Thursday, August 08, 2013

இக்கரைக்கு அக்கரை டார்க் பச் சை - தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க்-9


 
1. VIBHU‏@GOVINDARAJEN அதிக சம்பளம் என்று வெளிநாடு செல்பவர்களை விட,கௌரவத்திற்காக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அதிகமாகிவிட்டனர். #tsy20130807
 
 
 
2. இளந்தென்றல்‏@Elanthenral #tsy20130807  வெளிநாட்டு  சம்பள பணம் கையில்   வற்றிய   தாய்ப்பாலின் ஈரத்தை  தன் பிள்ளையின்  அனல் வியர்வையில்  உணர்கிறாள் அம்மா!
 
 
 
3. ஆட்டோக்காரன்‏@anna_tuty கைநிறைய வெளிநாட்டில் சம்பாதித்த சம்பளப்பணத்தில்அடகுக்கடையில் நகையனைத்தும் மீட்டுவிட்டேன்..இளமைதான் மீட்கமுடியாமல் முங்கிவிட்டது #tsy20130807
 
 
 
4. புகழ் ‏@MEKALAPUGAZH வெளிநாட்டு சம்பளம்   வெளியே ஆடம்பரம்   உள்ளே கொப்பளம்    #tsy20130807
 
 
 
5. Sushima Shekar‏@amas32 வெளிநாட்டுச் சம்பளம் ஆனால் நம் நாட்டில் வேலை, அது தான் சொர்க்கம்! :-) #tsy20130807
 
 
 
6. Sathya‏@Power_Velu வெளிநாட்டு சம்பளம் பெற அடகு வைக்கப்படுவது தாய்,மனைவியின் நகைகள் மட்டுமல்ல, அவர்களது கண்ணீரும் தான்#tsy20130807
 
 
 
7. N.ரஜினிராமச்சந்திரன்‏@rajinirams வெளிநாடு-நல்ல சம்பளம் என்று சிலர் தங்களின் சில கனவுகளை நனவாக்கி கொண்டாலும் அவர்களின் நினைவு நம் மண்ணில் தான் #tsy20130807
 
 
 
8. புகழ் ‏@MEKALAPUGAZH ஒரு வெளிநாட்டு சம்பளம்   மூன்று தங்கைகளின் தாலி    #tsy20130807
 
 
 
9. LKG‏@chinnapiyan அன்று வெளிநாட்டு படிப்பு உள்நாட்டில் அதிகம் சம்பளம். இன்று உள்நாட்டில் படிப்பு வெளிநாட்டில் அதிக சம்பளம்  #tsy20130807
 
 
 
10 ஆட்டோக்காரன்‏@anna_tuty அப்பன் என்று ஐந்துவயது குழந்தையிடம் சுயஅறிமுகம் செய்து கொள்கையில், கையிலிருந்த வெளிநாட்டு சம்பளப்பணம் அருவெறுப்பு... #tsy20130807
 
 
 
11. Mr.manithaN‏@Am_mathan தாய்நாட்டிலிருந்து செல்லும் வரனுக்கான வரதட்சணை 'வெளிநாட்டுச் சம்பளம்' #tsy20130807
 
 
 
12. புகழ் ‏@MEKALAPUGAZH வெளிநாட்டு சம்பளம் - புதிய பலா!  வெளியே சுளை  உள்ளே முள்    #tsy20130807
 
 
 
13. நீதி அரசன்‏@FrancisPichaiah காற்றுள்ள போதே தூற்றிக்கொள் வெளிநாட்டு சம்பளம் வரும் போதே சேமித்துக்கொள் #tsy20130807
 
 
 
14. புகழ் ‏@MEKALAPUGAZH 'சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்' - வெளிநாட்டு சம்பளம்      #tsy20130807
 
 
 
15. jothi parimala‏@jothishna வெளிநாடு,சம்பளம் கேட்க இனிமை ஆனால் அங்கு தனித்து வாழும் மக்களின் வாழ்க்கை கொடுமை#tsy20130807
 
 
 

0 comments: