Sunday, October 27, 2013

ப்ரியங்கா சோப்ரா தான் அடுத்த பாரதபிரதமரா? என்ன கொடுமை நமீதா இது ?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. இந்திரா, ராஜீவ் போன்று நானும் கொல்லப்படலாம்: ராகுல் காந்தி உருக்கம் # இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கு,நீங்க இன்னும் பிரதமரே ஆகலை



=====================


2  வழக்கு எண் மனீஷா பல படங்களில் நடித்து வளர்ந்து கொண்டிருக்கிறார் -செய்தி # பல படங்கள் ல நடிக்கிறார் என்பது ஓக்கே , ஆனா அடுத்த சேதி தப்பு



====================

3 நான் பிரதமரானால் ஊழலை அடியோடு ஒழிப்பேன் - பிரியங்கா சோப்ரா!! # ப்ரியங்கா காந்தியே கம்முன்னு கிடக்கு , சோப்ரா ஏன் துள்ளிக்கிட்டு இருக்கு?


================

4 ஓட்டுக்களை குறி வைத்து எப்போதும் நான் பேசியது கிடையாது - ராகுல் # இப்போ நீங்க பேசுனதே ஓட்டுக்கு குறி வெச்சுதான்



====================


5 எனக்கும் சிம்புவுக்கும் பர்சனலா எந்தப் பிரச்சனையும் இல்லை: தனுஷ் # இருக்குன்னா இல்லை.இல்லைன்னா இருக்கு



=====================


வலியும் ஒருநாள் வலிமையாக...
இனிய வணக்கங்கள் .
வலியும் ஒருநாள் வலிமையாக...
இனிய வணக்கங்கள் .


6 கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை! வருகிறது புதிய சட்டம் # உலகம் சீக்கிரம் அழிஞ்சிடும்.கன்பர்ம்



=======================


7 3 ம் வகுப்பிலேயே ஒருவரைக் காதலித்தேன் - அமலாபால் # நல்லா எண்ணிப்பார்த்துட்டீங்களா?  ஒரு ஆள் தானா?



======================


8 BJP உடன் கூட்டணி வைக்க மு க முயற்சிக்கிறார்.-அதிமுக அமைச்சர் # சூரியனைப்பார்த்து தாமரை மலர்வது இயற்கை தானேனு தலைவர் அடிச்சுவிடுவாரே?



=====================

9 அஜித் - கவுதம் மேனன் இணைகிறார்கள் - உறுதி செய்யப்பட்ட செய்தி # டைட்டில் " நீ தானே என்னை காக்க வந்த வசந்தம் ?



=====================


10 நான் PM ஆனால் நாட்டிலிருந்து, ஊழலை அடியோடு ஒழிப்பேன்-நடிகை பிரியங்கா சோப்ரா. # ப்ரியங்கா,சோ,ப்ரா னு பேர்லயே ஏகப்பட்ட வில்லங்கம் இருக்கே?



=======================


My click: The Floating Barge, Karaweik Hall, Floating in Kandawgyi (Royal) Lake, Yangon, Burma



11 தேர்தலின்போது பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்; சிந்தித்து வாக்களியுங்கள் -வைகோ ு # தமிழனோட விசுவாசத்தைப்பத்தி தலைவருக்கு தெரில போல



=====================


12  சட்டசபையில் வம்பு இழுத்தால் கண்டுக்காதீங்க...:எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் அறிவுரை # எல்லாம் வயசுப்பொண்ணுங்க.வம்பு இழுத்துட்டாலும்



======================


13 நான் கேஸ்களில் சிக்கிய சமயங்களில் ஜெயலலிதாவை என் "ரோல் மாடலாக" நினைத்துகொண்டேன் -் புவனேஸ்வரி # கேஸ்க்கு கேஸ் வித்தியாசம் இருக்கும்மா.



=========================


14  அரசு பேருந்துகளில் வரையபட்டுள்ள இரட்டை இலை சின்னம் தார் பூசி அழிக்கப்டும் - காங்கிரஸ் தொழிற்சங்கம் அறிவிப்பு # தார்று மாறான பதிலடி



======================


15 யார்தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை: நெல்லை கலெக்டர் உறுதி # சார்.அந்த FAX ஸை ஆன் பண்ணுங்க.ஏதாவது ட்ரான்ஸ்பர் ஆர்டர் ?



===========================


Photo: Our church beauties in Polo forest on Sep 09,2013



16 ஜெ முன்னிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்ரவால் பதவி. ஏற்பு # நல்ல வேளை.கால் ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கலை



==========================



17 திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய பெண் ஊழியர்கள் 2 பேர். கைது # திருப்பதி சாமிக்கே மொட்டை அடிக்க பிளான் பண்ணி இருக்காங்க




========================


18 வெங்காயம் விலை குறைய 3 வாரங்கள் ஆகும்:- சரத்பவார் # அதுக்குப்பின் விலை குறைஞ்சிடுமா? வெங்காய வரத்தே குறைஞ்சிடுமா?



==========================


19 அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை # டென்ட் கொட்டாய் மாதிரி வாரா வாரம் மாத்திட்டே இருக்காரே?



=========================


20 எல்லையில் அமைதி வேண்டும்-சீனாவில் மன்மோகன் பேச்சு# மயான அமைதி நிலவும்.டோன்ட் ஒர்ரி



===========================



0 comments: