Sunday, June 30, 2013

அத்தனைக்கும் ஆசைப் படு க்காதே

 
வைத்தீஸ்வரன் கோயில் குளத்தில் பொரி போட்டால் மீன் கள் முன்னோர் வடிவில் வரும் என ஐதீகமாம்

 வைத்தீஸ்வரன் கோயில் குளத்தில் பொரி போட்டால் மீன் கள் முன்னோர் வடிவில் வரும் என ஐதீகமாம்


1. அத்தனைக்கும் ஆசைப் படு க்காதே


---------------------


2. பைக்க ஓட்டும் போது ரெண்டு பக்கமும் பாத்து ஓட்டுங்க, ஏன்னா எந்தப்பக்கமும் ஃபிகர் ஸ்கூட்டில வரலாம் 



---------------------


3. வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.# எருமை மாடு மாதிரி வளர்ந்தும் அறிவு வளரலையே



-----------------------------


4.  பொண்டாட்டி இருப்பவர்கள் பேயைபார்த்து பயப்படுவதில்லை #,மனோதைரியம் மிக்க மணவாளர்கள்



--------------------------


5.  நான் என்ன சொன்னாலும் எதிர்ப்பேச்சு பேசாமல் "உடன்படு" என்றாள் மனைவி.கடைசியாக சொன்னதை செய்தேன் ;-)



------------------------

மீன் க்கு பொரி போடாம மீனா ட்ட கடலை போடும் விடலை  


மீன் க்கு பொரி போடாம மீனா ட்ட கடலை போடும் விடலை



6.  நான் சின்னப்பையனா இருந்தப்போ கூரைப்புடவைன்னா பீரோல வைக்கக்கூடாது.கூரை மேல வைக்கனும்னு நினைச்சிருந்தேன்



-------------------------


7. டியர்.பேசாம நீங்க எங்க காலேஜ்லயே வாட்ச்மேனா சேர்ந்துடுங்களேன்.



ம்.ஏன் பேசிட்டே சேரக்கூடாதா?



--------------------------------


8.  காதலி நம்மிடம் "உங்க பேர் என்ன ? மறந்துட்டேன் " என கேட்கும்போது உருவாவதே பேரதிர்ச்சி



----------------------------



9. வாழ்நாள் ரோதனையாளர் விருது தந்தால் எல்லாரும் அவங்கவங்க சம்சாரத்துக்கு குடுத்துடுவாங்க ?



-------------------------


10. ஹன்சிகா மோத்வானிக்கு மார்க்கெட் பீக்ல இருக்கற டைம்ல அத்வானிக்கு மார்க்கெட் இல்லை , இதுதான் வாழ்க்கை



-----------------------------



கும்பிட்டுக்குங்க a
 ராம பிரான் ஜடாயுவை தகனம் செய்த் இடம்


11. அங்கிள்னு மாமா பொண்ணோ , அத்தை பொண்னோ கூப்பிட்டா அங்”கிள்ளு”னு அர்த்தமாம் # மாமா பொண்ணே சொல்லுச்சு ;-)




----------------------------


12. உன்னிடம் குறை சொல்ல எதுவுமே இல்லை என்பதே ஒரே குறை



--------------------------


13. ஆம்பளைங்கள்ல ரெண்டே வகை தான்



1. தலைக்கு தேங்கா எண்ணெய் தடவுபவர்கள்


2 தடவுபவர்கள்


-----------------------


14. மாமாவுக்குத்தெரியாம அவர் பொண்ணை தூக்கிட்டுப்போனா அது கடத்தல், பொண்ணுக்கே தெரியாம தூக்கிட்டுப்போனா அது கள்ளக்கடத்தல்




-----------------------------


15. யார் மீதோ இருந்த கோபத்தை உங்க கிட்டே காட்டிட்டேன்.ம்.இது தேவலை.என் மீது இருக்கும் அன்பை வேறு யாரிடமும் காட்டிடாதே!



---------------------------
ராம பிரான் ஜடாயுவை தகனம் செய்த் இடம்
 aஅ


16. போலீஸ் - பொண்ணுங்களை பாலோ பண்ணுனியாமே.நடடா ஸ்டேஷனுக்கு.



கேடி - லேடி போலீஸ் இருந்தா பாலோ பண்ணிட்டே வந்துடுவேன்



---------------------------


17. திறமைசாலிகள் அதிகம் பேசுவதில்லை.,புத்திசாலிகள் புதியவர்களிடம் அதிகம் பேசுவதில்லை.திருமணமான அபாக்யசாலிகள் (ஆண்கள் ) பேசுவதே இல்லை."



--------------------------


18. பிகரு பெரு அன்னக்கொடியா இருந்தா கொடி இடையா இருக்கனும்னு எதிர்பார்க்கக்கூடாது சாப்பாட்டு ராமியா க்கூட இருக்கலாம்



--------------------------


19. டியர்.மழைக்குளிரில் உன்னைப்பார்த்ததும் பற்கள் தந்தி அடிக்குது.



சும்மா அளக்காதீங்க.தந்தி சேவையைத்தான் நிறுத்தீட்டாங்களே?



------------------------------


20. மணம் ஆகும் வரையே ஆணுக்கு மதிப்பு.ஆகி விட்டால் அவ மதிப்பு



----------------------------
சிதம்ப்பரம் - வைத்தீஸ்வரன் கோவில் - அபிராமி மெஸ் - சைவம் - பிரமாதமான பிராமின் மெஸ்.டோண்ட் மிஸ்்a
சிதம்ப்பரம் - வைத்தீஸ்வரன் கோவில் - அபிராமி மெஸ் - சைவம் - பிரமாதமான பிராமின் மெஸ்.டோண்ட் மிஸ்் 
குளம்
 a
தீபா ராதனை
 தீபா ராதனை 
ஹி ஹிa
சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம்
சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம் 

Friday, June 28, 2013

அன்னக்கொடி (யும் கொடிவீரனும் ) - சினிமா விமர்சனம்

a


ஹீரோ ஆடு மேய்க்கிறவரு.  அப்போ ஹீரோயின் மட்டும் ஐ ஏ எஸ் கலெக்டராவா இருக்கப்போகுது? அதுவும் சுள்ளி பொறுக்கும் கள்ளிதான். ஒரு டைம் ஹீரோ கால்ல  முள் குத்தும்போது ஹீரோயின் தன் செருப்பைத்தர்றா. ஹீரோ அதுக்கு முன்னால  பொம்பளையைய்யும் பார்த்ததில்லை , லேடீஸ் செப்பலையும் பார்த்ததில்லை போல . அந்த செருப்புக்கு முத்தம் கொடுக்கறார் , மோந்து பாக்கறார் . இன்னும் என்ன என்ன கெரகம் எல்லாமோ பண்றார் ( படிக்கற உங்களுக்கே வாமிட் வர்ற மாதிரி இருக்கே? பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும் ?)

2 பேரும் லவ் பண்றாங்க . ஹீரோயின் அம்மாக்காரி ஒத்துக்கலை.பெண் கேட்க வந்த ஹீரோவையும்  , ஹீரோ அப்பாவையு,ம்  அவமானப்படுத்தி அனுப்பறா. புரட்சித்தலைவி தன் கட்சிக்காரங்களை எப்படி கேவலமா நடத்துவாரோ அதை விட 100 மடங்கு கேவலமா நடத்தறார். ஹீரோ வை கோ மாதிரி பொங்கி எழுந்து ஹீரோயின் அம்மாவை ஓங்கி உதைச்சுடறாரு. போலீஸ் கேஸ் ஆகி 6 மாசம் உள்ளே போறாரு 


அந்த சைக்கிள் கேப்ல  வில்லன் கூட ஹீரோயினுக்கு மேரேஜ் ஆகிடுது .மேரேஜ் மட்டும் தான் ஆச்சு ஆனா வேற எதுவும் ஆகலை ( ஏன்னா இது தமிழ்ப்படம் ) 




வில்லன் ஏன் ஹீரோயினை மேரேஜ் பண்ணியும் அவ கூட மேட்டரே பண்ணலை அப்டிங்கறதுக்கு ஒரு கேவலமான ஃபிளாஸ்பேக் மேட்டர் இருக்கு. என்ன பெரிய சஸ்பென்ஸ்  வேண்டிக்கிடக்கு இந்த குப்பைப்படத்துக்கு? அதையும் சொல்லிடறேன். சின்ன வயசுல வில்லனுக்கு படாத இடத்துல பட்டு பொட்டுனு போயிடுது .  கிளி செத்த கிளி . கோவிந்தா  கோவிந்தா .


 வில்லனோட அப்பா மருமக மேல அதாவது ஹீரோயின் மேல ஆசைப்படறாரு. அந்த மேட்டர் தெரிஞ்சு வில்லனே தன் அப்பாவை சதக் .  தான் எதுக்கும் லாயக்கில்லாதவன்னு தெரிஞ்ச  கில்மா லேடியை சதக் . தனக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்  இந்த உண்மையை ஊருக்கு சொல்லிடக்கூடாதுன்னு அவரையும் ஒரு சதக் . மொத்தத்துல படமே சதக் சதக் தான் .

படத்தோட ஹீரோ யாரோ லக்‌ஷ்மணாம் ,. அய்யோ பாவம் . ஓப்பனிங்கே சரி இல்லை . ஆள் நல்லா தான் இருக்கார் . ஆனா அவருக்கு வாய்ப்பு குறைவு . 


 தமிழ் இனத்தலைவருக்கும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும் ஒரு ஒத்துமை என்னான்னா 2 பேருமே தன் வாரிசை எப்படியாவது முன்னுக்கு கொண்டாந்துடனும்னு பாடா பாடு படறாங்க . ஆனா அதுக்கு நம்மை ஏன் இப்படி பாடாப்படுத்தனும் ? 


மனோஜ் தாஜ்மஹால் ல ஏ ஆர் ரஹ்மான் இசை அமைச்சே அட்டர் ஃபிளாப் ஆன பட ஹீரோ. அவரை வில்லன் ஆக்கி படம் பூரா ஹீரோ மாதிரி அலைய விட்டா எவன் உக்காந்து பார்ப்பது ? இந்த லட்சணத்துல அவர் எந்திரன் ரஜினி மாதிரி பஞ்ச் டயலாக் வேற , சகிக்கலை . ( அவர் ம்மேமேமே என க்ளோசப் ல கத்தும்போது அப்பா சாமி முடியல)


ஹீரோயின் கார்த்திகா . அவரை விட அவர் முதுகு நல்லா நடிச்சிருக்கு .தாயைப்போல பிள்ளை , நூலைப்போல சேலைங்கறது மாதிரி ராதா முதுகு மாதிரி கார்த்திகாவுக்கும் முதுகு நல்ல அகலம் தான். ஆனா அவர் புருவம் ராதாவை விட நீளம் . அடேங்கப்பா . என்ன தான் கிராமியப்பெண்ணா மேக்கப் போட்டாலும் அதையும் மீறி அவர் முகத்துல ஒரு சிட்டி களை ஓடுது . 

முதல் மரியாதை டைம் ல எல்லாம் பாரதிராஜா படத்தில் ஒரு கண்ணியம் இருக்கும் . ஆனா இதுல காட்சிக்கு சம்பந்தமே இல்லாம கவர்ச்சிக்காட்சிகள் திணிக்கப்பட்டு ஒரு நல்ல கலைஞன் வியாபாரத்துக்காக விலை போனதை பறை சாற்றுது . யூ டூ பாரதிராஜா?




 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. இதுதான் என் லட்சியப்படம்னு பாரதிராஜா பிரஸ் மீட் ல அடிக்கடி உதார் விட்டு பில்டப் பண்ணினது

2. படத்துல  தன் பையன்  மனோஜ் தான் மெயின்  அப்டிங்கற விஷயத்தை ரகசியமா வெச்சுகிட்டது ( மேட்டர் லீக் ஆனா ஒரு பய படம் பார்க்க வர மாட்டானே? ) 


3. இது லைஃப் டைம் கேரக்டர்மா, உங்கம்மாவுக்கு எப்படி முதல் மரியாதையோ அப்படி உனக்கு அன்னக்கொடி அப்டினு கார்த்திகா கிட்டே பீலா விட்டு முடிஞ்ச வரை கிளாமர் காட்ட வைத்தது 



4. ஜி வி பிரகாஷ் குமார்  சைந்தவி கூட ( மேரேஜ் வேலைகள் )  பிசியா இருந்ததால இசைல  பின்னணி இசைல கவனம் செலுத்தலைன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதது


5. ஆவாரங்காட்டுக்குள்ளே  ஆடோட்டும் புள்ளே ,  போறாளே போறாளே  என்னை விட்டு , காடை முட்டை கண் அழகி  மாடு முட்டும் மார் அழகி  என 3 பாட்டு கேட்கும்படி இருக்கு. பாடல்கள் எடுத்த விதத்தில் மட்டும் பழைய பாரதிராஜா மனம் கவர்கிறார்




இயக்குநரிடம் சில கேள்விகள்  



1. தன் கண் முன்னே தன் முன்னால் காதலி புருஷனுடன் சந்தோஷமா வாழ்ந்தாலே காதலன் இன்னொரு மேரேஜ் பண்ணிக்க 1000 தடவை யோசிப்பான். ஆனா தன் காதலி நல்லா வாழலை , மேட்டரே நடக்கலை என்ற விஷயம் தெரிஞ்சும் ஹீரோ எப்படி இன்னொரு  மேரேஜும் பண்ணிக்கிட்டு ஒரு குழந்தைக்கு அப்பாவும் ஆகறாரு?


2. தன் மனசில் காதலனை வெச்சுக்கிட்டு என்ன நிர்ப்பந்தத்துல ஹீரோயின் வில்லனை மேரேஜ் பண்ணிக்க ஒத்துக்கிட்டா? என்பதற்கு சரியான விளக்கம் படத்துல இல்லை  ( ஹீரோயின் அம்மா  வில்லன் கிட்டே கடன் வாங்கிக்கிட்டார் என்பதற்கான காட்சிகளே இல்லை )


3. கதை நடக்கும் கால கட்டம் 1960 மாதிரி தெரியுது. போலீஸ் யூனிஃபார்ம் மட்டும் தான் அப்டி காட்டுது 


4. வில்லன் “ நீ அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டே” கேரக்டர். ஆனா அவர் எதுக்கு பலான லேடி வீட்டுக்குப்போறார். போய் அவமானப்படறார்? 


5.  வில்லன்  மேட்டர்க்கு லாயக்கில்லைனு தெரிஞ்சும் எதுக்கு ஒரு மேரேஜ் பண்ணிக்கறார்? மனைவியை கொல்றார்? மீண்டும் ஹீரோயினை எதுக்கு மேரேஜ் பண்றார்?


6. சப்பாத்திக்கள்ளி செடி இலைல முள்ளால் கீறி எழுதுனா பால் வடியும் , ஆனா சுண்ணாம்புல எழுதுன மாதிரி  நீட்டா எழுத்துக்கள் இருக்கே , எப்படி? இதை ஒரு சிட்டி சப்ஜெக்ட் எடுக்கற டைரக்டர் எடுத்தா சரி தெரியலைன்னு விட்டுடலாம், யூ டூ பா ரா? 


7. வில்லன் கில்மா லேடி வீட்டுக்கு போறார். அவ மேட்டருக்கு 5 ரூபா கேட்கறப்ப அவ்வளவா?  என எஸ் ஆகறார். அதே ஆள் ஹீரோயின் அம்மாவை போலீஸ் ல இருந்து ஜாமின்ல எடுக்க 20 ரூபா செலவு பண்றார் , அது எப்படி?  ஹீரோயின் மேல ஆசைபட்டு அப்டி செஞ்சாரா? அவரால தான் எதுவுமே முடியலையே? 


8. காசு கொடுத்தா யாரா இருந்தாலும் ஓக்கே சொல்லும் கில்மா லேடி அந்த 3 பேர் கோழி கொழம்பு வேணும்னு பூடகமா கேட்கும்போது ஏன் துரத்தி விடனும்?

9. ஹீரோயின் தன் பேரை அன்னக்கொடின்னு சப்பாத்திக்கள்ளி இலைல எழுதறா. அப்போ அங்கே வரும் ஹீரோ ( ஆடு மேய்ப்பவர் )  என்ன எழுதனும்? அன்னக்கொடிப்ரியன், அன்னக்கொடி நேசன் இப்படித்தானே எழுதனும் , எதுக்கு கொடி வீரன்? அப்டினு எழுதறார்? இவர் வீரரா? ( டைட்டிலை நியாயப்[படுத்த ? ) 


10. ஒரு சீன்ல ஒரு பிச்சைக்காரி ஹீரோயின் அம்மா கிட்டே வர்றா. அவளுக்கு எதுக்கு அவ்ளவ் மேக்கப்?  ( டான்ஸ் மாஸ்டர் மாதிரி )


11. நட்ட நடு ராத்த்ரி 12 30 மணிக்கு வில்லன் ஹீரோயினை துரத்திட்டு ஓடறார். ஊரு சனமே தூங்கிட்டு இருக்கு. ஆனா ஒரு லேடி அப்போ தான் குப்பை கொட்ட வாசலுக்கு வருது . அந்த நேரத்துக்கு யாராவது குப்பை கொட்ட வருவாங்களா?



12. வில்லன் ஹீரோவோட சம்சாரத்தை கடத்திட்டுப்போறார். எதுக்கு ஹீரோ உட்பட எல்லாரும் பதை பதைக்கறாங்க ? வில்லன் தான் அதுக்கு லாயக்கில்லாதவன் ஆச்சே?


13. வில்லன் தன் மனைவியை கொலை பண்ணி தற்கொலை மாதிரி செட் பண்ண தூக்குக்கயித்துல மாட்டி விடறாரு . தூக்கு போட்டுக்கிட்டு செத்தா நாக்கு வெளீல தள்ளி இருக்கனுமே? அப்படி இல்லாதப்ப ஊர் சனங்க ஏன் சந்தேகப்படலே? போலீஸ் விசாரணை பண்ணலை?


14. கார்த்திகா ஒரு டைம் ஆவேசம் ஆகி வில்லன் கிட்டே “ நீ என் புருஷன் தானே , பாயை போட்டாச்சு , வாடா பார்க்கலாம் “ என போரிங்க் பைப் லேடி ரேஞ்சுக்கு இறங்கி கூப்பிடுவது மகா மட்டமான இயக்கம் . அந்த சீனில் காமிரா ஆங்கிள் ஆபாசம்


15. நான் ஆம்பளைடி 1000 வீட்டுக்குப்போவேன், நீ பொம்பளை போன்ற கேவலமான ஆணாதிக்க வசனங்கள் எதுக்கு?



 மனம் கவர்ந்த வசனங்கள்  


1. கோழி திருடுனவன் கோளாறா தப்பிச்சுக்கிட்டானாம்.கோழி இறகுல காது குடைஞ்சவன் மாட்டிக்கிட்டானாம் ( கி ராஜ நாராயணனின்   கோபல்ல கிராமம் நாவலில் )


2. என்னை பரிகாசம் பண்ண உனக்கு வயசு பத்தாதுடி . 



நான் வயசுக்கு வந்து பல வருசம் ஆகுதுடா.சீர் செலவுக்கு பயந்து வீட்ல சடங்கு வைக்கலை


3. வாங்குன கடனை கட்ட முடியலையா? நீ கட்டுன மனைவியை  என் கூட அனுப்பி மறு சடங்கு பண்ணிடு. சீர் நான் பண்ணிடறேன்





4.  ஆத்துத்தண்ணி ஒரு ருசி.ஊத்துதண்ணி ஒரு ருசி .சுனைத்தண்ணி மூலிகை ருசி  ( பாலகுமாரனின்  தலையணைப்பூக்கள் நாவல் வசனம் )


5. வாத்தியாரைக்கண்டா , போலீசைக்கண்டா ஓடுவோம்





6. செருப்புப்போடாம போனா கால்ல முள் தான் குத்தும் , ஆனா இடைய சாதி நாம செருப்புப்போட்டுட்டுப்போனா  ஆளையே குத்திடுவாங்க



7. இந்த வண்டில நான் ஏறிக்கவா?


 ஏய் , ஓசி டிக்கெட் ஏறிக்கோ



8. உங்களைப்பார்த்ததுல எனக்கு கையும் ஓடலை ,காலும் ஓடலை


 கால் ல என்ன சக்கரமா கட்டி வெச்சிருக்கே? ( ஒய் ஜி மகேந்திரனின் வசூல் சக்கரவர்த்தி நாடக வசன் உல்டா)


9.  என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா , அந்த குடிசைல தான் இருக்கா


 அப்டியா, பார்ப்போம் , என்னடி உன் பொண்ணு பெருசாகிட்டான்னு சொன்னே? சிறுசாத்தானே இருக்கு?



10.  என்னடி குத்த வைக்க  வர்றியா?

 ஓசில குத்த வைக்க எங்க குல சாமி ஒத்துக்காதே?


 காசு கொடுத்தா எங்க குல சாமி ஒத்துக்காதே


11. கில்மா லேடி - சித்திரை வெய்யில்ல உஷ்ணம் ஜாஸ்தின்னு ஒரு பயலும் வர மாட்டேங்கறான்


12. வில்லன் - உனக்கு 5 ரூபா ஜாஸ்திடி


 கில்மா லேடி - அதுக்காக ஏலமா போட முடியும்


13. போலீஸ் -   நீ எந்த ஊரு?

லேடி -  எந்த ஊர்ல இருந்து பிடிச்சுட்டு வந்தீகளோ அதே ஊருதான்


14. கடிச்சுக்க ஒண்ணும் இல்லை


 பொய். உன் கிட்டே 20 இருக்கு

 புரியல


 உன் கை விரல்கள் , கால் விரல்கள் ( நல்ல வேளை )

15. நக்கறதுன்னு ஆன பின் நாகரீகம் பார்த்தா நல்லா இருக்குமா? 





சி பி கமெண்ட் -அன்னக்கொடி - தயாரிப்பாளர்க்கு அன்னக்காவடி - மணிவண்ணன் ஆத்மா சாந்தி அடையட்டும் - படம் அட்டர்பிளாப் - டி வில போட்டாக்கூட பார்க்க முடியாது



ரேட்டிங்க்  - 2 / 5 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் - 39 

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்



படம் பார்க்கும்போது  போட்ட ட்வீட்ஸ்


1. ஈரோடு அபிராமியில் அன்னக்கொடி ரிலீஸ் இல்லை.ஸ்ரீ கிருஷ்ணாவில் மட்டும் தான் ரிலீசாம் # 10 58 க்கு சொல்றாங்க.அடேய்


2.   பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாட்டு ஹம்மிங்கை BGMஆக பல காட்சிகளில் ஜி வி பிரகாஷ் உல்டா 



3. அய்யய்யோ.தியேட்டர்ல இருந்த 12 பேர்ல 5 பேர் இடை வேளை விட்டதும் கிளம்பிட்டாங்ளே.பயமா இருக்கு # அகொ

4. கதைல செம ட்விஸ்ட்.ஹீரோயின் கார்த்திகாவுக்கும் வில்லன் மனோஜ் க்கும் முதல் இரவு


5. அடேய்.பர்ஸ்ட் நைட்க்கு எந்தப்பரதேசியாவது சரக்கடிச்சுட்டு வருவானா ?,அநியாயமா சீன் போச்சே :-(


6. தியேட்டர்ல இருக்கற 5 பேர்ல 2 செட் காதல் ஜோடி.படத்தை விட இவங்க காட்ர படம் செம







வீடியோப்பதிவு




வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 28 6 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. அன்னக்கொடியும் கொடிவீரனும்..


16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தவர் பாரதிராஜா. அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், முதல்மரியாதை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து இயக்குனர் இமயமாக உயர்ந்தவர். 

சென்னை நகருக்குள்ளே முடங்கியிருந்த சினிமா ஷூட்டிங்கை கிராமத்து கதை களத்திற்‌கு கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. கிராமும், கிராமத்து மண்சார்ந்த மனிதர்களும் இவரது படத்தில் பெரும் பங்காக இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது கனவுப்படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படக்கதையை கையில் எடுத்து, படத்தையும் முடித்துவிட்டார். இப்படம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

* அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பூஜையை தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், கிராமத்து ஆட்டம், பாட்டு கொண்டாட்டத்துடன், வீரப்ப அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படு அமர்க்களமாக ஆரம்பித்தார் பாரதிராஜா. மேலும் இந்தவிழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களை தனது கிராமத்திற்கு அழைத்து வந்தார்.

* ஆரம்பத்தில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் டைரக்டர் அமீர், இனியா, புதுமுகம் லக்ஷ்மண், கார்த்திகா ஆகியோர் நடிப்பதாக இருந்து, படத்திற்கான ஷூட்டும் நடந்தது. ஆனால் பின்னர் படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அமீர், இனி‌யா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

* அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. சுமார் 10 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவை ராதா ஆட்டிப்படைத்தார் என்றால் மிகையல்ல. அதேப்போல் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள கார்த்திகா, அம்மா ராதாவை காட்டிலும் சிறப்பாக நடித்துள்ளாராம். நிச்சயம் கார்த்திகாவும் தென்னிந்திய சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை பிடிப்பார் என்று பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்தளவுக்கு கார்த்திகா இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளாராம்.

* தன்னுடைய சினிமா கேரியரில் எத்தனையோ ஹீரோக்களை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, இந்தப்படத்திலும் சினிமாவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு இளைஞனை, ஒரு கல்லூரி மாணவனை, ஒரு கிரிக்கெட் வீரனை ஹீரோவாக்கி இருக்கிறார். அவர் லக்ஷ்மண். இவர் பாரதிராஜாவின் நண்பர் மகன் ஆவார்.

* பாரதிராஜா மகன் மனோஜ் ரொம்பநாளைக்கு பிறகு அன்னக்கொடி படத்தில் சடையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அப்படியே கிராமத்து இளைஞராகவே மாறியிருக்கிறார். இவரது நடிப்பும் பெரிதும் பேசப்படுமாம்.

* சினிமா வாசனையே இல்லாத மதுரை மண்ணின் மக்கள் அனைவரும் இத்திரைப்படத்தில் கதாபாத்திரமாகவே மாறியிருப்பது மிகச்சிறப்பு.

* இந்தப்படத்தின் கதைகளம் மதுரை என்பதால் இயக்குனர் பல நாட்கள் அலைந்து திரிந்து, இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத அழகிய கிராமம் ஒன்றை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி உள்ளார். மேலும் படத்தின் ஒரு பகுதியை படமாக்குவதற்கென கலை இயக்குனர் மோகன் மகேந்திரன் அவர்களால் ஆண்டிப்பட்டி அருகே 20 கி.மீ தொலைவில் மலைஅடிவாரத்தில் பெரும் பொருட்ச்செலவில் ஒரு கிராமமே உருவாக்கப்பட்டது.

* வைரமுத்து, அறிவுமதி ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கங்கை அமரனும் இப்படத்திற்காக பாடல் எழுதியுள்ளார்.

* இதுவரை தனது படங்களுக்கு இளையராஜா, எ.ஆர்.ரஹ்மா‌ன் ஆகியோரை இசையமைக்க வைத்த பாரதிராஜா, தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாரை இப்படத்திற்கு இசையமைக்க வைத்திருக்கிறார்.

* படத்தில் வசனம் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்டத்தின் கருமாத்தூரை சேர்ந்த ரோஸ் முகிலன் என்பவரை இயக்குனர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

* தன்னுடைய படங்களுக்கு இதுவரை நிவாஸ், கண்ணன் ஆகி‌யோரை மட்டுமே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்த பாரதிராஜா முதன்முறையாக சாலை சகாதேவன் என்கிற புதிய ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

* கதாநாயகனும், கதாநாயகியும் ஆடு மேய்ப்பவர்களாக நடிப்பதால் 200 ஆடுகளும், 100 மாடுகளும் பிரத்தியேகமாக வாங்கப்பட்டு படமாக்கப்பட்டது.

* அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தில் காதலோடு யாரும் ‌எதிர்பார்க்க முடியாத சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் இயக்குனர் இமயம் சொல்லியிருப்பது இன்றைய சினிமாவில் புதுசாக இருக்கும்.

* படத்தின் பூஜையை போலவே படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக மதுரையில் நடத்தினார். இதில் இசைஞானி இளையராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஜாம்பவான்களுடன் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பல திரை நட்சத்திரங்களையும் மதுரைக்கு வர வழைத்து அசத்தினார். 

படம் முழுக்க எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தை கூட்டம்தான்- கார்த்திகா பிரமிப்பு
Karthikas annakodiyum kodiveeranum experience
சில படங்களில் எங்குபார்த்தாலும் ஆளாக தெரிகிறது என்பார்கள். ஆனால் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திகா நாயகியாக நடித்துள்ள அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் எந்த காட்சியில் பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தையாகத்தான் தெரிகிறதாம். 
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் ஆடு இல்லாத காட்சியே இல்லை என்கிறார்கள். இதுபற்றி அப்படத்தின் நாயகி கார்த்திகாவைக்கேட்டால், உண்மைதான். அந்த படத்தில் நான் ஆடுமேய்க்கும் பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன். அதனால் இப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமானபோது, ஆட்டுடன் பழகியிருக்கிறாயா? என்றுதான் கேட்டார்கள். நானோ, ஆட்டுக்குட்டியை இதுவரை தொட்டுக்கூட பார்த்ததில்லை என்று சொன்னேன்.

அதையடுத்து, என்னை தேனிக்கு கூட்டிச்சென்று, சில ஆடுமேய்ச்சிகளிடம் சொல்லி, ஆடுகளை எப்படி மந்தையாக அழைத்து செல்வது என்பதை சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது எந்த மாதிரி ஆடுகளுக்கு புரியுற மாதிரி குரல் கொடுக்க வேண்டும் என்றும் சீட்டி அடித்து காட்டினார்கள். இப்படியாக நடிப்பு பயிற்சியை விட, ஆடு மேய்ப்பதற்காகத்தான் நிறைய பயிற்சி எடுத்தேன் என்று சொல்லும் கார்த்திகா, படத்தில் எனக்கு முதுகெழும்பு போன்ற கதாபாத்திரம் என்பதால், நிறைய சீன்களில் நான்தான் வருவேன. நான் வந்தால் ஆடுகளும் வந்தாக வேண்டும். அதைப்பார்த்துதான் எங்கு பார்த்தாலும் ஒரே ஆட்டுமந்தை கூட்டமாக தெரிவதாக சொல்கிறார்கள் என்று தெளிவுபடுத்துகிறார் கார்த்திகா.
ஈரோடு அபிராமி , ஸ்ரீ கிருஷ்ணா வில் ரிலீஸ்  

பட விமர்சனம்-

அன்னக்கொடி (யும் கொடிவீரனும் ) - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/06/blog-post_28.html


2. அம்பிகாபதி -நடிகர் தனுஷ் 'ராஞ்சனா' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வருகிறது. கதாநாயகியாக சோனம்கபூர் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.

அம்பிகாபதி அமராவதி போன்று உயிர்ப்பான காதல் கதையாக இதை எடுத்துள்ளனர். பனாரஸ் பகுதியில் துறுதுறுவென வெட்டியாக சுற்றித் திரியும் இளைஞன் தனுஷ். பெரிய படிப்பறிவு இல்லாதவர். அவருக்கும் பணக்காரப் பெண் சோனம் கபூருக்கும் சந்திப்பு நிகழ்கிறது. நட்பாக பழகுகிறார்கள். பின்னர் காதல் வயப்படுகின்றனர். பின்னர் சோனம்கபூர் உயர் படிப்புக்காக டெல்லி செல்கிறார். அங்கு தன்னுடன் படிக்கும் அபய் தியோலை சந்திக்கிறார்.

அபய்க்கு சோனம் கபூர் மேல் காதல் வருகிறது. தனுஷ் காதல் என்னவாகிறது என்பது மீதி கதை. இப்படம் குறித்து தனுஷ் கூறும் போது, அம்பிகாபதி சிறந்த கதை. இந்த படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சோனம் கபூர் கூறும் போது, அம்பிகாபதி நல்ல காதல்கதை என்றார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
 வி எஸ் பி , சண்டிகா , அன்னபூரணி என 3 தியேட்டர்களில் ரிலீஸ்
 
3. துள்ளி விளையாடு  -ப்ரியமுடன் படம் மூலம் நடிகர் விஜய்க்கு பெரிய பிரேக் கொடுத்தவர் வின்சென்ட் செல்வா. யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர். த்ரில்லர் கதைகளை கையாள்வதில் தேர்ந்தவரான இவர் இப்போது கையிலெடுத்திருப்பது துள்ளி விளையாடு என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையை. படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா. 
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜெயபிரகாஷ், சூரி, சிங்கமுத்து, சென்ராயன் (ரவுத்திரம் – வில்லன்) சூப்பர்குட் லஷ்மண், மதுரை சுஜாதா (நாடோடிகள்) மதன்பாபு என பிரபலங்கள் கைகோர்த்துள்ளனர். இந்தப் படத்தை ஆர்பி ஸ்டுடியோஸ் சார்பில் கோவிந்தராஜ் தயாரித்துள்ளார் . எஸ்கே பூபதி ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் செல்வாவின் ஃபேவரிட் இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா இசை
  ஆர்பி ஸ்டூடியோஸ் வழங்கும் படம், ‘துள்ளி விளை யாடு’. புதுமுகங்கள் யுவராஜ், தீப்தி மற்றும் பிரகாஷ் ராஜ், ஜெயபிரகாஷ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். வின்சென்ட் செல்வா இயக்கி உள்ளார். இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.  படம் பற்றி வின்சென்ட் செல்வா கூறியதாவது: ஒரு சிங்கத்தை கலாய்க்கும் மூன்று எலிகளின் கதைதான் படம். இதோடு காதலும் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை காட்டியிருக்கிறோம்.

சிங்கமாக பிரகாஷ் ராஜும், எலிகளாக யுவராஜ், சென்ராயன், சூரியும் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹைலைட்டாக ராஜஸ்தான் பாலைவனத்தில் எடுத்த ஒட்டக சேஸிங் காட்சி அமைந்திருக்கிறது. ஒட்டகங்கள் இவ்வளவு வேகமாக ஓடும் என்பதை இதுவரை பார்த்ததில்லை. இந்த படத்தின் ஷூட்டிங்கில்தான் பார்த்து மிரண்டேன். படத்தின் பாடல்களை மும்பையில் வைத்து நடிகர் விஜய் வெளியிட்டார். பாடல்களையும் டிரைலரையும் பார்த்த அவர், சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டினார். அந்த பாராட்டு எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு கலகலப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஈரோடு  ராயலில் ரிலீஸ் 

4. BALUPU-





Ravi Teja is a perfect fit for mass stories which combine action and entertainment in proper proportions. He earned the title of Mass Maharaja by dishing out such movies successfully. His dialogue delivery and timing has immensely impressed masses. As a result he became c/o address for mass movies in Tollywood. But of late his movies have become routine and started to bomb at box office. Alerted by this, Raviteja is bringing Balupu with utmost caution. He has put utmost care in making Balupu as entertaining as possible to reclaim his success streak.



 It’s a ‘do or die’ situation for Raviteja now. Directed by Gopichand Malineni and starring two beauties Shruthi Hasan and Anjali, Balupu will decide the future course of Mass Maharaja Raviteja. Let’s find out what are the highlights of Balupu and whether it will give the much needed hit for Mass Maharaj.


*Gopichand Malineni designed Balupu as a mass entertainer. This is the second time Gopichand Malineni is directing Raviteja. Raviteja gave opportunity to Gopichand with Don Seenu. After making Don Seenu hit, Gopi bagged a flop with Venkatesh’s Bodyguard. With one hit and one flop to his credit, it has to be seen which way Gopichand Malineni will travel with Balupu.


*Entertainment factor plays a key role in making Raviteja’s movies success. More than action and songs, movies which had good entertaining episodes have become hit in Raviteja’s career. Keeping this in mind, it is said that comedy has been given utmost screen time in Balupu. Entertaining episodes between Brahmanandam, Shruthi Hasan and Raviteja are said to be the main strength of Balupu. The fate of the movie will be decided by hilarious comedy scenes involving these three actors.


*Thaman is a regular for Raviteja movies. Right from Kick, Anjaneyulu to Don Seenu and Balupu, Thaman has composed tunes for Raviteja regularly. Except Kick, all the other albums have been average. Couple of songs in Balupu have impressed youngsters. It has to be seen what magic he has created with re-recording. For that we have to wait till movie releases.



*Once again Brahmanandam is going to be the centre of attraction in a movie. Brahmi will appear as Crazy Mohan in Balupu. Scenes in which Raviteja tortures Brahmi will create uncontrollable laughter it seems. 


*Censor report has been positive for Balupu. Though controversy surrounded regarding derogatory remarks towards Brahmins, Balupu steered clear of it by removing that dialogue. It’s interesting whether Balupu contains more such dialogues.


*Irrespective of what Raviteja fans and audience are hoping for Balupu, industry people are wishing for its success. Because being a minimum guarantee hero, Raviteja keeps everyone busy by doing four five movies at a time, which gives livelihood for industry technicians and workers. If Raviteja movie runs, then it will be a festival for industry people.


Keep watching this space for quick and authentic updates and review of Balupu movie.











Thursday, June 27, 2013

தீக்குளிக்கும் பச்சைமரம் - சினிமா விமர்சனம்

 

மார்ச்சுவரில நடக்கும் தில்லுமுல்லுகள் , மோசமான சம்பவங்கள் , சமூக விரோத செயல்கள்  தான் படத்தின் மையக்கரு. கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவமாம் . அதை எந்த அளவு வல்கரா , கொடூரமா சொல்ல முடியுமோ அந்த அளவு கொடூரமா சொல்லி இருக்காங்க , உஷ் அப்பா , முடியல . சைக்கோவா மாறி விட வாய்ப்பு இருக்கு . உஷார்....


இது ஒரு மலையாள டப்பிங்க் படம். 

படத்தோட ஓப்பனிங்ல வரும் நிழல்கள் ரவி எபிசோடு ஒரு விவசாயிக்குடும்பத்தின் அவல நிலையைச்சொல்லும் அழகு சிறுகதை .  வித்தியாசமான படத்துக்கு வந்துட்டமோ என்ற மன நிலையை மாற்றி விடுகிறது , பின் பாதி கர்ண கடூரக்காட்சிகள். 

ஹீரோ சின்ன வயசுலயே ஒரு கொலை பண்ணி ஜெயிலுக்கு ( சிறுவர் சீர் திருத்தப்பள்ளி) போயிடறார். வெளீல வந்து பொழைப்புக்கு 1008 வேலை இருந்தாலும் மார்ச்சுவரில பிணம் அறுக்கும் வேலைக்குப்போறார். படு கண்றாவியான முகம் , தாடி வெச்சுக்கிட்டு பக்கா ஃபிகரை லவ் பண்றார். அந்த ஃபிகர் என்னடான்னா கிட்டே வந்தாலே வாமிட் வர்ற மாதிரி இருக்கும் கெட்டப்பில் உள்ள ஹீரோவை உருகி உருகி காதலிக்கிறார். ( அந்த முகத்தை ஜீரணீக்கவே எக்ஸ்ட்ரா சம்பளம் 5 லட்சமாம் ) 





உடல் உறுப்புகளை பிணத்துல இருந்து அகற்றி வெளிநாட்டுக்கு விற்பது , கொலையை தற்கொலையா மாத்துவது , லேடி பாடி வந்தா கில்மா பண்ண போலீசுக்கு மாமா வேலை பார்ப்பது போன்ற அவலங்கள் நடப்பதை ஹீரோ பார்த்து பொங்கியண்ணனா மாறிடறார். வழக்கம் போல் வில்லன்கள் ஹீரோயினை கண்டம் பண்ணிடறாங்க , அவங்களை ஹீரோ ரொம்ப கொடூரமா  கண்டம் பண்ணிடறாங்க . படம் பார்க்கும் நாம் செம காண்டாகிடறோம்.


ஹீரோ சின்னத்திரையின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான பிரஜன்.  கேரக்டருக்கு ஏற்ப தாடியுடன் கூடிய கேவலமான தோற்றம். நடிப்பும் ஓக்கே . அவர் முகத்தை இலியானா , தமனா இடுப்பு மாதிரி நினைச்சு அடிக்கடி க்ளோசப்பில் காட்டும் போது உவ்வே .. 


ஹீரோயின் சேர நன்னாட்டிளம் பெண். 36 தேறும் , ஐ மீன் மார்க் .கண்ணும் , உதடும் பெருசு , புருவம் ரொம்ப மெல்லிசு .( புருவம் பெருசா இருந்தா என்ன பண்ணப்போறே?)மேக்கப்பே அதிகம் போடாமல் அழகாகவே இருக்கார். அவர் ஹீரோவிடம் நெருக்கம் காட்டும்போதெல்லாம் நமக்கு குமட்டிக்கொண்டு வருகிறது . நடிகைகள் நினைச்சு பரிதாபம் வருது. அய்யோ பாவம் . பணத்துக்காக கண்டதையும் சகிச்சுக்க வேண்டியதா இருக்கு 

 




ஹீரோவின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி பாந்தமான நடிப்பு . ஹீரோவின் அண்ணியாக வரும்  ரேகா சுரேஷ் அடடே, யார்றா இந்த கட்டை? என கேட்க வைக்கிறார். ஓப்பனிங்கில் இவருக்கு வைக்கப்பட்ட வசனங்கள் , எடிட்டிங்க் செம ஷார்ப் காட்சிகள் . 


ஹீரோயினின் அக்காவாக ஒரு புது ஃபிகர் வந்துட்டுப்போகுது . காட்சி அமைப்புகள் கலாபக்காதலன் மாதிரி தங்கச்சி புருஷனுக்கு ஏங்கும் பெண்ணின் கதையோ என எண்ணும்படி வைத்து ஏங்க வைத்து விடுகிறார்கள் . 


 மார்ச்சுவரி காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதுசுதான். அதில் மாற்றம் இல்லை . நெக்ரோமேனியா எனும் மன நோயை வைத்து தமிழில் வந்திருக்கும் முதல் படம். இந்த மாதிரி சைக்கோ கதையை செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் பண்ணி இருந்தால் கவுரவமான படம் ஆகி இருக்கும் 



 

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்கில் வரும் உழவுத்தொழிலுக்கு வந்தனை செய்யும் காட்சிகள் , படமாக்கம் , அனைத்து நடிகர்களின் நடிப்பு கிளாஸ் ரகம் 


2. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு வழக்கம் போல் அபாரம்.படத்தின் திரைக்கதைக்கு சம்பந்தம் இல்லாததாக வந்தாலும் ஆங்காங்கே பளிச்சிடும் இயற்கைக்காட்சிகள் அபாரம் 


3. சோகமான கவிதையாய் செல்லும் அந்த ஓப்பனிங்க் எப்பிசோடுக்குப்பின் வரும் துள்ளாட்ட குத்துப்பாடல் அட்டகாசம் 


4. இடைவேளைக்குப்பின் வரும் போஸ்ட்மார்ட்டம் காட்சிகள் திகில் , கொடூரம் . இத்தனை பட்டவர்த்தனமாய் காண்பிக்கனுமா? என கேட்க வைத்தாலும் இது ஒரு முக்கியமான முதல் பதிவு என்ற வகையில் கவனம் பெறுது


5. பட டைட்டில் , போஸ்டர் டிசைன் இதெல்லாமே அக்மார்க் தமிழ்ப்படம் என்று எண்ண வைத்த விதம் 

 மது அம்பாட்
 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஹீரோயின் அக்கா மேரேஜ் பண்ணிக்காம ஏன் தங்கைக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறா? அப்படி ஒண்ணும் நெருக்கடி அமைந்த காட்சி இல்லையே? 

2. ஹீரோயின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அக்காக்காரி அடுத்த காட்சியிலேயே அந்தர் பல்டி அடிப்பது ஏன்? 

3. விவசாய நிலம் பாதிக்கப்பட்டதுக்கு இன்ஷூரன்ஸ் பணம் வந்திருக்குமே? 


4. மகனை விஷம் வைத்து கொன்னுட்டு தானும் தற்கொலை செய்பவர் குற்றுயுரும் கொலை உயிருமா மகனை தவிக்க விட்டுட்டு தூக்கு போட்டுக்குவாரா? செய்வன திருந்தச்செய்னு பாடியை செக் பண்ண மாட்டாரா? 


5. ஒரு சாதாரண கூலித்தொழிலாளி டாக்டரை அப்படி மிரட்ட முடியுமா? அதுக்கு பயந்து டாக்டர் ரிப்போர்ட் மாத்தி தருவாரா? 


6. போஸ்ட் மார்ட்டம் பண்ணும் தொழிலில் அத்தனை பணம் அட்வான்சா தர்றாங்களா? எந்த ஊரில்? தமிழக்த்தில் ரூ 5000 தான் அட்வான்ஸ் . கேரளாவில் ஜஸ்ட் 2000 தான் . படத்தில் என்னமோ  லட்சக்கணக்கில் தருவதாக பில்டப் . அதை வைத்து எல்லாக்கடன்களையும் ஹீரோ அடைப்பது செம காமெடி 


7. படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினின் அக்கா லவ் எப்பிசோடு போர் 


8. க்ளைமாக்ஸ் காட்சி வக்ரத்தின் உச்சம் . சென்சார் ஆஃபீசர்ஸ் பணம் வாங்கிட்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்தது அப்பட்டமா தெரியுது 


 மனம் கவர்ந்த வசனங்கள்


 ஒரு வசனம் கூட சொல்லிக்கற மாதிரி இல்லை 



ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39 



 குமுதம் ரேங்க்கிங்க் - சுமார் 


 ரேட்டிங்க் =   2.75 /5 


சி பி கமெண்ட் - இந்தப்படத்தை யாரும் தியேட்டரிலோ , டி வியிலோ  பார்த்துடாதீங்க , மன நிலை பாதிக்கப்படுவது நிச்சயம் .படு கேவலமான , கொடூரமான மேக்கிங்க்


Wednesday, June 26, 2013

மரியான் - இயக்குநர் பரத்பாலா பேட்டி @ கல்கி

அர்ஜுன்

இயக்குனர் பரத் பாலாவும் .ஆர்.ரஹ்மானும் வந்தே மாதரம், ஜன கண மன சேர்ந்து தூள் கிளப்பி இருந்தாலும் பரத் பாலாவுக்கு இதுவே முதல் தமிழ்ப் படம். தனுஷ் பல படங்களில் நடித்து, தேசிய விருது வாங்கி இருந்தாலும் கூட, அவர் படங்களுக்கு .ஆர். ரஹ்மான் இசையமைத்ததில்லை. இப்போது இந்த மூவர் கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம்மரியான்யூடியூபில் பாட்டுகளும், விளம்பர டீசர்களும் 26 லட்சம் ஹிட்ஸ் தாண்டி எகிறிக் கொண்டிருக்கிறது.




 டைரக்டர் பரத் பாலாவை அவரது ராஜா அண்ணாமலைபுரம் அலுவலகத்தில் சந்தித்தோம். கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்ட மரியான் யூனிட் படு பிசியாக தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் பாலாவின் அறையில், ஒரு பக்கச்சுவர் முழுக்க துண்டுக் காகிதங்களாக ஒட்டப்பட்டிருக்கின்றன. என்னவென்று கேட்டால், படத்தின் ஸ்கிரிப்ட் என்கிறார் பாலா. கல்கிக்கு அவர் அளித்த ஸ்பெஷல் பேட்டி:


 


திடீர்னு எப்படி தமிழ்ப் படம் பண்ணற ஆசை வந்தது?


இருபது வருஷமாய் விளம்பரப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள்னு நிறைய எடுத்தாலும், அது எல்லாத்துலயும் ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கும். அதுதான் ஹியூமன் எமோஷன்ஸ். இந்தப் படங்கள் எல்லாமே மொழியைத் தாண்டி மக்களோடு உணர்ச்சிபூர்வமான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச்சு. ஏற்கெனவே ஹிந்தியில டைரக்ட் பண்ணின என்னோட முதல் படமும் அது மாதிரிதான்



 இப்போ படத்துக்கு எடுத்துக்கிட்டிருக்கிற சப்ஜெக்ட் ரொம்ப ஸ்டிராங்கான ஹியூமன் எமோஷன். நான் உலகம் முழுக்க சுத்தி இருக்கேன் என்றாலும், என் வேர் மைலாப்பூர். அதனால, இந்தக் கதையை தமிழ்ல சொன்னாத் தான் சரியா இருக்கும்னு நினைச்சேன். என் முதல் தமிழ்ப்படம்மரியான்உருவான பின்னணி இதுதான்."
 




மரியான் ஒரு நிஜ கேரக்டராமே?


ஆமாம்! ரெண்டு வருஷங்களுக்கு முன்னால பேப்பர்ல நான் படிச்ச நியூஸ்தான்மரியான்கதைக்கு ஆரம்பப் புள்ளி. கேரளா, மும்பை, பஞ்சாப்ல இருந்து வேலைக்காக ஆஃப்ரிக்காவில் சூடானுக்குப் போன மூணு இளைஞர்கள் அங்கே பட்ட கஷ்டங்கள்தான் கதைக்கு அடித்தளம். அதுல ஒருத்தனோட காதல் அவனுக்கு எத்தனை உடல் ரீதியான, மனோரீதியான பலத்தைக் கொடுக்குது? அதை வெச்சு அவன் எப்படி எல்லா கஷ்டங்களையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கறான்னு படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டபோது, ரொம்ப ஆச்சர்யமாய் இருந்தது.  


அந்த இளைஞர்களைப் பத்தி முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டபோது அதுல ஆழமான ஹியூமன் எமோஷன் இருக்கிறது புரிஞ்சுது. அதை வெச்சு ஒரு பவர்ஃபுல் ஸ்கிரிப்ட் பண்ணலாம்னு தோணிச்சு."

 



தனுஷ் எப்படி?

ரெண்டு வருஷம் முன்னால, தேசிய விருதுக்கான நடுவர் குழுவுல நான் இருந்தப்போ தனுஷ் நடிச்சஆடுகளம்பார்த்து, அவரோட நடிப்புல ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன். இந்த ஸ்கிரிப்ட்ல நடிக்க தனுஷ்தான் பொருத்தமா இருப்பாருன்னு முடிவு பண்ணினேன்


 தனுஷுக்குக் கதையைச் சொன்னதும், அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போய், உடனே சரின்னு சொல்லிட்டார். இதுதான் கதை, தனுஷ் நடிக்கிறாருன்னு ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிசந்திரனிடம் சொன்னதும், உடனே படத்தை புரொடியூஸ் பண்ண .கே. சொல்லிட்டார். படத்துல தனுஷ் மண்டைக்காடு பக்கத்துல இருக்கிற நீரோடிங்கிற கிராமத்து மீனவ இளைஞர். அவர் வேலை செய்ய சூடான் போகும் போது நடக்கிற வாழ்க்கைப் போராட்டம்தான் கதை."




 
பூபடத்தோட சாஃப்ட் பார்வதிக்குக் கூட ரொம்ப பவர்ஃபுல் ரோலாமே?


இந்தப் படத்துக்காக அவங்களுக்கு படத்துல வருகிற ஐந்தாறு சீன்களைக் கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னேன். முதல் சீனை நடிக்கும்போதே நான் அங்கே பார்வதியைப் பார்க்கலை; பனிமலரைத்தான் பார்த்தேன்."


ரஹ்மானை படத்துக்கு இசையமைக்க வைப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்திருக்காதே?


(சிரிக்கிறார்) நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் நாள்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். முன்னாலயே நாங்க சேர்ந்து ஒர்க் பண்ணின வந்தே மாதரம், ஜன கண மன இரண்டுக்கும் அகில இந்திய அளவுல எந்த மாதிரியான வரவேற்பு கிடைச்சுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் கேட்டேன்



 அவரும் உடனே சம்மதிச்சார். மறுபடியும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ண ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சின்னு அஞ்சு விதமான எமோஷன்ஸ் படத்துல இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி பாட்டுகள் வேணும்னு சொன்னேன். வாலி தொடங்கி தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, ரஹ்மான்னு எல்லாரும் பாட்டு எழுதி இருக்காங்க. மரியான் தமிழைத்தாண்டி, உலக அளவில் ரசிகர்களை ஈர்க்கிற ஒரு சினிமாவாய் இருக்கும் என்பது நிச்சயம்."




 
படத்தோட கேமராமேன் ஒரு ஃப்ரெஞ்சுக்காரராமே?



ஜானி மை டாக்னு ஒரு படம் பார்த்திட்டு, அதன் கேமராமேன் மார்க்தான் நம்ம படத்துக்கும் கேமரான்னு தீர்மானிச்சு, அவரைத் தேடிப் பிடிச்சுக் கேட்டதும் .கே. சொல்லிட்டார். அவர் இதுக்கு முன்னால இந்தியாவைப் பார்த்ததில்லை. அவர் கோணத்துல இந்தியாவைப் பார்க்கிறபோது, நமக்கே தெரியாத புதுப்பார்வை படத்துல இருக்கும். சீன்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கதை சூடான்ல நடக்குது. ஆனா, அந்த சீன்களை நாங்க எடுத்தது நமீபியாவுல. ‘ஜானி மை டாக்படத்துல நடிச்சிருக்கிற சில ஆஃப்ரிகன் ஆக்ஷன் நடிகர்களை நடிக்க வெச்சிருக்கேன்."


படத்தோட கடைசி சீன்ல ஷூட்டிங்கை ஆரம்பிச்சு, முதல் சீன் வரைக்கும் ரிவர்ஸ்ல படத்தை எடுத்தீங்களாமே. என்ன காரணம்?


முதல் சீன்ல ஆரம்பிச்சு வரிசையா சீன்களை எடுத்திருந்தா படம் எடுத்து முடிக்க ரெண்டு வருஷம் ஆகி இருக்கும். அந்தத் தாமதம் வேணாம்னுதான் மாத்தி ரிவர்ஸ்ல எடுத்தோம்."


ஆழ்கடல் சீனெல்லாம் எடுத்திருக்கீங்க. ஆனா தனுஷுக்கு நீச்சலே தெரியாதாமே?

ஆமாம். மன உறுதியும், உடல் பலமும் கொண்ட மீனவ இளைஞர் மரியான். எல்லோரும் வலை வீசி மீன் பிடிச்சா, இவன் ஆழ்கடலுக்குப் போய், பெரிய மீனை கூரிய ஆயுதத்தால் நேரடியாகக் குத்திப் பிடிப்பான். நீச்சல் தெரியாது போனாலும், தனுஷ் காட்டின தைரியமும், ஈடுபாடும் வாவ்! கிரேட்!"


thanx - kalaki