தங்க மீன்கள் படத்தின் சில அரிய தகவல்கள்
இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த
வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு
தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள்.
ராமின் குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக
இருந்தவர்.
அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார்.
அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த
பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க
வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருக்கும்
குழந்தை நட்சத்திரம் சாதனா, படு சுட்டி பெண்ணாக வருகிறார்.
இந்த படத்தில்
அவரின் குடும்பமே நடித்துள்ளனர். அவர் அம்மா கணக்கு டீச்சர். அவர் அப்பா
தலைமை ஆசிரியர். அவர் சித்தி ராமின் தங்கையாக நடித்து உள்ளார். பத்மப்ரியா
பெனிட்டா டீச்சர் ரோலில் மனசில் படிக்கிறார். ஆனந்த யாழை என்ற பாட்டை கேரளா
ஆரியங்காவு பக்கத்தில் பசு கடை மலையில் 5 அருவிகள் பாயும் இடத்தில் ரொம்ப
ரிஸ்க் எடுத்து படமாக்கி உள்ளனர்.
ராமின் படங்களில் ரயில் வண்டி எப்போதும்
முக்கிய இடம்பெறும். இந்த படத்திலும் முக்கிய இடம் பெறுகிறது. நாகர்கோவில்
பள்ளியில் படித்த குழந்தைகளே படத்தில் நடித்துள்ளனர். ராமின் மனைவியாக
கேரளா புது முகம் மன்சில் பதிந்து போகிறார். ராமின் அம்மாவாக ரோகிணியும்
அப்பாவாக பூ ராமசாமியும் வாழ்ந்துள்ளனர். மொத்தத்கில் தங்க மீன்கள் படம்
ஒரு அப்பா மகளின் உறவை மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒரு படிப்பினை தங்க
மீன்கள் படம் மூலம் கிடைக்கிறது.
30ந் தேதிக்கு பிறகு தங்க மீன்களை குறை சொல்லுங்கள்: ராம் வேண்டுகோள்
இதன் தயாரிப்பாளர்
இயக்குனர் கவுதம் மேனனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து
படம் வெளிவர தாமதம் ஆனது. இப்போது வருகிற 30ந் தேதி வெளிவர இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டிய ராம், நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய போராட்டத்துக்கு பிறகு இந்தப் படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகுது. கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணும் கவுதம் மேனன் சாருக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன். இரண்டு வருடம் படம் தயாரிப்புல இருந்திச்சு. என் மகளா நடிச்ச குழந்தைக்கு சில சீன்ல பல்லு இருக்கும், சில சீன்ல பல் விழுந்திருக்கும் அதுக்கு காரணம் கால இடைவெளிதான். உங்களுடைய விமர்சனங்களை மதிக்கிறேன்.
உங்கள் பார்வைகளே என்
குறைகளை குறைப்பதற்கான வழி என்பதையும் அறிவேன். வருகிற 30ந் தேதிக்கு பிறகு
விமர்சியுங்கள். அது வியாபாரத்திற்கு உதவும். நிறைகளை இப்போதே
சொல்லுங்கள். குறைகளை 30ந் தேதிக்கு பிறகு சொல்லுங்கள் என்றார்.
ராமின் தங்கமீன்களுக்கு யு சான்று!
அப்பா-மகளுக்கு இடையே
நடக்கு பாச போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை
பின்னப்பட்டுள்ளது. டைரக்டர் கவுதம் மேனன் தான் தன்னுடைய போட்டான் கதாஸ்
பேனரில் படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தார் ராம். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் எந்தவொரு காட்சியையும் நீக்காமல் யு சான்று கொடுத்துள்ளனர். மேலும் படத்தின் டைரக்டர் ராமையும் பாராட்டியுள்ளனர். தங்கமீன்கள் படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில், அடுத்தபடியாக படத்தை ரிலீஸ் தயாராகி வருகின்றனர். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தார் ராம். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் எந்தவொரு காட்சியையும் நீக்காமல் யு சான்று கொடுத்துள்ளனர். மேலும் படத்தின் டைரக்டர் ராமையும் பாராட்டியுள்ளனர். தங்கமீன்கள் படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில், அடுத்தபடியாக படத்தை ரிலீஸ் தயாராகி வருகின்றனர். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.
தந்தை-மகள் உறவைச் சொல்லும் படம் தங்க மீன்கள்!
தாய்பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தந்தை பாசம் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறேன். அதுவும் குறிப்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசத்திற்குள் ஒரு உணர்வு ஓடும். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை செல்லுலாயிடில் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன். இது கொரியன், ஜப்பானிய படங்களின் தழுவலோ, காப்பியோ இல்லை. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தகப்பனின் உணர்வு. ஒரு ஆணின் வெளிப்படுத்த முடியாத வலி இந்தப் படம். டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டரை நிமிட டிரைய்லர் ஏற்படுத்திய உணர்வை இரண்டரை மணி நேர படமும் ஏற்படுத்தும். என்றார்.
கற்றது தமிழ் ராமின் அடுத்த படைப்பு தங்க மீன்கள்!
அதன்காரணமாக சில நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒரு பாசமிகு அப்பாவாக இப்படத்தில் நடித்தாராம் ராம். அதேபோல், அவரது மகளாக சாதனா என்ற எட்டு வயதும் சிறுமியும் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர். அப்போது அதில் இடம்பெற்ற சில காட்சிகள் மனதை டச் பண்ணுவதாக இருந்தது. அதையடுத்து பேசியவர்கள் இப்படத்துக்கு பெரிய அளவிலான விருதுகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், இப்படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளாராம் ரோகிணி. படத்தின் நாயகனாக நடித்திருப்பதும் டைரக்டர் ராம்தான். அவருக்கும், ரோகிணிக்கும் பெரிய அளவில் ஒன்றும் வயது வித்தியாசம் இருக்காது. என்றபோதும், அந்த கதாபாத்திரம் ரோகிணிக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால் முதிர்ச்சியான கெட்டப் என்றாலும் விரும்பி நடித்துள்ளாராம்.
thanx - dinamalar
0 comments:
Post a Comment