1. மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்க முடியாது - ஐகோர்ட்!!
மெட்ராஸ் கபே படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்து, தயாரித்துள்ள
படம் மெட்ராஸ் கபே. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் கதை இலங்கையில் நடந்த போரின் ஒரு பகுதியை மையப்படுத்தி
எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழர்களை தவறாக சித்தரிப்பதாகவும்,
சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் கூறி இப்படத்தை தடை செய்ய தமிழக
அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமீபத்தில் தமிழ்
அமைப்பினர் இப்படத்தை பார்த்து இந்த முடிவை எடுத்தனர். இதனால் தமிழகத்தில்
இப்படம் வெளியாகுமா என்று சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே வக்கில் ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் இப்படத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை, இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பது போன்று பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், இப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றும், ஆகவே இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ராஜேஸ்வரன் மற்றும் மதிவாணன் ஆகியோரது பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் தற்போதைய சூழலில் படத்திற்கு விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக மத்திய தணிக்கை துறையினர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைப்பட்டது.

2. அரசியல், மதச்சாயம் பூசாதீர்கள் : ஜான் ஆபிரஹாம் வேண்டுகோள்!!
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் இந்தியில் தயாரித்துள்ள படம் மெட்ராஸ் கபே.
இப்படம் இந்தியா முழுக்க இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
தமிழிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை,
இலங்கை பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவும், அதில் இலங்கை
தமிழர்களை தவறாக சித்திரித்துள்ளதாகவும் கூறி தமிழகத்தில் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி இருவாரங்களுக்கு முன்னர்
போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று
கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இப்படம் தொடர்பாக சென்னை வந்திருந்த
ஜான் ஆபிரஹாம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில், இப்படத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே ரகசியமாக பண உதவி செய்துள்ளதாக பொய்யான தகவல் வந்துள்ளது. அவர் எதுவும் உதவி செய்யவில்லை. இப்படத்தை நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து தயாரித்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தின் கதையை விரிவாக சொல்லியிருக்கிறோம். 1990களில் இலங்கையில் நடந்த ஒரு சம்பவத்தை கதையின் கருவாக கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளோம். இப்படத்தில் இலங்கை தமிழர்களை தவறாக எதுவும் சித்தரிக்கவில்லை. இது முழுக்க ஆக்ஷ்ன், திரில்லர் நிறைந்த ஒரு கமர்ஷியல் படமாகும். தேவையில்லாமல் இந்தபடத்திற்கு மதச்சாயமோ, அரசியல் சாயமோ பூச வேண்டாம். இந்த படத்திற்கு உங்களுடைய சப்போர்ட் ரொம்ப ரொம்ப தேவை என்று கேட்டு கொண்டார்.

3. மெட்ராஸ் கபே சினிமாவுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு
"மெட்ராஸ் கபே படத்தை வெளியிட, தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு
செய்யப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில், வக்கீல் எழிலரசு தாக்கல் செய்த
மனு: "மெட்ராஸ் கபே சினிமா, சர்வதேச அளவில் வெளியாகிறது. இந்தி நடிகர்,
ஜான் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின், "டிரைலர் சென்னையில்,
வெளியிட்டபோது, எதிர்த்து, போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி
நடித்தினர்.
"மெட்ராஸ் கபே படத்தில், இலங்கை தமிழர்களை, பயங்கரவாதிகள் போலவும், இந்திய அமைதிப்படை, இலங்கைக்கு சென்ற போது, தமிழர்கள் எதிராக இருந்ததாகவும், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படத்திற்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷே நிதி உதவி செய்துள்ளார். படம் வெளியானால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும். படத்திற்கு, தடை விதிக்கக்கோரி, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, தமிழக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். படம் வெளியிட, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

4. உலகம் முழுக்க மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய வேண்டும் - தமிழ் அமைப்பினர்!
சர்ச்சைக்குரியதாக கருதப்படும் மெட்ராஸ் கபே படத்தை தமிழகம் மட்டுமல்லாது
உலகில் எந்த நாட்டிலும் இப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது எனவும்,
அப்படத்தை தடை செய்ய வேண்டும் என அப்படத்தை பார்த்த பின்பு வெளியே வந்த
தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், இந்தியில்
நடித்து, தயாரித்துள்ள படம் மெட்ராஸ் கபே. குர்ஜித் சிர்கார் டைரக்ட்
செய்துள்ளார். வருகிற 23ந் தேதி தமிழிலும் டப் செய்யப்பட்டு இப்படம்
வெளிவருகிறது. இந்தப்படம் விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக
சித்தரிப்பதாகவும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை நல்லவராக சித்தரிப்பதாகவும்
கூறி சில தமிழ் அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம நடத்துவோம் என்றும்
அறிவித்திருந்தன.
இந்நிலையில் தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பை தொடர்ந்து சென்னை வந்தபோது பேட்டியளித்த ஜான்ஆபிரஹாம் இப்படத்தை திரையிட்டு காட்ட சம்மதம் சொன்னார். அதன்படி இன்று இப்படம் தமிழ் அமைப்பினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நிறைய இருப்பதாகவும் அதனால் படத்தை தமிழகம் மட்டுமின்றி உலகில் எங்கும் இந்தபடத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார். மீறி படத்தை திரையிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5. மெட்ராஸ் கபே - வை தமிழ் அமைப்பினர் நாளை பார்க்கிறார்கள்
ஜான் ஆபிரகாம் நடித்துள்ள புதிய இந்திப்படம் மெட்ராஸ் கபே. குர்ஜித்
சிர்கார் டைரக்ட் செய்துள்ளார். வருகிற 23ந் தேதி தமிழிலும் டப்
செய்யப்பட்டு படம் வெளிவருகிறது. இந்தப் படம் விடுதலை புலிகளை
பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை நல்லவராக
சித்தரிப்பதாகவும் கூறி சில தமிழ் அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றன. படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம
நடத்துவோம் என்றும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் சென்னை வந்த ஜான் ஆபிரகாம், "இது இலங்கையில் நடந்த கலவரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கதை. வேறு யாரையும் குறைத்து மதிப்பிட்டோ, உயர்த்தியோ இந்தப் படம் எடுக்கப்பட வில்லை. சந்தேகம் இருந்தால் தமிழ் அமைப்புகளுக்கு படத்தை போட்டுக்காட்டத் தயார்" என்று அறிவித்திருந்தார்.
அதன்படி நாளை (ஆகஸ்ட் 18) படம் தமிழ் அமைப்பினர்களுக்கு போட்டுக்காட்ட அதன் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்து வருகிறார். சத்யம் தியேட்டர், அல்லது பிரசாத் லேப் தியேட்டரில் படம் திரையிடப்படும் என்று தெரிகிறது.

thanx - dinamalar
6. மெட்ராஸ் கஃபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது: நடிகர் ஜான் ஆபிரகாம் சொல்கிறார்
மெட்ராஸ் கஃபே" படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றும்,
தணிக்கைக்குழுவை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் நடிகர் ஜான்
ஆபிரகாம் கூறினார்.
நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்துள்ள "மெட்ராஸ் கஃபே" படத்தை சூஜித் சிர்கார் இயக்கி உள்ளார். வரும் 23ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரில் 1980களின் பிற்பகுதியையும், 1990களின் தொடக்கத்தையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட தொகுப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளது.
ஒரு உணவு விடுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதால் இந்தப்படத்துக்கு மெட்ராஸ் கஃபே என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் "கஃபே" எங்கே அமைந்துள்ளது என்பது படத்தில் காட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை வலுக்கட்டாயமாக திரும்பப்பெறப்பட்ட பிறகு, "ரா" உளவு அமைப்பின் சார்பில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரி பாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இலங்கைக்கு போர் செய்திகளை சேகரிக்க சென்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் வேடத்தில் நடிகை நர்கீஸ் பக்ரி நடித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழர் அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இந்த எதிர்ப்பு குறித்து நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில், "மெட்ராஸ் கஃபே" பட விவகாரத்தில், ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கிறேன். வைகோ, சீமான் ஆகியோரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர்களும் எங்கள் கருத்தை மதிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இது ஜனநாயக நாடு. இந்தப் படத்தில் அடங்கியுள்ள கதைக்களத்துக்கு
தணிக்கைக்குழு ஆட்சேபம் தெரிவிக்காமல், "யுஏ" சான்றிதழ் வழங்கி இருக்கிறது
என்கிற பட்சத்தில், இந்தப் படத்தில் எதுவும் தவறாக இல்லை என்றே
கருதுகிறேன். அவர்கள் போய் தங்கள் ஆட்சேபத்தை எழுப்பட்டும். அதை
வரவேற்கிறேன். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் இந்தப் படத்தை நிச்சயம்
மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்போம்" என்றார்.
படத்தின் இயக்குனர் சூஜித் சிர்கார் கூறுகையில், "எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகிற ஒரு அரசியல் கட்சி போல, நாங்கள் எந்தப் போராட்டத்தையும் தொடங்கி விட முடியாது. ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம் உண்டு. தணிக்கைக்குழுவுக்கு மேலாக யாரும் கிடையாது. ஜனாதிபதியோ, உச்ச நீதிமன்றமோ உத்தரவு பிறப்பிக்காதது வரை ஒரு படத்தை தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது" என்றார்.
THANX - VIKATAN NEWS

0 comments:
Post a Comment