ஹீரோ வழக்கம் போல வெட்டாஃபீஸ்.ஹீரோயின் பிளஸ்டூ படிக்கும் பொண்ணு .ஹீரோ ஹீரோயினோட க்ளாஸ் டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுக்க அனுமாரா ஹீரோயினை யூஸ் பண்ணிக்கறாரு. டீச்சரும் ஓக்கே தான் , ஆனா திடீர்னு ஒரு ட்விஸ்ட். ஹீரோயினை ஹீரோ திருவிழாவில் சேலை ல பார்த்துடறாரு ஹீரோ. டக்னு லவ் வந்துடுது , நல்ல வேளை யாரையும் ஸ்விம்மிங்க் டிரஸ்ல பார்க்கலை .
அந்த டீச்சர அம்போன்னு விட்டுட்டு ஹீரோ ஹீரோயினை லவ் பண்றாரு . ஹீரோயின்க்கு ஹீரோ மேல காதல் இருந்தாலும் அதை வெளீல சொல்லாம ஹீரோவை இழுத்தடிக்கறாரு.
ஹீரோயின் அப்பா ஒரு காமெடி பீசு .ஊர் என்ன சொல்லும்?னு4 பேருக்கு பயந்து காதலை எதிர்க்கறாரு . இவங்க காதல் என்ன ஆச்சு? என்பது தான் மிச்சமீதிக்கதை
படத்தோட பி்ளஸ் பாயிண்ட் என்னான்னா சிவா மனசுலசக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் ஹிட் அடிச்ச எம்ராஜேஷின் உதவி இயக்குநர் இயக்கிய படம் . வசனம் குரு ராஜேஷ் . ஆனா பாருங்க காமெடி வசனங்கள் பெரிய அளவில் கை கொடுக்கலை .
ஹீரோ சிவ கார்த்திகேயன் . எதிர் நீச்சல் ஹிட்டுக்குப்பின் அதை விட ஒரு மாற்றுக்குறைவான சாதா காதல் கதைல நடிச்சிருக்கார். குறை சொல்ல முடியாத நடிப்பு . இவர் கவனமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்தால் துள்ளாத மனமும் துள்ளும் விஜய் ரேஞ்சுக்கு முன்னேற முடியும் . பாடல் காட்சிகளில் விஜய், காமெடிகாட்சிகளில் ரஜினி என இவர் இமிடேட் செய்யாமல் சொந்த சரக்கையே ட்ரை பண்ணலாம். இவர் ஒன்றும் மதுரை முத்து மாதிரி சொந்த சரக்கில்லாத ஆள் இல்லையே?அதே போல் ரிப்பீட் டான்ஸ் ஸ்டெப் அதிகம் வந்து போவதையும் கவனத்தில் வெச்சுக்கனும் .
சத்யராஜ் தான் ஹீரோவுக்கு மாமனார் . துப்பாக்கியை வெச்சு இவர் பண்ணும் கூத்து சி செண்டர் ஆடியன்சை சிரிக்க வைக்கும் . படம் முழுக்க விறைப்பாவே வரும் இவர் க்ளைமாக்சில் காமெடியன் ஆகி இருப்பது நம்ப முடியவில்லை என்றாலும் மக்கள் ரசிக்கிறார்கள் .
புரோட்டா சூரி தான் காமெடியன். இவர் கிட்டே என்ன குறைன்னா இவர் பாடி லேங்குவேஜ் பூரா வடிவேலுவை இமிடேட் பண்ணுவது. மனசுக்குள் சந்தானம் மாதிரி பஞ்ச் , கவுண்ட்டர் டயலாக் கொடுக்கனும் என நினைப்பது , ஆனா வெறும் நினைப்பு மட்டும் தான் , அவருக்குன்னு சொந்த உழைப்பு ஏதும் இல்லை இயக்குநர் சொன்னபடிசெய்கிறார் , அவ்வளவுதான்
ஹீரோயின் புதுமுகம் ஸ்ரீ வித்யா , பால் மணம் மாறா பாலகி. பார்க்கவே பாவமா இருக்கு. ஹோம்லியான முகம். பாஸ் மார்க் வாங்கிடும் .
பிந்து மாதவி டீச்சராக 2 சீனில் வந்தாலும்கொள்ளை கொள்ளும் அழகு. பின்னால லோ ப கழுத்து ஜாக்கெட் போட்ட டீச்சரை நான் இப்போதான் பார்க்கறேன். ஆசிரியர் தின சிறப்பு டிரஸ் போல .
சத்யராஜ் -ன் அடிபொடிகளாக வரும் காதல் தண்டபாணி உட்பட்ட 4 பேரும் ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார்கள்.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படம் பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஸ்டில்கள் , போஸ்டர் டிசைன் எல்லாமே நல்ல ஒரு காமெடிப்படம் மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தியது
2. இயக்குநர் எம் ராஜேஷ் தான் வ்சனம் என்பதை போஸ்டர்களில் முன்னிலைப்படுத்தியது
3. பெண்கள் தியேட்டரில் பார்க்கும்படி அனைவருக்கும் கண்ணியமான ஆடை அலங்காரங்களில் செய் நேர்த்தி
4. வசனங்களில் பிரமாதமான காமெடி இல்லாவிட்டாலும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டி விட்டது போல் சிச்சுவேஷன் காமெடி ட்ரை பண்ணியது
5. பட்டி தொட்டி எல்லாம் சூப்பர் ஹிட் ஆன ஊதாக்கலரு ரிப்பன் பாடல் காட்சி அதகளம் , தியேட்டரில் செம ஆட்டம், இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் பாட்டும் ஹிட்தான்
இயக்குநரிடம் சில கேள்விகள்: , திரைக்கதையில் , நடன அமைப்பில் சில ஆலோசனைகள்
1. ஓப்பனிங்க் சீனில் ஆல மரத்தடியில் படுத்திருக்கும் பரோட்டா சூரி போலீஸ் ஆஃபீசரிடம் படுத்த வாக்கில் 2 காலால் வணக்கம் சொல்வதெல்லாம் ஓவர்.கவுண்டமணி கூட இப்படி நடிச்சதில்லை. பொருத்தமும் இல்லை . என்ன தான் காமெடி என்றாலும் எந்த போலீஸ் ஆஃபீசராவது இதை சகித்துக்கொள்வாரா? பார்க்கும் நமக்கே சகிக்கலை, கோபம்வருது
2. கோர்ட்டில் ஜட்ஜ் அய்யாவை ப்பார்த்து போலீஸ் ஆஃபீசர் சல்யூட் வைக்காமல் எதுக்கு கூழைக்கும்பிடு போடறார்? அவர் என்ன ஜமீன் தாரா?
3. திண்டுக்கல் ரீட்டா கரகாட்டக்காரியின் ஆட்டம் மேடையில் நடக்கும் போது ஹீரோயினின் தோழி இடது கையில் இடது கை விரலால் வாயில் விரல் வைத்து விசில் அடிக்குது . அதே போல் நான் கடவுள் மொட்டை வில்லன் இடது கையால் சாக்லெட் எடுப்பதும் ஏன்?
4. சத்யராஜ்க்கு விழா ,ஆட்டம் , பாட்டம் எல்லாம் பிடிக்கலைன்னா எதுக்கு அந்த விழாவுக்கு வர்றார்? வீட்டிலேயே படுத்து இருக்கலாமே?
5. இம்சைஅரசன் 23ஃஆம் புலிகேசியில் வடிவேலு ஆல்ரெடி செஞ்ச மாடிப்படி சறுக்குவிளையாட்டுகாமெடியை பரோட்டா சூரி செய்வது எரிச்சல்
6. மருதாணி வாங்கும் ஹீரோயின் தோழி யிடம் அந்தமருதாணியை முகத்துல வை , அப்பவாவது நீ கலர் ஆவியா?ன்னுபார்க்கலாம் என்ற வசனம் தேவை இல்லாதது . ஏன்னா அதை வசனம் பேசும் சிவகார்த்திகேயன், அதை எழுதிய ராஜேஷ் இருவருமே மாநிற,ம் தான் என்பதை மறந்து விடக்கூடாது . மேலும் ஒரு படத்தில் கறுப்புநிறத்தை கிண்டல் செய்வதெல்லாம் அந்தக்காலம் , மாடர்ன் யுகத்துக்குவாங்கப்பா
7. ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் பரஸ்பரம் காதல் வரும் காட்சி படு அபத்தம் . ஹீரோ ஹீரோயினை ஸ்கூல் யூனிஃபார்மில் பார்க்கும்போது வராத காதல் அவரை சேலையில் பார்த்ததும் வருவது கூட தேவலை . ஆனால் ஹீரோயினுக்கு நடக்க இருந்த திருமணத்தை ஹீரோ தடுத்து நிறுத்திட்டாரென்பதைகேட்ட மாத்திரத்தில் காதல் வருவது காதலை கேலிக்கூத்து ஆக்குகிறது . காமெடிப்படம் என்றா;லும் காதல் மலரும் தருணம் மிக முக்கியமானது , அதை காமெடிஆக்கக்கூடாது
8. கலக்கலான ஊதாக்கலரு ரிப்பன் பாட்டு படமாக்கலில் கொண்டாட்டம் குறைவு.இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம். அந்த பாட்டு விஷுவலில் மட்டும் நடன இயக்குநரிடம் இன்னும் வேலைவாங்கி இருக்கலாம் . இந்த மாதிரி செம ஹிட் ஆன பாட்டுக்கு டான்ஸ் மூவ்மென்ட் ரொம்ப முக்கியம் , இந்த சிச்சுவேஷனில் மொக்கை காமெடி எல்லாம் ட்ரை பண்ணக்கூடாது
9. பயங்கர வில்லனா வர்றவரு அவங்க வீட்டு பசு மாட்டை கிணத்துல விழுந்தவுடன் ஹீரோ காப்பாத்திட்டார் என்ற ஒரே காரணத்துக்காக உருகுவதும் , காதல்க்கு ஓக்கே சொல்வதும் படு சொதப்பல்
10 . ஹீரோயின் பேரு லதா பாண்டி.அதுக்காக எல்லா காட்சிகளிலும் அவரை அம்மா ஃபுல் நேம்சொல்லி கூப்பிடுவது ஏன்? லதாஅப்டித்தானே பொதுவா கூப்பிடுவாங்க.இந்தக்காலத்துல ராஜின்னு பேரு வெச்சாலே நீளமா இருக்குன்னு சுருக்கி ரா அப்டின்னு கூப்பிடற மாடர்ன் காலம் .
மனம் கவர்ந்த வசனங்கள்
1. போற இடத்துல எல்லாம் புரோட்டாவை எதிர்பார்க்கக்கூடாது
2. விடிகாலைல எந்திரிச்சு பரீட்சைக்கு படிக்கறவனும் ,பொண்ணுங்க
நம்மைக்கண்டுக்கலையேன்னு கவலைப்படறவனும் நம்ம சங்கத்துக்கு
சரிப்படமாட்டாங்க
3 சர்க்கஸ்னா சிங்கம் இருக்கனும்.திருவிழான்னா நம்ம சங்கம் இருக்கனும்
4. காமெடியனுக்குத்தெரியுமா காதலோட அருமை.
போடா டேய். அதனால என்ன? வில்லனுக்கு தெரியுமே?
5. சும்மா வெறும் லவ் லெட்டர் குடுத்தா எப்டி? க்ரீட்டிங் கார்டு வாங்கி
சாக்லெட் வெச்சுக்குடு வாங்கிக்கறேன்.
அய்யோ.ரொம்ப காஸ்ட்லி லவ் மாதிரி
தெரியுதே?
6. நாட்டு நடப்புல குடிகாரங்க தான் பல உண்மைக:ளை வெளிலசொல்றாங்க
7.வாழ்க்கைல டீட்டிகெஷன் ரொம்ப முக்கியம்
‘
டேய், அதுடெடிக்கேஷன் டா
கோபத்துல எனக்கு அப்படித்தாண்டா வரும்
8. இவன் கவிப்பேரரசு ஏ ஆர் ரஹ்மானையே மிஞ்சிட்டாண்டா
அடப்பாவி , ஒரு டீ வாங்கிக்குடுத்தான்கறதுக்காக இப்படி எல்லாம் அள்ளி விடறதா?
9./ நீ பேசும்போதே ஏகப்பட்ட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் வருது . இதுல கவிதை வேறயா? விளங்கிடும்
10 . நீ என் வீட்டுப்பக்கமே வரமாட்டியே , எங்கே எதுக்கு வந்தே?
நீ எப்படி இருக்கே?ன்னு பார்த்துட்டு ப்போகவந்தேன் மாப்ளை
11. இப்படி 1000 ரூபா சட்டை , 750 ரூபா ஷூ , 500 ரூபா பேண்ட் கலர் ஃபுல்லா இறங்குனா அவ என்ன நினைப்பா ?
அடுத்த ராமராஜன் நீதான் -னு நினைப்பா
12 என் நண்பனை யார் கலாய்ச்சாலும் என்னால சும்மா இருக்க முடியாது
டேய்
13 . துப்பாக்கின்னா தோட்டா இருக்கனும் , பிளக்ஸ் பேனர்னா அதுல நம்ம ஃபோட்டோ இருக்கனும்
14. நீ எப்போடா சட்ட ஆலோசகர் ஆனே?
போன வாரம் தான் அப்ளிகேஷன் போட்டுவெச்சேன்
15. இதை எல்லாம் நான் சொன்னா சிரிச்சிடுவாங்க ஜனங்க
நான் சொன்னா மாட்டும் ?
16. உனக்கு என்ன நரம்புத் தளர்ச்சியா? அடுத்தவன் சோத்தை பரிமாற உனக்கு ஏன் கை இப்படி நடுங்குது ?
17. அடிப்பாவி . கண்ணை மூடிக்கறேன்
யோவ் , மூட வேண்டியது நாங்கதான்
அந்த பழக்கம் தான் உங்களூக்கு அறவே கிடையாதே ?
18. கெழ போல்ட்டு - திண்டுக்கல் ரீட்டா எங்கே?அந்த கட்டை வந்தாத்தான் இந்தக்கட்டை வேகும்
ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி ஊத்துனா எல்லா கட்டையும் வெந்துடும்
19. காதல் மனசுக்குள்ளே இருந்தாலும் அதை வெளீல காட்டிக்கக்கூடாதுடி. அவனுங்களை அலைய விடனும்
இது தேறாதுன்னுஅடுத்த பார்ட்டிக்கு ரூட்டுபோடகிளம்பிட்டா ?
அந்த வல்லமை இவர்க்கு இல்லை ( அந்த வேய்க்கானம் இவருக்கு இல்லை )
20. டேய் , என்னடா பண்றே? இதெல்லாம் நம்ம சங்க செட்யூலிலேயே இல்லையேடா ?
இனிமே சங்கமே இல்லை
21. மாப்ளை, ஓசில ஓடற படம் தானே? யார் பார்த்தா என்ன ? ( தூக்கக்கலக்கத்தில் ஹீரோயின் ஆடை விலகும்போது சூரியின் வசனம்)
22.. ஏய், மேரேஜ்க்கு முன்னால ஒரு ரிகர்சல் பார்க்கலாமா?
23. டேய் , என் கட்டை அவுத்து விடுங்கடா
சுத்தம் , உன்னை கட்டவே இல்லையே?
24. என்ன வேணும் ?
எல்லாமேவேணும் , ஹி ஹி
25. சிவப்புகலர் ல சீவுனா ஃபர்ஸ்ட் நைட் ஒழுங்கா நடக்காதுடா
அடப்பாவி , சிவப்புக்கலர் சீப்புக்கும் , முதல் இரவுக்கும் என்னடா சம்பந்தம் ?
26. கொஞ்சம் பவுடர் வேணும்
ஏன் நீங்க கொண்டாரலையா?
அவசரத்துல ப்ளீச்சிங்க் பவுடர் கொண்டாந்துட்டோம்
27. டியர் , 2 நாள் ல உன் முடிவை சொல்லிடு
அப்டி முடியலைனா?
3 நாள் ல சொல்லு
28. காதல் ஒர்க் அவுட் ஆகனும்னா பிசிக்கல் டச் ரொம்ப முக்கியம்டா மாப்ளை
29. விலக்கி விடும் ஆட்கள் இருக்கும் தைரியத்துல தான் இவனுங்க இப்படி அடிச்சுக்கறாங்க , கண்டுக்கவே கண்டுக்காதீங்க // தானா சரி ஆகிடுவாங்க
30 . சிவணாண்டி மாடு கிணத்துல விழுந்துடுச்சு
சிவணாண்டி விழலை ?
31. ஹீரோயின் - அய்யோ , அப்பா
ஹீரோ -நான் அப்பாஆக இன்னும் டைம் இருக்கு
32 மைனர் , மேஜர் இதெல்லாம் கல்யாணத்துக்குத்தான் போல, கழட்டி விடுறதுக்குவயசே தேவை இல்லை போல . அப்பா பேச்சத்தான் கேட்பேன்னா எதுக்குடா இந்த பொண்ணுங்க நம்ம மனசுல ஆசையைய்த்தூண்டனும் , அவங்கபேச்சையே கேட்டுட்டு வீட்டுலயேஇருக்கறதுதானே?
33. தாய் இல்லாம வளர்ந்த பையன் தான் தனக்கு வர்ற மனைவியை தாயா பார்த்துப்பான்
34. சின்னப்பொண்ணு - அக்கா உங்களைக்கூப்பிடறாங்க , சீக்கிரம் வாங்க
ஹீரோ - யாரு?உங்கக்காவா? நல்லா இருப்பாங்களா? பார்க்க ?
அய்யோ , எங்கக்கா இல்லை லதா அக்கா
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்- 40
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே
ரேட்டிங் = 2.75 / 5
சி
பி கமெண்ட் வருத்தப்படாத வா ச - சாதா காதல் கதை ,காமெடி பற்றாக்குறை .பி,சி சென்ட்டர்களில் சுமாரா போகும் - போர் அடிக்காம போகுது , டி வி ல போட்டா பார்க்கலாம் . தியேட்டர்ல பார்க்கனும்னா 50 ரூபா கொடுத்து பார்க்கும் அளவு ஒர்த் . மல்ட்டி காம்ப்ளெக்ஸ் ல 150 ரூபா 200 ரூபா அளவுக்கு ஒர்த் இல்லை
11 comments:
படம் flop ஆனாலும் இந்த சங்கம் வருத்தபடாது
THANK'S FOR THE COMMENT!
நீ என்ன சாடிஸ்ட்டா? எடுக்குற படத்தை எல்லாம் குறை சொல்லநும்னே வெப்சைட் நடத்துறியா? நீ ரொம்ப ஜீனியஸ்ஸா இருந்தா பணத்தை போட்டு தரமா படம் எடு. அப்ப சொல்றோம் உன் லட்சணத்த... உன்ன மாதிரி ஆளுங்களோட விமர்சனத்துனால தான் பணம் போட்டு படம் எடுக்குறவன் ப்ளாட்பார்ம் போறான்யா வெண்ண..
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஜாலியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பத்துடன் சேர்க்க முகம் சுழிக்காமல் பார்க்கக்கூடிய, காமெடியான படம் என்று சொன்னால் அது மிகையாகாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த அழகான ஊர்தான் சிலுக்குவார்பட்டி. அங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக சிவகார்த்திகேயனும், செயலாளராக சூரியும் இருக்கின்றனர். இதே ஊரின் தலைவராக சத்யராஜ் வருகிறார். இவருக்கு 3 பெண்கள் உள்ளனர். ஊரில் ஏற்படும் வாய்தகராறில் சத்யராஜ், தன்னுடைய பெண்கள் யாரையும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் காதை அறுத்துக் கொள்வேன் என சபதம் கொள்கிறார். இதனால் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் அவசர அவசரமாக அவர்கள் படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.
3-வது பெண்ணான நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணம் செய்து முடித்துவைக்க முடிவு செய்யும் வேலையில், சிவகார்த்திகேயன் நுழைந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார். இதனால், சிவகார்த்திகேயனுக்கும் சத்யராஜுக்கும் மோதல் ஏற்படுகிறது. மறுபுறம், சிவகார்த்திகேயனை ஸ்ரீவித்யா ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். ஆனால், சிவகார்த்திகேயனோ, அதே ஊரில் டீச்சராக வேலை பார்க்கும் பிந்துமாதவியை ஒருதலையாக காதலிக்கிறார். பிந்துமாதவியோ இவரது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார்.
காதல் தோல்வியில் மனம் நொந்து வாடும் சிவகார்த்திகேயன், கோவில் திருவிழாவின்போது ஸ்ரீதிவ்யாவை சேலையில் பார்த்ததும் சொக்கிப் போகிறார். இதனால், அவள்மீது காதலிலும் விழுகிறார். இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொண்டு வானம்பாடி பறவைகளாய் சுற்றித் திரிகின்றனர். இருவரும் காதலிப்பது ஒருநாள் சத்யராஜ் காதுகளுக்கு போகிறது. இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
பின்னர், சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா காதல் என்னவாயிற்று? சத்யராஜ் இவர்களை ஒன்று சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பாணியில் நக்கல், நையாண்டி, டைமிங் காமெடி என படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்றுதான் சொல்லவேண்டும். சிவகார்த்திகேயனுக்கு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சமஅளவு பங்கு ‘பரோட்டா’ சூரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து செய்யும் ரகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. சத்யராஜ் ‘சிவானாண்டி’யாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படம் முழுவதும் கெத்தாக வலம் வருகிறார்.
ஸ்ரீதிவ்யா அழகான கிராமத்து பெண்ணாக படம் முழுக்க வலம் வருகிறார். படத்தில் இவரது நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாவிட்டாலும் கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் இவருடைய கண்கள் அலைபாயும் அழகை ரசிக்கும்படியாக இருக்கிறது. பிந்துமாதவி டீச்சராக வருகிறார். சில சீன்களை வந்துவிட்டு மறைந்து போகிறார்.
தொடர்ந்து காமெடி படங்களை கொடுத்து ஹிட் அடித்த ராஜேஷின் உதவியாளர் பொன்ராம் இயக்குகிறார் என்றதும் படத்தின் மீது ரொம்பவும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பொன்ராம் முழுமைப்படுத்தியிருக்கிறார். பழகிப்போன கதையை சாயம் பூசி சரிசெய்திருந்தாலும், ரசிக்கும்படியாக வைத்ததில் கைதட்டல் பெறுகிறார். படத்தோட கதையை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்து பரோட்டா சூரியின் நகைச்சுவையுடன் படத்தை நகர்த்தியதற்காக இவரை பாராட்டியே ஆகவேண்டும்.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட் அடித்திருந்தாலும், அவற்றை காட்சியப்படுத்திய விதம் ரொம்பவே ரசிக்க வைக்கிறது. சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இனி பாடகராகவும் ஒரு ரவுண்டு வரலாம். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கிறது. ஊரின் அழகை இவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ யாரையும் வருத்தப்பட வைக்காமல் கலகலப்பாக்கியிருக்கிறது.
cb.senthil comedy illa illa nu 34 dialogue pottu iruka.... thanga meengal padam konjam mark koranjadhuke kudhikireenga... ivangalum manusanga dhan ...
parotta suri ya romba kindal panreengale... comedy panjam na nee poyee venum nalum yezhudhi kodunga....
books la unnoda jokes padikirapa irundha mariyadhai, senthil vida yaarum best jokes poda mudiyadhu ninaipen.. sarathi techu kooda unaku appuram dhan nu ninaichen...
vimarsanam panna unaku thaguthiye illa nu ippo teriyudhu...
the movie is good to watch. comedy scenes are good.
people do not rely on this review. go and watch it once with friends and family.
Yaru yara kalattivittangkanne thappa potturukeenga sir.. Nalla padaththa paarunga..
boss, neenga padam paartheengala, illa kuthu mathippa review podureengala?
ippallam unga review, avvalavu worth illa boss.
@Rexon Fernandowell said
நடிகர் நடிகைகளை கேனம், லூசு, போன்ற வார்த்தை உபயோகிப்பது தேவை இல்லாதது, படிப்பதற்கே கஷ்டமாகவும், அருவருபாகவம் உள்ளது.மற்றவர்களை படைப்பு விமர்சிக்க வேண்டாம்,மேம்பாட்டிற்கு ஊக்குவிக்கும் செய்ய வேண்டும். தெளிவாகவும் நயமாகவும் உங்கள் விமர்சனங்களை எதிர் பார்கிறேன்
Post a Comment