கோடம்பாக்க காமெடி சினிமா ஃபார்முலாப்படி ஹீரோ ஒரு வெட்டாஃபீஸ், அவருக்கு ஒரு முறைப்பொண்ணு , முறைச்சிட்டு இருக்கற ஃபிரண்ட்.ஹீரோயினை பார்க்கறாரு , பார்த்ததும் லவ் , ஹீரோயின் ஹேண்ட் பேக் ல தன் ஃபிரண்ட்டோட செல் ஃபோனை போட்டுட்டு வேணும்னே ஃபிரண்டுக்கு ஃபோன் பண்ற மாதிரி கடலை போட்டுட்டு இருக்காரு ( இதைப்பார்த்து யாரும் ட்ரை பண்ணாதீங்கய்யா , நிஜ வாழ்வுல சிம்மை கழட்டி வீசிட்டு ஃபோனை யூஸ் பண்ணிக்குவாங்க உதார் பார்ட்டிங்க பொண்ணுங்க )
ஒரு கம்ப்பெனியோட 45 வயசு கன்னி ஆண்ட்டிக்கு ஹீரோ மேல லவ் . இண்ட்டர்வ்யூவுக்கு வநதவரை லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ண பிளான் போடறாங்க . ஹீரோவின் ஃபிரண்ட்டை விலைக்கு வாங்கிடறாங்க . புரட்சித்தலைவி கேப்டன் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குனதைப்போல . ஹீரோவின் ஃபிரண்ட் கருணா மாதிரி கூட இருந்துட்டே குழி பறிக்கறாரு . ஹீரோ , ஹீரோயின் காதல் எப்படி என்ன ஆச்சு என்பதை ரெண்டரை மணி நேரம் சிரிக்க சிரிக்க சொல்லி இருக்காங்க .
படத்தின் ஹீரோ கம் வில்லன் சந்தானம் தான் .ஹீரோவின் காதலுக்கு ஆப்பு வெச்சு தன் வாழ்க்கையை வளப்படுத்தும் கேரக்டர் . சும்மா அசால்ட்டா ஊதித்தள்ளிடறார்.அவர் படம் பூரா 55 ஜோக்ஸ் சொல்றார்/ அதுல 12 ஜோக்ஸ் ட்விட்டர்ல இருந்து சுட்டது . 8 ஜோக்ஸ் எஸ் வி சேகர் காமெடி டிராமாக்களில் அடிச்சது . 6 ஜோக்ஸ் ஏர்செல் கம்ப்பெனி எஸ் எம் எஸ் ஜோக்ஸ், மீதி 29 சொந்த சரக்கு . எப்படியோ சிரிப்பு வருது , அதான் முக்கியம் , சுட்டாரா? சுடலையா?ன்னு எந்த சுடலைமுத்தும் உக்காந்து ஆராய்ச்சி பண்ணிட்டிருக்க டைம் இல்லை . இந்தப்படம் ஆல்ரெடி எகிறி இருக்கும் சந்தானத்தின் சம்பளத்தை இன்னும் உயர்த்தும் ( இப்போ ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் ரூபாயாம் )
படத்தின் 2 வது ஹீரோ சிவா . டக் டக் என டைமிங்க் விட் அடிப்பதில் ஆள் கில்லாடி . கொஞ்சம் முகத்தில் பாவனைகள் கொண்டு வந்தால் தேவலை . சந்தானத்தினுடனான காம்பினேஷன் காட்சியில் டம்மியாகிறார் சில காட்சிகளில் தாக்குப்பிடிக்கறார் . ரொமான்ஸ் காட்சிகளில் அவருக்கு எந்த வித ஃபீலிங்கும் கை கொடுக்கவில்லை
பவர் ஸ்டார் மூணாவது காமெடி . படத்தில் இவருக்கு பல காட்சிகளில் பல ஹீரோக்களை கிண்டல் பண்ணி டூயட் பாடும் வாய்ப்பு . அந்தக்காலத்தில் எஸ் எஸ் சந்திரன் , எஸ் வி சேகர் ஆல்ரெடி எம் ஜி ஆர் படங்களை கிண்டல் செய்து இதே போல் அப்ளாஸ் அள்ளீ இருக்கிறார்கள் . ஆனால் இந்த டைப் காமெடி ரொம்ப நாள் நிலைக்காது . அழகே அழகே பாட்டுக்கு ( ஓக்கே ஓக்கே ) அவர் போடும் உதயநிதி ஸ்டெப் கலக்கல் ரகம் . இவருக்கு ஒரு அட்வைஸ் , ஆல்ரெடி நீங்களே சொன்ன மொக்கை காமெடியை ரிப்பீட் பண்ணாதீங்க . போர் .
ஹீரோயின் தன்ஷிகா .விஷால் , அஜித் மாதிரி ஜைஜாண்டிக் ஹீரோக்களுடன் ஜோடி சேர வேண்டியவர் காலத்தின் கட்டாயத்தால் சிவாவுடன் ஜோடி சேர்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் கெமிஸ்ட்ரி தேவை . கலா மாஸ்டரிடம் ட்யூஷன் போகவும் . ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் காட்டாத நவரசத்தை பவர் ஸ்டாருடனான டூயட்டில் காட்டுகிறார். பவருடன் இவர் வரும் 17 செகண்ட்ஸ் லோ கட் ஷாட் செம ஹாட் . தியேட்டரில் விசில்
காதல் சந்தியா சந்தானத்துக்கு ஜோடி . ஹீரோயினை விட இவர் அழகாகத்தெரிவது ஆச்சரியம். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமா ? மேக்கப் விமன் பர்சனலா வெச்சிருக்காரா? தெரியலை , கலக்கல் பிரசண்ட்டேசன் . சந்தானத்துடனான முதல் இரவுக்காட்சிகள் செம கிளு கிளு .
டி வி புகழ் தேவதர்ஷினிக்கு ஓல்டு லேடி கெட்டப் அந்த கல்யாண ராமன் பல் கெட்டப் எரிச்சல் . மற்றபடி அவர் நடிப்பு செம கலக்கல் , அவர் போர்ஷனை இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம் , சந்தானம் , சிவா வின் தலையீட்டால் எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கும் என அவதானிக்கிறேன் .
இளவரசு சிவாவுக்கு அப்பா கேரக்டர் , பெரிய வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை ஓக்கே
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படம் முழுக்க யாரையும் சிந்திக்க விடாமல் ஒவ்வொரு சீனுக்கும் ஜோக்ஸ் மழையைத்தூவி விட்டுக்கொண்டே திரைக்கதைப்பந்தலை அமைத்தது . தியேட்டரில் ஆடியன்ஸ் சிரிச்சுட்டே இருக்காங்க .
2. படத்தில் வரும் தன்ஷிகா , சந்தியா , ஸ்டெபி ( சிவாவின் தங்கை ) என எல்லாருக்கும் உடை அலங்காரங்கள் அருமை . மிக ஆடம்பரமாக அதே சமயத்தில் கண்ணியமான கண்ணைக்கவரும் டிசைன்களீல் சுடி , மிடி கள் கலக்கல் . ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு
3. படத்தில் 3 பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன . பவர் ஸ்டாருக்கான காமெடி டூயட் செலக்ஷன் அருமை . அப்ளாஸ் அள்ளுது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோ பிளான் பண்ணித்தான் ஹீரோயினின் ஹேண்ட் பேக்கில் நண்பனின் செல்ஃபோனை போடறார். செல்ஃபோனை ஹீரோயின் செக் பண்ணா கேலரியில் இமேஜஸில் சந்தானம் , சிவா ஃபோட்டோஸ் இருக்கும் என இவருக்கு தெரியாதா? அதை எரெஸ் பண்ணிட்டு போட்டிருக்கலாமே?
2. ஓல்டு லேடி எம் டி யாக வரும் தேவதர்ஷினி யின் கெட்டப்பை சந்தானம் யூத்தாக மாற்ற ஐடியா தருவது ஓக்கே, அது சிவாவை கவர , ஆனால் கூடவே வரும் அந்த எடுபுடிகள் 3 பேர் எதுக்கு ?எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா? அவங்களுக்கும் கெட்டப் மாத்துவது எல்லாம் ஓவர் . அந்த 3 கேரக்டரும் தேவையே இல்லை . ஏகப்பட்ட கூட்டம்
3. ஹீரோயினுக்கு ஹீரோ மேல் எப்போ காதல் வந்ததுன்னு மனம் தொடும்படி சொல்லவே இல்லை இயக்குநர். ஹீரோயின் எப்பவும் ஒரே மாதிரி முகத்தை வெச்சிட்டுஇருக்கார் .
( ஹீரோவும் அப்படித்தான் இருக்கார் ,ஆனால் அவர் சுபாவமே அபப்டி , ஃபேஸ் எக்ஸ்பிரஷன் வராது , ஆனால் ஹீரோயின் ஆல்ரெடி அரவானில் கலக்கியவர்தானே , ஏன் அவருக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை )
4. ஹீரோ ஹீரோயினைப்பற்றி உயர்வாகப்பேசுவது, அதை ஹீரோயின் ஒளிஞ்சிருந்து கேட்பது எல்லாம் கே பாக்யராஜ்ன் டார்லிங்க் டார்லிங்க் கால டெக்னிக்குகள் . இதெல்லாம் இப்போ அவுட் ஆஃப் ஃபேஷன்.
5. போலீஸ் காண்ஸ்டபிளாக வரும் சந்தியா ஓப்பனிங்க் சீன்ல ஒரு காமெடிக்காக போலீஸ் ஸ்டேஷன்ல யூனிஃபார்ம் ல இருக்கார் மீதி எல்லாக்காட்சிகளிலும் பகல் டைம் ல ஹீரோயின் கூடவோ , சந்தானம் கூடவோ சுத்திட்டு தான் இருக்கார் . வேலைக்கே போக மாட்டாரா?
6 .ஓல்டு லேடி எம் டி வேலை இல்லாத சிவாவுக்கு தன் கம்ப்பெனியில் வேலை போட்டுக்குடுத்துட்டா இந்திர விழாவில் நமீதா ஸ்ரீகாந்த்தை கரெக்ட் பண்ணியது போல் ரொம்ப ஈசியா தன் கண்காணிப்பில் , கட்டுப்பாட்டில் சிவாவை “ வெச்சிருக்கலாமே? * எதுக்கு அவர் நாக்கை சுத்தி மூக்கைத்தொடனும் ? சந்தானம் மாதிரி ஒரு ஆள் சப்போர்ட் எதுக்கு ?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. நைட் 12 மணிக்கு மேல டாஸ்மாக் ல சரக்கு கூட ஈசியா கிடைக்குது.ஆனா கட்டிக்கப்போற பொண்ணு கிட்டே ஒரு கிஸ் கிடைக்க மாட்டேங்குது
2. நட்பும் காதலும் கொரியன் போன்ல இருக்கும் டூயல் சிம் மாதிரி.ஒரு சிம் க்கு கால் வரும்போது இன்னொரு சிம் வெய்ட்டிங் ல தான் இருக்கனும்
3. பியூச்சர் ல பி எம் ஆகப்போற என்னை பியூன் வேலைக்குப்போகச்சொல்றாங்க.
என்னது? அப்போ நீ பியூன் வேலைக்குப்போற அளவு படிச்சிருக்கியா?
4. போலீஸ் கான்ஸ்டபிளையே லவ் பண்ணுவியா?
அழகா இருந்தா கான்ஸ்டபிள் ,எஸ் ஐ னு பார்க்க மாட்டோம்
5. எங்க ஏரியா பொண்ணுக்கு உன் பிரண்ட் ஏன் லெட்டர் குடுத்தான்?
6. வருசமா எல்லாருக்கும் குடுத்துட்டு இருக்கான்.ஏன்னா அவன் போஸ்ட்மேன் ( எஸ் வி சேகர் டிராமா ஜோக் ( வால் பையன் )
7. செல்லுல பேலன்ஸ் இல்லைன்னா லவ்வை பேலன்ஸ் பண்ண முடியாது
8. ஸாரி சொன்னா எல்லாம் சரி ஆகிடுமா?
சந்தானம் - அப்போ ஆளுக்கு ஒரு செட் பூரி சொல்லட்டா?
9. பழகுன பொண்ணை புள்ளத்தாச்சி ஆக்கும் பசங்களைக்கூட நம்பிடலாம்.ஆனா புள்ளப்பூச்சி மாதிரி இருக்கும் பொண்ணுங்களை நம்பக்கூடாது.
10. சிவா - எதுக்காக என் பிரண்ட்சை அடிச்சே?
சந்தானம் - காசு கொடுத்தா நான் என் பிரென்ட்ஸையே அடிப்பேன்
11. உனக்காக உன் பேரை என் கைல பச்சை குத்தி இருக்கேன்
யாராவது வெள்ளைக்கலர்ல பச்சை குத்துவாங்களா? சாக்பீஸ் ல எழுதி வெச்சுக்கிட்டு சீன் போடறியா?
12/ உனக்கு வேலை கிடைக்கனும்னா இண்டர்வ்யூவுல ஒயின் ஷாப் எப்போ திறப்பாங்க ? எந்த எந்த டாஸ்மாக்ல எந்தந்த சரக்கு கிடைக்கும்? இந்த மாதிரி கேள்விகளா கேட்கனும்
13. எப்பேர்ப்பட்ட ராஜாவா இருந்தாலும் அவங்களை ஆண்டி ஆக்க இந்த பொண்ணுங்களால மட்டும் தான் முடியும்
14. காதலியை எப்பவும் தேவதையாப்பார்க்க ஆசைப்படுவோம் , ஆனா அவங்க நம்மை தேவதாசாப்பார்க்க ஆசைப்படுவாங்க ( ட்விட்டரில் சுட்டது )
15. சந்தானம் - இவன் எதுக்கு எச்சி தொட்டு முஞ்சி கழுவறான் ?
16. சந்தியா - வாவ் !!!
சந்தானம் - யார் இங்கே இப்போ வாமிட் எடுத்தது ?
17. ஏய் மிஸ்டர் . உனக்கு எப்படி கண் போச்சு ?
பக்கத்து வீட்டுப்பொண்ணு குளிச்சுட்டு இருந்தது . அதை பார்த்தேன் கண்ணு போயிடுச்சு
அது எப்படி ?
அந்தப்பொண்ணு தீக்குளிச்சுட்டு இருந்தது . என்னன்னு கிட்டே போய் பார்த்தேன் , கண் அவுட் ( எஸ் வி சேகரின் டி வி டிராமா வண்ணக்கோலங்கள் -ல் சுட்டது )
18. சந்தானம் டூ சந்தியா - டைனிங்க் டேபிள் ஹைட் இருந்துட்டு உனக்கெல்லாம் எப்படி போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைச்சது ?
19 . சந்தியா டூ சந்தானம் - இந்த வாசல் உங்களுக்காக எப்பவும் திறந்தே இருக்கும் ( டபுள் மீனிங்க் )
20 சந்தானம் - அந்தப்பொண்ணு மேல உனக்கு என்ன கோபம் டா ? கோயில் பிச்சைக்காரி மாதிரி வரைஞ்சு வெச்சிருக்கே?
21, புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணுங்க பின்னால போன ஆணும் உயிர் பிழைச்சதா சரித்திரமே இல்லை ( எஸ் எம் எஸ் ஜோக் , இது ஆல்ரெடி ஒரு கல் ஒரு கண்ணாடி ல சந்தானமே சொல்லிட்டாரு )
22. இந்தக்கால பொண்ணுங்க கிட்டே மொபைல் நெம்பர் வாங்கறதும் , கர்நாடகாவுல தண்ணீர் வாங்கறதும் ஒண்ணு , அவ்வளவு சீக்கிரம் நடக்காது
23. சந்தான்ம் - என் மொபைலை ஏண்டா அவ ஹேண்ட் பேக்ல போட்டே?
சிவா - என் மொபைலை போட்டா எங்கப்பா திட்டுவாரு
24. அது என்னாங்கடி உங்களுக்கு மட்டும் லவ் லாண்டரித்துணி மாதிரி இவ்ளவ் லேட்டா வருது ?
25. நான் மப்புக்காக பழகறவன் இல்லை , நட்புக்காக பழகறவன் , சரக்கு குடுத்து என்னை விலைக்கு வாங்க முடியாது
இந்தா 3 லட்சம்
ஹி ஹி இது ஓக்கேங்க
26. எக்ஸ்க்யூஸ் மீ லேடீஸ் , மே ஐ கம் இன் டூ மை ஓன் ஹவுஸ் ?
27. மாப்பி , இந்த ஃபோனை வெச்சு ஒரு டிராமா பண்ணனும்
ஃபோனை வெச்சு கால் தான் பண்ன முடியும் , எப்படி டிராமா பண்ன ?
28. பவர் ஸ்டார் - கான்செப்ட் ரொம்ப சின்னதா இருக்கே? அதான் நடிக்கலாமா>? வேணாமா?ன்னு யோசிக்கறேன்
சந்தானம் - கல்கியின் பொன்னியின் செல்வன் இருக்கு பண்றியா? மணிரத்னமே பண்ண யோசிக்கறாராம்
29 . சந்தானம் டூ சிவா - டேய் , நீ எல்லாம் சீரியசாப்பேசாத , காமெடியா இருக்கு
30 பிப்ரவரி 14 ல யாரோட காதல் புட்டுக்கிச்சுன்னாலும் கவலைப்படாதீங்க , அதுக்குப்பிறகு பிப் 15 இருக்கு , வேற பொண்ணுங்களும் இருக்காங்க
31. சிவா - என்னை யாராலும் ஏமாத்த முடியாது
சந்தானம் - டேய் , சீதா டா
சிவா - எங்கேடா?
சந்தானம் - இப்போத்தான் யாராலும் ஏமாத்த முடியாதுன்னே? கி கி
32. மாடு புல் சாப்ட்டாலும் பால் தருது, பாம்பு பால் சாப்ட்டாலும் விஷம் தான் தருது ( ட்விட்டரில் சுட்ட லைன் )
33. உனக்கு செலவுக்குப்பணம் வேணும்கறதுக்காக நான் ஏண்டா வேலைக்குப்போகனும் ?
எவனோ பாட்டு கேட்க நாம காசு கொடுத்து காலர் ட்யூன் வைக்கறதில்லையா> அந்த மாதிரி
34. எதுக்கு இத்தனை செக்யூரிட்டி ? அவர் என்ன ஃபிளைட்டா ஏறப்போறாரு ? முதல் இரவுதானே நடக்கப்போவுது ?
35. அவதார் படம் எடுத்தவனுக்கும், அஜால் குஜால் படம் எடுத்தவனுக்கும் ஒரே மூளை தான் , யூஸ் பண்ணிக்கற விதம் தான் வேற
36. விடிஞ்சா எனக்கு கல்யாணம் , அதுவும் முடிஞ்சா எனக்கு எனக்கு ஃபர்ஸ்ட் நைட்
37. உன்னால என் மேரேஜை நிறுத்தவே முடியாது
ஏன் ?
ஏன்னா கல்யாண முகூர்த்தம் காலைல 7 மணிக்கு , அவ்ளவ் சீக்கிரம் நீ எழுந்துடுவியா? நீ எப்பவும் 10 மணிக்குத்தானே எந்திரிப்பே?
38. நீ உடனே என் கிட்டே சாரி சொல்லனும்
சாரி , என் வாயால சாரி சொல்லவே மாட்டேன்
அடடா, இப்போ சொல்லிட்டியேடா?
39. இது என்ன கல்யாண மடமா? மசாஜ் செண்ட்டரா> வரிசையா பொண்ணுங்க 3 பேரு வந்து தடவிட்டு போறாங்க ?
40 பவர் ஸ்டார் - சின்னப்பையன் மனசுல ஆசையை வளர்த்துட்டீங்க
தன்ஷிகா - யோவ் , நீ சின்னப்பையனா? பாக்க தாத்தா மாதிரி இருக்கே
நீ கூட ஆயா மாதிரி தான் இருக்கே , நான் ஏதாவ்து சொன்னேனா?
41. சந்தானம் - டேய் தகப்பா , முதல் இரவு கட்டில்ல பூவை டக்னு தூவிட்டு கிளம்பாம எதுக்கு டா புறாவுக்கு தீனி போடற மாதிரி பண்ணிட்டு இருக்கே?
மவனே , உன் கிட்டே மனம் விட்டுப்பேசுவதற்காக வெயிட்டிங்க்
டேய் நாயே உன் கிட்டே பேசறதுக்கா மெனக்கெட்டு மேரெஜ் பண்ணி ஃபர்ஸ்ட் நைட் வரை வந்திருக்கேன் ?
42 . என் மாமா பையனை காணோம் , தேடனும் , எபப்டின்னு நான் திங்க் பண்ணிட்டு இருக்கேன் , தொந்தரவு பண்னாதீங்க
சரி வா , படுத்துட்டே 2 பேரும் திங்க் பண்ணலாம்
ச்சீய்
43 . அடியேய் , நகருங்கடி 2 பேரும் , அவன் என்ன புயல்ல விழப்போற கரண்ட் கம்பமா? 2 பேரும் ஆளுக்கொரு பக்கம் தாங்கிட்டு நிக்கறீங்க தள்ளுங்கடி
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்- 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் ஓக்கே
ரேட்டிங் = 3 / 5
சி பி கமெண்ட் - ஏ செண்ட்டரில் இது ஹிட் ஆகிடும் . இந்தப்படத்தை விட அழுத்தமான கதை அம்சம் , மேக்கிங்க் ஸ்டைல் பிரமாதமா இருந்த 6 படத்துக்கு கூட்டமே இல்லை . இதுக்கு செம கூட்டம் . படம் சர்வ சாதாரணமா 3 மடங்கு லாபம் சம்பாதிச்சுக்கொடுத்துடும் . ஜாலியா கல கலன்னு ஒரு டைம் பாஸ் படம் , எல்லாரும் பார்க்கலாம் . ஈரோடு அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன்
diski -
6 மெழுகுவர்த்தி
http://www.adrasaka.com/2013/
சி பி கமெண்ட் - ஏ செண்ட்டரில் இது ஹிட் ஆகிடும் . இந்தப்படத்தை விட அழுத்தமான கதை அம்சம் , மேக்கிங்க் ஸ்டைல் பிரமாதமா இருந்த 6 படத்துக்கு கூட்டமே இல்லை . இதுக்கு செம கூட்டம் . படம் சர்வ சாதாரணமா 3 மடங்கு லாபம் சம்பாதிச்சுக்கொடுத்துடும் . ஜாலியா கல கலன்னு ஒரு டைம் பாஸ் படம் , எல்லாரும் பார்க்கலாம் . ஈரோடு அபிராமி தியேட்டர்ல படம் பார்த்தேன்
diski -
0 comments:
Post a Comment