தாத்தாவின் ஆஸ்தியை எப்படி பேரன் உதயநிதி ஸ்டாலின் சினிமா எடுக்கறேன்கற பேர்ல கரைச்சுட்டிருக்காரோ அப்படி ஹீரோ தன் தாத்தாவின் அஸ்தியை கரைக்க ரயில்ல ராமேஸ்வரம் போறார்.ரயிலில் வந்த மயிலை சந்திக்கறார்.மயிலுக்கு என்ன பிரச்சனைன்னா இயக்குநர் சேரன் பொண்ணு மாதிரி அது யாரையும் லவ்வலை, ஆனா வீட்ல பார்த்து வெச்ச மாப்ளை பிடிக்கலை, அதுனால வீட்டை விட்டு ஓடி வர திட்டம் போட்டிருக்கு .
ஹீரோவை யார்னே தெரியலைன்னாலும் அவர் தான் தன் காதலர்னு சும்மா அடிச்சு விட்ருது. ஆல்ரெடி பார்த்து வெச்ச மாப்ளையை அடிச்சு வீழ்த்துனாத்தான் பொண்ணு ஹீரோவுக்கு .! ஹீரோ ஹீரோயினைக்கூட்டிட்டு எஸ் ஆகறார். வழிப்பயணத்துல ஹீரோயின் கூட சினேகா ஆகிடுது , அடச்சே , சினேகம் ஆகிடுது. லவ் வந்துடுது . ( நாமும் எத்தனையோ பயணம் கடந்து வந்துட்டோம் ஒரு லவ்வும் வந்து தொலைய மாட்டேங்குது ;-))
அவங்க 2 பேர் லவ் என்ன ஆச்சு? என்பதே கதை
ரொம்ப சாதாரணமான , நமக்கு மிகவும் பரிச்சயமான இந்தக்கதையை ரொம்ப சுவராஸ்யமான திரைக்கதை , சம்பவங்கள் மூலம் விறு விறுப்பாக்கொண்டு போறாங்க
ஹீரோ ஷாருக்கான் நம்ம ஊர் மவுன ராகம் கார்த்திக் மாதிரி, என்ன ஒரு இளமைத்துள்ளல் , நடிப்பு , பாடி லேங்குவேஜ் , எல்லாம் அபாரம் . இந்த வயசுலயும் பாஜிகர் படத்துல பார்த்த அதே சுறுசுறுப்பு ,இளமை . வெல்டன் .
இவர் பேசும் தமிழ் , ஆங்கில , ஹிந்தி வசனங்கள் செம காமெடி கலாட்டா , கிரேசி மோகன் பாணியில் அமைந்த வார்த்தை ஜால காமெடி பெரிய பிளஸ்.
ஹீரோயின் தீபிகா அந்த புதருக்குப்பின்னால போகக்கூடாது, படுக்கக்கூடாது சாரி தீபிகா படுகோனே . தேக்கு மரம் மாதிரி வழுவழு என்ற வாளிப்பான உடம்புடன் , பாக்கு மரம் மாதிரி ஓங்கி வளர்ந்த உடம்புக்காரி ( நீ இதுக்கு முன்னால பாக்கு மரத்தையோ , தேக்கு மரத்தையோ நேர்லபார்த்திருக்கியா? சும்மா அள்ளி விடாதடா? ) இவர் முதுகில் எதுவும் அணிவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஆளான நாள் முதலா சத்தியம் செஞ்சு கொடுத்தவர் மாதிரி ஓப்பனாகவருகிறார்.
இவர் லோ ஹிப் சேலை மிகமிக அபாயகரமான ஷேர் மார்க்கெட் , பண ரூபாய் மதிப்பு போல கீஈஈஈழே இறங்கி வரும் வாகு அய்யய்யோ !.தொப்புளுக்கு கீழே 2 இஞ்ச் சேலையை இறக்கி கட்டும்மான்னு டைரக்டர் சொன்னா 6 இஞ்ச் இறக்கி கட்டும் இறக்க சுபாவம் உள்ள கிளாமர் ராணி . இவர் போட்டு வரும் வளையம் உள்ள மூக்குத்தி இவர் முக அழகுக்கு பொருந்தவில்லை என யாராவது அவரிடம் போய் சொன்னால் தேவலை ( அல்லது ஃபோன் நெம்பர் கொடுத்தா நான் மெசேஜ்ல சொல்லிக்கறேன் )
அடிக்கடி இவர் லோ கட் ஜாக்கெட்டில் துள்ளிக்குதிப்பது முயல் கதையை நினைவுபடுத்துது . ஹீரோவை விட அரை அடி உயரம் என்பதால் ஹீரோவுடனானக்ளோசப் காட்சிகளில் எல்லாம் குனிஞ்சு நடிக்க வேண்டிய கட்டாயம் , நமக்கு தாயம்
ஹீரோயின் அப்பாவாக சத்யராஜ் . கம்பீரமான தோற்றம் , ஆனால் அதிக வாய்ப்பு இல்லை. கிராமத்து தாதா தோற்றம் கனகச்சிதம். மேஜர் சுந்தர்ராஜனுக்கு அண்ணன் . ஒரே வசனத்தை தமிழில் , ஆங்கிலத்தில் , ஹிந்தியில் என 3 டைம் சொல்றார். ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறுபதம் இதோ - டேக் ஹெர் , இவளை எடுத்துக்கோ , தேரி மேரி
படம் முழுக்க தமிழ் வசனங்கள் வந்து போகுது , மும்பைல சப் டைட்டில் போட்டுத்தான் படத்தை ஓட்டனும் போல
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஓப்பனிங்க் சீனில் ஹீரோயினுக்கு ஓடும் ரயிலில் இருந்து கை கொடுத்து ஏத்தி விடும்(ரயில்ல தான்) ஹீரோ வில்லன்கள் என தெரியாம 4 பேரையும் அதே போல்ம் கை கொடுத்து ரயிலில் ஏற்றுவது செம காமெடி சீன் , தியேட்டரில் செம அப்ளாஸ்
2. அந்த ரயில் ஒரு பாலத்தில் நிற்கும்போது ஹெலிகாப்டர்ஷாட்டில் இரு புறமும் ஓடும் ஆற்றை காட்டுவ்து அபார,மான லொக்கேஷன் செலக்ஷன் ,ஒளிப்பதிவு பிரமாதம் ( மகாராஸ்ட்ராவில் உள்ள டூர் ஸ்பாட்டான லோனாவாலாவாம் - நாமெல்லாம் பேங்க்ல லோன் வாங்கிட்டுதான் அங்கே போக முடியும் ) ஹாலிவுட் படத்துக்கு இணையான காட்சி அது
3. திருமணமான மாப்பிள்ளைகள் மணப்பெண்ணை தூக்கிக்கொண்டு 300 படிக்கற்கள் உள்ள மலைக்கோயிலில் தூக்கிச்செல்ல வேண்டும் என்ற நிபந்தனைப்படி ஹீரோ ஹீரோயினை தூக்கிச்செல்லும் செண்ட்டிமெண்ட் சீன் ( இந்த சீனில் நான் அனிரூத் ஆண்ட்ரியாவை தூக்கிச்செல்வது போல் கற்பனை பண்ணிப்பார்த்துக்கிட்டேன் )
4. கூட இருக்கும் வில்லனின் அடியாட்களுக்கு தமிழ்மட்டுமே தெரியும் என்பதால் ஹீரோ - ஹீரோயின் இருவரும் பாட்டு மூலமாகவே சங்கேதமாக தகவல் பரிமாறிக்கொள்வது சுவராஸ்யம் . ஹிந்தியில் சூப்பர் ஹிட் பாட்டுக்களை அதே மெட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்பாடுவது பாலிவுட்டில் அமோக வரவேற்பு பெறும்
5. ப்ரியாமணியுடனான குத்தாட்டம் கலக்கல் டான்ஸ் , அந்த மெட்டு , டான்ஸ் கொரியோகிராபி கிழி கிழி ( நன்றி - கலா சலா சல சலா ).க்ளைமாக்ஸில் வரும் லுங்கி டான்ஸ் செம ஆட்டம் .
யு நெக் ஹிஹி
இயக்குநரிடம் சில கேள்விகள்:
1. கில்லி படத்தில் விஜய் த்ரிஷாவின் கழுத்தில் அரிவாளை வெச்சு மிரட்டி வில்லன்களிடம் இருந்து தப்பிப்பதும் , பிரகாஷ் ராஜை ஜீப்புடன் ஓட விட்டு சேத்தில் தள்ளி விடுவதும் மிக புகழ் பெற்ற காட்சி , அதை அச்சு அசல் அப்படியே காப்பி அடிச்சது ஏன்? இத்தனைக்கும் இது ஆல்ரெடி தெலுங்கில் வந்தசீன் தான் . ஒரே சீனை எத்தனை பேர்தான் சுடுவீங்க ? ( ஒக்கடு தெலுங்கு ஒரிஜினல் )
2. முத்து படத்தில் லவ் லெட்டர் கை மாறி ஆளாளுக்கு தப்பா ஆளைஅர்த்தம் பண்ணிக்கிட்டு நைட் தோட்டம் வந்து அலை மோதும் காமெடி அப்படியே சுட்டிருக்கீங்க .. முடியல( மீட் @ ஸ்டோர் ரூம்)
3. ஹீரோயினுக்கு ஃபேஸ் எக்ஸ்பிரசன்ஸ் சுத்தமா வர்லை . அதனாலதானோ என்னவோ கேமரா எப்பவும் அவர் முகத்தைத்தவிர மத்த எல்லா இடங்கள்லயும் சுத்திட்டே இருக்கு
4. ஷாருக்கான் படத்துல ரஜினி வரனும்னு கட்டாயமா? என்ன? ரஜினி இந்தப்படத்துல நடிக்கறார், ஒரு கெஸ்ட் ரோல்ல வர்றார்னு ஆசை காட்டி சும்மா ஒரேஒருபாட்டுக்கு அவர் ஃபோட்டோவ மட்டும் மாட்டி ஹீரோ ஷாரூக் ஆடுவது ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் மாதிரி இருக்கு , படு செயற்கை , இதெல்லாம் அறிமுக ஹீரோ படத்துக்கு ஓக்கே , ஷாரூக் மாதிரி சூப்பர் ஸ்டார்கள் இன்னொரு சூப்பர்ஸ்டாரை அண்டிப்பிழைக்கனுமா?
5. இளையதளபதி விஜய்& புரட்சித்தளபதி விஷால் 2 பேரும் சம்ப்ந்தம் இல்லாம ஏதாவது பஞ்ச் டயலாக் அப்பப்ப பேசுவாங்க , அந்த மாதிரி இதுல ஹீரோ எதுக்காக ஒரு டயலாக்கை அடிக்கடி ரிப்பீட்டிங்க்? - டோண்ட் அண்டரெஸ்டிமேட் த பவர் ஆஃப் எ காமன் மேன் = பொது ஜனத்தின்சக்தியை குறைச்சுஎடை போடவேணாம்
6. அலெக்ஸ் பாண்டியன் அட்டர் ஃபிளாப் ஆக முக்கியக்காரணமே ஹீரோ 80 கிமீ வேகத்தில் ஜீப்ல போய்க்கிட்டே எதிரே 120 கிமீ வேகத்தில் வரும் ஜீப் டயரை அரிவாளால் வெட்டி தள்ளும் சீன் தான் .. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத அந்தசீனைஏன் காப்பி அடிக்கனும் ?
7. கிங்க்காங்கின் மொக்கை காமெடி சீன்,இலங்கைக்கு டீசல் கடத்தும் சீன் தேவை இல்லாதது
8. படத்தின் முன் பாதி செம ஸ்பீடா போகுது , பின் பாதி டெட் ஸ்லோ . இழு இழு என இழுத்திருக்கவேண்டாம் , எடிட்டிங்க்ல இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்
9 . தனுஷ் இன் உத்தம புத்திரனில் இருந்து சில காட்சிகளை உருவியது எதுக்கு ? என் லிங்கு சாமியின் ரன் பட க்ளை மாக்ஸ் காட்சியைசுட்டது ஏன்?
10 . ஹீரோவின் பெயர் ராகுல் என வைத்தது யாருக்கு குல்லா போட?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஹீரோயின் -அந்த ஃபோன் அவருது
வில்லன்கள் -அடடா ,முதல்லியே சொல்லி இருந்தா அவரையும் தூக்கிப்போட்டிருப்போமே?
2. ஹீரோயின் -எங்கப்பா ஒரு பெரிய தலை
ஓஹோ , டீச்சரா? ஐ மீன் வாத்தியாரா?
ஹய்யோ , அவர் ஒரு டான் ( தாதா)
3. சத்யராஜ் - என்னம்மா கண்ணு... தமிழ் தெரியாதா?
4. ஐ ஆம் இன்ஸ்பெக்டர்
விச் பார்ட்?
ஹோல் பாடிக்கும்
யோவ் , எந்த ஏரியாவுக்குன்னு கேட்டேன்
5. உயிரோட வந்த நீ உயிரோட இங்கே இருந்து போக மாட்டே
6. ஆல் ஈஸ் வெல்
என்னது,? ஆயில் ஈஸ் வெல்லா?
7 , என்னங்க ? வண்டி ரிப்பேரா? ஏன் கார்ல புகை வருது?
ம், கார் தம் அடிக்குது
8. கேரளா லாரி டிரைவர் -எந்தா ஜோலி?
ஐ ஆம் நாட் ஏஞ்சனா ஜூலி
9. நான் ரொம்ப நல்லவன் , ஒரு மகளோட மாப்பிள்ளைக்கு இதைவிட முக்கியமான தகுதி என்ன வேணும் ?
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்- 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே
ரேட்டிங் = 3.25 / 5
சி
பி கமெண்ட் - ஷாரூக் ரசிகர்கள் , தீபிகா (குப்புற) படுகோனே ரசிகர்கள் பார்க்கலாம் . ஜாலி டைம்பாஸ், பெண்களும் பார்க்கலாம் . ஈரோடு வி எஸ் பில படம் பார்த்தேன்
டிஸ்கி- தலைவா- விமர்சனம் -http://www.adrasaka.com/2013/ 08/blog-post_5337.html
அ
அ
அ
ஒயிட் அண்ட் பிளாக் கில் கலர்
2 comments:
ரொம்ப நாளுக்குப்புறம் உங்க விமர்சனம் படிக்கிறேன்! உங்க பாணி இன்னும் மாறாம சுவையா சூப்பரா எழுதறீங்க! வாழ்த்துக்கள்!
senthill.. yengaluku nadigaya pathi mattum comment kettu bore adichiduchu... oru vithiyasama unga veetila iruka ponnungala pathiyum comment panreengala... yaar yyar adhula nila, muyal, paaku maram ,,, thekku maram irukanga....
naan yen ippadi ketkarenna.. seran actor dhan but avaroda family ya avar idhuvarikum kaatinadhu illa.. avroda wife kooda avanga ponnu kadhal visayathula seran manaiviya yenna pakatheenga.. unga veetila oruthiya paarthu yosinga sonnanga... andha vaarthaiku artham theriyuma unaku...
yevlo casual la thirai vimarsanathula seran ponnu pola kadhalikala nu solra.... unaku idhu easy anal andha ponnoda amma voda vali yosichiya....
vimarsanam pannu .. un naakukum oru yellai irukanum.... first line padikirape .. unnna serupala adikanum thonuchu......
internet varadhuku munnadi book la joke yezhudhina senthil illa nee...
Post a Comment