1.Sushima Shekar@amas32
பிள்ளையின் அலட்சியத்தால் உணவுக் கிடைக்காத தாயிருக்கலாம். தாயின் அலட்சியத்தால் தாய்ப்பால் பெறாத குழந்தையும் உண்டோ? #tsy20130802
பிள்ளையின் அலட்சியத்தால் உணவுக் கிடைக்காத தாயிருக்கலாம். தாயின் அலட்சியத்தால் தாய்ப்பால் பெறாத குழந்தையும் உண்டோ? #tsy20130802
2.ஊர ஏமாத்துறவன்@trajuvel
அலட்சியமாக குப்பைதொட்டியில் தூக்கி எறியப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பசும்பாலே தாய்பால் ஆகிறது!!! #tsy20130802
3.பரம்பொருள் @paramporul
தன் மேனியை கட்டிக்காக்க தாய்ப்பாலில் அவள் காட்டிய அலட்சியம், அம்மழலை தன் வாழ்வின் லட்சியத்தை அடைய முடியாமல் செய்துவிடுகிறது.
#tsy20130802
4.நீதி அரசன்@FrancisPichaiah
காலத்தே அழியும் அழகை பேண தாய்ப்பால் ஊட்ட அலட்சியம் காட்டும் பெண்ணே நீ தாயெனும் பெரும் பெருமைக்கே ஒரு கேடு #tsy20130802
5.காட்டுபயல்@ikaatupayal
அழகு கெட்டு போகும் என்ற வதந்தியை அலட்சியம் செய்து தாய்பால் கொடுப்பவளே சிறந்த தாய் #tsy20130802
6.வைரவன்@raajeswaran
சத்தானது போஷாக்கானது எனும் விளம்பர பால் வகைகளை அலட்சியம் செய். தாய்ப்பால் குழந்தையின் உணவு மற்றும் உரிமை #tsy20130802
7.புகழ் @MEKALAPUGAZH
குருதிக் கொடை எப்போதும் கொடுக்கலாம். தாய்ப்பால் இப்போது மட்டுமே. தாயே அலட்சியம் தவிர். தாய்ப்பால் அளி . #tsy20130802
8.பச்சபுள்ள@mp_samy தாய்மார்கள் அலட்சியம் கருதினால் புட்டிப்பால். குழந்தைக்கு அவசியமென நினைத்தால் தாய்ப்பால் #tsy20130802
9.Mr.manithaN@Am_mathan என்றோ ஒரு நாள் அலட்சியமாகிப்போகும் அழகிற்காகத்தான் இன்று அலட்சியப்படுத்தப்படுகிறது தாய்ப்பால்.. #tsy20130802
10.அறுந்த வாலு@kavi_rrsk
உலக தாய்ப்பால் வார செய்தியை அலட்சியமாக பார்க்கிறார்கள் சிலர் #ஏனோ? #tsy20130802
11.ஜானகிராமன்@periyakulam ஆறு வயது வரை தாய்ப்பால் குடித்தவன் யமனையும் அலட்சியம் செய்வான் !
#tsy20130802
12.Dr. அண்ணாமலை DEEE@indirajithguru
கடவுளின் அலட்சியமோ, பெண்களின் அலட்சியமோ, பல பெண்களுக்கு தாய்ப்பால் (ஒரு)வாரம் தான்... #tsy20130802
13.நாட்டுப்புறத்தான் @naatupurathan
தாய்மொழிக் கல்வி தாய்ப்பால் போன்றது .. அதை அலட்சியம் செய்வதும் சமூகக்குற்றமே... #tsy20130802
14.சுதந்திரா@yami_tina
தாயின் ஆத்திச்சுடி : அலட்சியம் தவிர், தாய்ப்பால் தவறேல் , புட்டி பால் இகழ்ச்சி , வசம்பு கரவேல் #tsy20130802
15.வித்யா@RajaThamizhachi
தாய்பால் கொடுக்காமல் அலட்சியம் செய்யும் ஒரே விலங்கு # மனிதன் # ஆறாம் அறிவு #tsy20130802
16.N.ரஜினிராமச்சந்திரன்@
"தாய்ப்பால்"கொடுத்தால் குழந்தையின் அன்பும்கவனமும் அம்மை பால் இருக்கும்.அலட்சியம் செய்தால் பொம்மை பால் இருக்கும்#tsy20130802
17.ஆட்டோக்காரன்@anna_tuty எப்போதோ ஒருமுறை மட்டும், மாட்டுக்காரன் கயிறை கட்டுவதில் காட்டும் அலட்சியம், கன்றுக்கு தாய்ப்பால் கிட்டும்படி செய்கிறது... #tsy20130802
18.குற்றாலத்தான்@bluefortfish அன்பின் ஆனந்த யாழ் ஆயுளுக்கும் நீடிக்க 'தாய்ப்பால்' 'அலட்சியம்' தவிர்த்தாலே போதும்! #tsy20130802
19.ஞானக்குத்து@sambanths குழந்தை பிறக்கும் வலி மிகவும் வலிதான போதும் அதை அலட்சியப் படுத்தி தாய்ப்பால் கொடுத்ததை பெரிதாகச் சொல்லக்காரணம் என்ன? #tsy20130802
20.கேஷவன்:)
அலட்சியப்படுத்துவ தற்கு தாய்பாலொன்றும் அசிங்கமல்ல.. தாய்மைக்கே உரித்தான ஒன்று.
0 comments:
Post a Comment