Saturday, November 02, 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா - சினிமா விமர்சனம்

ஹீரோ  ஒரு லோக்கல் டி வி சேனல் நடத்திட்டு இருக்காரு . அவர் எதேச்சையா  ஒரு விழாவில் பாடகியை சந்திக்கிறார். அவர் அழகில் மயங்கி லவ்வறார். அவர் தன் லவ்வை ஹீரோயின் கிட்டே வெளிப்படுத்தி  ஓக்கே வாங்குவது எப்படி என்பதை இடைவேளை  வரை  ஓட்டிடறாங்க. பொண்ணு ஓக்கே சொன்னதும் ஹீரோவோட அப்பா அந்தப்பொண்ணைப்பார்த்து இந்தப்பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்றார். அது ஏன் ? அப்டிங்கறதுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் . 


ஹீரோவோட அப்பா   ஒரு சினிமா தியேட்டர் ஓனர் கிட்டே ஒர்க் பண்ணிட்டு இருந்திருக்கார் . அப்டியே  ஓனர் பெண்ணு அவரை லவ்வுது . ஆனா ஓனர் இறந்துட்டதா வந்த தவறான ஒரு ஃபோன் கால்  ஹீரோவோட அப்பாவின் வாழ்க்கையையே திருப்பி போட்டுடுது . ஓனர் அவரை   அவமானப்படுத்தி அனுப்பிடறாரு. ஓனர் பொண்ணுக்கும் , ஹீரோவோட அப்பாவுக்கும் வேற வேற இடத்துல மேரேஜ் ஆகிடுது 



ஹீரோவோட அப்பாவோட ஓனரோட பேத்தியைத்தான் இப்போ  ஹீரோ லவ்விட்ட  இருக்கார் . இதுக்கு மேல என்னச்சுன்னு தில் இருப்பவங்க தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க .


படத்தோட ஹீரோ, வில்லன் ,  கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என சந்தானத்துக்கு 3 வேடங்கள் . மனுசன் பட்டாசைக்கிளப்பிட்டார். பொதுவா எம் ராஜேஷ் படங்கள் ல சந்தானத்துக்கு  முக்கியத்துவம் இருக்கும், ஆனா இந்தப்படமே சந்தானத்தை நம்பி தான் இருக்கு 




பெண் வேடத்தில்  வரும்போது அரங்கம் அதிருது . க்ளைமாக்சில்  அவர் கோட்டா சீனிவாசிடம் மாட்டிக்கிட்டு  டான்ஸ் மூவ்மெண்ட் கொடுக்கும்போது  சிரிப்பலை  பரவுது .

 ஃபிளாஸ்பேக்கில் வில்லன் ரோலில்  சந்தானம் வருவது  ஓக்கே , ஆனால் நம்பியார் மாதிரி  மேனரிசமும் , அவர் முகத்தில் சிவப்பு லைட் அடிப்பதும் எடுபடவில்லை . 1980 களில் வந்த தமிழ்ப்படங்களை கிண்டல் பண்ணுகிறேன் பேர்வழி என  யூனிட் அடிக்கும் அபத்தங்கள்  போர் அடிக்கிறது.


நாயகியாக காஜல் அகர்வால் . பாலைவனத்தில்  கிடைத்த அருண் ஐஸ்க்ரீம் மாதிரி இருக்கிறார். இவர் சேலையில் வந்தாலும் அழகு , மாடர்ன்ஸ் டிரஸ்சில் வந்தாலும் அழகுதான் . இவர் போட்டும் ஜாக்கெட் செம ஃபிட் .   இவருக்கு இன்னும் நல்ல ஸ்லோமோஷன் காட்சிகள் வைத்திருக்கலாம் . 


சொல்ல மறந்துட்டேன் . நாயகி காஜல்க்கு ஜோடியாக கார்த்தி . பருத்தி வீரன் எனும் ஒரே ஒரு படம் மூலம் பிரம்மாண்டமான வெற்றியைச்சந்தித்த நல்ல நடிகர் . காலேஜ் பெண்களின் ஏகோபித்த ஆதரவை கொஞ்சம் படங்களின் மூலமே பெற்றவர் , மோசமான கதைத்தேர்வால் பலவீனப்பட்டு இருக்கிறார். படத்தில் இவரும் , சந்தானமும்  மாத்தி மாத்தி சிரிச்சுட்டே இருப்பது ஆடியன்சை கடுபப்டிக்கிறது. எஸ் வி சேகர் நாடகங்களில் எல்லாம் அவர் பாட்டுக்கு  டைமிங்க் விட் அடிச்சுட்டே இருப்பார் , ஆனால் முகத்தில்  சிரிப்பிருக்காது , பார்க்கும் ரசிகர்கள் சிரிப்பாங்க , ஆனால் இதில் நேர் எதிர் . இவங்க சிரிக்கறாங்க , ஆனா ரசிகர்கள் சிரிக்கலை 


பிரபு , சரண்யா  ஹீரோவுக்கு பெற்றோரா வர்றாங்க . பிரபுவின் ஃபிளாஸ்பேக்கில் கார்த்தி  பிரபு கேரக்டரில்  சுதாகர் கால கிராப் தலையோடு வருவது எடு பட வில்லை . 


கோட்டா சீனிவாசராவ் தெலுங்குப்படங்களில் வில்லனாகக்கலக்கியவர்  இதில் காமெடி பண்ணுகிறார் . ஆனால் ரசிக்க முடிகிறது   





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1  யாருக்கும் சொல்லாமலே உன் நெஞ்சுக்குள்ளே இடம் பிடிச்சேன் பாட்டு நல்லாருக்கு . உன்னைப்பார்த்த நேரம் பாட்டும் ஓக்கே  ரகம் . ஃபிளாஸ்பேக் காட்சியில் 1980க்கு தக்க இசையில் பாடல் கொடுத்தது சபாஷ் 



2. எம் எஸ் பாஸ்கர்  சாலை ஓரம் தனக்குத்தானே சவுக்கால் அடித்து  ஆடியன்சிடம் பணம் பெறும் கேரக்டர் . அதே ஸ்டெப்பை பரத நாட்டிய ஸ்டெப்பாக மாற்றி கஜோலை ஏமாற்றும் காட்சி அதகளம் . தியேட்டரில் செம சிரிப்புச்சத்தம் . இந்த சீனில் பாஸ்கரின் பாடி லேங்குவேஜ் கலக்கல் ரகம் 


3. சந்தானத்துக்காகவே எழுதப்பட்ட திரைக்கதை  என்பதால் ஒவ்வொரு சீனும் சந்தானத்தைச்சுற்றியே நிகழ்வது





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. படத்தின்  ஃபிளாஸ்பேக்கில் வரும் முக்கியக்காட்சி . ஹீரோவுக்கு  ஒரு ஃபோன் கால் வருது . ஓனர் விபத்தில் இறந்துட்டார் என . உடனே பொதுவா ஒருத்தன் என்ன செய்வான் ? ஜி ஹெச் போய் பாடியைப்பார்ப்பான் . டெட் பாடியை கண்ல பார்க்காம ஊருக்கே இழவுச்செய்தியை சொல்லி இழவுக்கு எல்லாரும் வந்த பின்  ஓனர் சாகாமல் இருக்கார்  என காட்டுவது அந்த காட்சியின்  சீரியசையே போக்கி விடுதே ? 



2 என்னதான்  தமிழ் சினிமா  ஹீரோயின்கள் லூஸ் கேரக்டராக  இருந்தாலும்  பரத நாட்டியம் எப்படி இருக்கும், அந்த ஸ்டெப் எப்படி இருக்கும் என்பது கூடவா  தெரியாது ? 


3 தியேட்டர்  ஓனராக , கல்யாண மண்டப ஓனராக , பாடகியாக   காஜல்  3 பொறுப்புகள் எடுத்துக்கொள்வது நம்பவே முடியலை , அப்படிப்பட்ட மல்டி டாஸ்க் பொண்ணு அப்படித்தான்  கேனமா இருக்குமா? ஏமாறுமா?





மனம் கவர்ந்த வசனங்கள்



1.மத்த சேனல்ல எல்லாம் விளம்பரம் வருது .. ஆனா நம்ம சேனலுக்கே ஒரு விளம்பரம் தேவப்படுது



2  அவமானம் தாங்காம தூக்கு மாட்டிக்கலாம் முன்னு போயுட்டேன்


அப்புறம் ??



 - வீட்டுல table fan தான் இருக்கு . அதான் வந்துட்டேன் .... # சந்தானம்




3 அண்ணன் காதர்பாய் பிரியானி சாப்பிடு .. அன்னனோட கை பக்குவம் - சாப்பிட்டா கைய நைட்டுல கூட நக்குவோம் " - சந்தானம்



4  பசங்கள்லாம் பார் - ல ( BAR )  காச  விடுராங்கன்னா இந்த பொண்னுங்கள்லாம் பார்லர்ல  ( பியூட்டி பார்லர்)  காச விடுராங்கப்பா



5 செம கட்டை கேட்டுச்சாம் கெழக்கட்ட , உன் அவசரத்துக்கு வேகாது கொழுக்கட்ட




6  நான் 30 நாள்ல பரதம் கத்துக்கனும் "



 " 30 நாள்ல விரதம் வேணா இருக்கலாம் . பரதமெல்லாம் கத்துக்க முடியாது


7 நாளைக்கு சாயந்துரத்துக்குள்ல எனக்கு பரத மாஸ்ட்டர் வேணும் " "




நாளைக்கு சாயந்திரத்துக்குள்ல பரோட்டா மாஸ்ட்டரே கிடைக்க மாட்டான்



8 மோதிரம் போடாத விரலும் , இடிபடாத உரலும் இருத்தா என்ன இல்லாட்டி என்ன ???" - எம் எஸ் பாஸ்கர்


9. ஊர்ல பல  லோக்கல் சேனல் இருக்கு , ரொம்ப ரொம்ப லோக்கல் சேனல் தான் இவங்களுது 

10  பேர்ல மட்டும் தான் கல்யாணம் , இன்னும் அப்படி ஒரு சம்பவமே அவர் வாழ்க்கைல நடக்கலை 

 
11 நம்ம சேனலுக்கு ஏன் விளம்பரமே  வர்றதில்லை ?


 எங்கே ? நம்ம சேனலுக்கே ஒரு விளம்பரம்  தேவைபப்டுதே ?


12 தம்பி எதுக்குவந்திருக்கான் ? டீ வாங்கித்தரச்சொல்லி கேட்கவா? 

 நாம குடிச்ச டீக்கு இன்னும் காசு தரலை , அதைக்கேட்க வந்திருக்கான் 

13 நாங்க ஜெயிப்பு பத்தி பேசிட்டு இருக்கோம் , தோத்ரம்னு சொல்றே ?

 அது ஸ்தோத்ரம் 

 நல்லா பேசு , நாக்கை எடுத்துட்டுப்போய் அயர்ன் பண்ணி விட்டுடுவேன் 

14  ஆள் எப்படி ? 

 ஹாலுக்கென்ன ? நல்லா பெருசா அழகாத்தான் இருக்கு 


 யோவ்ம் நான் என் ஆளை கேட்டேன் 


15 இவளை மட்டும் மேரேஜ் பண்ணிட்டா விடிய விடிய இவளை வெச்சு 


 வெச்சு ?

பாடச்சொல்லி கேட்டுட்டு இருக்கலாம் 

 
16 ஒன் சைடு லவ்வுக்கு ஓவர்  ஃபீலிங்க் ஆகக்கூடாது  



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. தீபாவளி ரிலீஸ் ல அழகுராஜா வுக்குதான் பொண்ணுங்க கூட்டம்.படத்தை பார்க்க முடியலைன்னாலும் சைட்டாவது அடிக்கலாம்


ஈரோடு சண்டிகா தியேட்டர் ல 480 பேர் இருக்காங்க.அதுல 360 லேடீஸ். எல்லாரும் கார்த்தியோட  அப்பா  சிவகுமார் உடைய  சம்பந்தி கூட்டம்னு நினைக்கறேன்


3 அடேங்கப்பா.அழகுராஜா 2 மணி நேரம் 54 நிமிசம் ஓடுமாம்.முழு படத்தையும் பார்த்தவன் பொறுமைசாலி


4 படம் போட்ட 19 வது நிமிசம் கஜோல் என்ட்ரி.சேலை ல .ஆகா





5 எம் ராஜேஷ் ட்விட்டர் ல இருக்கார் போல.எல்லா கேரக்டருக்கும் பிரபல ட்விட்டர் பேரு.ஹீரோயின் பேரு தேவிப்ரியா


================


6 கார்த்தி சிரிக்கும்போது வேணும்னே வாயை ஒரு பக்கமா இழுத்துக்கறாரு.மேனரிசமாம். படமும் இழுத்துக்கிட்டுதான் இருக்கு


===================

7 கார்த்தி " ஐ ஆம் வெயிட்டிங்" கறாரு.விஜய் ரசிகர்கள் எல்லாம் ஏய் னு கத்தறாங்க ;-)


==============


8. வாய்புள்லா வெத்தலய கொதப்பிகிட்டு சந்தானம் முத்துவ " தம்பி முட்டு " என அழைக்கும் ஒவ்வொரு முறையும் தியேட்டரில் சிரிப்பலை # சந்தானம் ராக்ஸ்


சி பி கமெண்ட்-ஆஇஆஅழகுராஜா - பசுமரத்தாணி அறைந்தாற்போன்ற 2013 ம் ஆண்டின் பசுமை யான அட்டர்பிளாப் படம் - விகடன் மார்க் -38 ,ரேட்டிங் - 1.75 / 5


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 38


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  1.75   / 5
    












டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்கள் lல் முதல்  8  டயலாக்ஸும்  கருத்து கந்தன் © ‏@Jay_Jey_  ட்விட்டரில் பகிர்ந்தது , நன்றி 


சந்தானம் வசனங்கள் இன்னும் 45 இருக்கு , அது தனிப்பதிவா பின்னர் வரும்  

7 comments:

Unknown said...

thank you for your "vimarsanam"

கார்த்திக் சரவணன் said...

//அப்பாவின் முன்னாள் காதலியின் மகள்//

அண்ணே அது அப்பாவின் முன்னாள் காதலியின் அண்ணன் மகள்... ராமசாமிக்கு ஒரு மகள் ஒரு மகன்... முறையெல்லாம் கரெக்டாத்தான் பாத்திருக்காங்க... படம்தான்... ம்ஹூம்...

ஆர்வா said...

நீங்க கலக்குங்க தலை.. நான் இன்னைக்குத்தான் படம் பார்க்க போறேன்..

Raj said...

There is an short film in Tamil (youtube) named as THURU - AIA A RAJA film story also similar to that...

Raj said...

துறு அப்படின்னு ஒரு குறும்படம்.... அதிலேர்ந்து இந்த படம் காப்பின்னு நினைக்குறேன்...

Karthikeyan Rajendran said...

Padatha pakkave bayama irukku

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

முடியல, ஏந்தான் போனோமோ என்றாகிவிட்டது.