நடிகர் விஜய் நடித்த தலைவா படம் இன்று வெளியாகுமா? நேற்று இரவு வரை முடிவு ஏற்படவில்லை
சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா படத்தை வெளியிடுவதில், திடீர் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, தியேட்டர்களில் இன்று, "ரிலீஸ் ஆகுமா என்ற
நிலை உருவாகி உள்ளது.
நடிகர் விஜய் - அமலா பால் நடித்துள்ள, "தலைவா படம், இன்று (9ம் தேதி) வெளியாக இருந்தது. தமிழகத்தில், 500 தியேட்டர்; உலக அளவில், 2,000 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும், 35 தியேட்டர்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 35 தியேட்டர்களிலும் படம் வெளியிட திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, மயிலாப்பூரில்
உள்ள, "ஐநாக்ஸ் தியேட்டர் உட்பட, முக்கியமான, ஒன்பது தியேட்டர்களுக்கும்,
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கும், "வெடிகுண்டு வைக்கப்படும் என,
மிரட்டல் கடிதம் வந்தது; போன் மூலம் மிரட்டல்களும் வந்தன. இதனால்,
தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இத்துடன், படத்தில்
அரசியல் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளது எனவும் தகவல் வெளியானது.
உடன்
நடிகர் விஜய், "படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் ஏதும் இல்லை; முழுக்க,
முழுக்க ஜனரஞ்சக காட்சிகள் மட்டுமே படத்தில் இடம் பெற்றுள்ளது என,
விளக்கமளித்தார்."படத்தின் கதை, எங்கள் குடும்ப கதை எனக்கூறி, திருநெல்வேலி
மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வரும், 14ம்
தேதிக்குள் படத்தின் கதை குறித்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்,
வெளியீட்டாளர் பதில் அளிக்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டது.படத்திற்கு
பல பிரச்னைகள் ஏற்பட்டதால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட
தயங்கினர்; வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தயாரிப்பாளர்,
வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம்
சென்னையில் நடந்தது.
அதில் வியாபார ரீதியான பிரச்னை குறித்து பேசப்பட்டது. பிரச்னைகளை தீர்க்க தயாரிப்பாளரும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேசரனும் முயன்றனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.படத்திற்கு, சென்சார் அமைப்பு, "யு சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருந்தாலும், "கேளிக்கை வரி விலக்கு இன்னும் அளிக்கவில்லை என, தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். "வரி சலுகை கிடைக்காவிட்டால் படத்தை திரையிட மாட்டோம் என, சிலர் கூறினர்.இந்த சூழ்நிலையில், கேளிக்கை வரி விலக்கு வழங்கும் குழு, நேற்று மாலை, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, "ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில், படத்தை பார்த்தனர். எனினும், கேளிக்கை வரி விலக்கு உண்டா என்பது இன்று தான் தெரியும்.
"தலைவா படத்திற்கு நேற்று முன்தினம் முதல், டிக்கெட் முன்பதிவு துவக்கம் என, விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால், சென்னை தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், டிக்கெட் வழங்கப்படவில்லை. "நாளை வாருங்கள் பார்க்கலாம் என, தியேட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேவி தியேட்டர் வாசலில், "தலைவா படத்தின் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. சத்யம் தியேட்டர் வாசலில் அறிவிப்பு பலகை இல்லை. மாலை வரை ரசிகர்கள் காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினர்."தலைவா படம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில், இன்று வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், நேற்று இரவு, 8:00 மணி வரை,
வினியோகஸ்தர்கள் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. அதேபோல், வெளிநாடுகளில்
வெளியீடு உண்டா? என்பதிலும், தெளிவான விளக்கம் தரப்படவில்லை.படம் தொடர்பாக
பேச்சுவார்த்தை நடத்திய சிலர், "இன்று பிரச்னை சரியாகிவிடும். உடனே படம்
வெளியிடப்படும். அல்லது வெளியிடும் தேதி மாறும் என்றனர்.
ஜெயலலிதாவை சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுப்பு : முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகர் விஜய்க்கு கொடநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.கொடநாட்டில் தங்கி, அரசு மற்றும் அரசியல் பணிகளை கவனித்து வரும், முதல்வர் ஜெ.,வை சந்திக்க, நேற்று காலை, 9:00 மணியளவில், நடிகர் விஜய், "தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் சிலர் வந்தனர்.கெரடாமட்டம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தி, கொடநாடு செல்ல அனுமதிக்கவில்லை.

15 நிமிடங்களுக்கு பிறகு,
கொடநாடு ஊராட்சி அலுவலகம் அருகே இருந்த போலீசாரிடம், "நாங்கள் முதல்வரை
சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, விஜய், கோரிக்கை விடுத்தார்.இதன் பிறகு,
முதல்வர் ஜெ.,யின் நேர்முக உதவியாளரை சந்திக்க, அனுமதி கொடுக்கப்பட்டது.
கொடநாடு எஸ்டேட் அலுவலகம் சென்ற நடிகர் விஜய், முதல்வரின் நேர்முக
உதவியாளரிடம் மனு கொடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பினார்.விஜய் கொடுத்த
மனுவில், "தலைவா திரைப்படம் வெளியிடுவதற்காக பாதுகாப்பு அளிக்க வேண்டும்
என, கூறப்பட்டு உள்ளது."முதல்வர் ஜெ., வரும், 12ம் தேதி சென்னை வரும்போது,
உங்கள் பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்துங்கள்; நீங்கள் கூறிய தகவல்களை
நாங்கள் சொல்லி விடுகிறோம் என, விஜயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
"தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி?"நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று சில மாவட்ட கலெக்டர்கள், நகரில் அரசியல் கட்சி பேனர்கள் தவிர, மற்ற பேனர்களை அகற்றும்படி, வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், "அரசியல் கட்சி பேனர் தவிர, பொது இடங்களில் உள்ள, மற்ற பேனர்களை அகற்ற வேண்டும். அகற்றுவதற்கு முன்பும், அகற்றிய பின்னரும், அந்த இடத்தை புகைப்படம் எடுக்க வேண்டும். கட்டட உரிமையாளர் அனுமதி பெற்று, கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை அகற்ற வேண்டாம் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்

."தலைவா படத்தில்,
அரசை விமர்சித்து, சில வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே,
படத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக, பேனர்களை அகற்ற உத்தரவு
பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக பேனர்களை அகற்றும்படி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எதற்காக என்பது எங்களுக்கு தெரியாது என்றனர்.
thanx - dinamalar

படம் பார்த்த ஃபாரீன் ட்விட்டர்ஸ் போட்ட ட்வீட்ஸ்
3 comments:
It's not good to post the climax twist. This is not a good review.

Obsolutely.. its not a good media manner
Post a Comment