Wednesday, October 02, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  நெம்பர் 1 அஸ்வின்  பிரைவேட் பேங்க்ல மார்க்கெட்டிங்க் ஸ்டாஃப்.ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து சரக்கு அடிச்ச நேரம் போக  ஆஃபீஸ் ஒர் க் பண்ணுவாரு , அது போக மிச்சம் இருக்கும் நேரத்தில் ஸ்வாதியை லவ்வுவாரு . காதலி கிட்டே வாய்க்கு வந்த படி பொய் பேசுவாரு . இவர் ஒரு சந்தர்ப்பத்துல சரக்கு அடிச்சுட்டு ஒரு விபத்துக்கு காரணகர்த்தா ஆகிடறாரு . அடி பட்ட பொண்ணுக்கு அரிதான ரத்த வகை இப்போ தேவை . அஸ்வின் தான் பொறுப்பு . இது  ஒரு டிராக் 


ஹீரோ  நெம்பர்  2  விஜய் சேதுபதி .இவரும் சரியான சரக்கு பார்ட்டி . எதிர் வீட்டு நந்திதாவை சின்ன  வயசுல  இருந்தே லவ்வறாரு . இவர் டார்ச்சர்  சிம்பு நயன் தாராவை , சல்ன்மான் கான் ஐஸ்வர்யாராயை   செஞ்ச  டார்ச்சர்களை  விட பல மடங்கு அதிகமாகவே   அவரை உள்ளூர வெறுக்க ஆரம்பிக்கும்  நந்திதா  ஒரு கட்டத்தில்  ஒரு  உயிரைக்காப்பாற்ற  அவர்  ரத்தம் தேவை  என்றதும்  உதவ தூண்டுகிறார் , இது  இன்னொரு டிராக் 



ஒரு பேட்டை  ரவுடி , அவனோட சம்சாரம்  செம கில்மா பார்ட்டி , குமுதா  டீச்சர்  மாதிரி அது என்ன பண்ணுது , புருஷன்  இல்லாம   வேற  2 பேரை அட்டர் டைம் ல வெச்சிருக்கு., தன் கள்ளக்காதலர்கள் 2 பேரையும்  தூண்டி  விட்டு  தன்  புருஷனையே கொலை பண்ண வெச்சிடுது. கொலையாளிங்க   2 பேரும்   சைக்கிள் ல அலைஞ்சிட்டு  இருக்காங்க , இது 3 வது  டிராக்

 மேலே  சொன்ன  3 டிராக்  கதையையும்   ஆய்த எழுத்து  மணி ரத்னம்  மாதிரி  எப்படி  இணைச்சு  கதை  சொல்றார் இயக்குநர்  என்பதே  மிச்சக்கதை . 


ஜீவாவை வைத்து  ரவுத்திரம் என்ற   சுமாரான ஆக்சன்  படம்  கொடுத்த  இயக்குநர்   முழுக்க முழுக்க காமெடியில்  கலக்கி  இருக்கிறார் . அவருக்கு  ஒரு ஷொட்டு . திரைக்கதைக்கு  ரொம்பவே  மெனக்கெட்டு  இருக்கிறார் . பாராட்டுக்கள் 


 அஸ்வின்  தான்  ஹீரோ . ஆள்  படு ஸ்மார்ட் . காலேஜ்  பெண்கள்  , டீன் ஏஜ் பெண்கள் அனைவருக்கும், பிடிச்ச முகம் . நடிப்பும்  நல்லா  வருது .  காமெடி டயலாக் டெலிவரி  , டைமிங்க் சென்ஸ்  , லவ்வருடன் ஊடல் என   எல்லா ஏரியாக்களிலும்  இவர் பாஸ் மார்க்கைத்தாண்டி வாங்கி விடுகிறார் சர்வ சாதாரண்மாக .. சபாஷ் 



விஜய் சேதுபதி  இதில்  செகண்ட்  ஹீரோ தான் . தொடர்ந்து  4 வெற்றிப்படங்கள்  கொடுத்து  கோடியில் சம்பளம் வாங்கும்  ஹீரோ இது போல தனக்கு  அதிக முக்கியத்துவம்  இல்லாத  கேரக்டர் என்றாலும்  தயங்காமல் ஒத்துக்கொண்ட   மனசுக்கு  ஒரு சலாம் . மனிதர் பின்னிப்பெடல் எடுத்து  விட்டார் . 



ஓப்பனிங்க்கில் பசுபதி யுடன் பஞ்சாயத்து பேசும் காட்சியில்  , நந்திதாவை  கலாட்டா  செய்வது  , பட்டி மன்ற  ராஜாவுடன் மல்லுக்கு  நிற்பது  என  இவர் திரும்பிய பக்கம் எல்லாம் சிக்சர்களாக அடித்துத்தள்ளுகிறார் . வளர்ந்து  வரும்  ஹீரோக்கள்  , வளர்ந்த ஹீரோக்கள் இவரிடம் கற்க வேண்டியவை ஏராளம் 



நந்திதா  வுக்கு   சேதுபதியை வெறுப்பது  , பின்  உள்ளூர விரும்புவது என   காதல் பறவை கேரக்டர் . ஓக்கே , பாஸ் மார்க்  வாங்கி  விடுகிறார் 


 ஸ்வாதி  பளிச்  முகத்துக்கும்  , அழகிய  உதட்டுக்கும்  இவர்  ஒரு  முன் உதாரணம் . அலை பாயும்  கூந்தலுடன்  , மிக கண்ணியமான  ஆடைகளுடன் இவர் வரும் காட்சிகள் எல்லாமே   அருமை .  காதலருடன்  ஊடல்  கொள்ளும் காட்சிகள் காதலர்களை கவரும் 



மும்பை எக்ஸ்பிரசில் காமெடியில் கலக்கிய  பசுபதிக்கு  இதில்  தாதா கேரக்டர் , சுகர் பேஷண்ட்டான இவர் அந்த காதல் பஞ்சாயத்து காட்சியில் தியேட்டர்  சிரிச்சு மாளலை . 

 அந்த  கில்மா  லேடி  சோ க்யூட் . அவர் வரும் காட்சிகள் எல்லாம்  பின்னணியில்  பழைய பாட்டு  இசை பி ஜி எம்மாக வருவது  செம காமெடி . அவரது கள்ளக்காதலர்கள் இருவரும்  பண்ணும் கூத்துகள்   செம  கலக்கல்  ரகம் . விழுந்து  விழுந்து  சிரிக்க வைக்கிறது  


 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1.  என் வீட்டில்  நான் இருந்தேனா? எதிர்  வீட்டில் அவள்  இருந்தாளா   பாட்டு, ஏன் என்றால் உன்  பிறந்த நாள்  என  2 பாட்டுக்கள் செம  ஹிட் ரகம் . மீதி  2 பாட்டும்   ஓக்கே  ரகம் . குறிப்பா  அந்த   குடி பாட்டு  தியேட்டரில்  செம அப்ளாஸ் வாங்குகிறது . ( ஓக்கே ஓக்கே படத்துக்குபின்   இப்போதெல்லாம் டாஸ்மாக்கில்  சரக்கு அடிச்சுட்டு புலம்பல் காதல் [பாட்டு ஃபேஷன் ஆகி வருது 


2.  பேங்க்  டேமேஜராக  வரும் எம் எஸ் பாஸ்கர்   ஆஃபீஸ் மார்க்கெட்டிங்க் ஸ்டாஃப்க்கு ஃபோன்  அடிப்பதும்  , கான்ஃபெரென்ஸ்  கால் போட்டு அவர்களை லைனுக்கு கொண்டு வருவதும் , அவர்கள் எல்லாரும்  ஒரே  ரூமில் சரக்கு அடிச்சுட்டு  இருப்பதை மறைக்க  நாடகம் ஆடுவதும்   கலக்கல் காமெடி . எம் எஸ் பாஸ்கர்   அஸ்வினிடம் சிடு சிடுப்பவர் , அருகில் அமர்ந்திருக்கும்  லேடி ஸ்டாஃபிடம் சிரிப்பது செம ஃபாஸ்ட்  ரீ ஆக்‌ஷன்



3.  ஸ்வாதி   ஊடல்  கொண்டு  ஆட்டோவில்  ஏறி  தன் பின்னால  காதலன் ஃபாலோ பண்ணி வருவான் என எதிர்பார்த்து ஏமாறுவது  பின்  அவனுக்கே ஃபோன் பண்ணி ஏண்டா என்னை ஃபாலோ பண்ணலை ? என  உரிமையாய் கேட்பது  லவ் லி சீன் 


4  நடுவுல  கொஞ்சம் பக்கத்தைக்கணோம் படத்தில் அந்த  ரிப்பீட்  டயலாக் ஹிட் ஆனதால்  அதே சாயலில்  இதிலும்  ஒரு ரிப்பிட்  டயலாக் வருது . செம காமெடி . கொஞ்ச நாட்கள்  டி வி காமெடி ஷோக்களீல் வந்து  போகும் 



5  வ குவாட்டர் கட்டிங்க் கை நினைவுபடுத்துவது போல்  இருந்தாலும்   விஜய் சேதுபதி  ஒரு ஆஃப்க்காக அலையோ அலை என அலைவது செம காமெடி 



6.  க்ளைமாக்ஸில் எல்லாரும் அவ்வளவு  சீரியசாக   ஹாஸ்பிடலில்  ரத்த தானத்துக்கு வெயிட்ட  விஜய் சேதுபதி எல்லார் முன்னிலையிலும்   நந்திதாவிடம் ரொமான்ஸ் பண்ணும் காட்சி   தியேட்டரையே குலுங்க வைத்த  கலக்கல் காமெடி 


7.  அந்த  கில்மா லேடி  - கள்ளக்காதலர்கள் டெலி ஃபோன் உரையாடல்கள்   செம கலக்கல் காமெடி . கதையின்  சீரியஸ்னெஸ்சையே தொலைத்து விட்டாலும்   இந்த காமெடி  டிராக்  ரொமப்   புதுசு  ( வடிவேல் என்கவுண்ட்டர் ஏகாம்பரமாய் வரும் போலீஸ் ஸ்டேஷன் கள்ளக்காதல் காமெடியை  நினைவுபடுத்தினாலும் ) 


8 . கொலை செய்யப்பட்ட  ரவுடியின்  தம்பியாக வரும் புரோட்டா   சூரி  தன் அண்ணியை கையும் களவுமாக பிடிப்பதும்  , பின் அவர் காதல் வலையில்  விழுவதும்  கொஞ்சம்  முகம்  சுளிக்க வைத்தாலும்   சி செண்ட்டர் ஆடியன்ச் இடம் அப்ளாஸ் அள்ளும் 


9  சித்தார்த்  விபின்  இசை அருமை , பின்னணி இசையிலும் ஸ்கோர் பண்ணிடறார் . நந்திதாவின் பாய் ஃபிரண்டாக  ஒரு கேர்கடரிலும் இயற்கையான நடிப்பை வழங்கி  இருக்கார் , குட் 




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1.  படத்தின்   முன் பாதியில்   மிகத்தெளீவாக  இரு காதல்  கதைகளை காமெடியோடு  சொன்ன  இயக்குநர்   பின் பாதியில்  தடுமாறியது ஏனோ ?  எல்லா கதை டிட்ராக்கையும்  எப்படி இணைப்பது   என்ற   இடியாப்பசிக்கலில் இயக்குநர்  தடுமாறி விட்டாரே > 


2. எப்போ பார்த்தாலும்  சரக்கு சாப்பிடும்   ஒரு ஆள்  ரத்த தானம் செய்ய தகுந்த ஆளா?  ரத்த தான விதிப்படி  ரத்த தானம்  கொடுக்கும்  முன் அவன் குடிச்சிருக்கக்கூடாது என்ற விதியை  ஃபாலோ  செய்த இயக்குநர்  ஒரு செயின் ட்ரிங்க்கர்  ரத்த தானம் செய்ய முடியாது என்ற விதியை மறந்தது ஏனோ ? 


3  டேமேஜர்   ஸ்டாஃபிடம்  கிராஸ் செக் செய்ய எதுக்கு கான்ஃபிரன்ஸ் கால் போடனும் ? நீ எங்கெப்பா   இருக்க்? கஸ்டம்ர்  வீட்டு லேண்ட் லைன்  நெம்பர் சொல்லு என கேட்டு அந்த நெம்பருக்கு கூப்பிட்டால் மேட்டர்  ஓவர்  


4  எதிர்  வீட்டில்   லவ் டார்ச்சர் செய்யும்  விஜய் சேதுபதியிடம் இருந்து  தப்பிக்க பட்டி மன்ற  ராஜா குடும்பம்  ராத்திரியோட ராத்திரியா  வீட்டை காலி பண்ணிட்டுப்போய்ட்டா   விஷயம்  ஈசியா  முடிஞ்சிடும் , ஏன்  பல வருசமா அங்கே இருக்கனும் ? சொந்த  வீடா  இருந்தாத்தான்  சிக்கல் , வாடகை  வீடுதானே  ? காலி பண்ணிடலாமே? 


5  அஸ்வினை டேமேஜரிடம்  போட்டுக்குடுக்கும்  துரோகியாக  ஒரு மலையாளியைக்காட்டியது உள்  நோக்கம் கொண்டது . இதே போல்  சேரன் படத்திலும் சீன் வரும் . தேவையற்ற இன  விரோதத்தை  இது  ஏற்படுத்தும் இதே படம் மலையாளத்தில்  டப் செய்யப்பட்டால்  சங்கடம் தானே ?  எனவே முடிந்த வரை   இந்த மாதிரி  துரோகி கேரக்டர் என்ன இனம் ? என்ன ஜாதி என்பதை  டீட்டெய்லாக சொல்லாமல்  விடுவதே நல்லது 






மனம் கவர்ந்த வசனங்கள்



1. டேய்.உன் செல் போன் இன்பாக்ஸ் எப்பவும் க்ளீனா இருக்கே எப்டி? அது என்ன டாய்லெட்டா? அடிக்கடி க்ளீன் பண்ண? உன் கிட்டே ஏதோ தப்பு இருக்கு 



2 . வாழ்வை சுவராஸ்யம் ஆக்க ரெண்டே வழி 

1 அழகான பொண்ணை லவ் பண்ணுவது

 2 மார்க்கெட்டிங் லைன் ல ஜாப்


3 துப்பட்டாவை சரி பண்ணிக்கோன்னு சொன்னவனுக்கு தாங்க்ஸ் சொன்னேன்.அது தப்பா.டேய் என்னை நல்லாப்பாரு.நான் துப்பட்டாவே போடலை


4  என்னை அதிகமா அழ வெச்சதும் நீ தான்.அதிக முறை சிரிக்க வெச்சதும் நீ தாண்டா


5 டேமேஜர்.-நீ கஸ்டமர் ப்ளேஸ்ல தான் இருக்கே னு நான் எப்படி நம்ப? அவர் கிட்டே போனை குடு. 



சாரி சார் .அவருக்கு நாக்குல பிராக்சர் 


6  தாதா - நான் தான் அண்ணாச்சி பேசறேன் .



 நந்திதா - அம்மா.போன் உனக்குத்தான்.நம்ம மளிகைக்கடை அண்ணாச்சி பேசறார் 


7 லவ் மேட்டரு.பீல் ஆகிட்டாப்ல. ஆப் சரக்கு அடிச்சா கூல் ஆகிடுவாப்ல # சூப்பர் ஹிட் ஆகப்போகும் ரிப்பீட் டயலாக் 


8.  இன்னொரு  வீட்டில் வாழப்போற பொண்ணு அது 

 நோ நோ  ஸ்ட்ரைட்டா என்  வீட்டுக்குத்தான்  வரப்போகுது 



9  ஸ்வேதா - என்னைப்பத்தி எந்த டீட்டெய்லும்  உனக்குத்தெரியலைடா , உன்னைப்பற்றி சொல்லட்டா , நீ செஸ்ட்  முடியை ட்ரிம் பண்ணி இருக்கே  , போதுமா? 

 10  ஆமா , தாத்தா  ஃபோட்டோ வெச்சியே , அதுக்கு பொட்டு வெச்சியா? 


 டேய் , தாத்தாவை  விடு , நீ என்னை மதி போதும் 


 உன் ஃபோட்டோவுக்கு பொட்டு வெச்சிடவா? 



11 குமுதா  வீட்டு வாசல்ல விளக்கு வெச்சு  கும்முன்னு  இருக்கு, நீ ஏம்மா கம் முன்னு  இருக்கே?  கேட்டா உம்முன்னு ஆகிடறே ? 


12  எல்லாரும்  மப்புல இருக்காங்க , எப்படியா விசாரிப்பது ?

 சார் , இவனுங்க தான் உண்மை பேசுவ்சாங்க 



13  டேய் , கொலையாளீ எப்படி  இருப்பான் ? 

 ஆள்  ஹைட்டு , வெயிட்டு , ஒயிட்டு , ஃபுல் டைட்டு 


14  அவன் ஓவரா பேசறான் , அவனை  ஜட்டியோட லாக்கப்ல உட்கார வை 

 அய்யய்யோ இன்ஸ்பெக்டர் , நான் ஜட்டியே போடலை


15  எதுக்கு சைக்கிள் ல போறோம் ? 


 பைக்கை எடுத்துட்டு வந்தா போலீஸ் நெம்பர்  பிளேட்டை வெச்சு கண்டு  பிடிச்சுடுவாங்க , அதான் சைக்கிள் அதுவும்  திருட்டு சைக்கிள் 



16  இப்போ வேணாம் , இருட்டட்டும் 

  இப்ப்வே மணி மிட் நைட்  12 ஆச்சு , இன்னும் எதுக்கு  இருட்டனும் ? 



17  அவன்  ஒயின் ஷாப்லயா வேலை செய்யறாரு ? 

 அவனாலதான்  ஒயின் ஷாப்ல எல்லாரும்  வேலை செய்யறாங்க 


18  ஏன்   நைட் டைம்ல  கூலிங்க் கிளாஸ் போட்டிருக்கே? 


 ஆம்பளை  அழக்கூடாது , அழுதா  வெளில  தெரியக்கூடாது  , அதான் 


 அது சரி , கிளாஸ் ஏன் ஒன் சைடு உடைஞ்சிருக்கு ?

 ஏன்னா  என்னோடது  ஒன் சைடு லவ் இல்லையா? அதான்  



19  உன்  நல்ல மனசுக்கு நல்ல சரக்காவே  கிடைக்கும் 


20  எல்லாரும்  லவ்வர் பேரை நெஞ்சுல பச்சை குத்துவாங்க ஆனா இவன் 


 இவன் ? 


 நெத்தில   குத்தி இருக்கான்  



21   ஜெயில்ல   ஃபோர்க் , ஸ்பூன் எல்லாம் தர மட்டாங்கடா 


 அடேய் , அதாடா முக்கியம் ,. நான் எவ்ளவ் சீரியசா பேசிட்டு இருக்கேன் ? 



22  கில்மா லேடி - உங்கண்ணன் சட்டை உங்களுக்குத்தான் பொருத்தமா  இருக்கு 



23  அவ செத்ததுக்கு இவன் ஏன் அழறான் ?


 அவன்  ரொம்ப சாஃப்ட்டான ஆள் சார் , யார் செத்தாலும் அழுவான் 


24 . ஹாஸ்பிடலில் வாசலில்  - ஏய் இந்தா இந்த  ஹார்லிக்சில் நீ கொஞ்சம்  குடி , மீதியை நான்  கொஞ்சம்  குடிக்கிறேன் 

 நமக்கு  என்ன ஃபர்ஸ்ட் நைட்டா  நடக்குது ?


 

படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ் 


1.ஓப்பனிங்கிலேயே பசுபதி ,ரோபோ சங்கர் ,விஜய் சேதுபதி அலப்பறைகள் 


 2 க்ளைமாக்சில் விஜய் சேதுபதியின் கலக்கல் காமெடியில் தியேட்டர் அதிர்ந்தது# இஆபா



காலாவதி ஆகிவிட்ட கே ஆர் விஜயா ,திருமதி ஆகிவிட்ட சினேகாவிடம் இருந்து புன்னகை அரசி பட்டத்தை ஸ்வாதிக்குத்தரலாம் 






ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 45


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -நன்று

ரேட்டிங் =  3.25 / 5


சி பி கமெண்ட் -இஆபா - முன் பாதி கலக்கல் காமெடி .பின் பாதி மொக்கை காமெடி - விகடன் மார்க் = 45, ரேட்டிங் = 3.25 / 5 .ஏ சென்ட்டரில் ஹிட்.  வித்தியாசமான   காமெடி படங்களை ரசித்துப்பார்ப்பவர்கள், விஜய் சேதுப்தி ரசிகர்கள்   ரசிச்சுப்பார்ப்பாங்க  . பெண்களும் விரும்பிப்பார்க்கும்படி தான் இருக்கு . நெய்வேலி மகா லட்சுமியில் படம் பார்த்தேன் . தியேட்டர்  சுமார் தான்


6 comments:

Giri Ramasubramanian said...

எனக்குத்தான் சுடுசோறுன்னுல்லாம் இப்ப யாரும் புண்ணூட்டமிடறதில்லைன்னா, அத்த நா இப்ப பண்ணிக்கறேன்

Unknown said...

நன்றி ....

பல்பு பலவேசம் said...

Vijay setupati THE MOST OVERRATED ACTOR

Unknown said...

அஸ்வின் போட்டாவு கிடைக்கலையா கண்ணு!?

'பரிவை' சே.குமார் said...

படம் சுமார் என்றுதான் விமர்சனங்கள் சொல்கின்றன...

Unknown said...

Sorry englishla eluthina thittuvingala