தினமலர் விமர்சனம்
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என அகதிகளாக பல நாடுகளுக்கும், கள்ளத்தோணி ஏறிய தமிழர்களின் கண்ணீர் கதையை, ஒரு வழித்தவறிய அகதி படகின் வாயிலாக தத்ரூபமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் 'ராவண தேசம்'. இதுவரை தமிழ், தமிழ் என பேசி வரும் தமிழ் சினிமா இயக்குநர்களே கையாளாத கதை, ஒரு தெலுங்கு சினிமாவாக வெளிவந்து ராவண தேசமாக தமிழ்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது!
ராணுவத்துக்கும், போராளிகளுக்குமான சண்டையில் இருந்து விலகி, இலங்கை தமிழர் பகுதியில் வசிக்கும் தமிழ் இளைஞன் அஜெய், அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு படகு உதவி செய்யும் அஜெய்யே, தன் காதலி ஜெனிபருடன் ஒருநாள் அகதியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய சூழல்! மேலும் சிலருடன் ஒரு படகில் ராமேஸ்வரம் கிளம்பும் அவர்களது படகு எதிர்பாராத விதமாக திசைமாறி செல்கிறது. ஒருசில நாட்களில் முடிய வேண்டிய படகுபயணம் பத்து, பதினைந்து நாட்களுக்கு மேலாக., அந்தபடகில் உயிருக்கு போராடும் அகதிகளின் கதைதான் 'ராவண தேசம்' மொத்த படமும்!
முரட்டு முகமும் தாடியுமாக இலங்கை தமிழராக அஜெய், பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கண்ணீர் தமிழர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார். அஜெயின் காதலியாக நந்திதா அலைஸ் ஜெனீபர் படகில் கருகலையும் காட்சிகளில் சத்தம் இல்லாமல் கதறும் இடங்களில் நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார்.
ஆர்.சிவனின் இசை, வி.கே.ராம்ராஜின் ஒளிப்பதிவு, அஜெய்யின் இயக்கம், நடிப்பு உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் ராவண தேசத்தின் பலம்! ஆரம்பகாட்சிகளில் வரும் இலங்கை நிலவரம் நாடகத்தன்மையாக படமாக்கப்பட்டிருக்கும் விதம், நாயகர் அஜெய்யின் கனவில் வரும் போராளி தலைவன் பற்றிய கருத்து தேவை இல்லாத திணிப்பு உள்ளிட்ட ஒரு சில மைனஸ் பாயிண்ட்டுகள் இருந்தாலும் 'ராவண தேசம்' - நிச்சயம் 'நம் தேசத்தை உலுக்கும்!!'
a
a
- நடிகர் : அஜய்
- நடிகை : ஜெனிபர்
- இயக்குனர் :அஜெய்
a
0 comments:
Post a Comment