Wednesday, August 28, 2013

ரூபாய் மதிப்பு சரிவு ஏன் ?: என்ன செய்ய வேண்டும் நாம்?

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், 66க்கும் மேல் சரிவடைந்து, வரலாறு காணாத அளவில், 66.24ல் நிலை பெற்றது. நேற்று முன்தினத்தை விட, நேற்று, ரூபாய் மதிப்பு, 1.93 ரூபாய் குறைந்து உள்ளது.

சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. ஆனாலும், சரிவு நிலையை தடுத்து நிறுத்த முடியவில்லை.
மத்திய அரசின் தவறு:

பார்லிமென்டில், நேற்று பேசிய, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா உட்பட, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும், "நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதற்கும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு நிலைக்கும், மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம்' என, குற்றம் சுமத்தினர்.

இதுதொடர்பாக, பார்லிமென்டில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:ரூபாய் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், நிலைமைகளை, உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. ரூபாயின் வெளிமதிப்பு சரிவிற்கு, வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் காரணமாக உள்ளன.


கடந்த, 2008ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு, பல திட்டங்களை செயல்படுத்தியது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்த, 2009 முதல், 2011 வரை, பல சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால், நாட்டின், நிதி மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது.
பொருளாதார நெருக்கடி:

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியால், அந்நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்ததுடன், இறக்குமதியும் அதிகரித்தது. அதனால், கடந்த நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக அதிகரித்தது.கடந்த, 2012 ஆகஸ்ட் முதல், 2013 மே வரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நிலையாகவே இருந்தது. அதன்பின், நடப்பாண்டு, மே, 22ம் தேதி முதல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணத் துவங்கியது


.இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி, வளர்ச்சி கண்டு வரும், பல நாடுகளின் செலாவணி மதிப்பும், சரிவடைந்து வருகிறது.எனவே, ரூபாய் மதிப்பு சரிவடைவதை கண்டு, நாம் அச்சப்பட தேவையில்லை. பொருளாதார வளர்ச்சி, நன்கு அமையும் நிலையில், ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், நாம் பொறுமை காக்க வேண்டியுள்ளது. ஆனால், ரூபாயின் மதிப்பு நிச்சயமாக உயரத் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு துறைகளில் முதலீடு அதிகரிக்கவும், தாமதமடைந்துள்ள திட்டங்களை விரைந்து முடிக்கவும், நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



 மேலும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், ஏற்றுமதி குறைந்தது, பொதுப் பணவீக்கம் அதிகரித்தது மற்றும் தங்கம் இறக்குமதி உயர்வு போன்றவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக் கற்களாக இருந்தன.மேற்கண்ட சவால்கள், நாட்டின் பங்கு வர்த்தகம் மற்றும் நிதி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, நடப்பாண்டின் துவக்கம் முதல் இதுவரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 16 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதேபோன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' கடந்த ஒரு மாத காலத்தில், 8 சதவீதம் அல்லது, 1,500 புள்ளிகளை இழந்துள்ளது.

நிதி ஒதுக்கீடு:

உணவு பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்துவதால், அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவை (1.25 லட்சம் கோடி ரூபாய்) எதிர்கொள்ளும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நிதியையும் சேர்த்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 4.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.இதுகுறித்து, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டிலும், தெரிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் மட்டும், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான மானிய செலவு, 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். இதில், 10 ஆயிரம் கோடி ரூபாய், இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக செலவிடப்படும்.
ஏற்றுமதி:

நாட்டின் ஏற்றுமதி, ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில், 11.64 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,583 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், இறக்குமதி குறைந்ததால், வர்த்தக பற்றாக்குறை, 1,227 கோடி ரூபாயாக அதிக மாற்றமின்றி இருந்தது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவிற்கு காரணம்.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.
கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம்:

விசேஷ குழு அமைகிறது""ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், பிற நாடு களுடன் கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்து கொள்ள ஏதுவாக, விசேஷ குழு ஒன்று அமைக்கப்படும்,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:நிதி, வர்த்தக அமைச்சகங்கள், வங்கிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய, 7 - 8 பேர், இந்த விசேஷ குழுவில் இடம்பெறுவர். இக்குழு, பிற நாடுகளின் நிர்ணயிக்கப்பட்ட கரன்சி மதிப்பிற்கு ஏற்ப, இந்திய ரூபாயில் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, மத்திய அரசுக்கு, நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன், கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.இவ்வாறு, ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

கடந்த, 2008ம் ஆண்டு சர்வதேச பொருளாதார நெருக்கடியின் போது, பல நாடுகள், கரன்சி பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்து கொண்டன. குறிப்பாக, இந்தியா, ஜப்பான் நாட்டுடன், 1,500 கோடி டாலர் அளவுக்கும், பூடான் நாட்டுடன், 10 கோடி டாலர் மதிப்பிற்கும் ஒப்பந்தம் மேற்கொண்டது. டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும், ஒப்பந்தப்படி, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பில், இரு நாடுகளின் கரன்சிகள் பரிமாறிக் கொள்ளப்படுவ தால், சம்பந்தப்பட்ட நாடுகளின் கரன்சி மதிப்பு குறையாது என்பதுடன், அவற்றின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்காது என்பது, குறிப்பிடத்தக்கது.


 மக்கள் கருத்து



1. எவ்வளவு சந்தோசமாக சொல்கிறார் ? நான் 2005 இல் வீட்டு கடன் 7.5% வட்டியில் வாங்கினேன் தற்பொழுது 14% வட்டியில் வந்து இருக்கு. சிதம்பரம், சிங்க், அதுவாலியா போன்ற மற மண்டைகளால் வட்டியை உயர்த்தினால் பண புழக்கம் குறையும் என்று கதை விட்டு கொண்டு என் போன்ற நடுத்தர மக்களின் வாயிற்று எரிச்சலை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள் 



2. இவர்கள் சொல்வது போல் குறையாது...ஒரு டாலருக்கு நூறு ரூபாய் என்கிற அளவில் போய் தான் நிற்கும் போலும் உள்நாட்டில் ஏறிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை..யாரோ லாபம் பார்க்க பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் எல்லா விலைவாசியையும் அரசே உயர்த்துகிறது என எண்ணத்தோன்றுகிறது..இங்கே எந்தவொரு பொருளின் விலையை உயர்த்த அரசின் அனுமதி தேவை..விலையை கட்டுக்குள் வைத்திருக்கிறது..


இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் அடிக்கமுடியாது..அத்தியாவசியப்பொருட்களை முன் பேர வணிகத்தில் கொண்டுவந்து நடுத்தர மக்களை நசுக்கும் நமது அரசியல் வாதிகள்.விவசாயிக்கு விலை கிடைக்கவில்லை ஆனால் வாங்கி விற்கும் இடைத்தரகருக்கு தினசரி பல லட்சம் லாபம்..காங்கிரஸ் நம்மை மீண்டும் அடிமைகள் ஆக்கிவிட்டது...இவர்களை தூக்கி எறியும் காலம் வந்துவிட்டது..சுப.இளங்கோவன்.மஸ்கட்.


3.இன்னும் எத்தனை நாளைக்கு பொறுமை காப்பது? இவர் சொல்லும் காரணங்களில் எப்ப்போதும் உண்மை கிடையாது......ஒரு நேரம் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்ததால் இந்தியாவுக்கு பாதிப்பு என்றார்....இப்போது அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி அடைவதால் இந்திய பொருளாதாரம் பாதிப்பு என்கிறார்....அரசாங்கத்தின் தவறுகளை இவர் ஒத்துக் கொள்ளுவதே இல்லை......பொருளாதார வீழ்ச்சி, ரூபாயின் மதிப்பு குறைவு எல்லாவற்றுக்குமே முக்கியமான காரணங்கள் ஊழல், ஊழல், மற்றும் தவறான அரசாட்சி கொள்கைகளே....



..நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட அரசு இந்த அரசு.......நண்பர்களே, இதே சிதம்பரம் 2004 ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, இவர்கள் கையில் வலுவான பொருளாதார அடிப்படைகளோடு ஆட்சி ஒப்படைக்கப் பட்டது என்றார்....இவர்கள் ஆட்சியில் பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கி விட்டனர்...எல்லாத்துக்கும் காரணம் , வியாக்கியானம் மட்டுமே சொல்லுகிறார்.....நிலக்கரி ஊழல் வெளி வந்தபோது, அதுதான் நிலக்கரி வெளியே எடுக்கப்பட வில்லையே, பூமித் தாயிடமே உள்ளது என்றெல்லாம் வடிவேலு ரேஞ்சுக்கு காமெடி செய்தவர் இந்த கோமான்..... 



4.ஒரு நிதி அமைச்சர், தன்னை ஹார்வார்ட் புத்திசாலி, பொருளாதார மேதை என்று முழங்கி கொண்டு, ஒரு சாதாரண ஸ்கூல் பாய் மாதிரி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அழகா ??? இப்படித்தான் மாவோயிஸ்டுகள் பல போலீசாரை கொன்று குவித்த போது உள்துறை மந்திரியாய் இருந்து ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தார். இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் தவறான பொருளாதார கொள்கைகள், அமேரிக்கா மற்றும் மேலை நாடுகளுக்கு காவடி தூக்கும் திட்டங்கள் ஆகியவையும் அடுத்தடுத்து மெகா ஊழல்கள் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி அதனை டாலராக மாத்தி சுவிஸ் மற்றும் மேலை நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதே காரணம். 



வெள்ளை கார இத்தாலிய கிழக்கிந்திய காங்கிரஸ் ஆட்சி ஒழியாத வரை நாடு உருப்படாது. இந்த நிதி மந்திரி சொல்றாரு மறுபடியும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வலுவடையும் என்று. நான் ஒரு டாலர் 7.5 ரூபாயாக இருந்து, 15, 28, 35, 44, 55 60.....என்று பார்த்துகொண்டிருக்கிறேன். என்னிக்காவது ஏறினது இறங்கிச்சா ??? ஏன் இவரு இப்படி பீலா விட்டு மக்களை ஏமாத்துராறு ??? சீனாவின் யுவான் கடந்த 10 ஆண்டுகளில் 8.64 இல் இருந்து 6.10 என்று மாறியிருக்கிறது. பல பொருள்களை ஏற்றுமதி செய்யும் சீனா தனது கரன்சியை வலுவடைய செய்து பல நாடுகளில் இருந்து டாலர்களை குவிக்கிறது. இது ஏன் நமது நிதி அமைச்சரின் கண்ணில் படவில்லை ??? 




 நன்றி- தினமலர்

2 comments:

Unknown said...

Poor goverment .

மகேந்திரன் said...

இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனை..
மக்கள் கருத்தில் 4 ம் கருத்தை ஆதரிக்கிறேன்...