ஒரு
ஊர்ல ஒரு குடும்பம் , அந்த குடும்பத்துல 3 பசங்க , முறையே 40,38 ,25
வயசுல 3 பசங்க . 3 பேருக்கும் மேரேஜே ஆகலை .3 வது பையன் தான் நம்ம ஹீரோ .
அவர் ஊர்த்திருவிழாவுல ஒரு பொண்ணைப்பார்த்து தமிழ் சினிமா வழக்கப்படி
பார்த்ததும் காதல் ல விழுந்துடறாரு. ஆரம்பத்துல பிகு பண்ணினாலும் பின்
ஓக்கே சொல்லிடுது, அண்ணன்க 2 பேருக்கும் மேரேஜ் ஆகாம எப்படி தம்பிக்கு
மேரேஜ் ஆகும், ? அதனால தாலியை (மட்டும் )கட்டி தன் வீட்டுக்கே
கூட்டிட்டுப்போய் கணக்குபிள்ளையா சேர்த்து விட்டுடறாரு ஹீரோ .
காஞ்ச
மாடுங்க 2 வீட்ல இருக்கே அதுங்க 2 ம் தம்பி மனைவின்னு தெரியாம காதல் ,
ஜொள்ளுன்னு அலையுதுங்க. அவங்க கிட்டே மாட்டி யும் , மாட்டாமயும் ஹீரோயின்
எப்படி அவஸ்தைப்படறார்? என்பதை காமெடி(ன்னு நினைச்சு)ப்படமாக்கி இருக்காங்க
. உஷ் அப்பா முடியல .
மேலப்பரம்பில்
யான் வீடு என்ற ஜெயராம் - ஷோபனா நடிச்ச மலையாளப்படத்தை உல்டா பண்ணி
ஆல்ரெடி ஆர் பாண்டிய ராஜன் சத்தமே இல்லாம தாய்க்குலமே தாய்க்குலமே என ஒரு
டப்பாப்படம் கொடுத்தாரு , பின் கிட்டத்தட்ட இதே சாயலில் தென்
காசிப்பட்டணம் வந்தது . இப்போ இது . டைட்டில் ல யே அண்ணன் சற்குணம்
சரண்டர் ஆகிடறார். இது ஒரு ரீ மேக் ஸ்டோரின்னு .. இருந்தாலும் களவாணி ,
வாகை சூடவா போன்ற பிரமாதமான படம் கொடுத்தவர்ட்ட இப்படி ஒரு லோ கிளாஸ்
படத்தை எதிர்பார்க்கலை . யூ டூ சார் ?
தனுஷ்
தான் ஹீரோ . கமலுக்கு இணையான நடிகர் என்று இணையத்திலே
பாராட்டுப்பெறும் ஹீரோ . தன் அண்ணன் செல்வராகவன் படங்களில் மட்டும்
பட்டாசுக்கிளப்பும் இவர் ஆடுகளம் தேசிய விருது வாங்கிய பின்
செலக்டிவ்வாக படங்களை ஒத்துக்கொள்பவர் ஏனோ இம்முறை சறுக்கி விட்டார் .
இவர் நடிப்புக்கு ஸ்கோப் எங்குமே இல்லை, படம் நெடுக நாயகியைச்சுற்றியே
கதை நகர்கிறது.
நஸ்ரியா
தான் நாயகி . துறு துறு நடிப்பு , அழகிய முகம் என மனதைக்கொள்ளை
கொள்ளும் பர்சனாலிட்டி . இவரிடம் ஒரு வியக்கத்தக்க குணம் பானுமதி ,நதியா
, ரேவதி , சுஹாசினி வரிசையில் தன் உடல் அழகு வெளிப்படுவதை விரும்பாத
அபூர்வ நடிகை . ஒரு சீனில் கூட கண்ணியக்குறைவாக ஆடை விலகவில்லை,
பெரும்பாலான காட்சிகளில் முழுக்க மூடிய சுடிதார் , சேலை கட்டிய காட்சிகள் 6
லும் இழுத்துப்போர்த்திய பாங்கு அபாரம் . ஆனால் நெருக்கமாக நடிக்கிறார்
, என்ன கொள்கையோ?
சிங்கம்புலி , புரோட்டா சூரி , ஸ்ரீ மன் , சத்யன் என காமெடிப்பட்டாளங்கள் உண்டு .மனதில் பெரிதாக ஒட்டவில்லை
மேலே உள்ளது கிராஃபிக்ஸ் லோ ஹிப்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. அய்யய்யோ
போச்சு என நஸ்ரியாவை அலற விட்டு பப்ளிசிட்டி செய்தது . இது 10 பைசா
செலவில்லாமல் கிட்டத்தட்ட கோடி ரூபாய் செலவு செய்தால் என்ன விளம்பரம்
கிடைக்குமோ அதைப்பெற்றது , வெரி குட் ஐடியா
2
இது குடும்பப்படம் , காமெடிப்படம் என்றெல்லாம் தனுஷ் , நஸ்ரியாவை நம்ப
வைத்து ஒரு லோ கிளாஸ் மலையாள கில்மாப்படத்தில் நடிக்க வைத்தது
3
சர்ச்சைக்குள்ளான “இனிக்க இனிக்க “ ரொமாண்டில் பாட்டு செம கிக் . இதில்
துளி கூட சீன் இல்லை , ஆனால் செம கிக் உண்டு . நெருக்கமான காட்சிகள் ,
உரசல்கள் ஆஹா!
4 , ஸ்ரீ மன் - சத்யன் இருவரின் காம்பினேஷன் காமெடி காட்சிகள்
5
அந்த ராப் சாங்க் மாதிரி வரும் “குமரிப்பொண்ணுங்க பார்த்தா” செம டான்ஸ்.
ஆர்ட் டைரக்ஷனும் , நடன இயக்குநரும் செம உழைப்பு , சபாஷ்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. வீட்டில் ஆல்ரெடி
மேரேஜ் ஆகாத அண்ணன்கள் இருக்காங்கன்னு தெரியாதா? கன்னிப்பொண்ணை எந்த
தைரியத்துல கூட்டிட்டு வர்றாரு ? மேரேஜ் ஆன ஆனால் கணவனைப்பிரிந்த பெண்
என்றாவது பொய் சொல்லி இருக்கலாமே?
2
வில்லன் ஆட்டோ டிரைவரிடம் வாய்ச்சண்டை போடும்போது நஸ்ரியா ஏன்
எட்டிப்பார்க்கிறார்? தலையை மறைச்சு அமர்ந்தவர் அப்படியே இருப்பதுதானே?
3
ஸ்ரீ மன், அம்மா , நஸ்ரியா மூவரும் கோயில் போறாங்க . ஆனா ரிட்டர்ன்
வரும்போது அம்மாவை ஆட்டோவில் காணோம் . ஸ்ரீமன் , நஸ்ரியா மட்டும் பக்கம்
பக்கமா இருப்பாங்க . அடுத்த ஷாட்டில் நடுவில் அம்மா எப்படி வந்தார் ?
கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் ?
4
என்ன தான் காமெடி என்றாலும் சிங்கம்புலி வாயில் உள்ள தங்கப்பல்லை சூரி
பிடுங்கி ஓடுவது எல்லாம் உவ்வே ரக காமெடி . இதில் ஒரு பல் டாக்டரிடம்
விவாதித்தேன். தங்கப்பல் , வெள்ளிப்பல் கட்டுபவர்கள் நிலையாக வாயில்
இருப்பது போல் தான் கட்டுவார்களாம். சாதா பல் தான் தினமும் இரவு கழட்டி
வெளியே எடுத்து வைத்து காலையில் மீண்டும் எடுத்துப்பொருத்துவது போல்
இருக்குமாம் . அப்படி இருக்கும்போது தங்கப்பல்லை அவ்வளவு எளிதாக என்னமோ
பாக்கெட்டில் இருந்து பேனாவை அடிப்பது போல் எடுப்பது எப்படி ?
மேலே உள்ளது ஒரிஜினல்
5
புரோட்டா சூரி பேசும் வசனங்களில் ஒரு சீனில் கூட சிரிப்பே வரவில்லை .
சிச்சுவேஷன் காமெடி ஸ்ரீமன் , சத்யன் காமெடியில் தான் . ஆனால் தம்பி மனைவி
என தெரியாமல் அண்ணன்கள் ஆசைப்படும் கலாச்சாரத்தை மீறிய சிச்சுவேஷன்
என்பதால் அதையும் ரசிக்க முடியவில்லை. இந்தப்படத்தை எப்படி குடும்பத்தோடு
மக்கள் உக்காந்து பார்ப்பாங்கன்னு நினைச்சீங்க ? இது போன்ற
உறவுகளைச்சீரழிக்கும் , கூட்டுக்குடும்பத்தை கேலி செய்யும்
படங்களுக்குத்தடை விதிக்க வேண்டும்
6
நஸ்ரியா தன் கணவர் தனுஷிடம் அடிக்கடி “ நம்ம 2 பேருக்கும் இடையே
எதுவும் கூடாதுன்னு அன்னைக்கே சொன்னேனே?”ன்னு சொல்லுது . அதுக்கு என்ன
காரணம்னு சொல்லவே இல்லை
7
ஸ்ரீமன்க்கு பார்த்த பொண்ணை சில காலம் கழித்து அவர் மேரேஜ்
பண்ணிக்கலாம்னு ஃபோன் பண்ண பொண்ணோட போட்டோ பின்னால பார்க்கறார் , ஃபோன்
நெம்பர் இருக்கு , பண்ணுனா பொண்ணே எடுக்குது . பொண்ணோட நெம்பரை டைரக்டா
எப்பவும் புரோக்கர்ங்க தர மாட்டாங்க .அதே போல் மேரேஜ் ஆகிடுச்சு என
சொல்லும் அந்தப்பெண் குழந்தையுடன் இருக்கு . இப்போ இருப்பது புருஷன் வீடு .
ஃபோட்டோவில் இருப்பது பழைய அம்மா வீட்டு ஃபோன் நெம்பர் .
8 நஸ்ரியா கழுத்தில் தாலி இருப்பது ஆண்கள் கண்ணுக்கு வேணா தெரியாம இருக்கலாம் , ஹீரோவோட அம்மா கண்ணுக்குக்கூடவா தெரியல
?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. பொண்ணுங்களுக்கு எப்பவும் " வீரம்" தான் பிடிக்கும்
2 நாங்க எல்லாம் கரண்ட் கம்பிலயே கபடி விளையாடுவோம் # புரோட்டா சூரி மரண மொக்கை பஞ்ச்
3 நாம போய் பொண்ணுங்க முன்னால நிக்கறதை விட நம்மைப்பத்தின நியூஸ் தான் முதல்ல போய் நிக்கனும் # தனுஷ் பஞ்ச்
4 ஏன் ஓல்டு லேடி , எங்க தாத்தா வீரியம் மேட்டர் உனக்கு எப்படித்தெரியும் ? அப்பவே வில்லங்கமா விளையாடி இருக்கே?
5 புறா உனக்கு , பொண்ணு எனக்கு
6 நீ என்ன பிளான் பண்னாலும் என்னை மாட்டி விடாம பிளான் பண்ண மாட்டே போல
7 , மணி இருக்கு ,
அடிக்குமா?
8 என்ன பண்றே?
கணக்கு பண்றேன்
அதை என் கிட்டே கேளு
உனக்குத்தான் கணக்கு வராதே ? \
9 பொண்ணுக்கு மை வெச்சா கரெக்ட் ஆகிடும்னு மலையாள ஜோசியர் சொன்னார் , ஆனா கர்ப்பம் ஆகிடும்னு சொல்லலையே?
படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ்
1. நய்யாண்டி அப்டேட் - படத்தில் முதல் 40 நிமிடங்கள் இளைய தளபதி விஜய் போலவே தனுஷ் கிளப்பிட்டாராம் .சூப்பர் இல்ல?
2 நய்யாண்டி = வாகை சூட வா ய்ப்பே இல்லை # பாரீன் ட்வீட்டர் அப்டேட் ரிசல்ட் படி
3 தனுஷ் ன் அட்டர் பிளாப் லேட்டஸ்ட் தர வரிசை .3 ,மயக்கம் என்ன ,மரியான் ,நய்யாண்டி
=================
4 நச்ரியா - சார்.இவ்ளவ் மார்க்கெட்டிங் பண்ணியும் படம் ஊத்திக்கிச்சாமே?
சற்குணம் - டிராமாவை அவசரப்பட்டு முடிச்சிருக்கக்கூடாதோ?
===================
5 சுள்ளான் க்குப்பின் இதில் தான்யா தனுஷ் ஆக்சன் அவதாரம்
எடுத்திருக்காரு.ஓப்பனிங் சீன்ல 6 மீட்டர் விட்டம் உள்ள வட்டக்கிணத்தையே
தாண்டிட்டாரு
=================
6 படத்தோட ரிசல்ட்டை தனுஷே சொல்றாரு - அரோகரா
===================
7 சார்.நஸ்ரியா சார்.ஸ்லோமோஷன் ல ஓடி வருது சார்
===================
8 ஏம்மா என்னமோ கற்புக்கரசி மாதிரி பேசுனே? முத கனவுப்பாட்டிலயே இந்தத்தடவு தடவறாரு.கம்முன்னே இருக்கே?
=================
9 தனுஷ் கமல் மாதிரியே ஆக்டிங்.அடேங்கப்பா.அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி மாஸ்க் போட்டு நடிப்பு.செம செம
=======================
10 பின்னால நிக்குற பாட்டு கான்செப்ட் விஜய் ன் ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு பாட்டின் உல்டா
===============
11 தென்னக புரூஸ்லீ இப்போ ஜெட்லீ ஆகி மரத்துக்கு மரம் தாவறார்.அமேசிங் பர்பார்மென்ஸ்
====================
12 நய்யாண்டிக்கு முதல்ல வெச்ச டைட்டில் சொட்ட வாழக்குட்டி .ஆனா வெச்சிருக்க வேண்டிய டைட்டில் வனரோஜா
================
13 அபாரமான குடும்பக்கதை.தம்பியோட சம்சாரம்னு தெரியாம 2 அண்ணண் க்ளும் அதுக்கு ரூட்டு விடறாங்க # நய்யாண்டி இடைவேளை
===============
14 சார்.டைட்டிலுக்கு விளக்கம் சொல்லுங்க.
அவார்டு பட டைரக்டர் ,ஹீரோ னு நம்பி வந்து ஏமாந்து போகப்போறாங்களே ஆடியன்ஸ்.ஸெம நையாண்டி இல்ல?
===============
15 நஸ்ரியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.நஸ்ரியா ரொம்ப "சின்ன"ப்பொண்ணு ..இப்போ தான் +2 முடிச்சுதாம் ;-)# க்ளூ
=============
16 உலகப்புகழ் பெற்ற, சர்ச்சைக்கு ஆளான் இனிக்க இனிக்க பாடல் ஓடுது.இமைக்காம பார்க்கனும்
---------------
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்-38
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்
ரேட்டிங் = 2 / 5
சி பி கமெண்ட் -நய்யாண்டி - சி செண்ட்டர் ஆடியன்ஸ்களுக்கான லோ கிளாஸ் (சீன் இல்லாத)கில்மா காமெடிப்படம் - விகடன் மார்க் -38 , ரேட்டிங்க் - 2 / 5
டிஸ்கி -
வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/ 10/blog-post_7207.html
டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/
சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும் இருக்கு , அது தனிப்பதிவாக நாளை வரும்
3 comments:
விமர்சனம் அருமை...
தனுசுக்காக பார்ப்போம்...
நல்லா கவனிங்க... தனுசுக்காக... நஸ்ரியான்னு சொல்லலை அண்ணா...
Idhu Gilma padama.. why your taste is so cheap.. your writing style shows u r in c center
Narayana indha kosu danush tholla thankalada.araikurai dress is against her religionnu solra.but even showing koondhal is against her religion.why is she showing it?
Post a Comment