Wednesday, July 31, 2013

தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank - 3

1.@amas32 ஒரு உறையில் இரு வாட்கள் - மாமியார் மருமகள் இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு வீடு!  #tsy20130730


2.@amas32 மருமகளை அனுசரித்துப் போகவில்லை என்றால் மாமி யாரோ தான்!  #tsy20130730


‏3.@yami_tina ஒவ்வொரு பெண்ணும் மாமியாரை தாய் போலவும், மருமகளை மகள் போலவும் நடத்தத்தான் விரும்புகின்றனர் திருமணத்திற்க்கு முன்னால் . #tsy20130730


4.@RajaThamizhachi அம்மா பிடிக்கும், மனைவி பிடிக்கும்..ஆனால்,  மாமியார்,மருமகள் சண்டையில் அந்த ஆணுக்கு...கிலி பிடிக்கும்...:)))
 #tsy20130730

5.@SeSenthilkumar அக்கா மாமியார் ஆவதும் பேத்தி மருமகள் ஆவதுமான புதிய உறவு. அக்கா மகளை மணந்தவருக்கும் அவர்தம் மனைவிக்கும்.  #tsy20130730


6.@kiramaththan மாமியாராக வேண்டிய வயதிலும், மருமகளாகவே இருக்கிறாள், மக்கட்பேறு இல்லாதவள்!#tsy20130730

7.@kavi_rrsk சிறந்த மாமியார் மருமகளுக்கான உதாரணத்திற்கு அடுத்த வீட்டில் இருப்பவர்களை சொல்லாத வரை குடும்பம் சொர்க்கம் #tsy20130730


8.@MEKALAPUGAZH மாமியாருக்கும் மருமகனுக்கும்  வராத பிணக்கு, மாமனாருக்கும் மருமகளுக்கும்  வராத பிணக்கு-எப்படி    #tsy20130730


9.@aathirai2 மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே வித்தியாசம்தான் என்ன அது காலம்தான் 'இன்று நாளை'
 #tsy20130730


10.@arivucs மாமி,யாராக இருந்தாலும் மறு,மகளாய் இருக்கும் மருமகள்,மாமியார் மனங்கவர்ந்தவள்! #tsy20130730


11.@rkthiyagarajan மாமியார்,மருமகள் இவர்களை சமாளிப்பதை போல் கடினமான காரியம் ஆண்களுக்கு வேறு இல்லை.#இந்த பக்கம் அம்மா , அந்த பக்கம் பொண்டாட்டி. #tsy20130730


12.@ikaatupayal மின்வெட்டால் தடைபட்டன மாமியார் மருமகள் சண்டைகள் -நெடுந்த்தொடர் #tsy20130730

13.@kavi_rrsk மாமியாரிடம் சண்டைக்கு வரும் மருமகளிடம் சொல்ல வேண்டியது "இன்று போய் நாளை வா" #மாமியாராக #tsy20130730


14.@NamVoice மாமியார் மருமகள் எப்படி இருக்ககூடாதுன்னு தெரியனும்னா இப்ப ஓடுற எல்லா தொலைக்காட்சி தொடரையும் பாத்துக்கோங்க #tsy20130730
‏@

15.007suillan மாமியார் - மருமகள்  சண்டையயை பல நேரங்களில் இறுதியாக தீர்த்து வைத்தது . மண்ணென்ய், கேஸ்.அடுப்புகளும்.:((
#tsy20130730

16.@oorkkaaran 'மருமகள்' என்பது பயிற்சிக் காலம்.. 'மாமியார்' என்பது அதை அமல்படுத்தும் நேரம். #tsy20130730


17.@bluefortfish 'மாமி'யார், 'மரு'மகள் என பெயரிலேயே ஒரு அந்நியம் தொனித்து விடுவதாலேயே இருவருக்கிடையில் ஒற்றுமை இருப்பதில்லையோ என்னவோ! #tsy20130730

18.@trajuvel தன் பிள்ளையோடு தன் உரிமைகளையும் மருமகளுக்கு பரிசாக தருபவள் மாமியார்!!! #tsy20130730


19.@raajeswaran பெண்களின் சின்ன சின்ன சுயநல மனப்பான்மையே மாமியார் மருமகள் பிரச்சனையின் ஆணிவேர் #tsy20130730


20.@grvijai குடும்பத்தின் குத்துவிளக்கு மருமகளென்றால், மாமியார்தான் கலங்கரைவிளக்கம்!! #tsy20130730


21.@sambanths தன் அண்ணிக்குப் தான் போடும் கட்டளைகளை மருமகளும் தன் பெண்ணின் மாமியாரிடம் தான் எதிர்பார்த்தவைகளை மாமியாரும் உணர்ந்தால் ஏது சண்டை #tsy20130730


22.@GOVINDARAJEN புதிய மருமகள் கண்ணாடியை போன்றவள்.அதன் முன்னர் நின்று மாமியார் புன்னகைத்தால்,அதுவும் புன்னகைக்கும்.சீறினால் அதுவும் சீறும்.
#tsy20130730


23.@paramporul மருமகளோ, மாமியாரோ : இருவரும் ஒளிந்திருப்பது அவளுக்குள்ளேதான்.
 #tsy20130730
24.@shaan_64 நான்  மருமகளா வந்தப்ப எனக்கு குடுத்த அதே அறிவுரைய இப்ப நான் மாமியார் ஆனவுடனும் எனக்கே குடுக்குறாங்க! என்ன கொடுமை இது:) tsy20130730

0 comments: