டீ ,காபி கூட குடிக்காம சுத்த சைவம் மட்டும் சாப்பிடும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பசங்களை இந்த பொண்ணுங்க கண்டுக்கவே மாட்டாங்க . தண்ணியைப்போட்டுட்டு தெருவோரம் விழுந்து கிடக்கும் பன்னாடைப்பரதேசிங்க , ஊர்ல சண்டித்தனம் , ரவுடித்தனம் பண்ணிட்டு திரியும் ரவுடிங்க , பொறுக்கிங்க , மொள்ள மாரிங்க இவங்களைத்தான் விழுந்து விழுந்து காதலிப்பாங்க . அப்படி ஒரு கிராமத்து ( நல்ல)ரவுடியை காதலிக்கும் ஹீரோயின் என்ன ஆகறாங்க என்பதே கதை .
இப்படியே கதை சொல்லிட்டா போர் அடிச்சுடும் என்பதால் அம்மா செண்ட்டிமெண்ட்ஸை அப்படியே மாங்காய் துண்டுகள் ல மிளகாய்ப்பொடி தூவுவது மாதிரி தூவி இருக்காங்க .
அம்மா மீது அதீத பாசம் உள்ள ரவுடியா எம் சசிகுமார் அசால்ட்டாக நடிக்கிறார். டி ஆர்க்குப்பின் வெள்ளித்திரையில் வெற்றிப்பவனி வரும் தாடிக்காரர்.
எம் சசிகுமாருக்கு கிடைக்கும் ஆடியன்ஸ் வரவேற்பு ஆச்சரியம் அளிப்பதாய் இருக்கு . தியேட்டரில் அவர் பேசும் வசனங்களுக்கு , சில ரி ஆக்ஷன்களுக்கு அப்ளாஸ் மழை !!
ஆனால் அவர் விருமாண்டி கமல் ரேஞ்சுக்கு முயற்சி செய்வதும் , எம் ஜி ஆர் மாதிரி தன் கேரக்டரை வடிவமைத்துக்கொள்வதும் ரொம்ப ஓவர் . இதே மாதிரி 4 படங்கள் வரிசையா வந்தா போர் அடிச்சிடும். பேட்டர்னை மாத்துங்க பாஸ்,,.
பத்தாங்கிளாசே இப்போத்தான் படிக்கும் பக்கா ஃபிகர் லட்சுமிமேணன் தான் ஹீரோயின் . கும்கியில் கும்மென வந்த வர் இதில் இன்னும் கொஞ்சம் பூசிய உடம்பில் இருக்கார் . ( எல்லாம் ஒரு வெற்றிப்பரவசம் தான் ) .இவரது கனகாம்பர நிற உதடும் ,மயில் தோகையில் இருக்கும் கண் மாதிரியான மயக்கும் கண்ணும் , திருஷ்டியில் கூட அழகு சிருஷ்டியாய் அமைந்த கன்னத்து தழும்பும் வரப்பிரசாதங்கள் . இவரது ஆடை அணியும் அழகு படத்துக்கு படம் கண்ணியமும் , அழகும் கூடுகிறது சபாஷ்..
( வர்ணிப்பை நிறுத்திக்கறேன், லிமிட் தாண்டக்கூடாதாம் - ஃபோனில் உத்தரவு. பிளாக் ரெகுலரா படிப்பாங்களாம் , அவ்வ் )
ஹீரோவின் அம்மாவாக வரும் சரண்யா அக்மார்க் கிராமத்து சினிமா அம்மா. பல காட்சிகளில் இவர் எல்லாரையும் நடிப்பில் தூக்கி சாப்பிடுகிறார், க்ளைமாக்ஸில் இவரது ஆக்ரோஷம் மட்டும் கொஞ்சம் செயற்கை .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. வில்லன்கள் வம்புக்கு இழுக்கும்போது தானே களத்தில் இறங்காமல் ஹீரோ ஒரு சின்னப்பையனை தடி வரிசை சுத்திக்காட்டச்சொல்லும் இடமும் , அந்தப்பையன் செம கலக்கலாக சிலம்பாட்டம் ஆடுவதும் தியேட்டரில் கைதட்டல்கள் 6 நிமிடங்கள் அள்ளிக்கிச்சு.. செம பில்டப் சீன் .
2. நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் சார்பாக ஹீரோ ஹீரோயினிடம் லவ் லெட்டர் கொடுத்துட்டு வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு வெட்க தயக்கத்துடன் ஓடும் காட்சி அக்மார்க் எம் சசிகுமார் முத்திரை . செம சிரிப்பு
3. ஹீரோயின் - ஹீரோ மேல் ஆசைப்படுவது , காதலை நாசூக்காக வெளிப்படுத்துவது அதைத்தொடர்ந்து வரும் காதல் காட்சிகள் இதம்
4. டூயட் காட்சிகளிலும் சரி , குத்தாட்டபாடல் காட்சிகளிலும் சரி திரையில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் உடைகளில் கண்ணியமோ கண்ணியம். பார்த்து பார்த்து உடைகளை தேர்வு செய்த ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு
5. சரண்யாவின் அம்மா பாச நடிப்பு தாய்மார்கள் மனதை தொடும் விதம் மிக இயல்பாக அமைத்தது அதற்கு உயிரோட்டம் அளித்த சரன்யாவின் பிரமாதமான நடிப்பு
6. ஹீரோவை விட ஹீரோயின் 6 செமீ உயரம் என்பதால் எப்போதும் லாங்க் ஷாட்டிலேயே ஹீரோவை காட்டி சமாளிப்பதில் ஒளிப்பதிவாளருக்கு வெற்றி . சாமான்யனின் கண்ணுக்கு இருவரும் ஒரே உயரம் என்றே தோணும்
7. இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை ஆங்காங்கே பயன் படுத்தி இருப்பது புத்திசாலித்தனம் ( உபயம் - சுப்ரமணிய புரம் - இரு பொன் மணி )
8. ஹீரோவுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பில்டப்பை கொடுத்து க்ளைமாக்சில் வைத்த ட்விஸ்ட்
9. படிச்ச பொண்ணான ஹீரோயினிடம் படிக்காத ஹீரோ மடிச்சு விட்ட லுங்கியை எடுத்து விட்டு வாத்தியாருக்கு சொல்வது போல் அடக்க ஒடுக்க மாக வணக்கம் போடுவதும் , பெருமிதம் கலந்த வெட்கத்தோடு ஹீரோயின் அதை ரசிப்பதும் செம செம
10 . ஹீரோயினை காதலிக்க ஏங்கும் அந்த 4 பசங்க பண்ணும் அலப்பறைகள் , திட்டங்கள் , கலட்டாக்கள் இன்று போய் நாளை வா, கண்ணா லட்டு தின்ன ஆசையா பாதிப்பென்றாலும் ரசிக்க வைக்கிறது
11. ஹீரோயினின் தோழியாக வரும் அந்த தெத்துப்பல் அழகி கவனிக்க வைக்கும் அழகு , நடிப்பு
கீழே உள்ள ஸ்டில்லில் மஞ்சக்காட்டு மைனா தான் நான் சொன்ன ஹீரோயின் தோழி
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. தன்னை மாப்பிள்ளை பார்க்க வரும் பெண் வீட்டார் மேல் ஹீரோ வேணும்னே அவங்களை வெறுப்பேற்ற அவர்கள் மேல் வாமிட் எடுக்கும் காட்சி உவ்வே... இந்த மாதிரி காட்சியை சென்சார் எப்படி அனுமதிக்குன்னு தெரியலை . ஆபாசம் , வன்முறைக்காட்சிகளை கட் பண்ணுவது மட்டும் அவர்கள் வேலை அல்ல . இந்த மாதிரி அசூயையான காட்சிகளை கட் பண்ணுவதும் அவர்கள் வேலை தான்
2. எம் சசிகுமாருக்குன்னு தனி பாணி இருக்கும்போது எதுக்கு பருத்தி வீரன் கார்த்தி பாடி லேங்குவேஜ் , விருமாண்டி கமல் மாதிரி அடிக்கடி மீசை முறுக்கும் மேனரிசம்?
3. வீடே பற்றி எரியுது . ஹீரோ ஒரு பெட்ஷீட்டை போர்த்திட்டு அந்த பொண்ணை அசால்ட்டாக ஒரு தீக்காயம் கூட ஆகாம காப்பாத்தறதெல்லாம் ரீலோ ரீல்
4. ஆடுகளம் படத்தின் பின்னணி இசையை ஆங்காங்கே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கும் வாகை சூடவா இசை அமைப்பாளர் ஜிப்ரான் பற்றி கண்டுக்கவே இல்லையே , ஏன்?
5. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவரும் விதத்தில் படமாக்கப்ப்ட்டிருந்தாலும் நந்தா ஸ்டைலில் சரன்யா வரக் வரக் என வில்லனை கழுத்தை அறுப்பது ஓவர். இன்னும் கண்ணியமாக காடி இருக்கலாம்
6. சரண்யா பேங்க்ல டெபாசிட் பணம் போட்டு வெச்சிருக்காங்க . அந்த பாண்ட் பேப்பரை அடமானமா வெச்சு கடன் கேட்கறாரு ஒரு பிரைவேட் ஆள் கிட்டே . அந்த இடத்துல ஒரு வசனம் . மெச்சூரிட்டி பீரியட் முடியாம பணம் எடுக்க முடியாது அப்டினு . அது தப்பு . எடுக்கலாம். வட்டி கட் ஆகும் அவ்வ்ளவுதான். இந்தக்காட்சியைப்பார்க்கும் பாமர ஜனங்க மனதில் பேங்க் பற்றி தவறான எண்ணம் ஏற்படும் .
மனம் கவர்ந்த வசனங்கள்
1. நீ குடுக்கற பரிசு பார்த்து அவ அப்படியே ஷாக் ஆகனும்.
அப்போ கரன்ட் கம்பியைத்தான் குடுக்கனும்
2. நிஜ வாழ்க்கைல யும் சரி.சினிமாவிலயும் சரி.பொண்ணுங்க சல்லிப்பசங்களைத்தான் லவ்வு பண்ணுதுங்க
3. பல ஆபத்தான சந்தர்ப்பங்கள் அமைஞ்சும் நம்ம உயிருக்கு எதுவும் ஆகறது இல்லையே? அதுக்கு என்ன அர்த்தம்? மனிதனின் சாவு அவன் கைல இல்ல
4. லேடி -யோவ்.நான் சொன்னதை எப்பய்யா கேட்டே? பகல்லயும் சரி ,நைட்லயும் சரி
5. ஒரு பொண்ணு நினைச்சா மட்டும் தான் நீயும் ,நானும் ,யாரும் ஆம்பளை.
6. குடிகாரப்பயலுக்கும் கோவக்காரப்பயலுக்கும் வாக்கப்பட்ட பொண்ணுங்க வாழ்க்கை வீணாத்தான் போகும்
7 பொண்ணு எப்பவாவது உன்னைப்பார்த்து வெட்கச்சிரிப்பு சிரிச்சா உன் மேல
லவ்வுன்னு அர்த்தம்.எப்போ பாரு கெக்கெபிக்கேனு சிரிச்சா லூசுன்னு அர்த்தம்
8. ஆம்பளை கெட்டுப்போனா ( உதவாக்கரையா ) அவன் குடும்பம் தான் அழியும்.பொம்பளை கெட்டா அவ வம்சமே அழியும்
9. தரைல விழுந்த பூவை தலைல வெச்சா குடும்பத்துக்கு ஆகாது
10. கடவுள் இல்லாத கோயிலும் ,கரகம் இல்லாத திருவிழாவும் எதுக்கு ?
11. நான் எதுவும் செய்யலையேம்மா?
ம்க்கும், செஞ்சிருந்தாத்தான் குழந்தை பொறந்திருக்குமே?
12. உன் கிட்டே வாழ முடியலைன்னு ஒருத்தி செத்துப்போனா நீ எப்படி ஆம்பளை ஆக முடியும் ?
13. ஒரு ஆம்பளை தன்னை ஆம்பளைன்னு சொல்லிக்கறதை விட அவ பொண்டாட்டி அவனை ஆம்பளைன்னு சொல்லிக்கறதுல தான் பெருமை
14. நல்லவங்க எப்பவும் நல்லா இருக்கனும், அதுக்கு நாம குறுக்கே நிக்கக்கூடாது
14. பெத்த அம்மா, கட்டிக்கப்போற பொண்ணு 2 பேரும் நல்லவங்களா அமைவது ஒரு ஆணுக்கு கிடைக்கும் வரம்
15. என் பையன் சிங்கம் மாதிரி இருப்பான், ஆனா பேரு புலி
16. டேய், அவன் கிஸ் அடிக்கறானே? உதட்டை அப்படியே குடிக்கறானா?
17. பொம்பளை சாபம் விட்டா புழுப்பூத்துத்தான் சாவோம்னு நம்பிக்கை உள்ளவன் நானு, அதனால உன் பாவம் எனக்கு வேணாம்
18. போலீசையே அடிச்சுட்டானா? ரைட்டு , இன்னைக்கு இருக்குடி கச்சேரி
19. பொண்ணு முகம் மட்டும் லட்சணம் இல்லை , முழுசும் லட்சணம் தான் .
20. அம்மா, எப்போ வேணாலும் சாவு வரும்னு தெரியற என்னை மாதிரி ரவுடிங்க ஒரு பொண்ணை நினைக்கறது பாவம்மா..
டேய்.. கல்யாணம் பண்ணிக்கறது பாவமா?
ஆமா, அது பெரும்பாவம்
சி பி கமெண்ட் - குட்டிப்புலி - எம் சசிகுமார் ன் அதே பார்முலாப்படம் - ,பி .சி சென்ட்டர்களில் சுமாரா ஓடிடும்விருதாச்சலம் கலெக்டரே! ஊர்ல தியேட்டர்ல 70% பேர் சரக்கு அடிச்சுட்டு
பார்சல் புரோட்டா சாப்ட்டுட்டு இருக்காங்க.என்ன பண்ணிட்டு இருக்கீங்க?( செக்ண்ட் ஷோ @ விருதாச்சலம் )
விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
குமுதம் ரேங்க் - ஓக்கே
ரேட்டிங்க் - 2.75 / 5
2 comments:
கலக்கல்
பார்களில்
பொருட்கள் விலை தாறு மாறாகவும் . . .
நாற்றம் அதிகமாகவும்
உள்ளதால் . .
திரை அரங்குகள் திருட்டு பார்களாக தமிழகம் முழுதும் மாறி
வருகின்றன . . .
அம்மாவின் இரண்டாண்டு சாதனைகளில் முக்கிய சாதனை . . . இது தான் தம்பி
Post a Comment