சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்
சென்னையில் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை
தொடங்கிவைத்தார். அவை குறிப்பிட்ட வழித்தடங்களில் உடனடியாக ஓடத் தொடங்கின.
சிறிய பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. அதற்குமேல் 6 ரூபாய், 8 ரூபாய்
என்று வசூலிக்கப்படும்.
சிறிய பஸ்சில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். வடபழனி - கோயம்பேடு பஸ்
நிலையம் வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 சிறிய பஸ்களும் மற்ற
வழித்தடங்களில் 2 அல்லது 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் - ரயில் நிலையங்கள் இணைப்பு
சென்னை புறநகர் பகுதியில் இருந்து நகரில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும்
ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சிறிய பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள் விவரம் வருமாறு:
குரோம்பேட்டை வழித்தடம்
எஸ் 1 - பல்லாவரம் ரயில் நிலையம் - திரிசூலம் சக்தி நகர். வழி: பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி, திரிசூலம் சக்தி நகர்.
எஸ் 2 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: இந்திரா கார்டன், நேரு நகர்,
குமரன் குன்றம், அஸ்தினாபுரம், திருமலைநகர், ஜெயேந்திரர் நகர்,
செம்பாக்கம், கவுரிவாக்கம்.
எஸ் 3 - குரோம்பேட்டை - மாடம்பாக்கம். வழி: சிட்லபாக்கம், மகாலட்சுமி நகர், ராஜகீழ்ப்பாக்கம், கோழிப்பண்ணை, மாடம்பாக்கம்.
எஸ் 4 - குரோம்பேட்டை - மேடவாக்கம். வழி: குரோம்பேட்டை, எம்ஐடி, நேருநகர்,
குமரன் குன்றம், பல்லவன் பயிற்சிப் பள்ளி, ராதா நகர், நெமிலிச்சேரி,
நன்மங்கலம், கோவிலம்பாக்கம்.
பெருங்களத்தூர்
எஸ் 5- பெருங்களத்தூர் அருங்கால். வழி: ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி, காரணை காட்டூர், அருங்கால்.
எஸ் 11 - கிண்டி ஆசர்கானா - கீழ்க்கட்டளை. வழி: சிமென்ட் ரோடு,
மீனம்பாக்கம், பி.வி.நகர், பர்மா காலனி, மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம்
கூட்டுரோடு.
எஸ் 12 - கிண்டி ஆசர்கானா - என்.ஜி.ஓ.காலனி. வழி: மவுண்ட் தபால் நிலையம்,
எம்.கே.என்.சாலை, ஆதம்பாக்கம், ஜெயலட்சுமி திரையரங்கம், நியூ காலனி மெயின்
ரோடு, கக்கன் பாலம்.
கிண்டி
எஸ் 13 - கிண்டி - வேளச்சேரி. வழி: மடுவங்கரை, என்.ஜி.ஓ.காலனி,
பிருந்தாவன்நகர், மகாலட்சுமி நகர், உள்வட்டச் சாலை, வேளச்சேரி ரயில்
நிலையம்.
எஸ் 14 - எஸ்.ஆர்.பி.டூல்ஸ் - மேட்டுக்குப்பம். வழி: தரமணி, சி.டி.எஸ்.,
அம்பேத்கர் நகர், காமராஜ் நகர், டெலிபோன் நகர், எல்லையம்மன் நகர்.
எஸ் 21 - ராமாபுரம் - போரூர். வழி: ராமாபுரம் அரசமரம், பூத்தபேடு, சின்ன போரூர், காரம்பாக்கம்.
எஸ் 22 - போரூர் - பட்டூர். வழி: ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம், பரணிபுத்தூர் சந்திப்பு.
எஸ் 23 - அய்யப்பன்தாங்கல் - குமணன்சாவடி. வழி: எஸ்எஸ்டி ஆயில் மில், நூம்பல் சாலை சந்திப்பு, புளியமேடு, குமணன்சாவடி.
எஸ் 24 - அய்யப்பன்தாங்கல் - திருவேற்காடு. வழி: எஸ்.ஆர்.எம்.சி., சத்யலோக்
குருகுலம், செட்டியார் அகரம், சிவபூதமேடு, வேலப்பன்சாவடி.
மதுரவாயல்
எஸ் 25 - மதுரவாயல் - வளசரவாக்கம். வழி: ஆலப்பாக்கம் மதுரவாயல் சந்திப்பு,
மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி,
எஸ்.எஸ்.மோட்டார்ஸ், ஆற்காடு சாலை, ஆலப்பாக்கம் சாலை சந்திப்பு.
வடபழனி
எஸ் 31 - வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம். வழி: ஆவிச்சிப் பள்ளி,
விருகம்பாக்கம், கேசவர்த்தினி, தேவி குப்பம், கங்காநகர், பள்ளிக்கூடத்
தெரு, மதுரவாயல் ஏரிக்கரை.
எஸ் 32 - வடபழனி - திரு.வி.க.பூங்கா. வழி: ராம் தியேட்டர், பெஸ்ட்
மருத்துவமனை, வன்னியர் தெரு, பெரியார் பாதை, அண்ணா நெடுஞ்சாலை, அருண்
ஓட்டல், அமைந்தகரை.
அசோக் பில்லர்
எஸ் 33 - அசோக் பில்லர் மேத்தா நகர். வழி: புதூர் உயர்நிலைப்பள்ளி,
சாமியார் மடம், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், பொன்மணி திருமண மண்டபம்,
கீழ்நகர், திருவள்ளுவர்புரம்.
எஸ் 41 - அம்பத்தூர் ஓ.டி. - முருகப்பா பாலிடெக்னிக். வழி: வள்ளுவர் சாலை
சந்திப்பு, குளக்கரை சாலை சந்திப்பு, திருமுல்லைவாயில் சந்திப்பு,
ஸ்டேட்போர்டு மருத்துவமனை.
மாதவரம்
எஸ் 61 - மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு. வழி: கல்பனா லேம்ப், பிருந்தா கார்டன், பிரகாஷ் நகர், குமரன் நகர் சந்திப்பு, கொளத்தூர்.
எஸ் 62 - மூலக்கடை - மணலி. வழி: அம்பேத்கர் சிலை, ஆர்.வி.நகர், பார்வதி
நகர், மூலச்சத்திரம், பல்ஜிபாளையம், சின்னசேக்காடு, மணலி மார்க்கெட்.
மொத்தம் 50 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகர மக்களின் 4
ஆண்டுகள் கனவு நனவாகியுள்ளது.
நன்றி - த தமிழ் ஹிந்து
0 comments:
Post a Comment