Friday, September 20, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20 9 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை




1. யா யாதற்போது தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் பெரிய அளவில் ஹிட்டாவதால் நிறைய நகைச்சுவை படங்கள் வெளிவருகின்றன. இதனால் நகைச்சுவை நடிகர்களின் இடம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சம்பளத்தையும் கதாநாயகர்களுக்கு இணையாக உயர்த்தி விட்டனர்.

அதிகம் சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் சந்தானம் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘தில்லுமுல்லு’ என இருபடங்கள் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கின்றன.


தற்போது சந்தானமும் சிவாவும் இணைந்து ‘யாயா’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் டோனி கேரக்டரில் சிவாவும் ஷேவாக் கேரக்டரில் சந்தானமும் வருகிறார்கள்.
சமீபத்தில் பரபரப்பாக கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படம் தயாராவதாக பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து சிவாவிடம் கேட்டபோது:-
‘யாயா படத்தில் எனது கேரக்டரை டோனி என்றும் சந்தானம் கேரக்டரை ஷேவாக் என்றும் அழைப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. கிரிக்கெட்டுக்கும் இப்படத்துக்கும் தொடர்பு இல்லை. படம் பார்க்கும் போது எதற்காக அந்த பெயர்கள் வைக்கப்பட்டன என்பது புரியும்’ என்றார்.

2 6 மெழுகுவர்த்திகள் -கோடம்பாக்கத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, ஷாம் நடிக்கும் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்திற்கு. ஷாம், பூனம் கவுர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் துரை இயக்கியிருக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரே புரியவில்லையென்றாலும் படத்தில் ஷாமின் நடிப்பு மிகவும் வித்யசமாக இருந்தது.
எனவே படத்தை வாங்கி வெளியிட பட முதலாளிகள் கோடம்பாக்கத்தில் காத்துக்கிடப்பதாகவும் அதில் ஸ்டியோ கிரீன் ஞானவேல் ராஜா ஒருவரும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சமீபத்தில் வெளிவந்த ஹரிதாஸ் படத்தில் குழந்தை காணாமல் போவதும், அதை கடத்தியது வில்லன்தான் என்பது போலவும் காட்சிகள் இருக்கும்.
இதே போன்ற சில காட்சிகள் ஷாம் நடித்த 6 படத்திலும் இருக்கிறதாம். ஹரிதாஸ் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார் 6 படத்தின் இயக்குனர் துரை.

6 மெழுகுவர்த்திகள் படத்திற்காக நடிகர் ஷாம் 10 நாட்கள் தூங்காமல் கண்களை வீங்க வைத்துக் கொண்டார். இதுமட்டுமல்லாமல் மேலும் சில உடல் ரீதியான மாற்றங்களையும் மிகவும் கடினப்பட்டு படத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தார் என்றும் சொல்லும்.

6 மெழுகுவர்த்திகள் - சினிமா

 விமர்சனம்

 

 http://www.adrasaka.com/2013/09/6.html

.அடுத்த கட்டம்” - பெரும்பாலும் தமிழ்சினிமாக்களில் பாடல் காட்சிகளுக்காத்தான் வெளி நாடுகளுக்குப் பயணமாவார்கள்.
அதுவும் இங்கிருந்து செல்லும் தொழில் நுட்பக்கலைஞர்களைக் கொண்டுதான் அதனைப் படமாக்கியும் வருவார்கள். முதல் தடவையாக ஒரு தயாரிப்பாளர் மட்டும் மலேசியா, சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருக்கும் தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு மிரட்டும் ஒரு திகில் படத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதா..? படத்தின் பெயரும் “அடுத்த கட்டம்” தான்.

அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர்சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் வழங்கும் NGP Films  நவநீதன் கணேசன் தயாரிப்பில் உருவான அடுத்த கட்டம் படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னை பிரசாத் லேப்பில்  நடந்த்து. நடிகர்கள் ஸ்ரீகாந்த், சம்பத் இயக்குனர்கள் வா.கெளதமன், இயக்குனர் ராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வா.கெளதமன் பேசும் போது, “தயாரிப்பாளர் ஆரூர் சுந்தரம் திரைப்பட இயக்கத்தில் DFT –படித்தவர். 12 வருடங்களாக  நல்ல படங்களைத் தரக்காத்திருக்கும் சினிமா ரசனையுள்ளவர். தயாரிப்பாளாராக இங்கிருந்து சென்று முழுக்க முழுக்க மலேசிய-சிங்கப்பூர் நடிகர்களையும் தொழில் நுட்பக்கலைஞர்களையும் வைத்து  அட்டகாசமான ஒரு திகில் படத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். சாதாரணமாகக் கிடைக்கும் வெளிச்சத்தில் படம் பிடித்திருப்பதும் அருமையாக இருக்கிறது. இங்கே தமிழ்ப்படங்கள் எடுப்பவர்களைக் கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். திரைப்படங்களில் இருப்பவர்கள் தான் திரைப்படங்களைக் கொச்சைப் படுத்தவும் செய்கிறார்கள். சக கலைஞனைக் கொண்டாட வேண்டாம் அதே நேரம் அவன் மனதைப் புண்படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா... இங்கே ஜெயித்தாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள்...தோற்றாலும் பார்ட்டி கொடுக்கிறார்கள்... படம் சரியில்லை மொக்கை என்று முதல் ரீல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “மெசேஜ்”அனுப்பி விடுகிறார்கள். தமிழ்சினிமாவை நாம் கொண்டாடவில்லையென்றால் வேறு யார் கொண்டாடுவார்கள்..? அதே நேரம் துளசிசெடிக்குத் தண்ணீர் ஊற்றாமல் கஞ்சா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி செழித்து வளரச்செய்வதும் இங்குதான் நடக்கிறது. சமுதாயத்தைச் சீரழிக்கும் எந்த ஒரு திரைப்படமும் இங்கே ஓடக்கூடாது...” என்று பேசினார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “திறமை எங்கிருந்தாலும் வரவேற்பதுதான் நமது பண்பாடு... மலேசிய-சிங்கப்பூர் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட அடுத்த கட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்..”என்றார்.

தயாரிப்பாளர் நவநீதன் கணேசன் பேசும் போது, “திகில் படம் விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் பாடல்கள் இல்லாமல் எடுத்திருக்கிறோம்... முழுக்க முழுக்க மலேசிய-சிங்கப்பூர் கலைஞர்களைக் கொண்டு அடுத்த கட்டத்தை தயாரித்தது போல தமிழகக் கலைஞர்களும் மலேசிய சிங்கப்பூர் கலைஞர்களும் சேர்ந்து பணியாற்றும் படங்கள் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. தமிழகக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது அவர்கள் நிறையக் கற்றுக் கொள்வார்கள், படைப்பும் நன்றாக வரும்..” என்றார்.

அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆருர்சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் தமிழகம் முழுவதும் அடுத்த கட்டத்தைத் திரையிடவுள்ளனர்.
5.


4
5,விடியும் வரை பேசு - ஏ.எம்.பிலிம்ஸ் சார்பில் ஏ.எம். முகன் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் `விடியும் வரை பேசு'. இதில் புது முகங்கள் அனிருத் நாயகனாகவும், நன்மா, வைதேகி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். மீரா கிருஷ்ணன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கின்றனர். 

படம் பற்றி இயக்குனர் முகன் சொல்கிறார். செல்போனை வைத்து தயாராகியுள்ள முக்கோண காதல் கதை. மிஸ்டு கால் சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கும். எல்லா கேரக்டர்களும் செல்போனிலேயே பயணிக்கும். நாயகனுக்கு மிஸ்டுகால் வருகிறது. அதில் பேசும் பெண்ணோடு நட்பாகிறான். அடிக்கடி பேசி காதல் வயப்படுகிறான். அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அப்பெண்ணும் சம்மதிக்கிறாள். அவளை சந்திக்க காத்திருக்கிறான். அப்பெண்ணோ வரவில்லை. அதன் பிறகு அவன் என்னவாகிறான் என்பது மீதி கதை. 

காமெடி கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகியுள்ளது. சமூக பிரச்சினையும் படத்தில் இருக்கும். சென்னை, புதுவையில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது. 

இசை: மோகன்ராஜ், ஒளிப்பதிவு: ராஜாமணி, எடிட்டிங்: பி.கே. மோகன், நடனம்: ராபர்ட்சன், ஸ்டண்ட்: ஆர்.கே. முரளி.




நாற்காலியின் நு66னியில் உட்கார வைக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். பெரும் பகுதி சென்னையை  சுற்றி இரவு நேரத்தில் மட்டும்  படமாக்கப்பட்டது. ஸ்ரீ இப்படத்தில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவனாக  வாழ்ந்து காட்டியுள்ளார்.



5. மவுன மழை - மவுன மழை பாடல் வெளியீடு 


5/9/2013 1:11:53 AM

சென்னை : திலீப்குமார், மனிஷா ஜித், கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, சண்முகராஜன் நடித்துள்ள படம், ‘மவுன மழை’. பிரின்ஸ் மீடியா சார்பில் கே.ஜாபர் அலி தயாரிக்கிறார். ஆனந்த் இயக்குகிறார். ஒளிப்பதிவு, டி.மகிபாலன். இசை, ஆதிஷ். பாடல்கள், வி.எம்.ஆறுமுகம். இதன் பாடலை கலைப்புலி ஜி.சேகரன், சித்ரா லட்சுமணன் வெளியிட்டனர். விஜய மனோஜ்குமார், கில்டு செயலாளர் ராஜா, விஜயமுரளி, பீலிசிவம் பெற்றனர். படம் பற்றி ஆனந்த் கூறும்போது, ‘ஹீரோவும், ஹீரோயினும்  பேசாமல் காதல் வளர்க்கின்றனர். ஹீரோ தன் காதலுக்காக எதையும் செய்யத் துணிகிறார். ஆனால், எதிர்பாராத ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது கதை’ என்றார்

- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9750&id1=3#sthash.7bJrWxBU.dpufa



0 comments: