Wednesday, August 07, 2013

தர்மபுரி இளவரசன் கொலை? - விசாரணை அறிக்கை

இளவரசன் கொலை செய்யப்படவில்லை: கோர்ட்டில் சூப்பிரண்டு தகவல்

தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:


இளவரசன் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய சாட்சிகளிடமும் விசாரணை செய்தோம்.


இளவரசன் உடல் ஜூலை மாதம் 4–ந்தேதி தண்டவாளம் அருகே கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது அவர் கையில் கட்டி இருந்த கை கடிகாரமுள் பிற்பகல் 1.30 மணியை காட்டியபடி நின்றது.


அதே நேரத்தில் தான் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த இடத்தை கடந்து சென்றிருக்கிறது. அந்த ரெயில் எஞ்சின் டிரைவர் அந்த வழியாக சென்ற போது அடிபட்ட நிலையில் எந்த உடலையும் தான் காணவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


திவ்யா மற்றும் இளவரசனின் நண்பர்களிடம் நடத்திய விசாரணையிலும் இளவசரன் தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.


இளவரசன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வந்த இந்திய மருத்துவ நிபுணர்களின் குழுவினரின் அறிக்கையிலும், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படவில்லை. அதற்கான சூழ்நிலைகளும் இருந்ததாக தெரிவிக்கப்படவில்லை.


விசாரணை முழுமையாக நடந்து முடிந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


ஆனால், இளவரசன் கொலை செய்யப்பட்டதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. எந்த சாட்சியமும் அதை நிரூபிப்பதாக இல்லை. எனவே இளவரசன் கொலை செய்யப்படவில்லை.


இவ்வாறு அந்த அறிக்கையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.


thanx  - maalaimalar

0 comments: