Friday, September 27, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27 9 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


1. ராஜா ராணி' படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் நடிக்க, புதுமுக இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கும் படம் 'ராஜா ராணி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தினை தயாரித்து இருக்கிறார்.



இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்ததில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் இசையும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வது போலவே அமைந்திருந்தது.


இந்நிலையில், படக்குழு படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். படத்தைப் பார்த்துவிட்டு எந்த ஒரு இடத்திலும் கட் சொல்லாமல் 'யூ' சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.


சென்சார் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், தயாரிப்பு நிறுவனம் செப்டம்பர் 27 ஆம் தேதி 'ராஜா ராணி' வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.
செப்டம்பர் 27-ம் தேதி 'ராஜா ராணி' படத்துடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படமும் வெளியாகவுள்ளது. ஆனால், அப்படம் இன்னும் சென்சார் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அபிராமி , ஆனூர் ,சண்டிகா வில்  ரிலீஸ்

ராஜா ராணி - மவுன ராகத்தின் உல்டாவா? - மணிரத்னம் அதிர்ச்சி -ஃபாரீன் ட்வீட்டர் விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_3916.html
 

2 ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.  - முகமூடி திரைப்படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் தயாரித்து இயக்கி நடித்து வரும் திரைப்படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். 

லோன் உல்ப் புரொடக்ஷன் சார்பில் மிஸ்கின் தயாரித்து இயக்கும் புதிய படத்துக்கு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முக்கிய கேரக்டரில் ஸ்ரீ நடிக்கிறார். இவர் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்தவர்.

படம் பற்றி மிஸ்கின் சொல்கிறார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதாநாயகி பாடல்கள் இல்லாத படம். இளையராஜா  இப்படத்துக்கு இசையமைத்தும் பாடல்கள் இடம்பெறவில்லை. முதலில் பின்னணி இசையமைக்க தயங்கிய அவர் கதையை முழுமையாக கேட்டபின் சம்மதம் சொன்னார். இப்படத்துக்கு முன்னணியே இசைதான் பிரதானமாகதான் இருக்கும். படத்தில் கதாநாயகி இல்லை என்பது கதை எடுத்த முடிவு. நான் எடுத்த முடிவு அல்ல. 

நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். பெரும் பகுதி சென்னையை  சுற்றி இரவு நேரத்தில் மட்டும்  படமாக்கப்பட்டது. ஸ்ரீ இப்படத்தில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவனாக  வாழ்ந்து காட்டியுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. 

முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் சொந்தமாக லோன் ஓல்ப் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய அவர் அதன்மூலம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனும் படத்தை தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். இதில் ஸ்ரீ ஆட்டுக்குட்டியின் குணம் கொண்ட கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். எதையும் வித்தியாசமாக செய்யக் கூடிய மிஷ்கின் சாகசங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை தற்பொழுது வெளியாகியிருக்கும் டிரைலரில் நிரூபித்து உள்ளாராம். அதில் இவர் ஓடும் ரயிலிலிருந்து வெளியே குதிக்கும் காட்சி பார்போரை கதிகலங்கவும் உறைய வைத்துள்ளதாம்.

இந்தக் காட்சியை டூப் போட்டு எடுத்துவிடலாம்ணு ஸ்டண்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார். ஆனால் மிஸ்கினோ காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக உயிரை பணயம் வைத்து இரயிலில் இருந்து குதித்து பார்ப்போரை மிரள வைத்திருக்கிறார். அதுவும் எந்த பயிற்சியும் எடுக்காமல் டேக்கிற்கு சென்றாராம். மேலும் முதல் டேக்கில் திருப்தி அடையாத அவர் இரணடாவது முறையாக இரயிலில் இருந்து குதித்து அந்தக் காட்சியை வெற்றிகரமாக எடுத்திருக்கிறார்.


3. 'Attharintiki Daaredi' - திரைக்கு வரும் முன்னரே முழுப்படமும் இணையத்தில் வெளியானதால், ஆந்திர திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. 

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் ‘Attharintiki Daaredi’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது. 


பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்’ படம் ஆந்திராவில் வசூல் மழை கொட்டியது. அவரது நடிப்பில் அடுத்து 'Attharintiki Daaredi' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கு எதிர்பார்த்தார்கள். 


ஆகஸ்ட் 9ம் தேதி படத்தினை வெளிக்கொண்டு வர திட்டமிட்டார்கள். ஆனால் தெலங்கானா பிரச்சினை வலுவானதால், அங்கு எந்த படமும் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளரும் வெளியீட்டு தேதியினை அறிவிக்காமல் ஒத்திவைத்தார். 


பெரிய பட்ஜெட் படம் என்பதால், சுமார் இரண்டு மாதங்கள் கழித்து தசரா விடுமுறையை மனதில் வைத்து, அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் படக்குழு தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. 


‘Attharintiki Daaredi’ முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் உடனடியாக படத்தினை செப்டம்படர் 27ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். 


படக்குழுவினர் தங்களது ட்விட்டர் தளத்தில் “‘Attharintiki Daaredi’ படத்தில் நிறைய பேரிடன் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால் அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். Piracy லிங்குகளை [email protected] மற்றும் [email protected] என்ற இமெயில் முகவரி அனுப்புங்கள். அல்லது 1800 4250 111 - 94901 64545 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கும் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்கள். 


 4.  நினைவுகள் உன்னோடு - இது ஒரு லோ பட்ஜெட் படம் போல . இது பற்றிய தகவல்கள் கூகுள் கூகுள்  பண்ணிப்பார்த்தேன் கிடைக்கவில்லை 


5.

Sucker (2013)

Down on his luck and unlikely hero, Jim Crawley is having the worst day of his miserable life. He decides to end it all and even fails at that. An improbable event changes everything and he becomes a half man/half creature. 

Director:

Writers:

(screenplay), (screenplay)

Stars:

, ,

0 comments: