திமுக வும் ,அதிமுக வும் எப்படி ஜென்மப்பகையா இருக்கோ அப்படி 2 கிராமம்.மாத்தி மாத்தி வெட்டிகிட்டு சாகும் 2 குடும்பங்கள் .அந்த 2 குடும்பங்கள் ல இருந்தும் ஹீரோ , ஹீரோயின் எதேச்சையா கோயில்ல சந்திக்கறாங்க.ஹீரோயின் அங்கப்பிரதட்சணம் பண்ணும் அழகைப்பார்த்து ஹீரோ ஐ லவ் யூனு ஸ்பாட் ஃபைன் போடும் போலீஸ் மாமா மாதிரி ஸ்பாட் லவ் சொல்லிடறாரு.
அந்த ஹீரொயின் கேனம் எஸ் ஆர் நோ சொல்லாம இழுத்தடிக்குது. 2 பேரும் இப்படி இருக்கும்போது ஒரு ரூம்ல தனிமைல அடைபட வேண்டிய சூழல் உருவாகுது . இன்னும் தான் காதலிக்கிறோமா? இல்லையா?ன்னே ஒரு முடிவுக்கு வராத அந்த கற்புக்கரசி எதார்த்தமா ஹீரோ கொடுத்த கள் , சரக்கு கலந்த இளநீரை பதார்த்தமா சாப்ட்டுட்டு கில்மாக்கு ஓக்கே சொல்லிடுது
மேட்டர் முடிச்சதும், சிம்பு மாதிரி ஹாயா போகாம ஹீரோ ஹீரோயின் கிட்டே தன்னையே மேரேஜ் பண்ணிக்கச்சொல்லி கெஞ்சறாரு . ( இந்தக்காலத்துல எந்த ஆம்பளையும் இப்படி கேவலமா கெஞ்சிட்டு இருக்க மாட்டான் . மேட்டர் முடிச்சுட்டா பண்ணாட்டா இருப்பான் )
எதிர்பாராத திருப்பமா ( அப்படி இயக்குநர் நினைச்சுக்கிட்டாரு ) ஹீரோயினோட அப்பாவை ஹீரோ ஊர்க்காரங்க கொன்னுடறாங்க . சம்பவத்தை நெருக்கமா நேருக்கு நேரா காந்திக்கு காந்தியா பார்த்த ஹீரோயின் ஹீரோவை வெறுக்கறாரு.இடைவேளை .
இடைவேளைக்குப்பிறகு ஆல்ரெடி மேட்டரை முடிச்ச 2 கேனங்களும் மறுபடி மேட்டர் பண்றாங்களா? இல்லையா?ங்கறதுதான் சதை சாரி கதை .
துள்ளாத மனமும் துள்ளும் படத்துல விஜய்க்கு டர்னிங்க் பாய்ண்ட் கொடுத்த இயக்குநர் எஸ் எழிலுக்கா இந்த நிலைமைன்னு ஆதங்கத்தோட எல்லாரும் வெளீல வர்றாங்க
ஹீரோ விமல் . இவர் வசனம் பேசும் ஸ்டைல் பார்த்தா யாரையாவது பக்கத்துல இருக்கும் ஆளை சப் சப்னு ஓங்கி அறையனும் போல இருக்கு. அவ்வளவு கேவல்மா இருக்கு . இவர் ஹீரோயினிடம் கெஞ்சும் காட்சிகள் சகிக்கலை . அய்யொ ராமா , என்னை ஏன் இந்த மாதிரி டப்பா படத்தை எல்லாம் பார்க்க வைக்கறே?
ஹீரோயின் சந்து மாதவி.. சாரி பிந்து மாதவி . எந்த கிராமத்துல இப்படி எப்போ பாரு பூனம் பாண்டே மாதிரி தொறந்து போட்டுக்கிட்டு பொண்ணு சுத்துதுன்னு இயக்குநர் சொன்னா தேவலை . ஹீரோயின் வர்ர 56 காட்சிகள் ல 57 காட்சிகள் லோ ஹிப்ல தான் வருது . நாங்க கிளாமரை ரசிப்போம் , ஆனாலும் அதில் லாஜிக் பார்ப்போம் என்று கூறிக்கொண்டு ......
இயக்குநர் சிங்கம்புலி யும் புரோட்டா சூரியும் தான் காமெடி போர்ஷன் . அவங்களும் என்ன என்னவோ பண்ணிப்பார்க்கறாங்க . ஆனா சிரிப்புதான் வர மாட்டேங்குது . எல்லாருக்கும் சந்தானம் ஆகனும்னு தான் ஆசை , ஆனா என்ன பண்ண? கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடியறா, சவுரி வெச்ச கவுரி கமுக்கமாதன் இருக்கனும்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. பட போஸ்டர் , ஸ்டில்ஸ் டிசைன் எல்லாம் ஏதோ நல்ல ஒரு காமெடிப்படம் மாதிரி , லவ் ஸ்டோரி மாதிரி ரெடி பண்ணினது
2. எந்தப்படமும் ரிலீஸ் ஆகாத இந்த நல்ல நாளில் சோலோவா களம் இறக்குனது
3. ஹீரோயின் பிந்து மாதவிக்கு 5 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்துட்டு 25 லட்சம் ரூபாய்க்கு சீனை சுட்டுத்தள்ளினது
4. ஸ்ரேயா கோஷலை வெச்சு அம்மாடின்னு ஒரு பாட்டை பாட வெச்சது ,இமானின் இசையில் 5 பாடல்களில் 3 தேறுது
5. பானு வை ஒரு குத்தாட்டத்துக்கு புக் பண்ணினது
6. திரைக்கதை பற்றிக்கவலைப்படாம சம்பந்த சம்பந்தமில்லாம கரகாட்டம் , மயிலாட்டம் கிராமத்து ஆட்டங்களை பிட்டு பிட்டா பிடிச்சுப்போட்டது
இயக்குநரிடம் சில கேள்விகள்:
1. ஹீரோ , ஹீரோயின்க்கு மேரேஜ் ஆனதும் ஒரு குரூப் சாந்தி முகூர்த்தம் நடத்த விடமாட்டோம்னு பெட்ரூம்ல டேரா போடறாங்களே? அந்த காமெடி ஸ்கிரிப்ட் எழுதுன ஆள் கிட்டே கதைப்படி அவங்க 2 பேரும் மேட்டரை முடிச்சு மாமாங்கம் ஆச்சுன்னு இயக்குநர் சொல்லலையா?
2. தனி ரூம்க்குள்ளே அடை படும் ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் செல் ஃபோன் வெச்சிருக்க மாட்டாங்களா? ( புத்திசாலித்தனமா ஹீரோ இன்னைக்குன்னு பார்த்து நான் செல் ஃபோன் வேற கொண்டு வர்லைனு ஒரு வ்சனம் )
3. மேட்டர் முடிஞ்ச பின் ஹீரோ காட்டும் பதட்டத்தில் 100 -ல் ஒரு பங்கு கூட ஹீரோயின் காட்டலையே? பதட்டத்தைத்தவிர மத்ததெல்லாத்தையும் காட்டறாங்க
4. ஹீரோயின் ஹீரோவோட நண்பர்கள் கிட்டே 108 சுத்து சுத்தறீங்களா?ன்னு கோயில்ல கேட்கறாரு , அவருக்கு எப்படி அந்த கவுண்ட்டிங்க் தெரிஞ்சுது ?
5. முஸ்லீம் வீடுகளில் மட்டுமே மேரேஜ்க்கு மட்டன் போடுவாங்க , கிராமங்களில் கல்யாண வீடுகளில் சைவ விருந்து தான் வைப்பாங்க . ஆனா அசைவம் வெட்டற மாதிரி ஒரு மேரேஜ் விருந்து சீன் வருது
6. ஹீரொயின் ஒரு சீன்ல விசில் அடிக்கறார். ஓக்கே அதைக்கூட கேள்வி கேட்கலை , அதை ஏன் இடது கை விரல்களை வாயில் வெச்சு அடிக்கனும் . அவர் வாய் அவர் இஷ்டம் தான் . பார்க்கும் நமக்கு உவ்வே
7 . கதைப்படி சைக்கிள் ரேஸ் நடக்குது . அப்போ ஹீரோ ஹீரோயின் கிட்டே க்டலை போட்டுட்டே போறார். பேக் கிரவுண்ட்ல ரேஸ் ல கலந்துக்கிட்ட மொக்கை ஃபிகருங்க 5 பேர் சாதாராணமா சிரிச்சுக்கிட்டே சாவதானமா சைக்கிள் ஓட்டறாங்களே? அது ஸ்லோ சைக்கிள் ரேசா?
8. மேரேஜ்க்கு முன்னாடியே மேட்டரை ஹீரோயின் முடிச்சதுக்கு அவங்கம்மா எதுவுமே சொல்லலையே? ஃபேமில எல்லாரும் அப்படித்தானா?
9. விமல் கே பாக்யராஜ் ஸ்டைலை சில இடங்கள் ல காப்பி அடிக்கறார். எதுக்கு ?
10. இளநில சரக்கு கலந்து குடுத்ததும் தயக்கமே இல்லாம ஹீரோயின் சாப்பிடறாரே? ஸ்மெல் அடிக்காதா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. உனக்கு மேரேஜ் ஆகனும்னா நீ வேண்டுதலை நிறைவேத்து , எதுக்கு நாங்க?
இல்லை , நீங்க தான் 108 தடவை அங்கப்பிரதட்சணம் செய்யனும்
அப்போ ஆம்புலன்ஸ் 108க்கு ஃபோன் போடு
2. மிஸ் , ஐ லவ் யூ
யோசிச்சு என் முடிவை சொல்றேன்
யோசிச்சா வேணாம்னு தான் சொல்வே , இப்பவே சொல்
3. இந்த 3 பேர்ல யாரை முதல்ல வெட்டறது ?
இவன் கழுத்துதான் அழகா இருக்கு , அதை வெட்டலாம்
4. டேய் , இது மீசையாடா? பாத்ரூம்ல தேய்க்க வெச்சிருக்கும் பிரஷ் மாதிரி
5. சாப்பிடறது அங்கே , கை கழுவுவது இங்கே?
தண்ணீர் இங்கே தானே வருது ?
6. சமாதானம் பேச வர்றவங்க எல்லாம் கோழைங்க இல்லை
7. என் பொண்டாட்டி என் கூட சேரலைன்னா இந்த ஊர்ல ஒரு பயன் அவனவன் பொண்டாட்டியைத்தொடக்கூடாது
8. எங்க ஊர்ப்பொண்ணு பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு எல்லாம் வராது
அப்போ பஞ்சாயத்தை உங்க மக இருக்கும் வீட்டில் நடத்திடுவோமா ? என்னய்யா பேசறீங்க?
9.எல்லாப்பொண்டாட்டிங்களும் புருசனைக்கொலையா கொன்னெடுக்கத்தான் புகுந்த வீட்டுக்கே வாராக,என் பொண்டாட்டி ஓப்பனா சொல்லிட்டா
10. இதயக்கனியை உயிரோடவே விடக்கூடாது (னு ஒரு டயலாக் தேசிங்கு ராஜா ல வருது.சி எம் மேடம் கண்டுக்கலை போல)
11. இந்த ஊர்ல யாருக்கும் இயற்கைச்சாவே கிடையாது , எல்லாம் அகால மரணம் தான்
12. பால்ல விஷத்தைக்கலந்து கொடுப்போம்
அவன் குடிக்கலைன்னா
விஷத்துல பால் கலந்து குடுப்போம்
13, இவ்வ்ளவு சீரியசா பேசிட்டு இருக்கேன் , கன்னத்துல கிஸ் தர்றே?
சரி லிப் கிஸ் தர்றேன்
14. ஹலோ , மாப்ளை , அங்கே நீ எப்படி இருக்கே?
வழக்கம் போல கேவலப்பட்டுக்கிட்டேதான் இருகேன்
15. அவன் மட்டும் விருந்து சாப்பிட , நாம வேடிக்கை பார்க்கனுமா?
விருந்துன்னா அவனுக்கு ந்மட்டும்தானா? மிச்சம் மீதி நமக்கும் இருக்குமில்ல?
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்- 37
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -சுமார்
ரேட்டிங் = 2.25 / 5
சி
பி கமெண்ட் -தேசிங்குராஜா - எஸ் எழிலின் போங்காட்டம் - சி சென்ட்டர்ல மட்டும் ஓடும் - ,ரேட்டிங் - 2.25 / 5
2 comments:
படம் எப்டியோ . .
விமர்சனம் . . நல்ல காமெடி
"சந்து மாதவி '
ரொம்ப ஓவர் தம்பி . .
PADAM NALLA parunga bro. MATTERUKKU munnaadi songlaye ponnu lovekku .OK solliruchu.
Post a Comment