1. அஜித்தா இருந்தாலும் அஜிதாவா இருந்தாலும் காலையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே
--------------------------------
2. அவங்கவங்க வீட்டுக்குள்ளே இருக்கும் நெருங்கிய சொந்தங்களை கண்டுக்கவே கண்டுக்காத தமிழன் ட்விட்டர்ல வளைச்சு வளைச்சு வணக்கம் போடுவான்
-----------------------
3. தமிழனின் கன்னத்து முத்தம் தொட்டுத்தொடரும் பாரம்பரியம்.ஆங்கிலேயரின் லிப் கிஸ் அப்படியே அப்பிக்கொள்ளும் வீரியம் # கிஸ்ஸாலஜி்
------------------------
4. வாழ்க்கையை சுவராஸ்யம் ஆக்குவது பெண்கள்.ஹாஸ்யம் சேர்ப்பது ஆண்கள்.
---------------------
5. அவங்கவங்க வீட்டு மொட்டை மாடியிலேயே வாக்கிங் போய்க்கொண்டு ,கிரவுன்டுக்கு வராத பெண்களை வன்மையாக கண்ணடிக்கிறேன்.சாரி கண்டிக்கிறேன்
------------------------
6. நல்லவேளை.இந்த டிரஸ்கோடு பழக்கம் தலைவா வில் தொடங்குச்சு.அபிலாஷாவின்
லட்சியப்படமான முதல் பாவம் ல தொடங்கி இருந்தா என்ன ஆகி இருக்கும்?
------------------------
7. கே ஆர் விஜயா = புன்னகை அரசி .சிநேகா = புன்னகை இளவரசி .அப்போ பிரசன்னாவுக்கு விஜயா மாமியார் முறை ஆகுமா?
-------------------------
8. செப் 6 வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்க்க வரும் பிகர்கள் ஊதா கலர் ரிப்பனை சவுரியில் கட்டி வரவும் # டிரஸ் கோடு
-------------------------
9. தங்க மீன் (கோல்டு பிஷ்) என்றதும் கொடி பறக்குது அமலா நினைவு வந்தால் நீ
கமர்ஷியல் ரசிகன்.இயக்குநர் ராம் நினைவு வந்தால் கலைப்பட ரசிகன்
----------------------
10/ கண்ணியமான சொல் பிரயோகம். வேலைக்காரி = பணிப்பெண் ,சலவைக்காரி = உடைப்புத்துயிர் வல்லுநர்
-----------------------
11. நான் சின்னப்பையனா இருக்கும்போது நர்சுஸ் காபின்னா நர்சுங்க வெச்சுத்தரும் காபின்னு நினைச்சேன்
-----------------------
12. ராமர் மற்ற பெண்களுக்கு ஒரு உதாரண புருசர்.சீதைக்கு மட்டும் உதா ரண புருசன்
------------------------
13. கைவீசம்மா கைவீசு' -ன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்.வீசினாள்.கன்னம் பழுத்தது #,பளார்
-------------------------
14.பசித்தவுடன் சம்சாரி சமைப்பான்.பிரம்மச்சாரி மெஸ்க்கு போவான்.ட்விட்டர் ஆகப்பட்டவன் எனக்கு பசிக்குது என ட்வீட் போடுவான்
---------------------
15.அன்பே! நீ என் மீது எரிந்து விழு கை யில் கூட எரி நட்சத்திரமாகத்தான் தெரிகிறாய் ! வெவ்வெவ்வே ;-)
-------------------
16. டாக்டர் வெயிட் தூக்கி பழகச் சொல்லிருக்கார் னு யாரும் அவங்கவங்க சம்சாரத்தை தலைக்கு மேல தூக்கி வெச்சு ஆடாதீங்கய்யா ;-)
-----------------------
17. வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர அருகாமையில் உள்ள ஜி ஹெச் சென்று வாருங்கள்
-------------------------
18.ஆபீஸ் ல டோட்டலா எத்தனை பொண்ணுங்க இருந்தாலும் எல்லாரையும் உரிமையா டீ போட்டு கூப்பிடறவன் தான் டீ டோட்டலர் ?
---------------------
19. பெண் என்று சொன்னால் போதாதா? அதென்ன பெண்மணி? ஏகப்பட்ட MONEY செலவு செய்வாள் என்பதால் பெண்MONEY
----------------------
20. சும்மா விளையாட்டுக்குத்தான் டி போட்டுக்கூப்பிட்டேன் என்பதை டிFUN னு சொல்லலாம்
-------------------------------------
1 comments:
எல்லாம் நன்று.
Post a Comment