Friday, October 11, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 11 10 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. நய்யாண்டி - ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் சற்குனத்தின் நண்பரான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இவர் ”களவாணி”, ”வாகை சூட வா” ஆகிய படங்களில் சற்குனத்துடன் இணைந்து பணியாற்றியவர்.


இந்தப் படத்துக்கு முதலில் சொட்ட வாளக்குடி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். படத்தின் பெயரை உச்சரித்த பலரின் நாக்கு சுளுக்கிக் கொண்டதால் பொதுமக்களின் நலன் கருதி பெயர் நய்யாண்டியாக மாற்றப்பட்டது. குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவிற்கும், பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் ‘நய்யாண்டி’.  பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.


அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகலாம் என்று நடிகர் தனுஷ் தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார். படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அபிராமி , ஆனூர் , சண்டிகா வில்  ரிலீஸ் 

 

வணக்கம் சென்னை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘வணக்கம் சென்னை’. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

இதில் நாயகனாக சிவா, நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். சந்தானம், ஊர்வசி, ரேணுகா, ராகுல் ரவீந்தர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படம் பற்றி கிருத்திகா உதயநிதி சொல்கிறார்.

லண்டனில் இருந்து வரும் பெண்ணும், தேனியில் இருந்து வரும் இளைஞனும் சென்னையில் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் நடக்கும் காதல் கலாட்டாக்களே கதை. ஒன்றரை வருடம் இக்கதையை உருவாக்கினேன். அதன் பிறகு தயாரிப்பாளர் தேடினோம். எனது கணவர் கதையை கேட்டார். அவருக்கு பிடித்தது. தானே தயாரிக்க முன் வந்தார். ஐம்பத்தி ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

சந்தானத்துக்கு முக்கிய கேரக்டர். கதையை அவர் தான் நகர்த்தி செல்வார். சென்னையிலும், தேனியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னை மற்றும் மூணாறில் பாடல் காட்சி படமாகியுள்ளது.

நானும் சசிகுமார், மிஸ்கினும் இணைந்து லைப், லவ், ஹோப் என்ற குறும்படத்தை எடுத்தோம். அதற்கு பாராட்டுகள் குவிந்தன. அதுவே எனக்கு இப்படத்தை எடுக்க தைரியம் கொடுத்தது. என் கணவரும் பக்கபலமாக இருந்தார்.

இசை: அனிருத், ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன், பாடல்: நா.முத்துக்குமார், மதன்கார்க்கி, விக்னேஷ் சிவா, எடிட்டிங்: பி.எஸ்.சுரேஷ், நடனம்: தினேஷ், ராபர்ட், பாபி. இணை இயக்கம்: திவ்யநாதன். 


‘வணக்கம் சென்னை’ படத்தில் மட்டும் 5 பாடல்களை பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.



கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. இவர் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி ஆவார். மேலும் படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் தயாரிக்கிறது. இதில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர். சந்தானம் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.



ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான் படங்களுக்கு மட்டுமே முன்னிரிமை கொடுக்கும் சோனி நிறுவனம் முதல் முறையாக அனிருத் படத்தின் பாடல் உரிமையை வாங்கி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் குறித்த விவரத்தை சோனி ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் ‘எங்கடி பொறந்த….” என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.



இதற்கு முன்பு அனிருத், ஆன்ட்ரியா இருவரின் முத்தக் காட்சி அடங்கிய புகைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அண்மையில் இச்சம்பவம் தொடர்பாக அனிருத், ஆன்ட்ரியாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இருவரும் இந்த படத்தில் இணைந்து பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு  வி எஸ் பி , அன்ன பூரணி யில் ரிலீஸ்


3. என்னாச்சு’ படத்தில் கொடைக்கானல் காட்டில் நடக்கும் திகில் சம்பவங்கள்


இளைஞர்களின் விபரீத விளையாட்டை கருவாக வைத்து, ‘என்னாச்சு’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு முதலில், ‘தருணம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இப்போது அந்த பெயர், ‘என்னாச்சு’ என்று மாற்றப்பட்டுள்ளது.


‘‘இது, ஒரு திகில் படம். பொதுவாக, திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மாப்பிள்ளையும், பெண்ணும் வெளியூருக்கு போவதை அனுமதிப்பதில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், கேரளாவில் உள்ள நண்பன் திருமணத்துக்காக நண்பர்களும், தோழிகளும் வருகிறார்கள்.


திருமணம் முடிந்த கையோடு அவர்கள் கொடைக்கானல் காட்டுக்குள் சுற்றுலா போகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் விபரீத சம்பவத்தை திகிலாக சொல்லியிருக்கிறோம்’’ என்கிறார், படத்தின் டைரக்டர் ஸ்ரீமணி.


இஸ்மாயில், விவிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக பூஜா கே, மேகா தானி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கூத்துப்பட்டறையை சேர்ந்த நடிகர்கள் பலரும் நடிக்கிறார்கள்.
ஜெகன் ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி–கார்த்திக்குமார் ஆகிய இருவரும் இசையமைக்கிறார்கள். ஸ்மைல் கிரியேசன்ஸ் சார்பில் முகமது இஸ்மாயில் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஸ்ரீமணி. இவர், பல குறும்படங்களை டைரக்டு செய்தவர்.


நடிகர்கள்: 
இஸ்மாயில், விவிந்த், பூஜா கே, மேகா தானி
இசை: 
பாலாஜி–கார்த்திக்குமார்
ஒளிப்பதிவு: 
ஜெகன்
இயக்கம்: 
ஸ்ரீமணி
தயாரிப்பு: 
முகமது இஸ்மாயில்

ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை


4 கயவன் - ஸ்கை நெட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கயவன். படத்தின் நாயகனாக மிதுன் குமாரும், நாயகியாக ஆந்திர அழகி டிவிங்கிளும் நடிக்கின்றனர். படத்தின் 2வது நாயகியாக கேரளத்து பெண் நைஸா நடிக்கிறார். இவர்களுடன் ரஞ்சித், சிவா, சைதை குணா, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கயவர்‌களை‌ கயவனா‌ல் ‌கருவருக்‌கச் ‌செ‌ய்‌யு‌ம் ‌படம் இ‌து. சமுதா‌யத்‌தி‌ற்‌கா‌க செ‌ய்‌யு‌ம் ‌ஒரு தவறா‌ன செ‌யலும் ‌கூட, தர்‌மத்‌தி‌ன் ‌பா‌ர்‌வை‌யி‌ல் ‌சரி‌யா‌ன ஒன்‌றே ‌என்‌ற கா‌ரணத்‌தை ‌மை‌யக்‌கருவா‌க வை‌த்‌து இப்படம் உருவாகிறது. இப்படத்தை கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி. ஜெரோம் முருகன் இசையமைக்க, கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, துரைராஜ் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார்.

இப்‌படத்‌தி‌ன்‌ முதற்‌கட்‌ட படப்‌பி‌டி‌ப்‌பு‌ கி‌ருஷ்‌ணகி‌ரி‌, சி‌ன்‌ன ஊட்‌டி‌ என்‌று சொ‌ல்‌லப்‌படுகி‌ன்‌ற பு‌தூ‌ர் ‌நா‌டு ஆகி‌ய இடங்‌களி‌ல்‌ நடை‌ப்‌பெ‌ற்‌றது. இரண்‌டா‌வது கட்‌டமா‌க ஏலகி‌ரி‌, வே‌லூ‌ர்‌, செ‌ன்‌னை‌ஆகி‌ய இடங்‌களி‌லும் ‌நடை‌பெ‌ற்‌று முடி‌வடை‌யு‌ம்‌ தறுவா‌யி‌லுள்‌ளது. கா‌தல்‌, மோ‌தல்‌, நகை‌ச்‌சுவை‌ கலந்‌து முற்‌றி‌லும் ‌மா‌றுபட்‌ட பு‌தி‌ய கோ‌ணத்‌தி‌ல்‌ உருவா‌கி‌யி‌ருக்‌கும்‌ இப்‌படம் ‌இன்று  ‌தி‌ரை‌க்‌கு வருகி‌றது.

ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை 



டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும்  இருக்கு , அது  தனிப்பதிவாக நாளை வரும்

டிஸ்கி - நய்யாண்டி - சி பி எஸ் விமர்சனம் -http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2013/10/blog-post_6374.html 

0 comments: