தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின்
கணவர் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக
மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார்
கூறுகின்றனர்.
காதல் திருமணத்தால் கலவரம்
தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், காதல் திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த
சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை இளவரசன் கடத்தி்ச்
சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன்
சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று
இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின்
விசாரணை தள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை
இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயிலில் பாயந்து தற்கொலை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
தர்மபுரி: தர்மபுரி திவ்யாவை
காதலித்து திருமணம் செய்து கொண்ட இளவரசனின் உடல் இன்று ரயில்வே
தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்
என்று கூறப்படும் நிலையில், சந்தேக மரணமாகவும் கருதப்படுகிறது.
தான் இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை என்று திவ்யா
நேற்று நீதிமன்றத்தில் கூறிய நிலையிலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில்வே
தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், தண்டவாளத்தின்
அருகிலிருந்து அவரது பைக் மற்றும் கைப்பை கைப்பற்றப்பட்டதோடு, அவரது சட்டை
பையிலிருந்து 2 கடிதங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
144 தடை உத்தரவு
இதனிடையே இளவரசனின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட
பதட்டத்தினால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து
மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக,
தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த திவ்யாவும். நத்தம் காலனியை
சேர்ந்த இளவரசனும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின்
காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் 3 தலித் கிராமங்களில் உள்ள வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கலப்பு திருமணத்தால் நடந்தனைந்த வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா உயர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தாயாருடன் செல்ல விரும்புகிறேன் என்றும் இளவரசனுடன் இப்போது போக விரும்பவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தாயாருடன் திவ்யா செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.
இந்த நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தேன்மொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம்
உள்ள தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3.30மணிக்கு இளவரசன் உடலை
காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
இளவரசனின் மோட்டார் சைக்கிள், கைப் பை, சட்டைப் பையில் இருந்து இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்து
1. காதல் எனும் போர்வையில் அந்த மகளை பெற்றோரிடம் இருந்து
பிரித்தனர்....தகப்பன் உயிர் போச்சு...இப்போது, அதே காதல் மகனை பெற்றோரிடம்
இருந்து பிரித்துள்ளது......பாழாய்ப்போன காதல்............பெற்றோரின் மனதை
நோகடித்து அப்படி என்ன காதல் வேண்டிக் கிடக்கு? பெற்றோரால் பிறந்த நாம்,
அவர்களை பகைத்து வாழ்ந்து பயன் என்ன? பெற்றோர், பிள்ளை உறவை முறிக்கும்
வகையிலான காதலை யாரும் ஆதரிக்காதீர்கள்......சமூக நீதி என்று பசப்ப
வேண்டாம்....பெற்றோரின் மன வலியை யாரும் சட்டை செய்வதில்லை..
2. காமம் சில சமயம் காதல் எனும் போர்வையில் உயிர்களை காவு வாங்கி
விடுகிறது...உண்மை அன்பான காதலி உயிரிழப்புக்கு பின் அணு அணுவாக வேதனைகளை
தான் அனுபவிப்பாள்....வெறும் காம காதல் வேதனை தராது...மாறாக வேற்று உறவை
தான் தேடும்..நல்ல உலகமடா இது...
3. பெண்களே.....உண்மை காதல் இல்லாவிட்டால் தயவுசெய்து திருமணம் செயாதீர்...உங்கள் வேலை முடிந்ததும் இடத்தை காலி பண்ணி விடுங்கள்....
4. காதலிப்பதில் உண்மையான ஆண்கள் எப்போதும் மிக கவனத்துடன் செயல்படுவது
நல்லது....போன உயிர் மீண்டு வராது..எப்படி போனது என்பதை விட....இனி வராது
என்பதை காதல் செய்யும் உண்மையான ஆண்மகன்கள் யோசிக்க வேண்டும்....பெண்களை
நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே என்ற பழைய பாடல் நினைவு வருகிறது....இறந்து
போன அன்பருக்காக ஆண்டவனிடம் வேண்டிகொள்வோம்...
5. இரண்டு பேரை பலிகொடுத்து தன் கூற்றை நிருபித்து கொண்ட "பா ம க" ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியாகவேனும்.
6. பெற்றோர்கள் இளம் வயது பிள்ளைகளை பக்குவ படுத்தி வளர்க்க வேண்டும்....
7.
நிதானம் இல்லாத வயதில் எடுத்த விபரீத (திருமணம் உட்பட ) முடிவு பெற்றோரின்
நிலை மற்றவர்களுக்கு இது ஒரு படிப்பினை . பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்
மற்றும் நாம் வாழும் சமூகமும் நல்ல பண்பாட்டினையும் பழக்கத்தையும்
கற்றுத்தர வேண்டும் .
8. அது தான் இப்பொழுது தயாரிக்கும் படங்கள் எல்லாம் 80 % சமுதாயத்தை
சீரலிப்பதாகவெ உள்ளன... அப்பாவை, டேய் டாடி, என்றும், எருமை என்றும்
நகைசுவை காட்சிகளில் அழைப்தாக வந்தால் எப்படி இருக்கும்... முன் காலத்தில்
ரெங்கா ராவ் நடித்த படங்கள், ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று
சமுதாயம் கற்கும் அளவிற்கு இருக்கும்... மக்களாக பார்த்து திருந்த
வேண்டும்..
9.
சாதிகள் இல்லையடி பாப்பா என்பது உண்மை தான். ஆனால் அதனை சாதி சமய
சிந்தனையில் மூழ்கி விட்ட சமுதாயத்தில் ஒரே அடியாக, ஒரே நாளில் சாதி அற்ற
நிலையை உருவாக்க முடியாது. இரண்டு மரணங்கள்: ஒன்று திவ்யாவின் தந்தை
தற்கொலை, அடுத்தது திவ்யாவின் முன்னாள் கணவர் மரணம். இந்த இறப்புகளை
தவிர்த்து இருக்க முடியுமா? முதல் இறப்பை தொடர்ந்து நிகழ்ந்த துயரமான
நிகழ்வுகள், கொடுமைகள், உடமை இழப்புகள் என பட்டியல் நீளும். இளம்
தலைமுறையினர் நன்கு சிந்தித்து செயல் பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வெறும் உடல் ரீதியான கவர்ச்சிக்கு இடம் கொடுத்து, பின்பு வேதனை படுவதை விட.
பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சாதி யை ஒழிகின்றேன்
என்று வீராப்பு பேசும் சாதிய தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் சாதியை
ஒழித்து, நல்ல சமுதாய தலைவர்களாக மிளிர வேண்டும். படிக்கின்ற சின்ன பசங்கள்
படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் திரைப்படங்கள் சீர்திருத்தம்
என்ற (போர்வையில் சாதியை ஒழிகின்றேன் என்று, காதல், கத்திரி காயை உருவாக்க
வேண்டாம். சமுதாயம் உருப்பட உங்கள் படம் இருக்கட்டும். அல்லது நீண்ட காமிடி
படம் தயாரித்து மக்களை சிரிக்க வையுங்கள்.
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்
7 comments:
நீங்க என்ன தான் காட்டுக் கத்து கத்தினாலும்,ஜாதி இருக்கு!,இருக்கு!!,இருக்கு!!!
ஒரு தொழில் ஆரம்பிக்க எவ்வளவு முன்னெச்செரிக்கை தேவைப்படுது..! வாழ்க்கையை ஆரம்பிக்கிற காதலுக்கு ஏன் அந்தளவு எச்சரிக்கை இல்லாமல் போனது..?
தலைவா trying your ph. from sterday y switch off ???
விடலை பருவ பெண்களை வித விதமான இரு சக்கர வாகனங்களில், கவர்ந்திழுக்கும் கெட் அப்பில் வந்து மயக்கி குடும்பத்தை நாசமாக்குவது தேவை யற்ற செயல். இரண்டு பெரும் வேலைக்கு பொய் 25 வடக்கு மேல் காதல் செய்தால் இந்த சமூக பிரச்சினைகள் வராது. குறைந்தது இரண்டு வருடம் வேலைக்கு போனால் தான் கொஞ்சமாவது பொறுப்பும் அக்கறையும் வரும். அதற்கு பிறகு வருவது தான் காதல்.
காதல் இனம் மொழி பார்த்து வருவதில்லை என்று அன்று சொன்னார்கள்
ஆனால் இன்று இந்த மூன்றும் பார்த்து காதல் செய்தால் தான் காதல் வாழும் என்று நினைக்கிறன்
நீர்க்குமிழ் போன்ற தற்காலிக கவர்ச்சியிலே தள்ளப் பட்டு இப்படி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்ட இவர்களைப் பார்த்தாவது.. பின்வரக் கூடிய யுவன்களும் யுவதிகளும் தங்கள் கொள்கைகளை நடவடிக்கைகளை சீர்ப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக..!!
தன்னை விட வயது குறைவான ஓர் வாலிபனை 'தம்பி'யாக ஏற்க வேண்டிய ஓர் வயது மூத்த பொறுப்பான பெண் திவ்யா, தானும் காதல் வலையில் சிக்கி அந்த அப்பாவி இளவரசனையும் சிக்கவைத்து.. இன்றைக்கு ஊரும் தனது வாழ்வும் சின்னாபின்னப் பட்டுக் கிடப்பதைப் பார்க்கையில் என்ன சொல்வதன்றே யாருக்கும் விளங்கவில்லை..
வாழ்க்கையில் யாரும் உணர்ச்சிவசப் படக் கூடாது.. அதைவிட முக்கியமாக, காதலில் நிச்சயம் யாரும் உ.வ.படவே கூடாது என்பதை இந்த சம்பவங்கள் நமக்கெல்லாம் உணர்த்திக் கொண்டே இருக்குமென்று கருதுகிறேன்..
இங்கு கருது சொன்ன ஒருவரும் இந்த காதலுக்கு காதல் எதிர்ப்பல்ல ,கண்றாவி ஜாதி தான் எதிர்ப்பு என்பதை சொல்லவில்லை. இது நம் மக்களின் உள் மனதில் புரையோடி போயுள்ள ஜாதி வெறியின் வெளிப்பாடே.........
Post a Comment