சீப் செக்கரட்டரி ஜி.சுப்பாராவ், டி.ஜி.பி.சக்கரவர்த்தி, அகமதாபாத் சிட்டி கமிஷனர் (இவர் தற்போது குஜராத் காவல்துறை தலைவராக இருக்கிறார்) பி.சி. பாண்டே, அடிசனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன், முதல் அமைச்சரின் சிறப்பு செயலாளர் பி.சி.மிஸ்ரா (இப்போது இவர் மத்திய அமைச்சர் சரத்பவாரின் செயலாளர். இவர் ஆட்சித்தலைமைக்கு உயர்த்தப்பட்டதை கவனிக்கவும்) இவர்கள் அனை வரும் சேர்ந்து முதல் அமைச்சரின் முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் முதல்வர் கூறினார்.“இந்து மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் துரதிருஷ்டவசமான, வேதனை நிறைந்த விஷயங்கள்தான் நடந்து இருப்பவை. சாதாரண நிலையில் நீங்கள், ஒரு இனக் கலவரம் வெடிக்கும் போது இந்துக்களையும், முஸ்லீம்களையும் சரிசமமாகக் கைது செய்வீர்கள். அந்த நடைமுறை இங்கு எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது. மூன்று நாட்களுக்கு இங்கு இந்துக்களின் பழிவாங்கும் நெருப்பு பொங்கி எழும். யாரும் அதைக் கண்டுகொள்ளவும் கூடாது, அதில் தலையிடவும்கூடாது. இது என் பிரத்தியேகமான உத்தரவு.” இது தான் ஒரு பிரதம வேட்பாளரின் தன்னடத்திற்க்கனா சான்று. -
Rajan
இவர் நாளைக்கு பிரதமர் ஆனால், இந்தியன் மில்லிடரி, IB, சிபிஐ, RAW, etc.. இவர்களை நினைத்தால் பாவமாக தான் இருக்கு... வழக்கம் போல இது காங்கிரஸ்சின் சூழ்ச்சின்னு சொல்லுவாங்க. ராமர் தான் என் கடவுள்ளுன்னு மோடியும் சொல்லுவார் . இந்திய கலாச்சாரம் படி "ஒருவனுக்கு ஒருத்தி".... அப்படி இப்படி பேசுவார். அதற்கு பலர் கை தட்டுவாங்க... எல்லாம் தலைஎழுத்து......a day ago · Up Vote (0) · Down Vote (0) · reply (0) -
V.Shanmuganathan
IAS அதிகாரி திரு.பிரதீப் சர்மா அவர்கள் திரு.மோடியின் மேல் கூறிய இந்த மிகப்பெரிய குற்றச்சாட்டுகூட காங்கிரஸ் கட்சியின் சதி வேலை என்று திரு.மோதியின் ஆதரவாளர்கள் சொல்ல தயங்கமாட்டார்கள். ஒரு நாட்டின் பிரதமமந்திரி வேட்பாளராக போட்டியிடப்போகும் ஒரு நபர்,பல பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவராக இருப்பது துரதிஷ்ட்ற வசமானது. சீதையானாலும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்கமுடியாது! ஸ்ரீராம் சீதாதேவியையே அக்னிபரிட்ஷை செய்ய சொல்லவில்லையா. எனவே பிஜேபி திரு.மோதி மேல் சாட்டப்பட்ட குற்றசாட்டை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரவேண்டும். இல்லையேல் ஒரு குற்றவாளியை பிரதமர் பதவிக்கு போட்டியிட வைத்த கெட்டபெயர் பிஜேபி கட்சிக்கு வர அவர்களே காரணமாகிவிடுவர்.
நன்றி - த ஹிந்து
3 comments:
ivarthaan ..
yokkiyaraa..!?(modi)
காங்கிரஸ்க்கு இப்போ அவல் கிடைச்சிருக்கு... இதெல்லாம் ஓட்டை மாற்றுமா என்ன?
ஆளும் காங்கிரஸ் தனது பிரதான எதிரியாகிய மேடிமீது தா கைவசமுள்ள எல்லா ஆயுதங்களையும் பிரயோகிக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். பழைய படங்களையும், செய்திகளையும் தன் 'கூண்டுகிளையை' () வைத்து எல்லா பக்கங்களில் இருந்தும் தாக்குதல் தெடுப்பார்கள். இன்று மேதி என்பது ஒரு செல்லுபடியாகும் ஒரு மந்திரம். ஆகவே ஊடகங்களும், தன் வியாபரத்திற்காக, அந்த மந்திரத்தை எப்படியாவது உச்சரித்துவிடவே விரும்புகிறார்கள், குறிப்பாய் அதைப் பற்றிய எதிர்மறை விசயங்களை.
ராகுல் பற்றிய பெண்கள் விவகாரம் பலப் பல, நேருவுக்கு இல்லாத பெண்விவகாரங்களா? சிறுபான்மையினர் (760 பேர்) படுகொலை எனில் சிக்கியர்கள் (8000 பேர்) படுகொலையை என்னவென்று சொல்வீர்கள்?
ராகுலின் பிரதமர் கனவை அழித்து மக்களின் (குறிப்பாய் அறிவார்ந்த இளைஞர்கள்) ஆதரவை பெற்று ஒரு எழுச்சியை உருவாக்கி வரும் மேடி இம்மேஷை எப்படியாவது குறைக்க, எல்லா அதிகாரங்களையும் சேனியா ஆட்சி பயன்படுத்துகிறது.
ஆட்சி போனால் குவேத்ரோச்சி கால போபர்ஸ் முதல், டீலேப் டீலில் சிக்கியுள்ள மருமகன் ராபர்ட் வரதா வரை எல்லா வண்டவாளங்களும் வெளியே வராமல் போகுமா?
அந்த நிலைக்கு போகும் முன் எல்லா தந்திரங்களையும். மந்திரங்களையும் உபயோகப்பட்டுத்தி ஆகவேண்டுமே?
Post a Comment